Announcement

Collapse
No announcement yet.

தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    கடலை மாவு லட்டு

    கடலை மாவு லட்டு - இது வடநாட்டில் ரொம்ப பிரசித்தம். சுலபம் கூட.

    தேவையானவை :

    2cup 'கடலை மாவு
    2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
    1 /2cup நெய்
    2 tabsp உடைத்த முந்திரி, பாதாம்
    ஏலப்பொடி

    செய்முறை:

    வாணலியில் நெய் விட்டு கடலை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
    அடுப்பை சின்னதாக வைத்துக்கொள்ளவும்.
    ஒரு பேசினில் வறுத்த மாவைபோட்டு, முந்திரி, பாதாமை போடவும்.
    ஏலப்பொடி போட்டு உருண்டைகள் பிடிக்கவும்.
    அவ்வளவு தான் கடலை மாவு லட்டு.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #17
      'மா லாடு'

      தேவையானவை :

      2cup பயத்தம் பருப்பு
      2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
      2 1 /2cup நெய்
      2 tabsp உடைத்த முந்திரி
      ஏலப்பொடி

      செய்முறை:

      பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
      மிக்ஸ்யில் பொடிக்கவும்.
      ஒரு சல்லடை இல் போட்டு சலிக்கவும்.
      மீண்டும் அரைக்கவும்.
      ஒரு பேசினில் போடவும்.
      பொடித்த சர்க்கரையும் போடவும்.
      ஏலப்பொடி போடவும்.
      ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதன் மீது கொட்டவும்.
      நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.
      That is all. 'மா லாடு' ரெடி.

      குறிப்பு: நீங்கள் மெட்ராஸில் இருப்பவரானால் வறுத்த பயத்தம் பருப்பு , சர்க்கரை , ஏலம் எல்லாம் போட்டு மாவு மிஷின்ல் கொடுத்தால் சுலபமாக அரைத்து தருவார்கள். நீங்கள் வீட்டில் நெயில் முந்திரி பொரித்து போட்டால் போரும்.

      நான் எப்பவும் அதுபோல் வீட்டில் வைத்து இருப்பேன். எப்பவேண்டுமாலும் 'மா லட்டு' தயார் பண்ணலாம்.அதுவும் நொடியில்.

      இந்த பொடியை பாலில் கரைத்து கொதிக்க வைத்தால், சுவையான பயத்தம் கஞ்சி / பாயாசம் ரெடி. நீங்களும் முயன்று பாருங்களேன்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #18
        முந்தரி லட்டு

        தேவையானவை:
        2cup முந்தரி
        2cup சர்க்கரை
        ஏலப்பொடி

        செய்முறை:

        முந்தரியை லேசாக வறுக்கவும்.
        இரண்டாக உடைக்கவும் , ஒருப்பக்கமாக வைக்கவும்.
        ஒரு வாணலில் சர்க்கரையை போடவும்.
        அது உருகி 'பிரவுன்' கலராக வரும். அது 'caramel ' எனப்படும்.
        அதில் உடைத்த முந்தரியை போடவும்.
        மொத்தமாக சேர்ந்ததும் , தட்டில் கொட்டி , சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
        'yummy ' லட்டு ரெடி.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #19
          முந்தரி லட்டு 2

          தேவையானவை:
          300gms சர்க்கரை இல்லாத கோவா
          2cup முந்தரி
          2cup சர்க்கரை (பொடித்தது )
          ஏலப்பொடி

          செய்முறை:

          முந்தரியை லேசாக வறுக்கவும்.
          10 முந்தரிகளை உடைக்கவும் , ஒருப்பக்கமாக வைக்கவும்.
          மீதி முந்தரிகளை மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
          வாணலில் பொடித்த சர்க்கரை, பொடித்த முந்தரி போடவும்.
          நன்கு கிளறவும்.
          ஏலப்பொடி , உதிர்த்த கோவா போடவும்.
          நன்கு கிளறவும்.
          உடைத்த முந்திரிகளை போடவும் .
          மொத்தமாக சேர்ந்ததும் , தட்டில் கொட்டி , சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
          'yummy ' லட்டு ரெடி.
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #20
            7 cups cake

            தேவையானவை :
            1 cup தேங்காய் துருவல்
            1cup நெய்
            1cup கடலை மாவு
            1cup பால்
            3cup சர்க்கரை
            2 - 4 துளி வெனிலா எசன்ஸ்

            செய்முறை:

            மேல்சொன்ன எல்லா வற்றையும் ஒன்றாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் போடவும்.
            அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
            நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
            கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடவும்.
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #21
              கடலை மாவு பர்பி

              தேவையானவை :

              கடலை மாவு ,சர்க்கரை,நெய் each 1cup
              வால்நட், பாதாம் மற்றும் முந்திரி 1 /2cup
              ஏலப்பொடி

              செய்முறை:

              சர்க்கரை யை பொடித்துக்கொள்ளவும்.
              வாணலியில் நெய் விட்டு, கடலை மாவை போட்டு வாசனை வரும்
              வரை வறுக்கவும்.
              அடுப்பை அணைத்துவிட்டு, சர்க்கரை பொடி, ஏலப்பொடி மற்றும் வால்நட், பாதாம் மற்றும் முந்திரி போட்டு கை விடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
              நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
              ரொம்ப ஈசி யான ஸ்வீட்.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #22
                கடலை மாவு பர்பி -2

                தேவையானவை :

                1cup கடலை மாவு
                1 1 /2cup சர்க்கரை
                1cup நெய்
                1cup பால் பவுடர்
                ஏலப்பொடி

                செய்முறை:

                வாணலியில் நெய் விட்டு, கடலை மாவை போட்டு வாசனை வரும்
                வரை வறுக்கவும்.
                அடுப்பை அணைத்துவிட்டு, பால் பவுடர், ஏலப்பொடி போட்டு கை விடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
                மற்றும் ஒரு பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சவும்.
                'முத்துபாகு' வந்ததும், கலந்து வைத்துள்ள மாவை போட்டு நன்கு கிளறவும்.
                நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
                இதுவும் ரொம்ப ஈசி யான ஸ்வீட்.

                குறிப்பு: 'முத்து பாகு' என்றால், சர்க்கரை பாகை ஸ்பூனில் எடுத்து தட்டில் விட்டால், அழகாக 'முத்து' போல் சொட்டும். அது தான் 'முத்து பாகு' பதம்.
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #23
                  காரட் முந்திரி பர்பி

                  தேவையானவை :

                  2cup காரட் துருவல்
                  2 1 /2 cup சர்க்கரை
                  3 /4 cup முந்திரி (பொடிக்கவும்)
                  2tabsp நெய்
                  2tabsp பால்
                  ஏலப்பொடி

                  செய்முறை:

                  வாணலியில் நெய் விட்டு, துருவின காரட் போட்டு நன்கு வதக்கவும்.
                  பால் + சர்க்கரை சேர்க்கவும்.
                  சர்க்கரை நன்கு கரைந்ததும் பொடித்துவைத்த முந்திரியை போடவும்.
                  நன்கு கிளறவும்.
                  நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
                  கலர் ஏதும் போடாமலே காரட் கலரில் பர்பி வரும்.
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #24
                    முந்தரி பர்பி - கேக்

                    தேவையானவை:
                    1cup முந்தரி
                    1 1 / 2cup சர்க்கரை
                    1 /2cup பால்
                    3 - 4 ஸ்பூன் நெய்
                    ஏலப்பொடி

                    செய்முறை:

                    முந்தரியை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
                    நன்கு அரைக்கவும்.
                    ஒரு வாணலில் சர்க்கரை, முந்தரி விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
                    நன்கு கிளறவும்.
                    நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
                    மிருதுவான முந்தரி பர்பி தயார்.
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #25
                      பாதாம் பர்பி - கேக்

                      தேவையானவை:
                      1cup பாதாம்
                      1 1 / 2cup சர்க்கரை
                      1 /2cup பால்
                      3 - 4 ஸ்பூன் நெய்
                      ஏலப்பொடி

                      செய்முறை:

                      பாதாமை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
                      தோலியை நீக்கவும்.
                      நன்கு அரைக்கவும்.
                      ஒரு வாணலில் சர்க்கரை, பாதாம் விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
                      நன்கு கிளறவும்.
                      நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
                      மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #26
                        பாதாம் பர்பி - கேக் 2

                        தேவையானவை:

                        1cup பாதாம்விழுது
                        100gms நெய்
                        1 tin Condensed milk

                        செய்முறை:

                        ஒரு வாணலில் Condensed milk , பாதாம் விழுது, நெய் போடவும்.
                        நன்கு கிளறவும்.
                        நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
                        மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
                        5 நிமிடத்தில் கேக் தயாராகிவிடும் .
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #27
                          தேங்காய் பர்பி

                          தேவையானவை :

                          1cup தேங்காய் துருவல்
                          1cup சர்க்கரை
                          1sp நெய்
                          ஏலப்பொடி
                          2sp உடைத்த முந்தரி (தேவையானால் )

                          செய்முறை:

                          ஒரு வாணலில் சர்க்கரை, தேங்காய் துருவல் போடவும்.
                          நன்கு கிளறவும்.
                          நெய் ஊற்றவும் , ஏலப்பொடி, உடைத்த முந்தரி போடவும்.
                          நன்கு கிளறவும்.
                          நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
                          தேங்காய் பர்பி தயார்.
                          Cheap and best sweet ,with very less ghee .
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #28
                            தீபாவளி மருந்து

                            மேலே சொன்ன பட்சணங்களை விட இந்த தீபாவளி மருந்து தான் ரொம்ப முக்கியம்.பட்சணங்களை சாப்பிட்டபின் தீபாவளி மருந்து எனப்படும் தீபாவளி லேகியம் சாப்பிடணும். அப்பதான் நம் வயிறு , வயிறாய் , இருக்கும்.
                            அது தயாரிக்கும் முறையை பார்போம். கஷ்டமானால் , கடையில் விற்கும்
                            லேகியம் (அடையாறு ஆனந்த பவனில் குட்டி குட்டி டப்பாகளில் விற்கிறார்கள் )
                            வாங்கியாவது சாப்பிடணும்.

                            தேவையானவை : (அளவு கண் அளவுதான் )

                            சுக்கு 2 இன்ச்
                            கண்டதிப்பிலி 1 /4 கை யளவு
                            ஓமம் கொஞ்சம்
                            மிளகு கொஞ்சம்
                            சீரகம் கொஞ்சம்
                            விரளிமஞ்சள் 4 - 5
                            தனியா 1 /2 கை யளவு
                            வெல்லம் கொஞ்சம்
                            நெய் 1 /2 cup
                            இஞ்சி சாறு 1 /4 cup

                            செய்முறை :

                            சுக்கு, கண்டதிப்பிலி, ஓமம், மிளகு, சீரகம், விரளிமஞ்சள், தனியா எல்லாவற்றையும் வாணலில் வறுக்கவும். (dryfry )
                            மிக்சியில் அரைக்கவும்.
                            ஒரு வாணலியில் வெல்லத்தை பொடித்துபோட்டு, தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும்.
                            வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்
                            மீண்டும் அடுப்பில் வைத்து, பொடித்த பொடியை போட்டு கலக்கவும்
                            இஞ்சி சாறு சேர்க்கவும்.
                            நன்கு இறுகி வரும்போது நெய் விட்டு கிளறவும்.
                            லேகிய பதத்தில் இறக்கவும்.
                            பட்சணங்களை சாப்பிட்டபின் தீபாவளி மருந்து சாப்பிடணும் .
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #29
                              அதிரசம்

                              தேவையானவை :

                              பச்சரிசி அரை கிலோ
                              வெல்லம் கால் கிலோ
                              நெய் பொரிக்க
                              ஏலப்பொடி

                              செய்முறை:

                              பச்சரிசியை நன்கு களைந்து ,மூன்று மணிநேரம் ஊறவைக்கவும் .
                              பிறகு வடியவிட்டு தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு பத்து நிமிடம் துணி இல் போட்டு காயவைக்கவும்.
                              பிறகு சிறிது ஈரத்துடனேயே மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
                              ஒரு வாணலி இல் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை போடவும்.
                              அரை அல்லது முக்கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரையவிடவும்.
                              அது கரைந்ததும் டீ வடிகட்டி இல் வடிகட்டிக்கொள்ளவும்.
                              இப்படி செய்வதால் வெல்ல தண்ணிரில் இருக்கும் சிறு மண், கல் மற்றும் குப்பைகள் அகற்றப்படும்.
                              இப்போது வெல்லம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
                              ஒரு சிறு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.
                              வெல்லம் கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் அதை கரண்டியால் கொஞ்சம் எடுத்து , கிண்ணி இல் உள்ள தண்ணிரில் விடவும்.
                              அது கை இல் எடுத்து உருட்டும் படி இருக்கணும்.
                              அப்படி இருந்தால் அது சரியான பதம்.
                              இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் கொதிக்கவிடணும்.
                              மீண்டும் மேலே சொன்னது போல செய்து பார்க்கணும்.
                              அப்படி சரியான பதம் வந்ததும் ஏலப்பொடி போடணும்.
                              கிளறி இறக்கணும்.
                              ஒரு பேசினில் அரிசி மாவை போடவும்.
                              பாகிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் விடவும்.
                              மாவை நன்கு கிளறவும
                              மீண்டும் மற்றும் ஒரு கரண்டி பாகை மாவில் விடவும் , கிளறவும்.
                              இவ்வாறு மாவு பாகை உறிஞ்சிக்கொண்டு கிட்ட தட்ட சப்பாத்தி மாவு போல வரும் வரை செய்யவும்.
                              இந்த பதத்தில் அதிரச மாவை இரண்டு நாட்கள் கூட வைத்திருக்கலாம்.
                              மீதி பாகு இருந்தால் பரவாஇல்லை பாயசத்துக்கு உபயோகிக்கலாம். நல்லா இருக்கும்.
                              அதிரசம் செய்ய வேண்டும் போது, வாணலி இல் நெய் வைத்து அது காய்ந்ததும், மாவில் ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி நெய் இல் போடவும்.
                              வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
                              நல்ல பிரவுன் கலர் வந்ததும், கரண்டியால் எடுத்து, மற்றும் ஒரு கரண்டியால் அதில் ( அதிரசத்தில் ) இருக்கும் நெய்யை அழுத்தி நெய் வடிந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும் .
                              இதே போல மொத்த மாவையும் செய்யவும்.
                              மிருது வான அதிரசம் தயார்

                              குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை இல் செய்வார்கள் . அப்படி செய்வதானால் சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகம் போட்டுக்கணும் .
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment


                              • #30
                                Re: தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் !

                                ஶ்ரீ:
                                க்ருஷ்ணாம்மா வந்தால்தான் போரம் களைகட்டுகிறது!!
                                கரண்ட் பிரச்சினை, இன்டெர்நெட் பிரச்சினையால் என்னாலும் நீண்டநாட்களாக
                                எதுவும் போஸ்ட் செய்யமுடியவில்லை.
                                என்.வி.எஸ்


                                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                                Encourage your friends to become member of this forum.
                                Best Wishes and Best Regards,
                                Dr.NVS

                                Comment

                                Working...
                                X