Announcement

Collapse
No announcement yet.

சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு 

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு 

  பூரி...சாகு - இது கர்நாடகா ஸ்பெஷல் என்றே சொல்லலாம்

  பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

  சாகு செய்யத் தேவையானவை:

  காலிஃப்ளவர் 1 கப்
  உருளைக்கிழங்கு 1 கப் பொடியான நறுக்கவும்
  பட்டாணி 1/2 கப்
  காரட் 1/2 கப் பொடியாக நறுக்கியது
  பச்சை சோளம் 1/2 கப்
  கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
  vegetable stock 1 கப் ( முடிந்தால் )
  உப்பு
  எண்ணெய் கொஞ்சம்

  அரைக்க:

  துருவிய தேங்காய் 1 கப்
  பட்டை 1 துண்டு
  கிராம்பு 2
  சீரகம் 1 டீஸ்பூன்
  இஞ்சி 1 துண்டு
  கசகசா 1 டீஸ்பூன்
  பச்சைமிளகாய் 2
  கொத்தமல்லி 1/2 கப்

  தாளிக்க:

  கடுகு 1 டீஸ்பூன்
  கறிவேப்பிலை 1கொத்து
  பெருங்காயம 1/2 டீஸ்பூன்

  செய்முறை :

  காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்துவேகவைக்கவும்.
  அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
  ஒரு வாணலி il எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து,
  பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
  இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
  கைவிடாமல் கிளறவும்.
  நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி வைக்கவும்.
  பூரியுடன் பரிமாறவும்.

  குறிப்பு: இதை தோசை யுடனும் கூட பரிமாறலாம். முக்கியமானது என்ன வென்றால்.... கடலை மாவு போட்டு கொதிக்கவைப்பதால் வெகுநேரம் வைத்திருக்க முடியாது, ஒரே வேளை இல் பயன்படுத்தி விடவேண்டும். சரியா?
  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

  http://eegarai.org/apps/Kitchen4All.apk

  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

  Dont work hard, work smart

 • #2
  Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

  இதை ட்ரை பண்ணீங்களா மாமா? .......ரொம்ப நல்லா இருக்கும் சப்பாத்திக்கு
  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

  http://eegarai.org/apps/Kitchen4All.apk

  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

  Dont work hard, work smart

  Comment

  • #3
   Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

   Originally posted by krishnaamma View Post
   இதை ட்ரை பண்ணீங்களா மாமா? .......ரொம்ப நல்லா இருக்கும் சப்பாத்திக்கு
   காலிப்ளவர் - இதுவரை சாப்பிட்டதில்லை!
   அது என்ன வெஜிடபிள் ஸ்டாக்?!

   ஆள உடுங்க...
   மாங்கா ஊறுகாய் அல்லது தக்காளி தொக்கு இவற்றுடன் தயிர் கலந்து தொட்டுச் சாப்பிடுகிறேன்.
   ரெண்டும் புளிக்காமல் இருக்கும்வரை வேறு எதுவும் வேண்டாம்.

   குறிப்பு:- புதிய (கடைசியாக உள்ள A பட்டனை அழுத்தி) வசதியை பயன்படுத்தி
   தமிழில் டைப்ரைட்டர் மெத்தடில் டைப் செய்ய முடிகிறதே?!

   டைப் அடித்துவிட்டு, மெத்தத்தையும் செலக்ட் செய்துவிட்டு மவுசால் கிளிக் பண்ணி கையை எடுக்காமல் அப்படியே
   அந்த விண்டோவிலிருந்து இழுத்துக்கொண்டுவந்து இதில் விட்டுவிட்டால் அனைத்தும் இங்கு மாறிவிடுகிறது.

   Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
   please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
   Encourage your friends to become member of this forum.
   Best Wishes and Best Regards,
   Dr.NVS

   Comment

   • #4
    Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

    சூப்பர் மாமா, அது சரி ஏன் நொந்து போறீங்க, நானும் வேற வேற சொல்லிப்பார்க்கிறேன், உங்களுக்கு எது தேவலாமோ அது படி செய்யுங்கோ................... .
    .
    .
    .
    .
    " ஆணியே புடுங்க வேண் டாம் " என்கிற வடிவேலு ஜோக் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது எனக்கு
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #5
     Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

     ஶ்ரீ:

     நல்ல ஜோக்
     அடியேனுக்குக்கூட ரொம்பப் புடிக்கும் அந்த சீன் (ப்ரண்ட்ஸ் படம்னு நினைக்கிறேன்)

     இருந்தாலும், அடியேனுடைய கமண்ட் அந்த ரகம் கிடையாது

     அடியேன் சரியாக அதை எக்ஸ்ப்ரஸ் செய்யவில்லை போலும்.

     நம்ப (புளிக்காத)ஊறுகாய் + (புளிக்காத)தயிர் + (சுக்கா அல்லது புல்கா)சப்பாத்தி இந்த காம்பினேஷணை அடிச்சுக்க முடியாதுன்னு சொல்லவந்தேன்.
     ஏன்னா, மிளகாய்ப்பபொடி, புளி, கொதிக்கறது, உப்பு இதெல்லாம் கம்பியில நடக்கறமாதிரி கரெக்ட்டா அமைஞ்சாத்தான்
     சுவை நன்னா இருக்கும் முன்ன - பின்ன கூடக்கொறைச்சலா எது நடந்தாலும் பஞ்சரான டயர்ல காத்து இறங்கற மாதிரி
     டேஸ்ட் டைங்குன்னு இறங்கிடும்.
     ஏன்னா (முக்கியமான தகவல்) அடியேனோட நாக்கு (ஒங்காத்து சமையகட்டு வரைக்கும்) ரொம்ப நீநீநீநீநீநீநீநீநீநீ....................ளம்!!
     தாஸன்,
     என்.வி.எஸ்

     Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
     please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
     Encourage your friends to become member of this forum.
     Best Wishes and Best Regards,
     Dr.NVS

     Comment

     • #6
      Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

      பொங்கலோட தொட்டுக்க கொத்சு பற்றிக் ஏதும் போடலியே பலவித கொத்சு பற்றி ஏதாவது போடுங்களேன்

      Comment

      • #7
       Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

       குருணை அரிசி பொங்கல் + கத்தரிக்காய் கொத்சு காம்பினஷன்
       சூப்பர் ஆக இருக்கும்.
       அது போல் வழுதலங்கை காய் கொத்சு - ம் சூப்பர் ஆக இருக்கும் .
       மாங்காய் கொத்சு, பலாக்காய் கொத்சு, நேத்தரன் காய் கொத்சு .....
       இவைகளை சாப் பிட்டு இருக்கேன். சமைக்க தெரியாது. Recipe
       கேட்டதற்கு வீட்டில் சரியான response இல்லை. முயற்சி செய்து பார்க்கிறேன்.
       நீளமான நாக்கு உள்ளவர்க்கு தயாரித்து & டேஸ்ட் செய்து பார்க்க - இது சமர்ப்பணம்.

       குறிப்பு : கடைசி A பட்டன் மூலம் type அடித்தது. easy ஆக இருக்கு.
       இன்று தான் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு மிக்க நன்றி.

       Comment

       • #8
        Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்க&amp

        ஏன் mama இது உங்களுக்கே நல்லா இருக்கா பேர் சொல்லிபுட்டு அதை எப்படி செய்யறது என்கிற ரேசிபே போடாம இருந்தால் எப்படி. எனக்கு நேற்று எல்லாம் கதிரிக்க கொத்சு ஞாபகம் தான் j

        [COLOR="silver"]- - - Updated - - -[/COL
        Last edited by P.S.NARASIMHAN; 23-05-15, 17:36.

        Comment

        • #9
         Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

         மாமிக்கு ஏதோ கோபம் போல இருக்கு. எனக்கு பதில் போடமாட்டார் போல இருக்கு. நான் என்ன தவறு செய்தேன் .ஏன் மாமி சொன்னால் தானே தெரியும் .இப்படி கம் நு இருந்தால் எப்படி

         Comment

         • #10
          Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

          மாங்காய் கொதுசு :
          -------------------------------

          மாங்காய் --- 1
          தேங்காய் --- 1
          தயிர் --- 1 கப்
          நெய் --- 1 டீஸ்பூண்
          தாழிதம் --- மிளகாய் வத்தல் 2
          கடுகு
          எண்ணை

          செய்முறை :
          தேங்காய் + மாங்காய் இரண்டையும் துருவி, (மாங்காய் தோல் சீவி )
          நெய் விட்டு வதக்கவும் . தயிர் நன்றாக தூக்கி அடித்து கூழ் போல் ஆக்கவும்.
          வதக்கியதை தயிருடன் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
          தாழிதம் செய்யவும்.

          அடை, கோதுமை தோசை,உப்புமா, இவற்றுக்கு சூப்பர் காம்பினேஷன்.

          Comment

          • #11
           Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

           மாமா நீங்க. போ ட்ட மாங்கா கொத்சு சூப்பர் .நானே பண்ணிட்டேன் . இதை எல்லா பலகாரங்களுக்கும் உபயோகபடுத்தலாம் .ரொம்ப தேங்க்ஸ் மாமா

           Comment

           • #12
            Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

            பாராட்டுக்கு நன்றி. அடுத்த கொத்சு தொடரும். ggmoorthyiyer

            Comment

            • #13
             Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

             Originally posted by P.S.NARASIMHAN View Post
             பொங்கலோட தொட்டுக்க கொத்சு பற்றிக் ஏதும் போடலியே பலவித கொத்சு பற்றி ஏதாவது போடுங்களேன்

             கண்டிப்பாக போடுகிறேன் மாமா
             என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

             http://eegarai.org/apps/Kitchen4All.apk

             http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

             Dont work hard, work smart

             Comment

             • #14
              Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

              Originally posted by ggmoorthyiyer View Post
              குருணை அரிசி பொங்கல் + கத்தரிக்காய் கொத்சு காம்பினஷன்
              சூப்பர் ஆக இருக்கும்.
              அது போல் வழுதலங்கை காய் கொத்சு - ம் சூப்பர் ஆக இருக்கும் .
              மாங்காய் கொத்சு, பலாக்காய் கொத்சு, நேத்தரன் காய் கொத்சு .....
              இவைகளை சாப் பிட்டு இருக்கேன். சமைக்க தெரியாது. Recipe
              கேட்டதற்கு வீட்டில் சரியான response இல்லை. முயற்சி செய்து பார்க்கிறேன்.
              நீளமான நாக்கு உள்ளவர்க்கு தயாரித்து & டேஸ்ட் செய்து பார்க்க - இது சமர்ப்பணம்.

              குறிப்பு : கடைசி A பட்டன் மூலம் type அடித்தது. easy ஆக இருக்கு.
              இன்று தான் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு மிக்க நன்றி.

              ஆமாம் மாமா, மேலும் அரிசி உப்புமாவுக்கு எங்காத்தில் கத்தரிக்காயை சுட்டு ஒரு கொத்சு செய்வா பாருங்கோ எங்க அம்மா ..................அதுக்கு சொத்தையே எழுதி வெச்சுடலாம் போங்கோ ............அது சரி, வழுதலங்கை காய் .என்றால் என்ன மாமா?......தித்திப்பு பறங்கிக்கா?.அதாவது கல்யாண பூசணிக்காயா?
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              • #15
               Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்க&amp

               Originally posted by P.S.NARASIMHAN View Post
               ஏன் mama இது உங்களுக்கே நல்லா இருக்கா பேர் சொல்லிபுட்டு அதை எப்படி செய்யறது என்கிற ரேசிபே போடாம இருந்தால் எப்படி. எனக்கு நேற்று எல்லாம் கதிரிக்க கொத்சு ஞாபகம் தான் j

               [COLOR="silver"]- - - Updated - - -[/COL

               அதுதானே, பேர் எல்லாம் போட்டேளே .......சமையல் குறிப்பும் போட வேண்டாமோ?
               என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

               http://eegarai.org/apps/Kitchen4All.apk

               http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

               Dont work hard, work smart

               Comment

               Working...
               X