Announcement

Collapse
No announcement yet.

Niti-207 Eyes of a Brahmin

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • bmbcAdmin
  replied
  Re: Niti-207 Eyes of a Brahmin

  ஶ்ரீ:
  எழுதிப் பழகாதவரை அக்ஷரங்கள் ஞாபகத்தில் பதியாது.
  ஒரு முறை எழுதுதல் சில முறை படித்தலுக்குச் சமம் என்பர்.
  படிக்காமல் எழுத முடியாது, எழுதாமல் படிக்கலாம்.

  'சித்திரமும் கைப் பழக்கம்
  செந்தமிழும் நாப்பழக்கம்
  வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்" என்று ஒரு வசனம் உண்டு.
  அதுபோல்,
  பயிற்சி, மேலும் பயிற்சி, மேலும் மேலும் பயிற்சி
  இதனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

  "திருப்பதி மலை அடிவாரத்தில் நிற்கும் சிறு குழந்தை
  முயன்று மூன்று நாட்கள் நடந்தால், மூன்றாம் நாள்
  அப்பெரிய மலை அச்சிறு குழந்தையின் பாதத்திற்கு அடியில்!"

  இந்த ஸம்ஸ்க்ரு பகுதியிலேயே
  ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ள நிறைய ஆரம்பப் பாடங்கள்
  நிறைய போஸ்டிங் செய்துள்ளேன்,
  ஒவ்வொன்றாகப் படித்து பயிற்சி செய்யவும்,
  அடியேனைப் பொருத்தவரை,
  கேள்விகளாகக் கேட்டுக் கேட்டு பதிலை பெற்றுப்
  பயனடையுங்கள்.
  தங்கள் கேள்விகள் தங்களின் புரிதல் நிலையை விளக்கும்,
  தக்க பதில்களால் விரைந்த ஜ்ஞானத்தை அடையலாம்.
  தாஸன்
  என்.வி.எஸ்

  Leave a comment:


 • soundararajan50
  replied
  Re: Niti-207 Eyes of a Brahmin

  Sir ,
  Even though i cann't claim cent per cent correct in uchcharippu i do pronounce better and i've passed prathama dheeksha exam conducted by samskrutha sansthan i slightly get confusion when two three letters joined and written as a single letter since i used to recite Viishnu Shasranamam and Sri Venkatesa Subrapatham and listened mantra pushpam sree suktham purusha suktham and all the pronounciation of samskrutham is not a problem சம்ஸ்க்ருதம் எழுதுதல் இது வரை முயற்சிக்க வில்லை எச்செப்ட் while doing homework படித்தல் complicated கூட்டு அக்ஷரங்கள் வராதவரை நன்றாகவே படிப்பேன் புரிந்துகொள்ளுதல் ஒரு 80 சதமானம் வரை ஓகே இதற்க்கு மேல் தங்கள் அறிவுரைக்காக காத்திருக்கிறேன்

  Leave a comment:


 • bmbcAdmin
  replied
  Re: Niti-207 Eyes of a Brahmin

  ஶ்ரீ:
  'ஸ' வை சரியாகத் தட்டச்சு செய்ய முடியாதது ஒரு குற்றம் அல்ல, குறையும் அல்ல,
  "வேதம் - சாஸ்த்ரம்" பயில விரும்பும் ஒருவருக்குச் சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

  எனவே,
  தங்களின் ஸம்ஸ்க்ருத - படித்தல் - எழுதுதல் - புரிந்துகொள்ளல் இவற்றில் உள்ள புலமை பற்றித்
  தெரிந்தால், அடிப்படையாக இவற்றில் ஓரளவு (அடியேனுக்குத் தெரிந்த அளவு) புலமையை
  ஏற்படுத்திக்கொண்டு, அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு இறைவனின் திருவுள்ளத்தை எதிர்நோக்கலாம்.
  தாஸன்,
  என்.வி.எஸ்

  Leave a comment:


 • soundararajan50
  replied
  Re: Niti-207 Eyes of a Brahmin

  வேதத்தையோ - சாஸ்த்ரத்தையோ முறைப்படி பயிற்றுவிக்கும்
  ஜ்ஞானம் அடியவனுக்கு இல்லை. தங்களது இந்த வார்த்தைகளும் எனது கோரிக்கைக்கான தங்களது விளக்கமான பதிலும் தங்கள்பால் அடியேன்னுக்குள்ளமதிப்பை உயர்த்தவே செய்கின்றன இருப்பினும் எனது விருப்பம் நிறைவேற ஒரு வழியை காண்பிக்க பிரார்த்திக்கிறேன்

  Leave a comment:


 • bmbcAdmin
  replied
  Re: Niti-207 Eyes of a Brahmin

   அல்லவை தேய அறம் பெருகும்-
  நல்லவை நாடி, இனிய சொலின். 


  பொழிப்புரை :
  [நல்லன] அல்லாதவை தேய்ந்து மறைந்து அறம் எனும் நலம் பெருகும்; நல்லனவற்றை நாடி, இனிமை உடைய சொற்களைச் சொல்லின்.

  விரிவுரை :
  பிறருக்கு நன்மை தருபவற்றை நாடித் தெளிந்து, இனிமை உடைய சொற்களை ஒருவர் சொல்லின் அவருக்கு நல்லன அல்லாதவை குறைந்து மறைய, அறமாகிய நல்வினைப் பயன் பெருகும்.

  மற்றொரு நீதி ச்லோகம் நினைவு வருகிறது:
  "ச்லோகார்த்தேந ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிஷு
  பரோபகாராய புண்யாய பாபாய பரபீடனம்"
  பொருள்:- கோடிக்கணக்கான ஸநாதன க்ரந்தங்களில் (நூல்களில்) சொல்லப்பட்டவற்றை
  அரை ச்லோகத்தில் சொல்கிறேன் -
  (தன்னலமற்ற) பிறருக்குதவி செய்தல் புண்யம்
  (தன்னலத்தால்) பிறரை பாதிக்கும் அனைத்தும் பாபம்.
  குறளுக்குக் காரணம் :- நல்லவற்றில் ஒருவருக்கு நாட்டம் வந்துவிட்டால்
  அறம் வளர்ந்து விரைவில் மேன்மை அடைவார்.
  -எனவே சாஸ்த்ரத்தின்பால் ஏற்பட்ட பற்றுதலே, சாஸ்த்ர ஞானத்தை
  அடைய வழிகோலும்.

  கீழ்ச்லோகம் - அறம் என்பதன் அடிப்படைத் தத்துவம்.

  வேதமோ - சாஸ்த்ரமோ - எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பற்றிக் கேட்டால்
  புத்தகங்களைப் புரட்டிப்பார்த்து அந்தப் பகுதிக்கு பதில் அளிக்கும் அளவுக்கு மட்டுமே
  அறிந்துள்ளேன் - வேதத்தையோ - சாஸ்த்ரத்தையோ முறைப்படி பயிற்றுவிக்கும்
  ஜ்ஞானம் அடியவனுக்கு இல்லை.
  தாஸன்,
  என்.வி.எஸ்
  Last edited by bmbcAdmin; 07-11-12, 17:25.

  Leave a comment:


 • soundararajan50
  replied
  Re: Niti-207 Eyes of a Brahmin

  ஸ்வாமின் இந்தக்குருடனுக்கு தங்களால் வழி காட்டஇயலுமா வேதம் கற்க விழைகிறேன் சாஸ்திரமும்தான்

  Leave a comment:


 • bmbcAdmin
  started a topic Niti-207 Eyes of a Brahmin

  Niti-207 Eyes of a Brahmin
  श्रुति स्म्रुति विप्राणां चक्षुषी द्वे विनिर्मिते।
  स्यात् द्वाभ्या मंध प्रकीर्तितः॥


  பொருள் :
  வேதமும் சாஸ்த்திரமும் ப்ராஹ்ணமணனுக்கு இரு கண்களைப் போன்றது!
  இதில் ஒன்றை பெறாதவன் - பொட்டைக் கண்ணன்
  இரண்டையும் பெறாதவன் பிறவிக் குருடன்

  திருவள்ளுவர் வாக்கு:

  குறள் 393:
  கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
  புண்ணுடையர் கல்லா தவர்.

  கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

  குறள் 400:
  கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
  மாடல்ல மற்றை யவை.

  கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
  மு.வ உரை:
  ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

  குறிப்பு:- இங்கு மாடு என்ற சொல் செல்வம் என்ற பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது.
  அந்தணர் மாடு என்று வேதத்தைக் குறிப்பிடுவர்.
  எனவே அந்தணர்கான கல்வி என்பது வேதமும் சாஸ்த்ரமும் ஆகிய இரண்டும் ஆகும்.
  இவ்விரண்டும் இல்லாத அந்தணர்கள் (வேறு எதைக் கற்றிருந்தாலும்) அவர்கள் முகத்தில் இருப்பது கண் அல்ல புண் என்றே அறியவேண்டும்.
Working...
X