திருவரங்கத்தந்தாதி 8 அரங்கனே அனைத்தும்


தலையிலங்காபுரஞ்செற்றானரங்கனென்றாழ்சொற்புன்கு

தலையிலங்காதரம்செய்தபிரான் சரணன்றி மற்றோர்
தலையிலங்காநின்றகண்ணிலங்காண் கைக்குத்தாழுகைக்குத்
தலையிலங்காதிலங்க்கேட்கைக்குவாயிலஞ்சாற்றுகைக்கெ



பதவுரை :



தலை இலங்கா புரம் சிறந்த இலங்கை நகரத்தை
செற்றான் அழித்தவனும்
என் தாழ் சொல் எனது இழிந்த சொற்களைக் கூட
புல் குதலையில் மழலைச் சொற்களைப் போல்
ஆதரம் செய்த பிரான் விருப்பம் வைத்த பெருமான் ஆனவனுமான
அரங்கன் ரங்கநாதனுடைய
சரண் அன்றி திருவடிகள் இல்லாது
மற்று ஓர்தலை வேறு இடத்தை
காண்கற்கு பார்ப்பதற்கு
இலங்காநின்ற விளங்கும்
கண் இலம் கண்களைப் பெறவில்லை
தாழுகைக்கு வணங்குவதற்கு
தலை இலம் தலையைப் பெறவில்லை
கேட்கைக்கு கேட்பதற்கு
காது இலம் காதுகளைப் பெறவில்லை
சற்றுகைக்கு பேசுவதற்கு
வாய் இலம் வாயைப் பெறவில்லை