திரு வேங்கடத்து அந்தாதி 37/100துயர் தீர தொழுமின் வேங்கட நாதனை !

சிரந்தடிவானிவனோவென்றயன்வெய்யதீயசொல்லக்-
கரந்தடிவான்றலைகவ்வப்பித்தேறலிற்கண்ணுதலோ-
னிரந்தடிவீழத்துயர்தீர்த்தவேங்கடத்தெந்தைகண்டீர்
புரந்தடியேனைத்தன்பொன்னடிக்கீழ்வைக்கும்புண்ணியனே

பதவுரை : சிரம் + தடிவான்
கரம் + தடி + வான்
இரந்து + அடி
புரந்து + அடியேனை


சிரம் தடிவான் இவனோ என்று தன் தலையைக் கொய்பவன் இவனோ என்று
அயன் வெய்ய தீய சொல்ல பிரமன் கொடிய தீச்சொற்களைக் கூறி இகழ
கரம் தடி வான் தலை கவ்வ சிவனது கை தடித்த பெரிய பிரமனது தலையைக் கொய்ய
பித்து ஏறலின் பைத்தியம் கொண்டதனால்
கண் நுதலோன் நெருப்புக் கண்ணை நெற்றியில் உடைய சிவன்
இரந்து அடி வீழ பிச்சை எடுத்து திருவடிகளில் விழுந்து வணங்க
துயர் தீர்த்த அவரது துன்பம் போக்கி அருளிய
வேங்கடத்து எந்தை கண்டீர் திரு வேங்கட நாதன் அன்றோ
அடியேனைப் புரந்து என்னைப் பாதுகாத்து
தன அடிக் கீழ் வைக்கும் தனது திருவடிகளில் வைத்து அருளும்
புண்ணியன் பரிசுத்தமானவன்