Announcement

Collapse
No announcement yet.

சுவையான தகவல்கள் சில!

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • சுவையான தகவல்கள் சில!

  தாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
  அது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.
  ஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தெரியுமா?
  காட்டு ஆடு.
  பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.
  யானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.
  இரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.

  உடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து: ஹைபோ உப்பைச் சுடுநீரில் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி
  வந்தால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.
  அதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு மலேசியா.
  நீரிலும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய திறனுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பெரிதும் உதவும்

  என்பதால் இங்கிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வரிசையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய ரகப்படகு இது
  ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தெரியுமா? சுந்தர் லேண்ட்
  பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வாகனம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன? பூமியின் மேல் உள்ள
  காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
  நம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன.
  அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள்
  உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.
  உலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக
  சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு
  மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.
  உலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம்
  உள்ளது. மிகப் பொய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பிக்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும்
  எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.
  ஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம்
  குஜரத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  டெலஸ்கோப் எவ்விதம் செயல்படுகிறது?
  டெலஸ்கோப்பில் இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல்

  ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர்
  பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில்
  பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.
  பாம்பு எவ்விதம் ஒடுகிறது? அதற்குக் கால் உண்டா?
  பாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

  எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து,
  இப்படித்தொடர்ந்து செல்கிறது.
  பல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது?
  பல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது

  உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி
  தலை கீழாக நடக்க முடிகிறது.
  இரத்தம் உறைதல் என்றால் என்ன?
  உடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது

  நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக்
  கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.
  பயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நேரிடுவது எதனால்?
  பயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி விரிகிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக

  அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம்
  வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.
  வெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா?
  வெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது. வெற்றிலை ஜீரணத்திற்கு

  தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.
  இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்?
  கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது. ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள நீரின்

  அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு
  செய்கிறது.
  மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்?
  மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான

  அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து
  காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.
  ஓர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தெரியுமா?
  தண்ணீரில் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீரின் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.
Working...
X