05-04-2018
ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமியை பாயை போல சுருட்டி கடலுக்கு அடியில் வைத்தபோது ஸ்ரீமஹாவிஷ்ணூ வராஹமூர்த்தியாக அவதரித்து பூமியை மீட்டு எடுத்து ஹிரண்யாக்ஷனை ஸம்ஹரித்தார்.

அதனால் இன்று லக்ஷ்மி வராஹ மூர்த்தியாக பகவானை த்யானம் பூஜை செய்யவும். ஸ்தோத்ரங்கள் சொல்லவும். பாகவததிலுள்ள வராஹஅவதாரகட்டம் பாராயணம் செய்யலாம்.

பூமிக்கடியில் விளையும் கிழங்குவகைகள், வேர்க்கடலை, போன்றவற்றை சக்கரை சேர்த்துவேகவைத்து நிவேதனம் செய்யலாம். இதனால் நாம் வசிப்பதற்கு சொந்தமானவீடு, நிலம், கிட்டும். மேலும் வீடு, நிலம்

சம்பந்தமான அனைத்து ப்ரச்னைகளும் விலகும். மோக்ஷமும்கிட்டும்.