ஆகாச தீபம் கடனை போக்கும்: 08-11-2018 முதல் 07-12-2018 முடிய.கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோ தத்யாத் மாஸ மேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).சாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில்உங்கள் வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.08-11-2018 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்ஸங்கல்பம் செய்துகொண்டு பெரிய , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்திலோ அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .எல்லா கடன்களும் அடைப்பீர்கள்.. லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.எல்லா தினங்களும் முடியாவிட்டாலும் முடிந்த தினங்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.எட்டு திக்குகளுக்கும் ஒவ்வொரு திரியாக போட வேண்டும்.ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..