Announcement

Collapse
No announcement yet.

LAKSHMI KUBERA PUJAI.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • LAKSHMI KUBERA PUJAI.

    லக்ஷ்மி குபேர பூஜை.லக்ஷ்மி குபேர பூஜை செய்ய முதலில் 16 மாத்ரு கண பூஜையும், பிறகு நவ தான்யங்களில் நவ கிரஹங்களை ஆவாஹனம் செய்து, தர்பையினால் கூர்ச்சம் செய்து அதில் எட்டு லோக பாலகர்களை ஆவாஹனம் செய்து பிறகு லக்ஷ்மி தேவியை பூஜிக்க வேண்டும். 16 நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம், கலச பூஜை, 16 மாத்ரு கண பூஜை= ஓம் கெளர்யை நம: பத்மாயை நம: ஶஸ்யை நம: மேதாயை நம: ஸாவித்ரியை நம: விஜயாயை நம: ஜயாயை நம: தேவ ஸேனாயை நம:ஸ்வதாயை நம: ஸ்வாஹாயை நம: மாத்ருப்யோ நம:லோக மாத்ருப்யோ நம: த்ருத்யை நம: புஷ்ட்யை நம: துஷ்டியை நம: ஆத்ம தேவ்யை நம: த்யாயாமி, ஆவாஹயாமி, அர்க்கியம், பாத்யம், ஆசமணீயம் ஸமர்பயாமி, ஸ்நபயாமி, ஸ்நானாந்திரம் ஆசமணியம் சமர்ப்பயாமி. வஸ்த்ரம், கந்தம்,குங்குமம், புஷ்ப தூப தீபாதி ஸகல உபசாரார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி. கதலி பழம் நிவேதயாமி. வாழை பழம் நிவேதனம் செய்யவும்.நவகிரஹ பூஜை:- நவகிரஹ தான்யங்கள் மீது நவகிரகங்களை புஷ்பம் அக்ஷதை எடுத்து கொண்டு அஸ்மின் மண்டலே அதிதேவதா ப்ரதி அதி தேவதா ஸஹிதம் ஆதித்ய கிரஹம் த்யாயாமி ஆவாஹயாமிஎன்று வரிசையாக ஆவாஹனம் செய்து விட்டு ஆதித்யாதி நவகிரஹ தேவதாப்யோ நம: ஆஸனம், பாத்யம், ஆசமனீயம், வஸ்த்ர யக்யோப வீத உத்தரீயார்த்தம் , ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி.கந்தம், குங்குமம், அக்ஷதை ஸமர்பயாமி. புஷ்பானி பூஜயாமி வரிசையாக அர்ச்சனை செய்யவும். தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கற்பூரம், ப்ரதக்ஷிண நமஸ்காரம். லோக பால பூஜை கூர்ச்சத்தில் செய்யவும். மஹா லக்ஷ்மி பூஜாங்க பூதாம் ப்ருஹ்ம விஷ்ணு, த்ரியம்பக க்ஷேத்திர பால பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொள்ளவும். அஸ்மின் கூர்ச்சே ப்ருஹ்மன் ஸரஸ்வத்யா ஸஹ இஹ ஆகச்ச ஆகச்ச ஸ ப்ரஸ்வதி ஸஹித ப்ருஹ்மானம் ஆவாஹயாமி ஆசனம் ஸமர்ப்பயாமி.லக்ஷ்மி விஷ்ணுப்யோ நம: ஆவாஹயாமி, த்யாயாமி, ஆஸனம் சமர்பயாமி.துர்கா த்ரயம்பிகாப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி.க்ஷேத்திர பால பூமிப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி என்று அக்ஷதை சேர்த்து, அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம்,ஸ்நபயாமி ,ஸ்நானாந்திரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி உத்திரணி தீர்த்தம் காண்பித்து பேலாவில் சேர்க்கவும். ப்ருஹ்மாதீனாம் வஸ்த்ர உத்தரீய கந்த புஷ்ப தூப தீபாதி ஸமஸ்தோப சாரான் ஸமர்ப்பயாமி.அக்ஷதை சேர்க்கவும்.ப்ருஹ்மாதிப்யோ நம: கதலி பலம் நிவேதயாமி. ப்ருஹ்மாதிப்யோ கற்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி.கையை கூப்பிகொண்டு விஸ்வக்ஸேனம் நமஸ்க்ருத்ய பிதாமஹம் விஷ்ணும் ருத்ரம், ஶ்ரியம், துர்காம், வந்தே பக்த்யா ஸரஸ்வதீம், க்ஷேத்ராதிபம் நமஸ்க்ருத்ய திவா நாதம் நிஶாகரம் தரணீ கர்ப ஸம்பூதம் ஶஶி புத்ரம் ப்ருஹஸ்பதிம்.தைத்யாசார்யம் நமஸ்க்ருத்ய ஸூர்ய புத்ரம் மஹா க்ரஹம் ராஹு கேது நமஸ்க்ருத்ய யக்யாராம்பே விஶேஷத:ஶக்ராத்யா தேவதாஸ்ஸர்வா: முனீஸ்ச ப்ரணமாம்யஹம் கர்கம் முனீம் நமஸ்க்ருத்ய நாரதம் முனி ஸத்தமம். வஸிஷ்டம் முனிஶார்தூலம் விஸ்வாமிஸர்த்ரம் ப்ருகோஸ்ஸுதம் வ்யாஸம் முனீம் நமஸ்க்ருத்ய ஆசார்யாம்ஸ்ச தபோதனாத்.ஸர்வான் தான் ப்ரணமாம்யேவம் யக்ஞ ரக்ஷா கரான் ஸதா ஶங்க ஶக்ர கதா ஶாரங்க பத்ம பாணீர் ஜனார்தன: ஸர்வாஸு திக்ஷுரக்ஷேன் மாம் யாவத் பூஜா வஸானகம்.பிறகு லக்ஷ்மி பூஜை 16 உபசார பூஜை; ஈசானாதி பூஜைஈசானாய நம: ஶஶினே நம: மருத்ப்யோ நம: ஸூர்யாய நம: விஶ்வ கர்மணே நம: குரவே நம: அதர்வாங்கிரோப்யாம் நம: ப்ரஜாபதயே நம: விஶ்வேப்யோ தேவேப்யோ நம: அமர ராஜாய நம: அஶ்வினிப்யாம் நம: மித்ரா வருணாப்யாம் நம: விஷ்ணவே நம: ஈஶானாதிப்யோ நம: ஷோட ஶோபசார பூஜார்த்தே புஷ்பானி ஸமர்ப்பயாமி .வடக்கு பக்கத்தில் குபேரனுக்கு 16 உபசார பூஜை .லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம். ப்ரார்த்தனை.விசுவ ரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே மஹாலக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுக ராத்ரிம் குருஷ்வ மே. விஷ்ணோர் வக்ஷஸி பத்மே சகடகே சக்ரே ததாம்பரே லக்ஷ்மி நித்யா ததாஸி த்வம் மயி நித்யா ததாபவ நமஸ்தே ஸர்வ தேவானாம் வரதாஸி ஹரி ப்ரியே.யாக திஸ்த்வத் ப்ரபன்னானாம் ஸா மே பூயாத் த்வத் அர்ச்சனாத். இந்திரனை ப்ரார்திக்க ஸ்லோகம். விசித்ரை ராவதஸ்தாய பாஸ்வத் குலிஶ பாணயே பெளலோம் யாலி தாங்காய ஸஹஸ்ராக்ஷாய தே நம: குபேரனை ப்ரார்திக்க ஸ்லோகம்.தனதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பய ச பவந்து த்வத் ப்ரஸாதான் மே தன தான்யாதி ஸம்பத;ஹேமாத்ரி புத்தகம் இம்மாதிரி பூஜை செய்பவர் வீட்டிலும் செய்பவரிடத்திலும் லக்ஷ்மி தேவியின் பரிபூர்ண கிருபை கிடைக்கும் எங்கிறது.
Working...
X