16-11-2018. கோபாஷ்டமி----கோஷ்டாஷ்டமி.ஸ்ம்ருதி கெளஸ்துபம்:---கார்திகே யாஷ்டமி சுக்லா க்ஞேயா கோபாஷ்டமீ புதை: தத்ர குர்யாத் கவாம் பூஜாம் கோ க்ராஸம் கோ ப்ரதக்ஷிணம்..ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி கோபாஷ்டமி எனப்படும். இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்து சாப்பிட அகத்திக்கீரை புல்முதலியன கொடுத்து ஜலம் குடிக்க வைத்து பக்தியுடன் பசுவை 16 முறை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். இதனால் தெய்வ அருள் கிட்டும் பாபங்கள் நீங்கும் என்கிறது மாத்ஸ்ய புராணம்.