19-11-2018-உத்தான ஏகாதசி.ஶ்ரீ மஹா விஷ்ணு இன்று துயில் எழுகிறார். இன்று அதிகாலையில் பூஜை அறையில் ஶ்ரீ மஹா விஷ்ணு ஸன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழங்கள் , புஷ்பம், மஞ்சள் குங்குமம், கறிகாய்கள் பசுமாடு, தங்கம், ரத்னங்கள் போன்றமங்கல திரவ்யங்கள் வைத்து கதவை சிறிது சாற்றி விட்டு குடும்பதாருடன் சேர்ந்து, பக்தியுடன் நின்று கொண்டு ஶ்ரீ மஹா விஷ்ணு ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம் சொல்லி துயில் எழுப்பும் பாடல்கள் பாடி ஶ்ரீ மஹா விஷ்ணுவை துயில் எழுப்ப வேண்டும். அதாவது பூஜை அறையின் கதவை திறக்க வேண்டும். பிறகு மஹா விஷ்ணுவிற்கு பால் நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி நமஸ்கரித்து ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.இதனால் ஸுகத்தை தரும் ஶ்ரீ விஷ்ணுவின் அருள் கிட்டும் .குடும்பத்தில் நிம்மதி நிலவும்.