Announcement

Collapse
No announcement yet.

kasi yathrai-10.

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • kasi yathrai-10.

  ரஹஸ்ய தத்துவம்:-


  சிருஷ்டியில் பரமனிடமிருந்து ஆகாசம், அதிலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து ஜலம், ஜலத்திலிருந்து பூமி என்ற முறையில் உலகம் உண்டாகிறது.


  மறுபடியும் உலகம் பரமனிடத்தில் லயிக்கும் போது பூமி ஜலத்திலும், ஜலம் அக்னியிலும், அக்னி வாயுவிலும், வாயு ஆகாசத்திலும் ஆகாசம் பரமனிடத்தில் லயிக்கிறது. காசியை தவிர மற்ற எல்லாம் அழிந்து விடும்.


  காசியில் எல்லாம் லயமாவதால் காசியை மஹா ஸ்மசானம் எங்கிறோம்.
  அலகாபாத்தில்= (ப்ரயாகையில்) பூமியின் அம்சமான மணலை ஜலத்தில் விடுவதன் மூலம் நமக்கும் உலகத்திற்க்கும் லயமுண்டு. எல்லோரும் போய் சேர்ந்து நாம ரூபங்களை இழக்கும் இடம் இது என்ற லய தத்துவமும், ஜலமே முதலில் படைக்கப்பட்டது ஜலத்திலிருந்து பூமி என்ற சிருஷ்டி க்ரமத்தயும், அனுசரித்து ப்ரயாகையிலிருந்து

  கங்கை ஜலம் எடுத்து வந்து ராமனாதனுக்கு அபிஷேகம் செய்து நல்ல ஜன்மம் எடுக்கலாம். மண்ணாலாகிய உன்னுடலை காசியில் விடு. பரமனிடம் சேர்ந்து மறு பிறவியில்லாமல் இருப்பாய் என்பதயும் உணர்த்துகிறது.ஹரியும் ஹரனும் ஒன்று என்பதையும் காண்பிக்கிறது.


  எந்த இடமாக இருந்தாலும், ஸமுத்திரத்திற்கு முதலில் நமஸ்காரம், கல் அல்லது மணல் அல்லது வாழைபழம் போடுவது, ஸமுத்திரத்திற்கு அர்க்கியம், ப்ரார்த்தனை செய்து விட்டு ஸ்நானம் செய்ய அனுமதி பெற வேண்டும். (அனுக்ஞை).
  ஒவ்வொரு ஸ்நானமும் ஒரு அப்த க்ருச்சர பலனை தருவதால் நமது எல்லா பாவங்களும் நீங்க 36 ஸ்நானம் செய்ய வேண்டும்.

  ஒரு நாளைக்கு 12 ஸ்நானம் வீதம் மூன்று நாட்கள் ஆகும். ஒவ்வொரு ஸ்நானத்திற்கும் அங்கமாக ஸங்கல்பம், ஸ்நானாங்க தர்ப்பணம், , காய்ந்த மடி வஸ்த்ரம் அணிந்து நெற்றிக்கு இட்டு கொண்டு காயத்ரீ ஜபமும் செய்ய வேண்டும்.ஸ்நானாங்க தர்ப்பணத்தை தவிர ஸுக்ரீவன், நளன்


  ஸமந்தன், ஸீதா, லக்ஷ்மணன், ஸ்ரீ ராமசந்திரன் முதலியவர்களை த்யானம் செய்து, பிப்பலாதர் முதல் ஸீதை வரை எல்லோருக்கும் 3 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். கோடிக்கரையில் ஹிரண்ய சிராத்தம் செய்து, அரிசி, எள்ளு இவைகளால் க்ஷேத்ர பிண்ட தானம் செய்ய வேண்டும். பிறகு ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்த ஸ்நானம் செய்து


  அந்த தீர்த்தத்தை எடுத்து வந்து பூஜித்து ப்ராஹ்மண ஸமாராதனை செய்து வாத்தியார் ஸம்பானை செய்து யாத்திரை பூர்த்தி செய்ய வேண்டும்.


  உடனே காசி யாத்திரை செல்வதானால் தனுஷ்கோடி மணலில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என மூன்றாக பாவித்து பூஜை செய்து வேணி மாதவராக கருதி பூஜை செய்த மணலை எடுத்து கொண்டு அலகாபாத் செல்ல வேண்டும்.


  ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்யும் போது ஒன்று அல்லது ஏழு சிறிய கற்கள் அல்லது மணலையாவது எடுத்து பிப்பலாத ஸமுத்பன்னே க்ருத்யே லோக பயங்கரி ஸைகதம் தே ப்ரதாஸ்யாமி ஆஹாரார்த்தம் ப்ரகல்பிதம் என்ற மந்திரத்தை கூறி ஸமுத்ர ஜலத்தில் போட வேண்டும்.தற்போது வாழை பழம் வாங்கி போடுகிறார்கள்.


  ராமர் ராவணனை கொன்ற பிறகு பகவான் கடலில் கட்டிய பாலத்தை தனுசின் நுனியால் உடைத்த இடம், ஆதலால் தனுஷ் கோடி எனப்பெயர். இது மஹோ நதியும் ரத்னாகரமும் சேருமிடம்.
  அந்த காலத்தில் 64 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது அது மிகவும் குறைந்து விட்டது.


  ராமேஸ்வரம், அலகாபாத், காசி, கயா கான்டேக்ட் விவரம்.
  Kasi gaya contact details
  09451372420. sons of late swamimalai visvanatha sastrikal V RAMASESHA SASTRIKAL ANSD KRISHNA MURTHY GANAPADIKAL. B-5 /311 oudghabi (hanuman ghat) VARANASI
  PIN:221001. phone( 0542 ) 22310133 ; 2310134; 2275173////cell; 93353 33137 and 94153 36064


  irst you must go to RAMESWARAM and then to kasi and again to Rameswaram is the correct proceedure for iyers. So I am also giving the sastrigal's name s in RAMESVARAM. S. RADHA KRISHNA VADHYAR. Sri mathre graham. PHONE; (04573) 221943. cell; 9443508843; 9442461923; For boarding and lodging HOTEL TAMIL NADU IS THERE. KASI MUTT; LODGE PHONE NO; (04573) 223130.


  K.R. VENKATARAMA SASTRIGAL. (04573) 223636, 222068. cell; 94866 72258.


  SHRI. SWAMINATHA SARMA rameswaram cell; 99433 08217. He is doing THILA HOMAM AT HIS RESIDENCE FOR PITHRU SAPA/DOSHA NIVRUTHY.


  In the ramanatha swamy temple daily early morning spatika linga sevai is there at 5 a. m. entry fee rupees fifty only. Sankara mutt is having AC ROOM AND NON AC ROOM . and sri. sundar sastrigal is there in sankara mutt. (sringeri sankara muut),. cell no; 09443321641 . சுந்தர சாஸ்திரிகளும் தில ஹோமமும், தீர்த்த சிராத்தமும் செய்து வைக்கிறார். தில ஹோமத்திற்கு 12000 ஆவர்த்தி ஹோமம்;

  ஜபம், சாப்பாடு உள்பட 25,000 /= ரூபாய்; 6 பேர் தீர்த்த சிராத்தம் பார்வண விதி படி. எட்டாயிரம் ரூபாய். மிக சிறப்பாக செய்து வைக்கிறார். 2014ம் ஆண்டு இந்த ரூபாய் இருந்தது. ராமேஸ்வரம் கோவில் கிணறுகளில் ஸ் நானம் செய்ய இருபத்து ஐந்து ரூபாய் டிக்கட் வாங்கி எல்லா கிணறுகளிலும் குளிக்கலாம். ஐ நூறு ரூபாய் கொடுத்தால் எல்லா கிண்றுகளிலும் அதிக தண்ணிரில் குளிக்கலாம்.இதுவும் 2014 ஆண்டு இருந்த ரேட்.
  NAVA BHASHANAM DEVI PATTINAM. SRI. V. JAGANNATHA IYENGAR 1/58 PERUMAL KOIL STREET NABASANAM PIN; 623514. PHONE: (04567) 264501.


  THIRUPULLANI; TPR. SRI. LAKSHMANA SASTRI. (04567) 254261 for tila homam.
  If the 5th and 10th house lords are ill placed and the running dasa is of the ill placed planets this combines the pithru dosham. after tila homam here you have to do anna dhaanam in sholingur.
  Swami malai V.RAMASESHA SASTRIGAL;V KRISHNAMOORTHY GANAPADIGAL. B-5 OUDGHARBI ( HANUMAN GHAT) VARANASI. 221001. PHONE NO; (0542) 2310133, 2310134, 2275173.


  ARIYUR S. MAHADEVA GANAPADIGAL; B-5/309 HANUMAN GHAT; VARANASI PIN: 221001 PHONE (0542) 2277117; 2275800, 2276244. cell; 93369 11879; 99562 76851.


  ARIYUR S. VISWANATHA GANAPADIGAL; B-5/286 AWADHGARBI, HANUMAN GHAT, VARANASI 221001. PHONE; 2277719, MOBILE; 9451372420.


  FOR IYERS; RIG/YAJUR/ SAMA VEDAMS. They can take you to allahabad and to gaya and in kasi they can do all rituals.


  Gaya : Karnatak Bhavan M.N Bacchu Acharya Ram Sagar, Nal Sadak Road, Near Panch Mahalla, Gaya 823 001 ph : 0631-2435432, 99318 40631, 99340 23514
  2. Thambu Shastrigal (Iyengar) 9956513388


  sri kasi nattukottai nagara satram godovilia varanasi phone.no-0542 2451804. fax no. 0542-2452404. Back side of susil cinema theatre. Godovilia tanga stand. U.P.
  Manager sankara mutt-No.B-4/7A hanuman ghat-varanasi-221001. O542-2277932.


  Sri kanchi kamakoti sankar mandir. Ahalya bai vishnupada road; gaya -bihar.
  Sri adhi sankara vimana mandap. Beni bundi road daragung allahabad 211006.
  Room in varanasi-98681 36243 jaya sri-Ravindrapuri near shivala ghat.
  நகரத்தார் விடுதிகள்;- வாரானாசி0542 2451804; 089534 79419;
  :- அலஹாபாத் 0532 2591265;
  கயா; 0631 222648 ராமேஸ்வரம்- 04573 221157; 944224 85293.
  அயோத்தி:-05278 232703; நாசிக்:-0253 2620878.


  Contact


  S. Nandini
  Shubha Phala Yathra Services,
  B.4/7 Hanuman Ghat ,
  Varanasi 221001 (UP) India


  Phone No : 9962005936
  email-id :nandushankar5@gmail.com
  web: https://www.subhaphalayatra.com/


  வெங்கட் ராம ஐயர், 34 B , G2 ,கல்யாண வசந்தம் பிலாட்ஸ்; 2ஆவது மெயின் ரோடு புருஷோத்தமன் நகர் க்ரோம்பேட்டை சென்னை-600044.


  R, jaya raman; B-4/20 poora Nand Mutt Hanuman ghat-varanasi-221001. U.P state. E mail-vaara 1289 @gmail.com


  Rameswaram;_ contact 76391 08725.for arrange ments to sraththam and thila homam. Mr. Ravi. 94865 73075.


  ராமேஸ்வரத்திற்கு சென்னையிலிருந்து மாலை 5-50 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 22661. காலை 4-30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இதில் சென்றால் அன்று காலையே அவசரபடாமல் அமைதியாக கார்யங்கள் செய்யலாம்.


  தங்குமிடத்திலேயே ஸ்நானம் செய்து சுத்த பாரம்பரிய உடை உடுத்தி பிறகு ஸங்கல்ப ஸ்நானம் செய்ய செல்ல வேண்டும்.

  ஸமஸ்த பாபங்களும் அகன்றால் சுத்தமான பரமனின் திருவடியை நாம் அடைய முடியும்.ஆதலால் பாபம் நீக்கி புண்யம் தேட ஸேது யாத்திரை செய்வது பர லோக பலனை அளிக்கும்.தனுஷ் கோடியில் மணல் எடுத்து மூன்றாக பிரித்து இரண்டை ஸேது மாதவர் பிந்து மாதவர் என பூஜித்து அலகாபாத் சென்று அங்குள்ள வேணி மாதவரை பூஜிக்கவும், கங்கா ஸ்நானம் செய்யவும் உத்தரவு பெற வேண்டும்.


  ஸேது மாதவர், பிந்து மாதவர் என எண்ணி பூஜித்த மணலை அங்கேயே விட்டு விடவும். மூன்றாவது பாகமான வேணி மாதவரை பூஜித்து இந்த மணலை அலகாபாத் எடுத்து செல்ல வேண்டும். அலகாபாத்தில் இந்த மணலை வேணி மாதவராக இங்கும் பூஜித்து இந்த மணலை த்ரிவேணி ஸங்கமத்தில் போட வேண்டும்.


  மாதவன்= மா=லக்ஷ்மி; தவன்=புருஷன்; மாதவன் எனில் லக்ஷ்மி புருஷன் எனப்படும்.பன்னக சாயீயாக இருப்பது பாற்கடலில். பாற்கடலில் உதித்த லக்ஷ்மியை மார்பில் வைத்திருக்கிறார். ஆதலால் விஷ்ணுவிற்கு மூல ஸ்தானம் கடல். மூல ஸ்தானத்திலிருந்து பற்பல இடங்களில் மூர்த்தியுடன் எழுந்து அருளி யுள்ளார்.


  விஷ்ணு, ப்ரயாகை, ராமேஸ்வரம் காசி ஆகிய இடங்களில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என்ற மூன்று இடங்களிலும் பஸித்தமாக் அமர்ந்திருக்கிறார். மணல் கெட்டியாகி கல் வடிவமாகுவது இயர்க்கை. மணலை பிடித்து பகவானாக பாவித்து பூஜை செய்தவுடன் , பக்தனது பக்தியாலும், மந்திரத்தாலும், பூஜையாலும் மணல் விரைவாக கல் ஆகும்.


  இது ஸாலகிராம வடிவமாகவும், சிலா வடிவமாகவும் மாறும். த்ரிவேணி பூஜை செய்வோர் ஸேது மணலாக வந்த வேணி மாதவருக்கும் பூஜை செய்ததாகும். இதே போல் காசியிலிருந்து தான் எங்கும் லிங்கம் அமைக்க பட்டுள்ளது. காசி சிவனுக்கு மூல ஸ்தானம். தனது மூல ஸ்தானமான காசியிலிருந்து , தனது எட்டு உடலில் ஒன்றானதும் தனக்கு மிக ப்ரியதுமான கங்கா

  ஜலத்தால் அபிஷேகம் செய்தால் பரம சந்தோஷம் அடைந்து பக்தனுக்கு அருள் பாலிக்கிறார். கங்கையை தலையில் தரித்து கங்காதரன் என பெயர் பெற்றவர். தனி சுத்த கங்கை அலகாபாத்தில் தான் உள்ளது. காசியில் மற்ற நதிகளுடன் கலக்கிறது.


  ஸபிண்டிகரணம், ஆப்தீகம் முதலியவைகளில் ப்ராஹ்மணார்த்தம் சாப்பிடுவது அறியாமல் பூனை முதலியவற்றை கொல்வது, அக்ஞானத்தினால் ஸந்தியா வந்தனம் முதலிய வற்றை விட்டது, ஜெயிலில் வசித்தது, பலாத்காரமாக அன்ய தேசம், அன்ய மதம் சென்றது, முதலிய பாபங்களுக்கு ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள முன்னர் பலர் தனுஷ்கோடி செல்வர்.அங்கு கோ தானம், க்ருச்சரம், ஹோமம் முதலியன செய்வர்.


  ப்ரதக்ஷிண வகையில் வட தேச யாத்திரை:- சென்னயிலிருந்து துங்கபத்ரா, குருட்வாடி, பண்ட்ராபுரம்,பாம்பே, நாசிக், இடார்ஸி,அலகாபாத், காசி, கயா, கல்கத்தா ,பூரி, கோதாவரி, பெஜவாடா , சென்னை வர வேண்டும்.


  இனி உங்கள் வீட்டில் ஸமாராதனை பூஜை:-
  ஆசமனம். அனுக்ஞை;- வினேஸ்வர பூஜை;- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே.
  ப்ராணாயாமம். ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மான கர்மண: நிர்விக்னேன பரி ஸமாப்தியர்த்தம் ஆதெள மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே.


  பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் போடவும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் மஹா கணபதிம் த்யாயாமி. ஆவாஹயாமி, ஆஸநம் ஸமர்ப்பயாமி; பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி. ஹஸ்தயோ: அர்க்கியம்
  ஸமர்ப்பயாமி; ஆசமணியம் ஸமர்ப்பயாமி; மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி; பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி; ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி; ஸ்நானாந்திரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி; உபவீதார்தம்
  அக்ஷதான் ஸமர்ப்பயாமி; ஆபராணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. கந்தாந்தாரயாமி; கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி; புஷ்பானி பூஜயாமி.


  ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாயை நம: கபிலாய நம; கஜ கர்ணகாய நம;லம்போதரய நம: விகடாய நம: விக்ன ராஜாய நம:வி நாயகாய நம: தூம கேதுவே நம: கணாத்யக்ஷாய நம: பால சந்திராய நம: கஜானனாய நம: வக்ர துண்டாய நம:


  ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம: மஹா கணபதயே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி; தூப தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
  நிவேதனம்:- ஓம் பூர்புவஸ்ஸுவ: ------தேவ ஸவி தப்ரஸவீ: ஸத்யம் த்வர்த்தேண பரிஷஞ்சயாமி; அம்ருதோபஸ் தரண மஸி. ப்ராணாயஸ்ஸுவா: அபானாயஸ்ஸுவா: வ்யானாயஸ்ஸுவாஹா; உதானாயஸ்ஸுவா: ஸமாணாயஸ்ஸுவா:


  ப்ருஹ்மணேஸ்ஸுவாஹா ;கணபதயே நம: கதலி பலம் நிவேதயாமி. அம்ருதாபிதா நமஸி. பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். தாம்பூலம் ஸமர்ப்பயாமி; கற்பூர நீராஞ்சனம் ; மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி.

  வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸம ப்ரப அவிக்னம்குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.


  ப்ரதான பூஜா ஸங்கல்பம்:-
  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷ்த்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶுபே ஶோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஶ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே , அஷ்டாவிம்சதி தமே


  கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீ பே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பர்ஶுவே , ஶாலி வாஹன சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே-------- நாம ஸம்வத்ஸரே


  ------------அயனே-----------ருதெள-----------மாஸே---------பக்ஷே---------- திதெள------ ஸுப திதெள --------- வாஸர:------- நக்ஷத்ர யுக்தாயாம்--------யோக--------- கரண ஏவம் குண ஸகல விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ------- சுப திதெள


  ஸ்ரீ பர்வத வர்த்தனி ஸமேத ஸ்ரீ ராம நாத ஸ்வாமி ப்ரஸாத சித்தியர்த்தம்,, ஸ்ரீ டுண்டி கணபதி , காலபைரவாதி பரிவார ஸஹித , விசாலாக்ஷி அன்னபூர்ணி ஸமேத ஸ்ரீ காசி விஸ்வேஸ்வர ஸ்வாமி ப்ரஸாத ஸித்யர்த்தம், ஸ்ரீ கங்கா பாகிரதீ ப்ரஸாத


  சித்தியர்த்தம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ ஸேது மாதவ பிந்து மாதவ வேணி மாதவ , ஸ்ரீ ஆதி கதாதர ப்ரஸாத ஸித்தியர்த்தம், தேவைக்கு ஏற்ப இங்கு சேர்த்து கொள்ளலாம் இம்மாதிரி ---- ஸ்ரீ அலர்மேலு ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர


  ஸ்வாமி ப்ரஸாத ஸித்தியர்த்தம், ஸ்ரீ வள்ளி தேவ ஸேனா ஸமேத ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஸன்னிதெள ;ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத ஸ்ரீ ஹரி ஹர புத்ர ஸ்வாமி ஸன்னிதெள , இத்யாதி.


  அஸ்மாகம் ஸக குடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யானாம் ஸேது ராமேஸ்வர த்ரிவேணி காசி கயா யாத்ரா ஸம்பூர்ண பல ஸித்தியர்த்தம் , ஸகல தைவானுகிரஹ ஸித்தியர்த்தம், ஸ்ரீ ராம நாதாதி ஸகல தேவதா பூஜாம் கரிஷ்யே. அப உபஸ் ஸ்பர்சியா.


  விக்னேஸ்வர யதாஸ்தானம்:- கணா நாந்த்வா---------- ஸாதனம். ஸ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸ்ஸுவரோம். அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஸுமுகம் ஸ்ரீ விக்னேஸ்வரம் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. ஶோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.


  கலச பூஜை:- பஞ்ச பாத்திர உத்ரணி பாத்திரத்தில் நாங்கு பாகமும் சந்தனம் குங்கும இடவும். உள்ளே அக்ஷதை புஷ்பம் போடவும். வலது கையால் பாத்திரத்தை மூடிக்கொண்டு சொல்லவும்.
  கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர ஸமாஶ்ரிதா: மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா ஸ்ம்ருதா: குக்ஷெள து ஸாகரா ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா . ருக்வேதோ அத யஜுர் வேத: ஸாம வேதோ அப்யதர்வண: அங்கைஸ்ச ஸஹிதா: ஸர்வே கலஶாம்பு ஸமாஶ்ருதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் குரு தக்ஷய காரகா: கங்கே ச யமுணே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து கவேரி ஜலேஸ்மின் ஸன்னதிம் குரு.


  கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜா த்ரவ்யங்களையும், தன்னையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க. மணி அடிக்கவும். ஆகமார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம். கண்டாரவம் கரோம் யாதெள தேவதாஹ்வான காரணம்.
  ஆவாஹனங்கள்:- அலங்கரித்து வைத்துள்ள படங்கள், பொருள்கள் ஆகிவற்றில் அந்தந்த தேவதைகளுக்கு , அந்தந்த தேவதை களின் த்யான ஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்து அர்சிக்க வேண்டும்.


  ஆவாஹனாதி முத்திரைகள்;- ஆவாஹிதோ பவ; ஸ்தாபிதோ பவ; ஸ்ன்னிஹிதோ பவ; ஸன்னிருத்தோ அபவ; அவகுண்டிதோ பவ; ஸுப்ரீதோ பவ; ஸுப்ரஸன்னோ பவ: ஸு முகோ பவ; வரதோ பவ; ப்ரஸீத ப்ரஸீத.


  16 உபசார பூஜை புருஷ ஸூக்த விதானப்படியோ, அல்லது ஸ்ரீ ருத்ர விதானப்படியோ செய்யலாம்.
  அலஹாபாத்=ப்ரயாகையிலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை சொம்பில் கங்கா தேவியையும், காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட காசி ரக்ஷை கயிறுகளில் கால பைரவரையும், க்ருஷ்ணர் படம் ஒன்றில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி


  மாதவர் களையும், கயா விலிருந்து கொண்டு வரப்பட்ட விஷ்ணு பாதத்தில் மஹா விஷ்ணுவையும், காசி யிலிருந்து வாங்கி வந்த அன்னபூரணி விக்ரஹத்தில் அன்ன பூரணியையும் , ஆவாஹனம் செய்து பூஜித்தல் வேண்டும். சிலர் குல தெய்வம் ஆவாஹனம் பூஜை யும் சேர்த்து செய்கின்றனர்.
  முற்றும்.
Working...
X