Announcement

Collapse
No announcement yet.

vivaaham-3.

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • vivaaham-3.

  வடஆற்காடு சேர்ந்தவர்கள் ,யஜுர்வேதம் இல்லா மற்ற வேத காரர்களும்4 பாலிகைவைத்து பூஜிக்கிறார்கள்.
  யஜுர்வேத காரர்கள் 5பாலிகைநடுவில் ஒன்றும்,கிழக்கு,மேற்கு,தெற்கு,வடக்குஎன வைக்கிறார்கள்.  ஊரவைத்த விதைகளை முதலில்நடுவிலும்,பின்னர்,கிழக்கு,தெற்கு,மேற்கு,வடக்குஎன்ற வரிசையிலும் ப்ரதக்ஷிணமாகவும் விதைகளை தெளிக்கவேண்டும்.
  கருப்புஎள் சீக்கிரமாக முளை விட்டுவேகமாக வளரும் சுபாவ முள்ளது.ஆதலால்இங்கு இதை சேர்க்கிறார்கள்.இதைசுப காரியங்களுக்கும் தாராளமாகசேர்க்கலாம்.எந்ததவறும் இல்லை.  மொத்தம்தெளிப்பது ஒற்றை படையில்இருக்க வேண்டும்,எத்தனைபேர் வேண்டுமானாலும் தெளிக்கலாம்.பெண்வீட்டு பாலிகைகளில்


  தெளிக்கும்சுமங்கலிகளுக்கு பெண்வீட்டினரும்,பிள்ளைவீட்டு பாலிகைகளில்தெளிப்பவர்களுக்கு பிள்ளைவீட்டினரும்,தாம்பூலம்,சந்தனம்,குங்குமம்,பணம்கொடுக்க வேண்டும்.
  நாந்திஇரு வீட்டாரும் செய்வர்.பிறகுரக்ஷா பந்தனம் என்னும் ப்ரதிஸரபந்தம்.
  வெறும்வயிற்றுடன் தான் நாந்தி செய்யவேண்டும்.நாந்திசெய்பவர்களும்,ப்ரதக்ஷிணம்வருபவர்களும்,நாந்திமுடிந்த பிறகே டிபன் சாப்பிடசெல்வார்கள்.
  பிள்ளைக்குவலது கையிலும்,பெண்ணுக்குஇடது கையிலும் அவரவரது தந்தைகங்கணம் கட்டுவர்.


  பெண்ணிற்குபெண் வீட்டினரும்,பிள்ளைக்குபிள்ளை வீட்டினரும் ஆரத்திஎடுக்க வேண்டும்.ஆரத்திஇருவர் எடுக்க வேண்டும்.
  வடக்குபக்கமாக இருக்கும் பெண்டிர்அந்த தட்டிலுள்ள ஆரத்தி கரைசலைவாசலில் கோலத்தின் மீது கொட்டவேண்டும்.
  ஆரத்திதட்டில் போட்ட காசை இருவரும்சமமாக எடுத்து கொள்ள வேண்டும்.


  பிறகுமணமகன் ஸர்வாங்க க்ஷவரம்செய்து கொள்ள வேண்டும்.நாவிதர்ஸர்வாங்க க்ஷவரம் செய்யும்போது மணமகனின் தொடை இடுக்குகளில்தோல் வியாதி இருக்கிறதா
  வீரியம்சீக்கிரம் வெளி வரும் நிலையில்இந்த மணமகன் இருக்கிறாராஎன்பதை கண்டு பெண் வீட்டாரிடம்சொல்வர். அந்தகாலத்து நாவிதர் களுக்குநாட்டு வைத்தியம் நன்குதெரியும்.
  தற்காலம்போல்அந்த காலத்தில் வைத்திய வசதிஇல்லாததால் ,குழந்தைபிறந்த வுடன் தாயார் இறப்பதும்,அக்குழந்தைக்காகவேறு திருமணம் செய்து கொள்வதும்அதிக மாக இருந்திருக்கிறது.
  பிறகுஎல்லோரும் சாப்பிட செல்லவேண்டும்.
  பிறகுஸாயங்கால டிபன்,காப்பி.
  பிறகுமாப்பிள்ளை அழைப்புக்குஏற்பாடுகள்.இதுமுழுவதும் லெளகீகம் தான்,இதில்வைதீக நிகழ்ச்சி இல்லை.இக்காலத்தில்இதுவும் தேவை இல்லா ஒன்று.  முன்பாகவேதிருமண மண்டபத்திற்குஅருகாமையில் உள்ள கோயிலில்மாப்பிள்ளை அழைப்பிற்குசொல்லி ஏற்பாடுகள் செய்துவைத்து,
  தெருவில்மாப்பிள்ளை அழைப்பு கார்வருவதற்கு போலீசிடம் பர்மிஷன், தேவைபடும்மற்ற பர்மிஷன்களும் வாங்கிவைத்து கொள்ள வேண்டும்.


  மாலை6 மணிக்குசந்தியாவந்தனம்,காயத்ரிஜபம் எல்லா ஆண்களும் செய்துவிட்டு கோயிலுக்கு மெதுவேநடந்து செல்வர்,கீழேவிரிக்கும் ஜமக்காளம்போன்றவற்றையும் எடுத்துசெல்வர்.
  பெண்கள், வெற்றிலை,பாக்கு,சந்தனம்,குங்குமம்,மஞ்சள்தூள், கல்கண்டு,சக்கரை,பருப்புதேங்காய் ஒரு தாம்பாளத்தில்ஒரு ஜோடி உச்சியில் பூ சுற்றிஅதில் 4 வெற்றிலை,பாக்கு
  மஞ்சள்வைத்து வாழைபழங்கள்,தேங்காய்கள்,பன்னீர்பாட்டில்,மணமகனின்டிரஸ், மாலை,பூசெண்ட்; புஷ்பம்ஆகியவற்றை தாம்பாளம் டிரேகளில்வைத்து எடுத்து செல்வர்.


  கோயிலில்மணமகனை கிழக்கு முகமாக அமரசெய்து புரோஹிதர் டிரஸ்ஸைஓதி கொடுக்க அதை மனப்பெண்ணின்சகோதரன் மணமகனுக்கு அணியசெய்து ,
  மாலைபோட்டு பூசென்டை கையில்கொடுத்து சந்தனம் குங்குமம்இட்டு, பன்னீர்தெளித்து ,பரிசுபொருட்கள் ஆன
  மோதிரம்,அல்லது,ப்ரேஸ்லெட்,அல்லதுசெயின், கைகடிகாரம் முதலியன போட்டுவிட்டு
  சர்க்கரைகல்கண்டு கொடுத்து பின்னர்அங்கு வந்துள்ள பிள்ளைவீட்டாருக்கு சந்தனம் கல்கண்டுகொடுத்து உபசரிக்க வேண்டும்.


  பின்னர்கோயிலுக்குள் மாலையை கழற்றிகையில் வைத்து கொண்டு,சுவாமிக்குஅர்ச்சனை செய்து கொண்டு,பிறகுவெளியே தயாராக
  இருக்கும்அலங்காரம் செய்த காரில் ஏறிஉட்கார்ந்து கொண்டு மாலையைபோட்டு கொண்டு,மணமகனைஊர்வலமாக
  மண்டபத்திற்குஅழைத்து வருவார்கள்.இந்தஊர்வலத்தில் பாண்ட் வாத்யகாரர்கள்,பின்னர்நாதஸ்வர இசை மழையை பொழிந்துகொண்டு  வர,மாப்பிள்ளையின்பக்கத்தில் மழலை செல்வங்கள்நிரம்பி வழிய காற்றே இல்லாமல்உடல் வியர்த்து கொட்டும்.மாப்பிள்ளையின்காரின் பின் பக்கம் பெண்வீட்டு பெண்டிர்கள்  பருப்புதேங்காய்,தேங்காய்,பழம்என பல தாம்பாளங்கலை ஏந்தியவண்ணம் எல்லா உறவினர்களும்காரை தொடர்ந்து வருவார்கள்.
  இடைஇடையே வாண வேடிக்கையும்செய்கிறார்கள்.மணப்பெண்ணைமற்றொரு காரில் அழைத்து வந்துஊர்வலத்தை காணச்செய்
  கிறார்கள்.மண்டபம்வந்தவுடன் மண ப்பெ ண்ணையும்மாப்பிள்ளை அருகில் அமர வைத்துபோட்டோ, வீடியோஎடுக்கிறார்கள்.


  ஊர்வலம்வரும்போது மிக அதிக வயதானவர்கள்,மண்டபத்திற்குவர முடியாத நிலையில் உள்ளவர்கள்தங்கள் வீட்டு வாசலில் இருந்தபடியே மணமகனை
  பார்த்துஆசீர்வதிக்கட்டும்,என்பதற்கோ,அல்லதுஊர்வலம் வரும் போது மணமகனைபற்றிய தகவல்கள் ஊரில்லுள்ளவர்கள்எவரேனும்
  பார்த்து,பெண்வீட்டாரிடம் சொல்லி ஆவனசெய்யலாம் என்பதற்கோ இம்மாதிரிவைத்திருக்கலாம் அந்த காலத்தில்.  ஊர்கோலம்முடிந்து மணமகன் மண்டப வாயிலில்வந்து இறங்கியவுடன் முதலில்மணமகளின் தாயார் மணமகனுக்குவெற்றிலை,பாக்குபழம், ஒருமட்டை தேங்காய் கொடுக்கவேண்டும். அதைவாங்கி மணமகன் மேளக்கா ரரிடம்கொடுப்பான்.  அதன்பின்னர் பெண் வீட்டார் இருவர்ஆரத்தி எடுக்க ,யாராவதுஆண் நபர் ஒரு தேங்காயால்மணமகனின் தலையில் திருஷ்டியாகசுற்றி, சதுர்தேங்காயாக கீழே போட்டுடைக்கவேண்டும்.
  இதன்பின்னர் மண மகளின் தந்தையாரும்,மணமகனின்தந்தையாரும் சேர்ந்து நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவேண்டும்.இதிலும்வைதீக கர்மா எதுவுமில்லை.  விக்னேஸ்வரபூஜை செய்த பின்னர்,இன்னாருடையகுமாரியை இன்னாருடைய குமாரனுக்குகொடுக்க இருப்பதாய் நிச்சயித்து,
  இருப்பதையும்இந்த லக்னத்தில் பாணி கிரஹணம்செய்து கொடுக்க போவதாய் லக்னபத்ரிக்கை வாசிப்பர்.  மணப்பெண்ணைநன்கு அலங்கரித்து ,தலையில்ராக்கோடி வைத்து பின்னி ஜடைநாகம் வைத்து,பூவினால்அலங்காரங்கள் செய்து
  மணமேடையில் அந்த காலத்தில் அமரசெய்வார்கள்.மாப்பிள்ளைஅழைப்புக்கு வைத்த பருப்புதேங்காயை பிள்ளை வீட்டினர்மண மேடையில் கொண்டு வந்துவைக்க வேண்டும்.  வெற்றிலை,பாக்குபழங்கள்,பன்னீர்,சந்தனம்,குங்குமம்.சக்கரை,கல்கண்டு,புஷ்பம்யாவற்றையும் வைத்து ,மணப்பெண்மேடைக்கு வரு முன்னர் பிள்ளைவீட்டினர் எல்லோரையும்  நிச்சயதார்த்ததிற்கு வரும் படிஅழைத்து வந்தவர்களுக்கு,சந்தனம்,குங்குமம்,சக்கரை,கல்கண்டுகொடுத்து உபசரிக்க வேண்டும்.  பெண்ணின்தந்தை, பிள்ளையின்தந்தையிடம் தாம்பூலம்,பழங்கள்,தேங்காய்,புஷ்பம்இவற்றுடன் கல்யாண பத்ரிக்கைவைத்து ,
  மறுநாள் இந்த லக்னத்தில் கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய்தெரிவிக்க ,பிள்ளைவீட்டு புரோஹிதர் அந்தபத்ரிக்கையை எடுத்து எல்லோர்முன்னிலையிலும் வாசிப்பர்.
  மணமகனின்தந்தை பழத்தட்டுடன் தனதுசம்மதத்தை தெரிவித்தவுடன்மணப்பெண்ணை அழைத்து வரச்சொல்வர்.
  மணப்பெண்ணிற்குமாலை அணிவித்து அழைத்து வர,அவளதுதந்தைக்கு வலது பக்கம் அருகில்மணையில் உட்கார சொல்லி,பிள்ளையின்தந்தை  நிச்சயதார்த்தபுடவையை புரோஹிதர் மந்திரம்முழங்க கெட்டி மேளம் கொட்டபெண் தனது மாமனாருக்கு நமஸ்காரம்செய்து பெற்று கொள்ள வேண்டும்.  அந்தபுடவையை பெண்ணிற்கு நாத்தனார்ஆக போகும் பெண் அழைத்து சென்றுமணமகளுக்கு தலைப்பு நிறையவிட்டு கட்டி விட வேண்டும்.  புடவைகட்ட நாத்தனார் வர வேண்டும்என்று வைத்ததிற்கு காரணம்,மணப்பெண்ணைமிக அருகில் பார்த்து ஏதேனும்குறை கண்டால் ,அவர்களதுஆயிரம் காலத்து பயிரானவாழ்க்கையை காக்க வழி வகுக்கலாம்என்பதே.  அவர்களதுஉறவு சுமுகமாக இருக்க வழிகோலும்.மணப்பெண்ணுக்கும்பிள்ளை வீட்டினர் மீது இருக்கும்பயம் சிறிது தெளியும்.தைரியத்தைஏற்படுத்தும் ஒரு வாய்ப்பு.அந்தகாலத்தில் இதற்காக இம்மாதிரிவைத்து இருக்கி றார்கள்.  பெண்புது புடவை கட்டி கொண்டுவருவதற்குள்
  பெண்ணின்தந்தை பிள்ளையார் பூஜை செய்து, எந்தவித விக்கினமும் இன்றி திருமணம்இனிதே நடைபெற ப்ரார்த்தித்துகொள்ள வேண்டும்.  மணப்பெண்தன் தந்தையின் அருகில் உட்கார,பெண்ணின்நாத்தனார் பெண்ணின் கழுத்திலும்,கைகளிலும்சந்தனம் பூசி ,நெற்றியில்குங்குமம் இட்டு,சர்க்கரை,கல்கண்டுகொடுத்து ,தலையில்சிறிது புஷ்பம் வைத்து  மாலைஒன்றை போட்டு ,ஒருப்ளாஸ்டிக் பையில் வெற்றிலை,பாக்கு,பழம்,மஞ்சள்போட்டு, இந்தபையை மணமகளின் புடவை தலைப்பில்வைத்து, கீழேவிழாதபடி சொருகி விட வேண்டும்.
  வடஆற்காடு, தென்ஆற்காட்டை ,சேர்ந்தவர்கள்இதை அவர்களது இல்லத்திற்குவந்த பிறகு செய்கிறார்கள்.  திருநெல்வெலி காரர்கள் இத்துடன்பயறு அல்லது பொட்டு கடலையும்சேர்த்து வைத்து கட்டுகிறார்கள்.


  புடவைதலைப்பில் ப்ளாஸ்டிக் பைபொருட்களை வைத்து கட்டுவதைமட்டும் மண பெண்ணை நிற்க வைத்தபடி கட்டலாம்.
  அந்தகாலத்தில் மணமகன் இங்கு வரமாட்டார்.இந்தகாலத்தில் வந்தால் தகப்பனாருக்குவலது பக்கத்தில் உட்காரலாம்.


  இதன்பின்னர் பெண் அவளது பெற்றோருக்கும்மற்றவர்களுக்கும் நமஸ்காரம்செய்த பிறகு அமர வேண்டும்.
  இப்போதுஒரு பெண் வீட்டாரும் ஒருபிள்ளை வீட்டாரும் என இருவர்பாட்டு பாடி ஆரத்தி எடுத்துஇவ்வைபவத்தை நிறைவு செய்யவேண்டும்.


  ஆரத்தியில்பெண்ணும்,பெண்ணின்அப்பாவும் காசு போட வேண்டும்.இதன்பின் மணபெண் அவளது மடியில்கட்டபட்டுள்ள தாம்பூலத்தைவெளியே எடுத்து வைத்து விடலாம்.
  மணமகனுக்கானமுஹூர்த்த வேஷ்டியையும்,மணமகளுக்கானகூறை புடவையையும் ஓதி பெண்ணின்தந்தை பிள்ளையின் தந்தையிடம்ஒப்படைக்க வேண்டும்.


  மணமகனுக்குமட்டும் தனியாக இன்று இரவுமாமியார் சாப்பாடு பரிமாரவேண்டும்.அந்தகாலத்து வழக்கம்.  இதன்பிறகு நெருங்கிய உறவினர்களுக்குதனது சக்திக்கேற்ப துணிமணிகளோ, பணமோபுரோஹி தர் ஓதிட அளிக்கலாம்.  இதன்பின்னர் விருந்தினர்களை உணவுஉண்ண செய்து தாம்பூலம் அளிக்கவேண்டும்.
  பிள்ளைவீட்டார் விளையாடல் சாமான்களையும்
  விளையாடல்சாமான் என்பதில் பெண்ணுக்குவேண்டிய அலங்கார பொருட்கள்இருக்கும்.
  இதைபிள்ளை வீட்டார் வாங்கிவைத்திருக்க வேண்டும்.இப்போதுபிள்ளை வீட்டார் விளையாடல்சாமான் களையும்,பிள்ளயின்தாயார்


  கூறைபுடவையையும்,அதன்மேல் திருமாங்க ல்யமும் வைத்துகையில் வைத்திருக்க வேண்டும்.
  இன்றும்மணமகன்/ மணமகள்பெற்றோர் மடிசார்,பஞ்சகச்சத்துடன் இருக்க வேண்டும்.
Working...
X