Announcement

Collapse
No announcement yet.

VIVAAHAM-8.

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • VIVAAHAM-8.

  இதன்பின்னர் பரத்வா முஞ்சாமிஎன்ற மந்திரங்களை கூறிகன்னிகையின் இடுப்பில் முன்புகட்ட பட்ட தர்ப்பை கயிற்றைஅவிழ்த்து
  மேற்குதிக்கில் வைத்து கை அலம்பனும்.


  பொருள்:-ஓபெண்ணே இந்த தர்பை கயிற்றின்மூலமாக ஸவிதா உன்னை வருணபாசத்தினால் கட்டினார்.இதைஅவிழ்பதின் மூலமாக அந்த
  பாசத்திலிருந்துஉன்னை விடுவிக்கிறேன்.இருவரும்இவ்வுலகில் சுகமாக வாழ்ந்து, நல்லபுண்ய கர்மாக்களை செய்துப்ருஹ்ம லோகம்
  செல்வோம்.என்பதாகும்.  லாஜஹோமம் முடிந்த பிறகு பொரிஇட்ட சகோதரனுக்கு,அவரவர்வசதிப்படி தாம்பூல த்துடன்,பணமோ,மோதிரம்அல்லது வஸ்திரம் கொடுக்கவேண்டும்.  பிள்ளைவீட்டை சேர்ந்தவர் மரியாதைசெய்ய வேண்டும்.பொரிஇட்ட சகோதரனுக்கு.
  இப்போதுசம்பந்தி மரியாதையும் செய்யலாம்.
  பெண்வீட்டு சம்பந்திக்கு பிள்ளைவீட்டினரும்,பிள்ளைவீட்டு சம்பந்திக்கு பெண்வீட்டினரும்.
  தாம்பூலம்,சந்தனம்,குங்குமம்,புஷ்பம்,பழம்,புடவை,வேஷ்டி,சக்கரைகல்கண்டு கொடுப்பது வழக்கம்.சம்பாவனையும்கொடுக்கலாம்.  ப்ரவேஸஹோமம்;-


  ப்ரவேசஎன்றால் நுழைதல் என்று பொருள்.
  அதாவதுமணமகள் முதன் முதலாக தனதுகணவன் வீட்டில் நுழைந்துஅங்கு செய்ய பட வேண்டிய ஹோமம்.  விவாஹம்முடிந்ததுமே,பிள்ளை,பெண்இருவரும் பலகாரமாக ஏதாவதுசாப்பிட்டு விட்டு,
  பிள்ளைவீட்டிற்கு வந்த பின்னர்,இதைசெய்வார்கள்.ஆனால்இப்போது பிள்ளை தங்கி இருக்கும்கல்யாண மண்டப அறையிலேயேசெய்கிறார்கள்.
  பிள்ளைதங்கி இருக்கும் இடத்திலேயேபெண்ணையும்,பிள்ளையையும்அழைத்து வந்து  கிரஹப்ரவேசம் என செய்து,கோலமிட்ட இடத்தில் பட்டு பாயில்கிழக்கு முகமாக உட்
  காரவைத்து பாலும் பழமும் கொடுத்து,சிலர்எள்ளூம்,வெல்லமும்கொடுக்கின்றனர்.பெண்ணுக்குபுடவை, பிள்ளைக்குஉடை என ஓதி கொடுத்து,பிள்ளைவீட்டினர்,பெண்வீட்டினரை
  உபசரித்துபானகம், கொடுத்து,தாம்பூலம்,பழம்,புஷ்பம்,சந்தனம்குங்குமம் கொடுத்து ஏதாவதுபணம் வைத்து கொடுப்பார்கள்.  இந்தசமயத்தில் பெண் வீட்டினர்ஒரு ஜோடி பருப்பு தேங்காய்கொண்டு வந்து வைக்க வேணும்.இம்மாதிரிசெய்த பிறகு ஹோமம் செய்ய பழையஇடத்திகு வர வேண்டும்.  அதன்படி மணமகன்,மணமகள்,இருவரும்பட்டு பாயில் வந்து அமரவேண்டும். பதிமூன்று மந்திரங்கள் சொல்லி,பதிமூன்றுஆஹூதிகள்
  செய்யவேண்டும். ஹோமமந்திரத்தின் பொருள்.  என்மனைவி சொர்கத்தை அடைவிக்கும்நல்ல சந்ததியுடன் செல்வங்கள்உடையவளாக இருக்கட்டும்.இந்தஅக்னி தேவன் வீட்டை ரக்ஷிப்பவர்.
  எங்களுக்குசெல்வத்தையும்,வளர்ச்சியையும்கொடுத்தருள வேண்டும்.நாங்கள்இருவரும் இந்த வீட்டில்பிரியாமல் சேர்ந்திருக்கவேண்டும்.
  நீண்டஆயுளை பெற வேண்டும்.இப்படியானஎல்லா நலங்களையும் அளிப்பீராக.  பிறகுமனைவியை பார்த்து இந்த வீட்டில்,உனக்கு,ஸந்ததி,சம்பத்துக்களால்ஆனந்தம்
  உண்டாகும்படிதேவர்கள் அருள் புரியட்டும்.வீட்டிற்குயஜமானியாக இரு.
  ஜாக்கிரதையாகஇருந்து, உடலைரக்ஷித்து ஸுகத்தை அனுபவி.என்றும்பொருள் கொண்ட மந்திரங்கள்கூறபடுகின்றன.  ப்ரவேஸஹோமம் முடிந்த பிறகு அருந்ததியையும்,துருவனையும்பார்க்க வேண்டும்.
  நக்ஷதிரங்கள்உதிக்கும் வரை மெளனமாயிருந்து
  உதித்தபின் கிழக்கு நோக்கியோ,வடக்குநோக்கியோ வெளியே சென்றுத்ருவக்ஷிதி த்ருவ யோனி என்றஇரு மந்திரங்கள் சொல்லிஅடையாளங்கினால் துருவநக்ஷத்திரத்தையும்,  அருந்ததிநக்ஷத்திரத்தையும் பார்க்கவேண்டும்.
  இவர்களதுதாம்பத்ய வாழ்க்கை துருவநக்ஷத்திரம் போல் நிலைபிறழாதவாறும் ,தருமத்திலிருந்துவழுவாததாக இருக்க வேண்டும்.எனபொருள்.  ஆக்னேயஸ்தாலி பாகம்.


  தேவர்களுக்குஅக்னியே முகம்.அவர்மூலமாக மந்திரங்களை கூறிஹோமம் செய்தால் தான் தேவர்களிடம்ஹவிஸ்ஸை சேர்க்க இயலும்.  இந்தஅக்னியும் சாதாரண தீயாகஇல்லாமல்,விதிப்படிப்ரதிஷ்டை செய்தால் தான்தேவர்களிடம் ஹவிஸ்ஸை சேர்க்கஇயலும்.
  விவாஹத்திற்கானஅக்னியிலேயே ஒரு சிறியபாத்திரத்தில்,சிறிதுஅரிசியை எடுத்து இரண்டு மூன்றுமுறை நீர் விட்டு கலைந்துவைத்து ,அதுநன்றாக வெந்து
  சாதமானபின், அதைஅக்னியில் இட்டு ஹோமம் செய்வதேஸ்தாலீ பாகம் எனப்படும்.


  ஆக்னேயஎன்றால் அக்னியை ஆராதித்துஎன்று பொருள்.


  விவாஹம்செய்து கொன்ட பெண்ணுடன்முதலில் சங்கல்பம் செய்துகொண்டு, மணப்பெண்
  அரிசிகுத்துவது போல் பாவனை செய்து,அரிசியைமூன்று முறை கலைந்து,அந்தவிவாஹ அக்னியில் தண்ணீரையும்,


  அரிசியையும்கொதிக்க விட வேண்டும்.அரிசிநன்றாக வெந்து சாதமான பின்,வடக்குஅல்லது கிழக்கு முகமாகஇறக்கி,அதில்சிறிது நெய்யை விட்டு வைக்கவேண்டும்.
  பொரசஇலையில் அபிகாரம் செய்து (சிறிதுநெய் விட்டு)அந்தஅன்னத்தை இரண்டு முறை எடுத்துவைத்து ,இந்தஇலையின் அன்னத்தின்


  மீதும்நெய் விட்டு,பாத்திரத்தில்மீதியுள்ள அன்னத்தின் மீதும்,ஒவ்வொருமுறை அபிகாரம் செய்ய வேண்டும்.
  பிள்ளைவீட்டார் ஸ்ரீ வத்ஸ கோத்திரமாகஇருந்தால் மூன்று முறை அன்னம்எடுத்து வைக்க வேண்டும்.  இவ்வாறுசெய்வதற்கு அவதானம் என்றுபெயர்.
  பாத்திரத்தின்நடுவில் இருந்து ஒர் முறையும்,
  கிழக்கிலிருந்துஇரண்டாவது முறையும்,மேற்கிலிருந்துமூன்றாவது முறையும் என்றபடிஅவதானம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு


  முறையும்,நமதுகட்டை விரலின் முதல் கோடுஅளவிற்கு அன்னம் எடுக்கவேண்டும்.அதிகமாகவோ குறைவாகவோ எடுக்க கூடாது.
  அன்னபாத்திரத்தை இடது கையால்பிடித்து கொண்டு,அக்னயேஸ்வாஹா என்று முதல் ஹோமம்செய்து, அக்னயேஇதம் ந மம என்று சொல்ல வேண்டும்.  பின்னர்பொரச இலையில் அபிகாரம் செய்து, அன்னபாத்திரத்தின் வடக்குபகுதியிருந்து,முன்புஎடுத்த அளவை விட சிறிது அதிகம்ஒரு முறை
  எடுத்து.( ஸ்ரீவத்ஸம் என்றால் இரண்டு முறை) அன்னத்தைஎடுத்து வைத்து அபிகாரம்இரண்டு முறை செய்து ,முன்போல் அன்ன பாத்திரத்தை
  இடதுகரத்தால் தொட்டு கொண்டு உறக்கஅக்னயே ஸ்வஷ்ட க்ருதே ஸ்வாஹாஎன்று அக்னியில் வடகிழக்கேஹோமம் செய்யனும்.
  பின்னர்அக்னியின் வடக்கு பகுதியில்அக்னியை தூண்டி விட்டுஅதில்இரண்டு பொரச இலைகளினாலும்நெய்யை எடுத்து,ஒரே
  சமயத்தில்ஸ்வாஹா என்று சொல்லி ஹோமம்செய்ய வேண்டும்.இங்கே33 தேவதைகள்ஆராதிக்க படுகிறார்கள்.இதுதான்ஸ்தாலி பாகம்.  ஒளபாஸனம்.:-
  ஒருவனுக்குஉப நயனம் ஆன பிறகு தினமும்இரு வேளையும் ஸமிதா தானம்மிக முக்கியம்.
  விவாஹமான பிறகு தினமும் இரு வேளைஒளபாஸனம் முக்கிய மாகிறது.காலையில்
  ஸூரியனைகுறித்தும்,மாலையில்அக்னியை குறித்தும் பச்சைஅரிசியினால் செய்ய படும்ஹோமமே ஒளபாஸனம் எனப்படும்.
  தம்பதிகள்ஜீவித்திருக்கும் வரைதினந்தோறும் இரு வேளை ஆராதிக்கவேண்டும்.
  அக்னிஹோத்ரி எனப்படுபவர்கள்,தமதுஇல்லங்களில் ஒரு சிறிய பானையில்இந்த
  அக்னிஅணையாமல் வைத்திருந்து ,தினமும்காலையில் இந்த அக்னியைமூட்டி,அக்ஷதையைபோட்டு ஒளபாஸனம் செய்வதுவழக்கம்.
  ஆடவர்வெளியூர் சென்றாலும் இதைவீட்டு பெண்டிர்களும் மந்திரம்இல்லாமல் செய்யலாம்.  அக்னிதேவனுக்கு உண்ண உணவு அளிப்பதேஒளபாஸனம்.கடவுளுக்குஉண்ணும் உணவு வகை களை தினமும்நைவேத்யம் செய்து பகவானுக்குஅர்ப்பணம் செய்ய வேண்டும்.  நன்குகளைந்து ஈரமில்லாத அக்ஷதையை,கையில்எடுத்து கொண்டு,அதைஇரண்டாக பிறித்து ,இடதுகையில் சிறிது அதிகம் எடுத்துகொண்டு,வலதுகை நுனியால் அக்னயே ஸ்வாஹாஎன ஹோமம் செய்ய வேண்டும்.  அக்னயஇதம் நமம என்று கூறிய பின் ,இடதுகரத்தில் உள்ளதை வலது கரத்தில்மாற்றி கொண்டு,
  அக்னயேஸ்வஷ்ட க்ருதே ஸ்வாஹா என உறக்ககூறி வட கிழக்கில் ஹோமம் செய்யவேண்டும்.
  அக்னியேஎங்கள் செயலால் உண்டான செல்வத்தைஅனுபவிப்பதற்கு நல்ல மார்கத்தில்எங்களை அழைத்து செல்வீர்களாக.எங்களதுஎல்ல எண்ணங்களையும் நீங்கள்அறிவீர்,  மறைந்திருந்துகெடுக்கும் பாவத்தை நாசம்செய்ய கூடியவர்.நமஸ்காரங்களைவெகுவாக சமர்ப்பித்து உம்மைபூஜிகிறோம்.
  இந்தஒளபாஸன கர்மா நன்கு அனுஷ்டிக்கபட்டதாக அமைவதற்காக அநாக்ஞாதாதிமந்திர ஜபமும் ஜபிக்க படுகிறது.


  இதன்பொருள்;- ஓஅக்னியே உமது பூஜையான யக்ஞத்திற்குஎவ்வளவு அங்கங்கள் என அறியமாட்டோம்.தெரிந்தோதெரியாமலோ தவறுதலாக
  நாங்கள்ஏதாவது செய்திருந்தால் அவற்றைஎல்லாம் ஒழுங்காக்கி பூர்ணபலனை தரும் படி செய்வீராக.குழந்தைகளைபெரியவர் ரக்ஷிப்பது
  போல்தாங்கள் எங்களை ரக்ஷிக்கவேண்டும்.நாங்கள்அறியாமல் விட்டதெல்லாம்தாங்கள் அறிவீர்.  அந்தந்ததேவர்களை அழைத்து,அந்தந்தகாலத்தில்,அவரவர்களுக்குஏற்றபடி தாங்கள் தான் பூஜைசெய்து எங்களுக்கு பலனை தரவேண்டும்.என்றஅர்த்தத்தில் மந்திரம் உள்ளது.  மஹாவிஷ்ணு த்ரிவிக்கிரம அவதாரம்எடுத்து தமது திருவடிகளால்உலகை அளந்தார்.அவரதுபாதத்தினால் கர்ம பூமிபுண்ணியமாகி கர்மா விற்குஏற்ற இடமாகவும் ஆயிற்று.  அவரதுதிருவடி ஸ்மரணத்தினால் எல்லாவித தோஷமு மகன்று புண்ணியமேற்படும்.ஆகையினால்ஒவ்வொரு வைதீக கார்யத்திலும்,
  ஹோமத்திலும்,ஜபத்திலும்,இதம்விஷ்ணு விச க்ரமே த்ரேதா நிததேபதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுரேஎன்ற மந்திரம் சொல்லபடுகிறது.
  ஒளபாஸனம்பகலில் ஸூரியனை குறித்தும்,மாலையில்அக்னியை குறித்தும் செய்யபடுகிறது.  கந்தர்வபூஜை;-


  ஒளபாஸனம்ஆனதும் கந்தர்வ பூஜை செய்யபடுகிறது. ஒருஅரசு,ஆல்,அத்திஇதில் ஏதோ ஒன்று வகையை சேர்ந்தஒரு சமித்து எடுத்து  சந்தனம்பூசி, மணமகன்வேஷ்டியிலிருது ஒரு நூல்எடுத்து, மனமகள்புடவையிலிருந்து ஒரு நூல்எடுத்து இதை சமித்தில் சுற்றி,புஷ்பம்சேர்த்து அலங்காரம் செய்து,அதில்விசுவாவசு  என்னும்கந்தர்வனை ஆவாஹனம் செய்துபூஜை செய்வார்கள்.இந்தகன்னி பெண்ணை இது வரை காத்துவந்த கந்தர்வனுக்கு நன்றிசெலுத்தி, வழிஅனுப்பி வைப்பதாக இந் நிகழ்ச்சிநடை பெற்று வருகிறது.  சேஷஹோமம்.


  இதுநான்காவது நாள் பின் ராத்திரியில்எழுந்து செய்ய வேண்டிய ஹோமம்.இதுதான் வைதீக சடங்குகளில் நிறைவுபகுதி. இதைவிடியற்கா லையில் செய்வார்கள்.
  ஏற்கெனவேஒரு ஸமித்தில் சந்தனம் தடவி,பூஜித்தவிசுவாவசு என்னும் கந்தர்வனைஉதீர்ஷ்வாத்த என்ற இரண்டுமந்திரங்களினால் எழுப்பி,யதாஸ்தானம்செய்வதாக இந்த நிகழ்ச்சிஅமைகிறது.  அதாவதுதண்டத்தில் ஆவாஹனம் செய்யபட்ட
  கந்தர்வராஜனை துயில் எழுப்பி தண்டத்தைஅலம்பி வேறு இடத்தில் வைக்கவேண்டும்.
  சேஷஹோமத்திற்கு முன்பாக இதைசெய்வர்.


  இதுநாள் வரை மணப்பெண்ணை காத்துவந்த அந்த தேவனை வணங்கி இதுவரை இவளை ரக்ஷித்து வந்ததாங்கள் எனது தகப்பன் வீட்டி
  லிருப்பவளும்,திருமணமாகாதவளுமானவேறு கன்னிகைகளுக்கு காவலாகஇருப்பீர்களாக.
  என்னும்கருத்துக்கள் அமைந்த மந்திரங்களைகூறி வழி அனுப்புகிறார்கள்.


  இதன்பின்னர் குண்டத்தில் உள்ளஅக்னியை எதிரில் வைத்துகொண்டுஏழு மந்திரங்கள் சொல்லிநெய்யினால் ஹோமம் செய்யபடுகிறது.
  நானறியாதுஏதேனும் தோஷங்கள் இவளிடம்இருந்து அது எங்களுக்கு நாசம்விளைவிக்க முற்படுமானால்அவை செல்லட்டும்  ஆதித்யனும்,வாயுவும்,ப்ரஜாபதியும்இதற்கு உதவு வார்களாக.என்னைவெறுப்பவர்களும் இல்லாமல்போகட்டும்.பன்னிரன்டுமாதங்களுக்கு
  உரியதேவதைகளும் எங்களது சத்ருக்களைஅழிக்கட்டும்.என்னும்பொருள் பட மந்திரங்கள்கூறப்பட்டு,இந்தஹோமம் செய்ய படுகிறது.


  சத்துருக்கள்என்பது உங்கள் உடலிலுள்ளகாமம்,க்ரோதம்,மதம்,மார்ச்சரியம்,பொறாமை,பேராசைபோன்ற கெட்ட எண்ணங்களே.
  இந்தஹோமங்கள் யாவும் நிறைவுபெற்றபின் ஜயாதி ஹோமம் செய்யபடுகிறது.இதுவரைநாம் செய்த ஹோமங்கள் யாவும்முழுமை பெற இது செய்ய படவேண்டும்.  சுமார்அறுபது தேவர்களையும்,அவர்களதுபத்னிகளையும் ஆராதித்துபூஜிக்கிறோம்.இதில்சில தேவதைகள் மனோ வ்ருத்திக்கும்,சிலர்
  காலத்திற்கும்,சிலர்நக்ஷத்திரங்களுக்கும்,சிலர்கந்தர்வர்களுக்கும் அதிஷ்டானதேவதை ஆவர்.
  ஒருதேவர்களுடன் இன்னொரு தேவதையைசேர்த்தால் அவரே தனியாகஒருவராகவும்,சேர்க்கையால்,வேறுஒருவராகவும் ஆகிறார்.  ஆதலால்முக்கிய தேவதைகளுக்கு ஹோமம்செய்த பின்னர் இவர்களுக்குஹோமம் செய்வதும் ,இவர்களைஆராதிப்பதும் ,
  முக்கியதேவதைகளையே பூஜிப்பதாகஅமைந்து, மேலும்நல்ல பலன்களை அளிப்பதாகஅமையும்.  பின்னர்ஹோமம் செய்து மிகுதியுள்ளநெய்யிலிருந்து மணப்பெண்ணின்சிரத்தில் பூ:ஸ்வாஹா;புவ;ஸ்வாஹா:ஸுவஸ்ஸுவாஹா
  ;ஒம்ஸ்வாஹா என 4சொட்டுக்கள்தெளிக்க வேண்டும்.இதனால்மூன்று லோகத்திற்கு அதிபதிகளானதேவதைகள் மனமுவந்து
  மணமகளைஅவளது கணவனுடன் காப்பாற்றுவதாக கருத படுகிறது.


  நாந்திஸ்ராத்தம்.


  குலதெய்வங்களுக்கு,பூஜை,ஸுமங்கலிப்ரார்த்தனை,சமாராதனைசெய்வது போல் ஸுத்ர காரர்கள்,சிலகர்மாவின் முடிவிலும் நாந்தி சிராத்தம் செய்யுமாறுவிதித்திருக்கிறார்கள்.  பித்ருக்களில்பல வகை உண்டு.அதில்ஒரு வகை நாந்தீ முக என்பவர்.ஸுபகாலத்தில் ஆராதிக்க தக்கவர்.
  எள்ளீற்குபதில் ஸோபன அக்ஷதை.ஸத்யவசு என்ற பெயர் கொண்ட விசுவேதேவர்களே வரிக்க படுகின்றனர்.முதலில்ஸ்த்ரீ வர்கங்களுக்கே வரணம்.பூஜைமுதலியன.  இப்படிவிதி வத்தாக ஹோமம் செய்து,அந்தணர்களைவரித்து, அன்னம்அளித்து சிராத்தமாக செய்வதுஉத்தமம்.
  விதிப்படிஅந்தணர்களை வரித்து ,வாழைஇலையில் அரிசி வாழைக்காய்,வைத்து,தக்ஷிணைதாம்பூலம்,


  வேஷ்டி,வைத்து,த்ருப்திஆசிர்வாதம் கூறும்படி செய்யவேண்டும். இதுமத்திமம். ஆமசிராத்தம் என இதற்கு பெயர்.
  இதுவும்செய்ய இயலாதவர்கள் ஹிரண்யசிராத்தம் என்ற பெயரில்தாராளமாக தக்ஷிணை தர வேண்டும்.
  எப்படிசெய்தாலும் இதன் பின்னர்இதற்கு அங்கமாக புன்யாஹ வசனம்செய்ய வேண்டும்.


  பலதானம்;-


  ஹோமங்கள்யாவும் நிறைவு பெற்ற பின்அக்னி உபஸ்தானம் செய்துஎங்களுக்கு தக்க காலத்தில்தீர்காயுஸ் உள்ள புத்திரன்
  பிறப்பதற்காகபல தான தாம்பூல தானம் செய்கிறேன்என்று ஸங்கல்பம் செய்து கொண்டுபல தானம் பெறுபவரை உமா மஹேஸ்வர


  லக்ஷ்மிநாராயணர் வடிவமாக கருதி ,ஆஸனம்முதலிய உபசாரங்கள் செய்து,,மனைவிதீர்த்தம் போட,தக்ஷிணையுடன்அனைவருக்கும்பல
  தானம்செய்ய வேண்டும்.தட்டில்தாம்பூலம் வைத்து அதில் ஐந்துரூபாய் நாணயம் வைத்து முதலில்வைதீகர்களுக்கும்,அதன்பின்னர் பெண் வீட்டார்,பிள்ளைவீட்டார்,நெருங்கியஉறவினர்  அனைவரையும்தம்பதி ஸமேதராக அழைத்துஒவ்வொருவருக்கும்மிதை அளிக்கவேண்டும்.மந்திரத்தின்அர்த்தம்:-பலமானதுஎப்போதும் தானம் செய்பவரதுவிருப்பத்தை நிறைவு
  செய்கிறது.அதுபுத்ர, பெளத்ரவ்ருத்தி,செல்வம்,நன்மை,புஷ்டி,ஆகியவற்றைஎல்லாம் எங்களு க்கு தரட்டும்.என்பதாகும்.


  தாம்பூலசர்வணம்:-


  கிரஹஸ்தன்ஆன பிறகு தான் தாம்பூலம்போடலாம். முதன்முதலாக தம்பதிகள் தரிக்கும்நிகழ்ச்சி தான் இது.
  மணப்பெண்ணின்சகோதரன் தம்பதிகள் இருவருக்கும்,வெற்றிலையில்சிறிதுசுண்ணாம்பு தடவி பாக்கு வைத்துமடித்து கொடுக்க வேண்டும்.
  மணமக்கள்பிள்ளை செல்வம் பெற்று சீறும்,சிறப்புமாகபல்லாண்டு காலம் ,மகிழ்ச்சியாக வாழ ப்ரார்த்தித்து கொண்டுஇந்த தாம்பூலம் அளிக்க படுகிறது.  மழநாட்டு பிரஹசரண பிரிவைசேர்ந்தவர்கள்
  . பெண்ணின்நாத்தனார் ஒரு பித்தளை படியில்ஒரு முழு கொட்டை பாக்கை வைத்து,முழுவதுமாகநிரப்பி, அதில்பணம் வைத்து,
  கைகளில்ஏந்தி,மணமக்களைமூன்று முறை சுற்றி வர வேண்டும்.இதற்கானஏற்பாட்டை பெண் வீட்டார்செய்து தர வேண்டும்.அதில்வைக்க பட்ட பணம் நாத்தனாரைசேரும்.  மஹதாசீர்வாதம்.
  விவாஹத்தின்வைதீக நிகழ்ச்சிகள் யாவும்முடிவுற்ற பின்னர் மஹதாசீர்வாதம்நடக்கிறது.
  இச்சமயத்தில்பெண்டிர் கெளரி கல்யாணம்பாடி கொண்டு,பொட்டுகடலைவெல்லத்தினால்
  செய்யபட்ட ஐந்து பருப்பு தேங்காய்களை கொண்டு வந்து வைக்கவேண்டும்.இப்போதுமணமகள் மணமகனது இடது புறமாகநின்று  இருவரும்மணமகனது மேல் அங்க வஸ்த்ரதுணியை விரித்த வண்ணமிருக்கவேத மந்திரங்க ளை ,உச்சரித்துஅந்தணர்கள் மங்களாக்ஷதையைதம்பதி மேல் தூவ ஆசீர்வாதம்நடக்கிறது.  வடஆற்காட்டை சேர்ந்தவர்களானால்தம்பதிகள் எதிரும் புதிருமாகநின்று துணியை பிடித்திருப்பர்.பின்னர்மணமக்கள் நமஸ்காரம் செய்துபழைய நிலையில் அமர வேண்டும்.  பின்னர்பிள்ளையின் மாமனார் மோதிரபணம் ஓதியதும் ,நாகவல்லிஆசீர்வாதம் என மணமக்களுக்குபுடவை, வேஷ்டிஓதபடுகிறது.
  பெண்ணின்மாமா, பிள்ளையின்மாமா பெயர் சொல்லி மந்திரம்சொல்லி ஆசீர்வாத பணமோதுவார்கள். அதன்பிறகு மற்ற உறவினர்கள்,நண்பர்கள், தங்களதுஅன்பளிப்பை அளிப்பார்கள்.  இந்தசமயத்தில் எல்லோரும் மேடைஏறி வாழ்த்தலாம்.இதன்பிறகு தம்பதிகளுக்கு ஆரத்திஎடுக்க படும்.பிள்ளைவீட்டிலிருந்து ஒருவரும்,பெண்வீட்டிலிருந்து ஒருவரும்ஆரத்தி எடுக்க வேண்டும்.  சிலர்ஆரத்தி தட்டின் நடுவில் ஐந்துமுக குத்து விளக்கின்மேற்பகுதியின் ஐந்து முகங்களையும்ஏற்றி வைப்பார்கள்.
  ஆரத்திஎடுத்து விட்டு,அந்தஐந்து முக தீபத்தை எடுத்துவிட்டு, ஆரத்திகரைசலை வாசல் கோலத்தில்கொட்டுவார்கள்.
  சிலர்ஆரத்தி கரைசலின் மீது ஒருவெற்றிலை வைத்து அதன் மேல்சூடம் ஏற்றி வைத்து ஆரத்திசுற்றி த்ருஷ்டி கழிப்பதும்உண்டு.

 • #2
  Re: VIVAAHAM-8.

  திருமணம் பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் அலுவலகம் செல்ல முன் கூட்டிய ஏற்பாடுகள் செய்து வைக்க வேண்டும். இப்போது இருவரையும் அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டு வர வேண்டும்.


  பது மண தம்பதிகள் இருவரையும் அவரவர் இல்லங்களுக்கு ( உள்ளூரிலேயே இருந்தால்)
  ராகு காலம், யம கண்டம் இல்லாத நல்ல நேரத்தில் மணக்கோலத்துடனேயே அழைத்து செல்ல வேண்டும்.


  பட்டு பாய், பாலும், பழமும், சந்தனம், குங்குமம்.வெற்றிலை பாக்கு, சக்கரை எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்.
  இவ்வாறு செய்வதற்கு முன்பாகவே ஒருவர் அங்கு சென்று,வீட்டின் வாசலில் கல்யாண கோலம் போட்டு, வர வேற்க ஆரத்தி கரைசல் தயாராக வைக்க வேண்டும்.


  மணமக்கள் வாசலில் வந்ததும், அவர்கள் இருவரையும் வாசலில் கிழக்கு பார்க்க நிற்க வைத்து,பெண் வீட்டார் ஒருவர், ஆண் வீட்டார் ஒருவர் என ஆரத்தி எடுத்து உள்ளே வர சொல்ல வேண்டும்.


  உள்ளே மணமக்கள் வந்ததும் , வரவேற்பு அறையில் கிழக்கு முகமாக பட்டு பாயில் அமர வைக்க வேண்டும். பெண்டிர் ஒவ்வொருவரும் மணமக்களுக்கு பாலும் பழமும் தர வேண்டும்.
  மணப்பெண்ணை பிள்ளை வீட்டில் வலது காலை முதலில் எடுத்து வைத்து உள்ளே வர சொல்ல வேண்டும்.
  வந்திருக்குமனைவருக்கும் குடிக்க பானம் கொடுக்க வேண்டும்.பெண்டிர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம்,மஞ்சள் , கொடுக்கலாம்.


  இதை பெண் வீட்டில் பிள்ளை வீட்டாரும், பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரும் செய்ய வேண்டும். இதன் பிறகு தம்பதிகள் ஆகாரம் உட்கொள்ளலாம்.
  கன்னிகாதானம் செய்தவரும், பூர்ண பலன் பெற ஆகார நியமத்துடன் இருக்க வேண்டும்.
  அந்த காலத்தில் இரவு, ஒளபாஸனம், ஸ்தாலீ பாகம் செய்து வந்தார்கள். ஆதலால் பகலிலும் பலகாரம் சாப்பிட்டு வந்தனர்.


  திருமணதன்று மதியம் ராகு காலம், யம கண்டம் இல்லாத நேரத்தில் மணபெண்ணின் சகோதரி மணமகனிடம், சென்று வேறு வேட்டி
  உடுத்தி கொள்ள கொடுத்து, அவர் கட்டியிருந்த வேட்டியை கொண்டு வந்து மஞ்சள் தூள் கலந்த தண்ணிரில் முக்கி பிழிந்து உலர்த்தி மணமகனி


  டம் கொடுப்பார்கள். இதனால் மணமகன் தனது மனைவியின் குடும்பத்துடன் சுமுகமான உறவை நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.என்பதை தெளிவு படுத்து கிறது.
  இதற்கு பதில் மரியாதையாக பிள்ளை வீட்டார் அந்த பெண்ணுக்கு தாம்பூலம், பழம், புஷ்பம், தக்ஷிணையுடன் கொடுப்பார்கள்.


  தற்காலத்தில் வேட்டியை முழுவதும் நனைக்காமல் ஒரு ஓரத்தில் மட்டும், மஞ்சள் தண்ணீர் தெளித்து திருப்பி அனுப்ப படுகிறது.

  Comment

  Working...
  X