23/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி விரிவாக பார்த்தபிறகு அதில் பாக்ய சூக்தம் என்பதை மேலும் தொடர்கிறார்.*


*இந்த பாக்கிய சூக்தத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் சமூகத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதற்கும், ஒரு குடும்பத்தில் ஒற்றுமையை பிரார்த்தித்தும் வேதம் நமக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறது.*


*இந்த பாக்கிய சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள வேத மந்திரங்களின் பலன்கள் அதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய அனுக் கிரகங்கள் என்ன என்பதை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம்.*


*அதில் கடைசி மந்திரம், அந்த தேவதை களிடமிருந்து நாம் என்னவெல்லாம் அடையவேண்டும் என்பதை பிரார்த்திக்கின்றது. உஷத் காலம் முதல் நமக்கு துணை புரிகின்ற அனைத்து தேவதைகளையும் பிரார்த்தனை செய்கிறது. ஏ தேவதைகளே நீங்கள் அனைவரும் இந்த காலை வேளையில் வந்து எங்களுக்கு இந்த நாளை இனிய நாளாக ஆக வேண்டும்.*


*எப்படி என்றால் நல்ல வாகனங்கள் நல்ல ஆலோசனை சொல்லக்கூடியவர்கள், இவர்களோடு கூடியவர்களாக எங்களை நீ செய்ய வேண்டும். நல்ல பசுக்களோடு பால் தரக்கூடியவர்களோடு செய்ய வேண்டும். அப்படித்தானே காலையில் நாம் எழுந்தவுடன் என்ன தேவைப்படுகிறது முதலில் குடிப்பதற்கு ஜலம் கூட அப்புறம்தான் ஆனால் காபி தேவைப்படுகிறது நமக்கு. அதற்கு பால் தான் ஞாபகம் வருகிறது காலையில் எழுந்தவுடன்.*


*வாசலில் காலையில் நேராக சென்று பால் வந்துவிட்டதா என்று பார்க்கிறோம் அதை கொடுக்கக்கூடிய பசுக்கள், இருந்தால்தான் நமக்கு பால் கிடைக்கும். ஆகையினாலே இந்த காலை வேளையில் நல்ல பசுக்களோடு உடையவர்களாக எங்களையும் செய்ய வேண்டும்.*


*மேலும் நல்ல சந்ததிகளை அடையும்படி உள்ளவர்களாக செய்ய வேண்டும். நல்ல தலைமுறையை நாங்கள் பெற வேண்டும். நாங்கள் வசிக்கக்கூடிய வாழக்கூடிய இந்த இடத்திற்கு நல்ல கல்யாணங்கள் / முகூர்த்தங்கள் தான் காலையில் நாங்கள் எழுந்தவுடன் காதில் விழ வேண்டும். அப்படி எங்களுக்கு அனுக்கிரகம் செய்து இந்த காலை வேலையை உங்களுக்கு நல்ல விதமாக இருப்பதற்கு நீங்கள் இங்கு அவசியம் வரவேண்டும்.*


*_இங்கு வந்து நாங்கள் கொடுக்கக்கூடிய தான வஸ்துக்கள், அது நெய்யாக இருந்தாலும் பூஜை செய்கின்ற போது புஷ்பமாக இருந்தாலும் பழங்களாக இருந்தாலும் ஹோமம் செய்யும் போது நெய், சமித்து, தர்ப்பை முதலியவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும், எங்களுக்கும் இவைகள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான பழங்கள் கிடைக்க வேண்டும். நல்ல வாசனை உள்ள புஷ்பங்கள் கிடைக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான நெய் எங்களுக்கு எப்போதும் கிடைக்க வேண்டும். நல்ல நெய் கொடுக்கக்கூடிய நிறைந்த பசுக்கள் எங்களுக்கு கிடைக்க வேண்டும். எங்களுக்கு கிடைக்கக்கூடிய தான பால் அனைத்துமே உங்கள் மூலமாகத்தான் எங்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் இவைகளை நிறைய எடுத்துக் கொண்டு வரவேண்டும்._*


*அப்படி நீங்கள் எடுத்துக் கொண்டு வருகின்ற பால் எப்படி இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு ஜலம் விட்டாலும் கெட்டியாக இருக்கவேண்டும். அப்படி ஒரு லிட்டர் பாலை 4 லிட்டர் தண்ணீர் விட்டாலும் அதில் அவ்வளவு சத்து இருக்க வேண்டும். அந்த அளவுக்கு அதில் கொழுப்பு இருக்கவேண்டும். அப்போதுதான் அதை நாம் ஜலம் விட்டு அதை விருத்தி செய்ய முடியும். அதுபோல் நீங்கள் எடுத்துக் கொண்டு வரக்கூடிய தான வஸ்த்துக்கள் அதிகமாக பெருகி உபயோகப் படும் படியாக இருக்க வேண்டும்.*
*ஆரோக்கியமான வஸ்துக்களாக நீங்கள் எடுத்துக் கொண்டு வர வேண்டும் எங்களுக்கு அதுவும் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். ஏ தேவதைகளே நீங்கள் நல்ல அனுக்கிரகங்களை , நல்ல வார்த்தைகளை ஆலோசனைகளை உங்களுக்கு சொல்ல வேண்டும். இவைகளினால், எங்களை காப்பாற்ற வேண்டும். அனுகிரகம் செய்யணும்*


*_மேலும் மேலும் எங்களுக்கு இதை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியாக இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது. இப்படியாக இந்த பாக்கிய சூக்தமானது பூர்த்தியாகின்றது. அற்புதமான மந்திரங்கள். இந்த மந்திரங்களை அனைவரும் காலை வேலையில் சேர்ந்து கூட்டாக சொன்னால், நல்ல வார்த்தைகளே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். சச்சரவுகள் ஏற்படாது. அதுபோல் ஒரு தம்பதிகள், காலை வேளையில் எழுந்து இதை சிரவணம் செய்தால் அல்லது கேட்டால் அவர்களுக்குள் ஒற்றுமை அதிகமாகும். மனக்கசப்பு ஏற்படாது._*


*அதுபோல் ஒரு குடும்பத்தில், சில சச்சரவுகள் இருந்தால், இந்த பாக்கிய சூக்தத்தை காலை வேளையில் தினமும் சொல்வது என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமையும். கெட்ட சப்தங்கள் காதில் விழாது. அதோடு மட்டுமல்லாமல் அன்றைக்கு நமக்கு கிடைக்கக்கூடிய வஸ்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான வையாக கிடைக்கும்.*


*அதுதான் இன்றைய நாட்களில் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் எந்த ஒரு பொருளை வாங்க சென்றாலும் அதிலே கலப்படம் என்றுதான் காதிலே விழுகிறது. எதை வாங்கினாலும் விஷம் கலந்திருக்கிறது கலப்படம் இருக்கிறது. தாய்ப்பால் ஒன்றுதான் விஷயமில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி ஆகிவிட்டது.*


*அப்படி இல்லாமல் எல்லா வஸ்துக்களும் ஆரோக்கியமாக எனக்கு கிடைக்க வேண்டும். எனக்கு வரக்கூடிய வஸ்துக்களும் நிரந்தரமாக என்னிடம் இருக்க வேண்டும். உங்களுக்குள் மூன்று விதமான ஆரோக்கியம் கிடைக்க வேண்டும். ஒன்று கிடைக்கக்கூடிய வஸ்துக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எங்களுடைய தேகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எங்களுடைய மனதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனது ஆரோக்கியமாக

இருந்தால் மற்ற அனைத்தும் ஆரோக்கியமாக மாறிவிடும். மனது சரியில்லை அதனால்தான் சச்சரவுகள் ஏற்படுகின்றன. மனசு சரியில்லாமல் இருப்பதினால்தான் ஒரு பொருள் மீது கலப்படம் செய்ய தோன்றுகிறது. மனது ஆரோக்கியமாக இல்லாததினால் தான் நமக்கு வியாதிகள் ஏற்படுகின்றன. ஆக இவை அனைத்திற்கும் மூலம் மனது தான்.*


*மன ஆரோக்கியத்தை தேவதைகளான நீங்கள் எங்களுக்கு அனுக்கிரகம் செய்து, எங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அப்படியாக இந்த மந்திரம் அற்புதமாக பிரார்த்திக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*