Announcement

Collapse
No announcement yet.

sapthami thithi puja

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • sapthami thithi puja

  ஸப்தமி திதி;--ஸூர்யன்.
  சப்தமி திதி சூரியனுக்கு மிகவும் பிடித்தமான திதி. உலகில் படைப்பை உருவாக்க ப்ருஹ்மா தன்னுடைய உடலை ஆண் பெண் என இரு கூறுகளாக்கி கொண்டார். அதில் ஆண் பாதி ஸ்வாயம்புவ மனு என்றும்

  பெண் பாதி சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். .அதே சமயம் தன் மனதின் மூலம் பத்து மகன்களை உருவாக்கி அவர்கள் ப்ரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்க வேண்டும் என க்கருதினார். அவர்கள் அதனால்

  ப்ரஜா பதிகள் என அழைக்கப்பட்டனர். அவர்களில் தட்சனும் ஒருவன்.. தட்சனுக்கு நிறைய பெண்கள் இருந்தனர். அதில் திதி அதிதி என்பவர்களை காஸ்யப ப்ரஜாபதிக்கு மணம் செய்வித்தான்.

  அதிதிக்கு பிறந்தவனே ஆதித்யன். .. அதிதி காச்யபர் திருமணமானப் பின் ஒரு முட்டை (அண்டம்). உண்டாயிற்று. பல நாள் ஆனப் பின்னும் எந்த உயிர் ஜீவனும் அந்த முட்டையிலிருந்து வெளி வரவில்லை. ஆனால்

  காஸ்யபரோ அந்த முட்டை(அண்டம்) இறக்கவில்லை (மிருதா) என்று சொன்னார். ஒரு நாள் முட்டையை உடைத்துக்கொண்டு சூரியன் பிறந்தான். மிருதா அண்டம் என்ற இரு வார்த்தைகளை உள்ளடக்கி அவன் பெயரை
  மார்த்தாண்டன் என தந்தை அழைத்தார்..அதிதியின் பிள்ளை ஆதித்யன்.
  ,
  கதிரவன், பகலவன், பரிதி சூரியன்.. தேவ சிற்பி விச்வகர்மா மகள் சம்க்ஞா. .சூரியன் மனைவி ஆனாள் இவர்களுக்கு யமன், யமுனா, சாவர்னிமனு ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.

  சம்க்ஞாவால் சூரிய பேரொளி தாங்க முடியவில்லை. அதனால் தன் நிழலைக்கொண்டு தன்னை போலவே உள்ள சாயா என்ற பெண்ணை உருவாக்கினாள்.

  சூரியனுக்கும் சாயாவுக்கும் க்ருதசர்வா, ச்ருதகர்மா, தப்தி என்ற குழந்தைகள் பிறந்தனர். . ச்ருத கர்மா தான் பின்னால் சனி கிரஹமாக மாறினதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. க்ருதசர்வா சாவர்ணிமனுவாக வளர்ந்ததாக கூறுகிறது.

  ஒரு நாள் யமுனைக்கும் தப்திக்கும் தகராறு ஏற்பட்டது. நீ நதியாக போ என இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டனர்.. தேவ சிற்பி யான விஸ்வகர்மா தன்னிடமுள்ள கடசல் கருவியினால் சூரியனின் தேவையற்ற உபரி சக்தியை செதுக்கி எடுத்து விட்டார்..

  சூரியனின் வெப்பம் குறைந்தது. வனப்பகுதிகளில் பெண் குதிரையாக சுற்றிகொண்டிருந்த சம்க்ஞா தேவியிடம் சூரியன் ஆண் குதிரையாக வடிவெடுத்து சென்றார். இப்போது இருவருக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி தேவர்கள். . இவர்கள் தேவ லோக மருத்துவர்களானார்கள்..

  மஹா பாரத கதையின் படி நகுல சகாதேவர்களின் தந்தையர் அசுவினி தேவர்கள்..

  சூரியனும் சம்க்ஞாவும் சூரிய மண்டலத்திற்கு திரும்பியது ஸப்தமி திதிதான். ஆதலால் சூரியனுக்கு சப்தமி திதி மிகவும் பிடிக்கும்.. இப்போது இங்கு பிறந்தவன் ரேவந்தன். . இவன் குஹ்யர்கள் ராஜ்ய மன்ன னாவான்.

  பஞ்சமி திதியில் ஒரு வேளை ஆகாரம் சாப்பீட்டு சஷ்டியன்று உபவாசமிருந்து சப்தமியன்று முதலில் உபவாசமிருந்து அதன் பின் காய்கறிகள், பஞ்ச பட்ச பரமான்னங்களை சூரியனுக்கு நிவேத்யம் செய்து ,ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போட்டு இரவில் மெளன விரதத்துடன்

  சூர்யனுக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுகிறானோ அவன் எல்லாவற்றிலும் வெற்றி அடைகிறான். சூர்ய லோகத்தில் பல மன்வந்த்ரம் வாழ்வான். பிறகு பூமியில் சக்கிரவர்த்தியாக வாழ்வான்.

  மனதில் நினைத்ததை எல்லாம் கொடுக்க கூடிய திதிகள்:- த்ருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, நவமி… மாசி ஸப்தமி, ஐப்பசி நவமி, புரட்டாசி சஷ்டி, மாத பஞ்சமி இவைகள் விசேஷ பலன் தருபவை.


  கார்திகை சுக்ல பக்ஷ ஸப்தமியில் ஸப்தமி வ்ருதம் இருப்பதை துவக்கலாம். உத்தமமான பிராமணருக்கு நல்ல கனிகளை தானமாக கொடுக்க வேண்டும்.
  .
  .ராத்திரியில் தவமிருப்பவர் காய் கறிகளையே சாப்பிடவேண்டும்.இந்த வ்ருதத்தை நான்கு மாதங்கள் அனுசரிக்க வேண்டும். பாரணை இருக்க வேண்டும். பஞ்ச கவ்யத்தால் சூரிய பகவானை ஸ்நானம் செய்விக்க வேண்டும். அதன் பின் தானும் சாப்பிட வேண்டும்.

  முதல் மாதம் குங்குமப்பூ , சந்தனம், , புஷ்பம், பழம், பாயசம், தூப தீப நைவேத்யங்கள். ஆகியவைகளுடன் பூஜை செய்ய வேண்டும் .ப்ராமணருக்கு அதே மாதிரி சாப்பாடு போடவேண்டும்.

  இரண்டாம் மாதம் ஜலத்தில் தர்பையை போட்டு அதை சூரிய பகவானுக்கு உணவாக கொடுக்க வேண்டும். பல புஷ்பங்கள், காய் கறிகள், வெல்ல அப்பம் நைவேத்தியம். காய்ச்சிய பால், அரளி பூ, குங்குலிய தூபம், தயிர் சாதம் போன்றவைகளால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்.

  புராணிகருக்கு வஸ்த்ரம், அலங்கார பொருள் கொடுத்து புராணங்கள் சொல்ல செய்ய வேண்டும் .சிகப்பு சந்தனம், அரளிப்பூ, குங்குலிய தீபம்,; கொழுக்கட்டை, பாயசம் நைவேத்யம்.

  பால், தாமிர பாத்ரம், புராண கிரந்தங்கள், பெளராணிகர் ஆகியவை சூரியனுக்கு ப்ரீதியானவை. சாக ஸப்தமி வ்ருதம் சூர்ய பகவானுக்கு மிகவும் இஷ்டம். .

  சூரிய நாராயணனுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை:----காலையில் சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட வேண்டும். சுத்தமான வஸ்த்ரம் தரித்து ஆசமனம் செய்து விட்டு ஓம் ககோல்காய ஸ்வாஹா என்று அர்க்கியம் விட வேண்டும். இது தான் ஸப்தாக்ஷர மந்திரம்.இந்த மந்திரத்தை முடிந்த அளவு சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

  அதன் பின் ஹ்ருதய பூர்வமாக சூரியனை உத்தேசித்து பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ராணாயாமம் செய்து , வாயவி, ஆக்னேயி, மாகேந்த்ரி, வாருணி ஆகியோரை த்ருப்திபடுத்தி அந்த ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அங்கன்யாஸம்.

  ஓம் க: ஸ்வாஹா ஹ்ருதயாய நம: ஓம் கம் ஸ்வாஹா சிரஸே ஸ்வாஹா; ஓம் உல்காய ஸ்வாஹா சிகாயை வஷட்; ஓம் யாயா ஸ்வாஹா கவசாய ஹூம்; ஓம் ஸ்வாமி ஸ்வாஹா நேத்ர த்ரயாய வஷட், ஓம் ஹாம் ஸ்வாஹா அஸ்த்ராய பட் என்று செய்ய வேண்டும். இவ்வாறு மந்திர ஜலத்தினால் தன்னையும் ப்ரோக்ஷித்துகொண்டு பூஜைக்குறிய திரவ்யங்கள் , பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

  காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும் ஆறு தள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து ஒருமுக சிந்தனயுடன் தியானிக்கவும். ஹோமத்துடன் காலையிலும், மாலையிலும் பூஜை செய்வது நல்லது.

  பிறகு சிகப்பு சந்தனம், சிகப்பு பூக்கள், தூபம், தீபம், நைவேத்யம் காட்ட வேண்டும் .பிறகு சந்திரன் முதலிய நவகிரஹங்கள், இந்திரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள் , அவர்களின் ஆயுதங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

  அதற்கு பின் வ்யோம வோனம், தண்ணீர் முத்திரை, ரவி முத்திரை, பத்ம முத்திரை, மஹேஸ்வரா முத்திரை என்ற ஐந்து வகை முத்திரைகளையும் காட்டி பூஜை, ஜபம், த்யானம் அர்க்கியம் ஆகியவைகளை எட்டு திக்கு பாலகர்களுக்கும் சமர்பிக்க வேண்டும்.

  இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடம் பக்தி சிரத்தையுடன் செய்தால் இவ்வுலகில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மோக்ஷமும் கிட்டும்.

  சூரிய பூஜை செய்யும் போது சூரியனின் பெயர்கள் சித்திரை மாதம்:---விசாகன்; வைகாசி_:- தாதா; ஆனியில் இந்திரன், ஆடியில் ரவி; ஆவணியில் நபு;

  புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் பர்ஜன்யன்; கார்த்திகையில் த்வஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதம் விஷ்ணு; மாசியில் வருணன்; பங்குனியில் சூரியன்.

  12 மாதங்களில் 12 ஆதித்யர்களை பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் ஹவிஸ் அன்னம் மட்டும் உட்கொள்ள வேண்டும். மாலையில் ஆசமனம் செய்து சூரிய பகவானின் சாரதி, அருணனை வணங்க வேண்டும்.

  அதன் பின் சூரிய பகவானை வணங்கி த்யானம் செய்ய வேண்டும். மறு நாள் விடியற் காலையில் எழுந்து விதிப்படி சூரிய பகவானை பூஜை செய்து அவரது ஸப்தாக்ஷர மூல மந்திரத்தை “ஓம் ககோல்காய ஸ்வாஹா”

  என்பதை ஜபிக்க வேண்டும். அக்னியை சூரிய ஜ்யோதியாக பாவித்து ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகு தர்பணமும் செய்ய வேண்டும் .தர்பண புல்லில் நெய்யை நனைத்து ஹோம தீயில் மூல

  மந்திரத்தை சொல்லி விட்டு கொண்டிருக்க வேண்டும். பூரணாஹூதியை விரிவாக செய்யவும்..பூர்ணாஹுதி முடிந்த பிறகு தர்பணம் செய்ய வேண்டும் .பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு தக்ஷிணை கொடுக்கவும்.
  .
  12 மாதம் இவ்வாறு செய்து 12 ப்ராஹ்மணர்களைஆதித்யர்களாகவும் 13 ம் மாதம் ப்ரதானஆசாரியரை சூரிய பகவானாகவே பாவித்து சூரிய ரதத்தை தானம் செய்ய வேண்டும். அந்த ரதத்தில்

  தங்கத்திலான சூரியனை நடுவில் வைத்து முன்னால் சாரதியாக அருணனையும் வைத்து குதிரையின் ப்ரதிமையும் அமைக்க வேண்டும் .ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு தானமும் செய்ய வேன்டும்..

  மாசி மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி அன்று ஒரு வேளை சாப்பிடுவது, மறு நாள் சஷ்டி அன்று இரவில் மட்டும் சாப்பாடு. மறு நாள் சப்தமி அன்று பாரணை செய்ய வேண்டும்.

  சப்தமி அன்று சூரியனை பூஜை செய்ய வேன்டும். சிவப்பு சந்தனம், அரளி பூக்கள். குங்குலிய தீபம், பாயசம் ஆகியவைகள் நைவேத்யம். ஆத்ம சுத்திக்காக கோமயம் கலந்த ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.

  உண்ணும் உணவிலும் கொஞ்சம் கோமயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணருக்கு போஜனம் செய்ய வேண்டும்….

  ஆனி மாதம் முதல் நான்கு மாதங்கள் சப்தமியன்று வெள்ளை சந்தனம், வெள்ளை பூக்கள், கருப்பு சுகந்த மணமுள்ள அகர் மர தூபம், உத்தமமான நைவேத்யங்கள் படைக்க வேண்டும்..

  ஐப்பசி முதல் நான்கு மாதங்கள் அகஸ்த்திய புஷ்பம், சுபராஜித தூபம், வெல்ல அப்பம் ஆகியவைகள் தேவை .ப்ராஹ்மண போஜனம். ஆத்ம சுத்திக்காக ஜலத்தில் தர்பையை நனைத்து குளிக்க வேண்டும் ..உணவிலும் தர்ப்பை ஊறிய ஜலத்தை சேர்த்து கொள்ளலாம்
  .
  இவ்வாறு சப்தமி வ்ரதங்களின் முடிவில் மாசி மாதம் சப்தமியன்று ரதத்தை யாத்திரை உற்சவம் கொண்டாடி ரதத்தை தானம் செய்ய வேண்டும்.

  ரத சப்தமியை உபவாசமிருந்து கொண்டாடுபவர்கள் கீர்த்தி தனம், படிப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைகளை அடைவர். ரத சப்தமி குறித்து விரத ரத்னாகர், விரத கல்பத்ரும, வ்ருதராஜன், பத்ம புராணம், வாயு புராணம் ஆகியவற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளன.

  மார்கழி மாதம் சுக்ல சப்தமியன்று சூரியனுக்கு சிரத்தை பூர்வமாக அபிஷேகம் செய்ய வேண்டும்.சக்கரை பொங்கல், சித்ரான்னம் நைவேத்யம் நெய்யுடன் சேர்த்து செய்ய வேண்டும்.

  தை மாதம் சுக்ல சப்தமி அன்று சுத்த பவித்ர ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அதன் பின் பக்தி பூர்வமாக பூஜை செய்ய வேணும் மாசி மாதம் க்ருஷ்ண பக்ஷ சப்தமியன்று மங்கள கலசத்தை சதுரமான செங்கல்லால் அமைத்த வேள்வி மேடையில் சூர்ய நாராயணனை நன்றாக ஸ்தாபிக்க

  வேண்டும்.. ஹோமத்தீயில் ஆஹூதிகள் செய்யவும் .ப்ராஹ்மண போஜனம், வேத பாடம்., நடனம், இசை போன்ற உற்சவாதிகள் செய்ய வேண்டும்.

  சதுர்த்தியில் விரதமிருந்து , பஞ்சமியில் ஒரு போது சாப்பிட்டு சஷ்டி ஸப்தமியில் இரவு மாத்திரம் சாப்பிட்டு சப்தமி யன்று வேள்வி, ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும். ப்ராஹ்மணருக்கும், பெளராணிகருக்கும்

  நல்ல தக்ஷிணை தர வேண்டும். அஷ்டமி அன்று ரத ஓட்டம் நடை பெற வேண்டும். ரதம் நகரில் எல்லா வீதிகளிலும் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் சூரியனுக்கு மிகவும் பிடித்தமானது.


  சூரிய பகவானுக்கு பேரிச்சம் பழம், , இளநீர், மாம்பழம், மாதுளம் பழம் சூரியனுக்கு பிடிக்கும். கோதுமை மாவில் வெல்லமும் நெய்யும் சேர்த்து நைவேத்யம் செய்தால் மிகவும் பிடிக்கும்..

  ஆவணி சுக்ல சப்தமி யன்று அபய சப்தமி கொண்டாடப்படுகிறது.. தை மாதம் சுக்ல பக்ஷ சப்தமி அபய பக்ஷ சப்தமி வ்ரதம்

  . கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்ல சப்தமி திதி அனந்த சப்தமி வ்ரதம். மார்கழி சுக்ல பக்ஷ

  சஷ்டியில் காமத விரதம். மார்கழி மாத சஷ்டியில் மந்தார சஷ்டி வ்ருதம். மந்தார பூக்களால் அருச்சிக்க வேண்டும் .ஐப்பசி மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி யன்று சர்க்கர சப்தமி வ்ருதம் .ப்ராஹ்மண்ருக்கு சக்கரை அல்லது இனிப்பு தானம் செய்ய வேண்டும்.

  மார்கழி க்ருஷ்ண பக்ஷ சப்தமி: சர்வதா சப்தமி வ்ருதம் எனப்பெயர். உப்பு எண்ணைய் இரண்டையும் சாப்பாட்டில் ஒதுக்க வேண்டும்

  .பங்குனி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் த்ரிவர்க்க சப்தமி விரதம் எனப்படும்.,நந்தா ஸப்தமி என்றும் இதற்குப்பெயர். ஸந்தான ஸப்தமி என்றும் கூறுகின்றனர்

  ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாளில் செய்யும் விரதம் புத்ர விரதம்.. புத்ரன் வேண்டி செய்யும் விரதம். சூரிய பூஜை செய்து மஹாஸ்வமேத மந்திரத்தை சொல்லி இரவு படுக்க வேண்டும்.

  ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வருகிறது.

  சுக்ல பக்ஷம், சப்தமி திதி ரோஹிணி நக்ஷத்திரம் ஞாயிற்றுகிழமை சேர்ந்து வந்தால் வட ஆதித்ய வார விருதம் எனப்பெயர் சாயங்காலம் வரை மஹாஸ்வமேத மந்திரம் ஜபிக்க வேண்டும்.. இந்த வருடம் இம்மாதிரி சேர்ந்து ஒரு நாளும் இல்லை..

  ஆதித்ய ஹ்ருதய வ்ருதம்:---சங்கராந்தி ஞாயிற்றுகிழமை வந்தால் அன்று வ்ருதத்தை தொடங்கலாம். சித்ரை மாத ஸங்க்ரமணம்.ஞாயிறு கிழமை. இன்று சூரிய பூஜை செய்து ஆதித்ய

  ஹ்ருதயம் படித்து வழிபட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து ப்ராம்மண போஜனம் செய்வித்து , இரவில் வெள்ளரிக்காய் கலந்த அன்னத்தை புஜித்து , தரையில் படுக்க வேண்டும்

  108 தினங்கள் இதை தொடர்ந்து செய்தால் எல்லா இஷ்டங்களும் நிறை வேறும்..

  ரஹஸ்ய ஸப்தமி:--மிகவும் சிலாக்கியமானது. முந்தய பிறவிகளில் செய்த பாவங்களை போக்கவல்லது. வரும் பிறவிகளில் சிறப்பாக வாழ வகை செய்யும். குலத்தில் முன்னோர்கள்

  செய்த பாவத்தையும் போக்கி அவர்களுக்கு நற்கதி அளிக்கும்.சித்திரை சுக்ல ஸப்தமியில் துவங்க வேண்டும். சதா சூரியனையே ஸ்மரிக்க வேண்டும். எல்லோருடனும் அன்பாக பழக வேண்டும்.

  எக்காரணம் கொண்டும் எண்ணையை தொடக்கூடாது. நீல வர்ண துணிகளை அணியக் கூடாது .நெல்லிக்காய் தவிர்க்க பட வேண்டும். கலகம் எதுவும் செய்யக் கூடாது.

  இந்த நாளில் வாய் பாட்டு, வீணை வாத்தியம் வாசிப்பது, நடனமாடுவது, அநாவஸ்யமாக சிரிப்பது, பெண்களுடன் படுப்பது, சூதாடுவது , அழுவது, பகலில் தூங்குவது, பொய் சொல்லுவது,

  பிறருக்கு துன்பம் தர எண்ணுவது அடுத்த ஜீவனுக்கு கஷ்டம் தருவது, அதிகமாக சாப்பிடுவது துஷ்டத்தனம் சோகம், ஆகியவை கூடாது.
  கோபபடக்கூடாது. கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.

  சித்திரை மாதம் துவங்கும் இந்த விரதத்தை 12 மாதங்களில் 12 ஆதித்யர்களான தாதா, அர்யமா, மித்ரன்,வருணன் ,இந்திரன், விவஸ்வான், பர்ஜன்யன், பூஷா,அம்சு, பகன், த்வஷ்டா, விஷ்ணு , ஆகியோர்களை மாதம் ஒருவராக பூஜை செய்து போஜக ப்ராஹ்மணனுக்கு நெய்யுடன் அன்னமளிக்க வேண்டும். அதன் பிறகு பாலுடன் ஸ்வர்ண பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன், சூரிய லோகத்தில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

  ஐப்பசி, கார்த்திகை, மாசி, சித்திரை மாதங்களீல் சிவன் அல்லது விஷ்ணு பூஜை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ப்ரதமை திதியில் அக்கினி தேவனுக்கு சடங்குகள், ஹோமம் செய்வித்தல் போன்றவற்றை செய்வதால் தனம் தானியம் மற்றும் கோரிய பலன்கள் கிடைக்கும்.

  ஆடி, ஆவணி மாதங்களில் சூரியன். ஆஷாட, கர்கடக ராசிகளில் பிரவேசிக்கும் சமயம் த்விதியை சேர்ந்தால் விஷ்ணு பூஜை மிக விசேஷம்.

  ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதியை அன்று லக்ஷ்மி நாராயண பூஜை செய்வது பல நற்பலன்கள் தரும். கணவன் மனைவி பிரிவு ஏற்படாது. பிறிந்தவர் கூடுவர்.

  வைகாசி மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று கங்கை ஸ்நானம் செய்வது விசேஷம், மாசி மாதம் த்ருதியையும் ரோஹிணியும் சேர்ந்தால் விசேஷம்.--
  ஐப்பசி த்ருதியையில் தானம் கொடுத்தால் நற்பயன் பெருகும்.,இன்று விசேஷ சித்ரான்னங்களும் , கொழுக்கட்டையும் நைவேத்யம் செய்தல் வேண்டும்.

  ஆவணி மாதம் புதன் கிழமையும் த்ருதியையும் சேர்ந்து அமைந்த நாளில் உபவாசம் இருப்பது நல்லது.

  சதுர்த்தியும் பரணியும் சேர்ந்த நாளில் யம தேவதைக்காக உபவாசமிருந்தால் எல்லா பாவங்களும் விலகும்.

  புரட்டாசி மாதம் சுக்ல பஞ்சமியில் பூஜையும், உபவாசமும் சிவலோக ப்ராப்தி கொடுக்கும்.

  கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கிரஹணங்களின் போது குளித்து ஜப தபாதிகள் , உபவாசம் ஏராளமான நற்பயன் தரும்.
  சிராவண மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று நாகங்களுக்கும், ப்ரதிமைகளுக்கும் பால், தயிர், சந்தனம், சிந்தூரம்,கங்கா ஜலம் மூலிகை கலந்த திரவியங்கள் கொண்டு பூஜை செய்தால் பல கோடி திரவியங்கள் கிடைக்கும். குலம் வ்ருத்தி அடையும். வம்சம் செழிக்கும்.
  ஆவணி க்ருஷ்ண பக்ஷ பஞ்சமியன்று வீட்டு முற்றத்தில் வேப்பிலையால், மனசார, தேவியை பூஜை செய்வது மிக உத்தமம், ஏகாதசி விரதம் இவைகளை விட சிறப்பு வாய்ந்தது.

  ஜமதக்னி முனிவர் சூரியனை மிரட்டினார். உலக நன்மைக்காக நீ வெப்பத்தை காட்டினாலும் அதனால் ஏற்படும் தாபம் போக என்ன வழி என்று சூரியனைக் கேட்டார். சூரியன் காலுக்கு செறுப்பும் தலைக்கு குடையும்

  அணிந்து கொண்டு செல்ல வேண்டும் எனச்சொன்னார் .சூரியனே ஜமதக்னி முனிவருக்கு குடையும் செறுப்பும் கொடுத்தார்.. குடை செறுப்பு தானம் செய்பவர் ஸ்வர்க்கம் செல்வர் என சூரியன் திரு வாய் மலர்ந்து அருளினார்.

  ஸப்தமி விருதத்தை உத்தராயணத்தில் சுக்கில பக்ஷ ஞாயிற்றுகிழமைகளில் துவங்க வேண்டும்.. எல்லா பாபங்களையும் இந்த வ்ருதம் போக்கடிக்கும்.

  ஞாயிற்றுகிழமை ப்ரதமை திதி முதல் ஸப்தமி வரை எருக்கு இலையை கொண்டு சூரியனை பூஜிக்க வேண்டும். .ப்ரதமை முதல் ஸப்தமி வரை உபவாசம் இருக்க வேண்டும். அர்ச்சனை செய்த அந்த எருக்கம்

  இலைகளையே உண்ண வேண்டும். முதல் நாள் ஒரு எருக்கு இலை. இரண்டாம் நாள் இரண்டு எரூக்கு இலை. மூன்றாம் நாள் மூன்று ; நான்காம் நாள் 4 இலை; 5ம் நாள் 5 இலை. 6ம் நா 6 இலை. 7ம் நாள் 7எருக்கு இலைகள் அர்ச்சனைக்கு…. இவைகளையே சாப்பிட வேண்டும்

  இரண்டாம் மாதம் ப்ரதமை முதல் ஸப்தமி வரை மேற்சொன்ன வகையில் மாசிப்பச்சை இலைகளால் அர்ச்சனை செய்து அந்த இலைகளையே சாப்பிடவும். முதல் மாதம் செய்த மாதிரியே மற்ற மாதங்களும் செய்யவும்.

  மூன்றாம் மாதம் வேப்பிலையை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்..
  நான்காம் மாதம் பழத்தை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்.


  ஐந்தாம் மாதம் பாகம் செய்யாத ஆகாரத்தை உபயோகிக்கவும்.
  ஆறாவது மாதம் எதயுமே சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.

  ஒவ்வொரு மாதமும் பூஜை செய்ய வேண்டிய இலைகளை எடுத்து வந்து ஒரு புது குடத்தில் போட்டு ஒரு புருஷனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து செல்லப்பட்டு திரும்பவும் கொண்டு வரப்பட்டு

  அவற்றால் பூஜை செய்ய வேண்டும் .இரவும் பகலும் கண் விழித்து பகவானை தியானிக்க வேண்டும். இவ்வாறு எவன் ஏழு ஸப்தமிகளில் நியமத்தோடு விரதம் இருக்கிறானோ அவனுக்கு எல்லா பாபங்களும் நீங்கி விடும்.

  எருக்கு இலைகளால் அர்ச்சனை செய்தால் பணம் பெருகும். மாசிபச்சை இலைகளால் அர்ச்சனை செய்தால் விருப்பமானவரோடு சிநேகம் உண்டாகும்.
  வேப்பிலையால் அர்ச்சனை செய்தால் வியாதி விலகும் .பழங்களால் அர்ச்சித்தால் உத்தமமான குழந்தைகள் பிறக்கும்.

  பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணை தர வேண்டும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும்.ஸப்தமி விரதத்தில் எவனொருவன் எந்தெந்த பொருட்களை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறானோ அந்தந்த பொருட்கள் அவனுக்கு பல மடங்கு பெருகும்..

  பனிரெண்டு சுக்ல ஸப்தமிகளில் எவன் பசுஞ்சாணியை உட்கொண்டு பூஜிகிறானோ அவன் அளவற்ற பலன் அடைவான் .கஞ்சி மட்டும் குடித்தும், பால் மாத்திரம் சாப்பிட்டும், உலர்ந்த சருகு மாத்திரம் சாப்பிட்டும்,

  ஒரு வேளை ஆகாரம் மட்டும் சாப்பிட்டுகொண்டும், ஜலத்தை மட்டுமே அருந்தியும், பிச்சை எடுத்து சாப்பிட்டு இருந்தும் இந்த ஸப்தமி விரதம் ஆண்/ பெண் இரு பாலாரும் இருக்கலாம். அவரவர் சக்திக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஆராதனை செய்ய வேண்டும்.

  பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில் சூரிய மண்டலம் வரைந்து அதில் ஆவாஹனம் செய்யலாம்.. ஆகாசத்தில் ப்ரகாசிக்கும் சூரிய பிம்பத்திலும், அக்னி, ஜலம், ப்ரதி பிம்பம், யந்திரம், தங்கம் அல்லது செப்பு பாத்திரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்..ஆல மரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்.

  சூரியனுக்கு ஒவ்வொரு உபசாரம் செய்யும் போதும் நமஸ்காரம் செய்யலாம்.ஸப்தமி வ்ருதம் இருந்து பூஜை செய்பவர்கள் சூரியனுக்கு இருபத்து நான்கு உபசாரங்கள் செய்ய வேண்டும்.அந்தந்த உபசாரத்திற்கு சொல்லப்பட்டுள்ள மந்திரங்களை பக்தியோடு சொல்லி பூஜிக்கவும்.

  முதல் உபசாரம்;1. ஆவாஹனம்:-- நிர்குண ஸ்வரூபியும், நிஷ்கல மானவருமான சூர்யனை ஸகுண ஸ்வரூபியாக பிம்பத்தில் ஸான்னித்யம் கொள்ளுமாறு மந்திரம் சொல்லி அழைப்பது.

  2.ஆசனமளித்து அதில் உட்காருமாறு வேண்டுவது. ஸ்தாபனம்.
  3.வேறு இடங்களுக்கு போகாமல் அந்த ஆசனத்திலேயே அமர வைப்பது ரோதனம்.

  4. சூரியனை ஒருமனத்தோடு தியானிப்பது ஸான்னித்யம்.
  5,கால்களில் ஜலம் விட்டு அலம்புவது பாத்யம்
  .
  6.தாமிர பாத்திரத்தில் சந்தனம் கலந்த ஜலத்தில் வாசனை பூக்கள் போட்டு இரண்டு முழங்கால்களால் நடந்து சூரியனுக்கு ஜலம் அளிப்பது அர்க்கியம்.

  7. பால்,தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிருதம், தேன், பழச்சாறு, வாசனை பவுடர், சுத்த நீராலும், அபிஷேகம் செய்வது ஸ்நானம்.

  8.சந்தனம், குங்குமம் திலகமிடுவது அக்ஷதை போடுவது சந்தனம் உபசாரம்.

  9. அழகிய வஸ்த்ரம் சூரியனுக்கு சார்த்தி அலங்கரிப்பது வஸ்த்ரம் என்ற உபசாரம்.
  10.மலர் மாலை சாற்றி பாதங்களில் மலர் தூவுவது புஷ்பம் என்ற உபசாரம்.

  11.ஆபரணங்கள் அணிவிப்பது ஆபரணம் என்ற உபசாரம்
  12.ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் புகை போடுவது தூபம் என்ற உபசாரம்.

  13.நெய்யிட்ட திரியை ஏற்றி சூரியனுக்கு அலங்காரமாக காட்டுவது தீபம்.

  சூரிய பூஜைக்கு குறைந்த பக்ஷம் அறுபது விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். இதற்கு மேலும் ஏற்றலாம்.

  14. சூரியனுக்கு அங்க பூஜை அங்கங்கள் பெயர் சொல்லி அந்தந்த அங்கங்களில் அர்ச்சனை செய்வது. அங்க பூஜை.
  15.சூரியனுக்கு நிவேதனம் செய்து பரிவார தேவதைகளுக்கு பலி போடுவது.

  16. மறுபடியும் சந்தன ஜலத்தால் அர்க்கியம் தருதல்.
  17.சூரிய ஜபம் செய்வது.
  18.முத்திரைகளால் தேகத்தை தேவதா மயமாக்கி கொள்வது நியாசம் எனும் உபசாரம்.

  19.மந்திர ஸ்லோகங்களால் துதி செய்வது ஸ்தோத்ரம் எனும் உபசாரம்.
  20. அக்னி குண்டத்தில் ஹோமம் செய்வது ஹோமம் என்ற உபசாரம்

  21.பூஜை செய்ததனால் ஏற்படக்கூடிய பலன்கள் தனக்கு சித்தியாக வேண்டும் என ப்ரார்திப்பது ஸம்ஹாரம் என்ற உபசாரம்.

  22சூரியனின் கை கால்களை அலம்பி விடுவது சுத்த பாதம் என்ற உபசாரம்

  23. பகவானை த்ருப்தி படுத்துவதற்காக விசிறி, பாட்டு, நடனம் முதலியன செய்வது விஹாரணம் என்னும் உபசாரம்.
  24. சூரியனை யதாஸ்தானம் செய்வது விஸர்ஜனம் எனும் உபசாரம்.

  மூல மந்திரங்களை கூறி இருபத்து நான்கு உபசாரங்களையும் செய்ய வேண்டும். விஸர்ஜனம் செய்து ஹோமம் முடிந்த பிறகு சிறிது புஷ்பம்,,ஹோம பஸ்பம் ஆகியவற்றை வடக்கு திக்கில் வைக்க வேண்டும்,

  இதற்கு நிஹோரம் என்று பெயர். பிறகு ஸாஷ்டாங்கமாக சூரியனை நமஸ்காரம் செய்ய வேண்டும். உத்தமமான பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும்.

  சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயர் கூறி பூஜை செய்ய வேண்டும்.. சித்திரை மாதம் அம்சுமான் என்ற பெயரிலும், வைகாசி மாதம் தாதா என்ற பெயரிலும், ஆனியில்- இந்திரன், ஆடியில் ரவி, ஆவணியில்

  கபஸ்தி, புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் சுவர்ண ரேதஸ்; கார்த்திகையில் துவஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதத்தில் விஷ்ணு; மாசி மாதம் அருணன் ; பங்குனியில் சூரியன் என்ற பெயர் சூட்டி சூரியனை பூஜிக்க வேண்டும்.

  சூரியனின் தேரில் உள்ள மற்ற தேவதைகளையும் விதிப்படி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு தேவதைகளையும் பூஜிக்க தனி தனி பூஜா முறைகள் உள்ளன.

  சூரியனை சாயா தேவி சுவர்ச்ச லாம்பா வுடன் தாமரை மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் அருணன், குதிரைகளயும் பூஜிக்க வேன்டும்.  நியமத்தோடு சூரியனை சப்தமியிலோ அல்லது ஞாயிற்றுகிழமையிலோ விதிப்படி ஆராதிப்பவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், தேஜஸ், கீர்த்தி
  புத்ர பெளத்ரர்கள் அடைவர்.,

  ஸப்தமிக்கு முதல் நாளான சஷ்டி முதலே பிரயாணம், காம விஹாரமின்மை; மயக்க வஸ்துக்களை சாப்பிடாதிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்; எண்ணைய் ஸ்நானம் செய்யாதிருத்தல், ,வீட்டுக்கு விலக்கான பெண்களுடன் பேசாமல், அவர்கள் பொருட்களை தொடாமலும் , பொய் பேசாதிருத்தல் போன்ற நியமங்களை கை கொள்ள வேண்டும்.


  சூரிய மந்திரம் அல்லது தீக்ஷை இல்லாதவர் சூரியனை பூஜை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் வியாதி வரும்.. குரு உபதேசம் பெற்று பிறகு பூஜிக்க வேண்டும்.

  மானஸீக புஷ்ப பூஜை:--- ப்ரதிஷ்டை செய்த லிங்கத்தை வாசனையுள்ள பூக்களால் பூஜிப்பது போல இருதயத்தில் உள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் எவை?

  அஹிம்சை எனப்படும் உடல், வாக்கு, மனம், ஆகிய முக்கரணங்களாலும் யாருக்கும் எந்த ஹிம்சையும் செய்யதிருத்தல் முதல் புஷ்பம்.

  இந்திரிய ஜயம்:---கண், காது, மூக்கு, வாய், மனம் என்கின்ற ஐந்து இந்திரியங்களையும் அடக்கி ஒரு நிலை படுத்த வேண்டும். இது 2ஆவது புஷ்பம்.

  தேகத்துக்கோ மனதுக்கோ துன்பம் வந்தால் தைரியமாக ஏற்க வேண்டும். ,
  தைரியம் 3ஆவது புஷ்பம்.

  பிறர் செய்யும் தீங்கை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும்.அதை பொருட்படுத்தாதே. பொறுமை 4ஆவது புஷ்பம்.

  சுத்தமான மனம், வாக்கு, தேகம் எப்போதும் இருக்க வேண்டும். களங்கம், அசுத்தம் இல்லாத ஈடுபாடு தேவை. ஸெளசம் எனும் சுத்தியே 5ஆவது பூ.

  கோபம் வந்தாலும், கோபத்தை பிறர் தூண்டினாலும்,கோபபட கூடாது.
  கோபமின்மை ஆறாவது புஷ்பம்.

  செயலிலும், எண்ணத்திலும், பேச்சிலும் தர்மமாக இருக்க வேண்டும். அதர்மம் செய்யாமல் இருப்பதே ஹரீ என்னும் ஏழாவது புஷ்பம்.

  ஸத்யம் எட்டாவது புஷ்பம்.. பேச்சிலும், செயலிலும், எண்ணத்திலும் ஸத்யமாக இருக்க வேண்டும்.

  இம்மாதிரி இருதயத்திலுள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் விதிக்கப்பட்டுள்ளன.

  நாள் தோறும் எவன் இந்த மானஸீக புஷ்பங்களால் ஜபம், ஹோமம் செய்து பகவானை பூஜிக்கிறானோ அவன் அக்ஞானம் என்னும் இருளிலிருந்து வெளிப்பட்டு சுஷும்னா நாடி வழியாக தலையை பேதித்துக் கொண்டு பகவானை அடைகிறான். .

  பிராணாயாமத்தால் இந்திரியங்களை அடக்க வேண்டும் .தியானம் முதலிய உபசாரங்களாலும் பகவானை பூஜிக்க வேன்டும். இதனால் அகங்காரம் அழியும் .நான் என்னுடையது என்ற அகங்காரம் நீங்க வேண்டும்.

  நமது கண்கள்—சூரியன்; நாக்கே வருணன்; மூக்கே பூமி ;இந்த சரீரம் அக்கினியும் வாயுவுமாகும் .கர்மேந்திரியங்களே இந்திரன் .நமது உடலில் விஷ்ணு இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். ஆதலால் விஷ்ணு போக்தா.

  பாபங்களின் இருப்பிடம் அபானம் ஆகும்.. மனமே ஜீவாத்மா. இவ்வாறு தியானித்து உபாசிப்பது உயர்ந்த மானஸீக பூஜை எனப்படுகிறது.

Working...
X