Announcement

Collapse
No announcement yet.

shannavathy tharpanam details.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • shannavathy tharpanam details.

    முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் முறையை விரிவாகப் பார்த்தோம். மேலும் சில புண்ணிய கால தர்ப்பணங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இருக்கிறோம்.*

    *இந்தப் பரிகாரங்கள் செய்ய வேண்டியதற்கான பலன் என்ன என்று பார்க்கும்போது, நாம் செய்யவேண்டிய கர்மாக்களில் நித்தியம் என்று சில சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது கட்டாயம் செய்தே தீர வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*

    *சந்தியாவந்தனம்/ஹௌபாசனம்/பிரம்மச்சாரிகளுக்கு சமிதாதானம்/தாயார் தகப்பனார்களுக்கு செய்யவேண்டிய சிராத்தம் இவைகள் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டிருக்கிறது எக் காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*

    *இவைகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிர்பந்தம் காரணமாக விட்டு போனால், அதற்கு என்ன பரிகாரம் என்று பார்க்கின்ற பொழுது, மூன்று விதமாக மகரிஷிகள் பிரித்து நமக்கு காண்பிக்கின்றனர்.*

    *அதாவது சில நித்திய கர்மாக்களை விட்டு விட்டோம் என்றால் அது விட்டதுதான். அதை திரும்பவும் நம்மால் திருப்ப முடியாது. சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் அவை அனைத்தையும் சேர்த்து செய்வதற்கு சில வழிகளை காண்பித்துள்ளனர். சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் எவ்வளவு காலம் விட்டுப்போனது அவ்வளவு காலங்களையும் திரும்ப செய்ய வேண்டும்.*

    *இப்படி மூன்று விதமாக இருக்கிறது இதில் முதலில் சந்தியாவந்தனம் எடுத்துக் கொண்டோமேயானால், சந்தியாவந்தனம் ஒரு வருடம் 3 வருடம் ஐந்து வருடம் 10 வருடம் விட்டு போனால் அவை அனைத்திற்கும் சேர்த்து ஒரு சந்தியாவந்தனம் ஆகவோ, அல்லது அதற்கு மாற்று வழியாக ஒரு கர்மாவையோ, நமக்கு மகரிஷிகள் காண்பிக்கவில்லை.

    அப்போது என்ன செய்ய வேண்டும், எவ்வளவு சந்தியாவந்தனம் விட்டுப் போயிருக்கு என்று நமக்கு தெரிந்தால் ஒரு வேளைக்கு 10 சந்தியாவந்தனம் ஆக செய்துகொண்டு அதை முழுமையடையச் செய்ய வேண்டும். பத்துவருட காலம் சந்தியாவந்தனம் விட்டு போய்விட்டது என்றால் பத்து பத்து காயத்ரி ஆக செய்து அதை முடிக்க வேண்டும்.*

    *அதேபோலதான் சிராத்தங்களும். நம் தாயார் தகப்பனாருக்கு செய்யவேண்டிய சிராத்தம் விட்டு போனால் எத்தனை காலம் ஆனாலும் அதைச் செய்தே தீர வேண்டும். அதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு பத்து வருடம் ஸ்ராத்தம் செய்யப்படவில்லை அல்லது முறையான வகையில் அது செய்யப்படவில்லை என்றால், முதலில் சமுத்திர ஸ்நானம் செய்து, அத்தனை சிராத்தங்களையும் செய்து கொண்டே வர வேண்டும். தினம் ஒன்றாக செய்ய வேண்டும் அதை எல்லாம் சேர்த்து செய்வது என்பது கிடையாது.*
    *இன்னும் சில நித்திய கர்மாக்களுக்கு, விட்டுப் போனால் அதற்கு மாற்று வழி ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மேலும் அந்த பரிகாரங்களுக்கு எல்லாம் என்ன பலன் என்று பார்க்கும்பொழுது, சில பரிகாரங்கள் விட்டுப்போனதை பூர்த்தி செய்கின்றன. விட்டுப் போனது போனது தான் என்றில்லாமல், விட்டு போனதினால் வரக்கூடிய பாவத்தையும் போக்கி, நாம் செய்ததாக ஆக்குகிறது சில பரிகாரங்கள்.*
    *இன்னும் சில பரிகாரங்கள் விட்டுப் போனால் விட்டுப் போனது தான். ஆனால் அடுத்ததை செய்வதற்கான அதிகாரத்தை சில பரிகாரங்கள் கொடுக்கிறது. இன்னும் சில கர்மாக்கள் விட்டு போனால் விட்டு போனதுதான் ஆனால் அன்றைக்கு செய்வதான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது.*

    *இப்படி மூன்று விதமாக பரிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது ஹௌபாசனம், கல்யாணம் ஆன தினத்திலிருந்து ஆரம்பமாகிறது. தொடர்ந்தார் போல் ஒரு பத்து வருடம் விட்டுப் போய்விட்டது என்றால், அது விட்டது விட்டதுதான். அதற்கான பாவத்தை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் நாம் ஒரு தாம்பாளத்தில் அரிசியை வைத்து ஹோம திரவிய தானம் என்று நாம் செய்கிறோம். ஸ்வர்ண தானிய ஆஜ்ய கிர்சரம் என்று நாம் செய்கிறோம்.*

    *நான்கு வேளைக்கு மேல் ஒருவன் ஹௌபாசனம் செய்யாமல் இருந்தால், நான்கு விதமான தானங்களை அவன் செய்ய வேண்டும். தானியம் ஸ்வர்ணம் நெய் மற்றும் கிரிச்சரம் இந்த நான்கையும் அவன் செய்தால்தான், அவன் அடுத்த வேளை ஹௌபாசனம் செய்ய முடியும். இப்படி பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது.*

    *இதற்கு என்ன பலன் என்றால், விட்டுப்போன பாவம் விட்டுப் போனது தான் ஆனால் அன்றைக்கு செய்ய வேண்டிய கர்மாவிற்கு அதிகாரத்தை கொடுக்கிறது. இதைத்தான் நாம் நம்முடைய சிராத்த தினத்தன்று அக்னி சந்தானம் ஹௌபாசனம் செய்கிறோம். அந்த தானத்தை செய்தால் அன்றைக்கு செய்ய வேண்டிய சிராத்தத்தை செய்ய அதிகாரம் நமக்கு கிடைக்கிறது.*

    *ரொம்ப காலம் விட்டு போய் விட்டது என்றால் சிராத்தம் முடிந்த உடனேயே அந்த அக்னியை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். தொடர்ந்து செய்து கொண்டு வரக்கூடாது. இப்படி அன்றைய தினத்தில் செய்ய வேண்டியதற்கான அதிகாரத்தை கொடுக்கிறது சில பரிகாரங்கள்.*

    *இன்னும் சில பரிகாரங்கள் மேற்கொண்டு செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. இப்படி மூன்று விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது அதிலே இந்த சண்ணவதி தர்ப்பணம் செய்யாது விட்டு போனால் அதற்கான பரிகாரங்கள், மற்றும் அதற்கு என்ன பலன் என்றால், சில மந்திர ஜபங்கள் விட்டதை செய்வதாக ஆக்குகிறது. சிலவை விட்டது விட்டதுதான்.*

    *சிலவைகள் அடுத்த புண்ணிய கால தர்ப்பணம் செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. முதலில் தர்ச ஸ்ராத்தம் விட்டு போனால், அம்மாவாசையன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டு போனால் அதற்கான பரிகாரத்தை நாம் பார்த்தோம். நியூக்ஷூசாசம் என்று ஒரு மந்திரத்தை நூறு முறை ஜெபிக்க வேண்டும் என்று பார்த்தோம்.*

    *அதற்கு என்ன பலன் என்றால், அந்த மந்திரத்தை ஜெபித்து பிறகு விட்டது செய்ததாகவே ஆகிறது என்று சொல்லப்பட்டது. என்ன காரணத்தினால் இந்த பரிகாரம் விட்டுப்போனது என்றால் அதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.*

    *ஒரு தீட்டு காலத்தில் 10 நாள் அல்லது மூன்று நாள் வருகிற பொழுது அந்த சமயத்திலே அமாவாசை வந்துவிட்டால், அப்படி விட்டுப் போனால் அதற்கு தோஷம் கிடையாது. அந்த தீட்டை நாம் காப்பதினால் இந்த அமாவாசை சிராத்தம் நாம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. அதனால் விட்டுப்போன கணக்கிலேயே வராது.*

    *அதேபோல, நாம் தாயார் தகப்பனார் களுக்கு செய்கின்ற சிராத்தம் அந்த நாளில் அமாவாசை சிராத்தம் வந்தால், அதுவும் விட்டு போனதாக ஆகாது. செய்ததாகவே கருதப்படும். ஒரு பிரயாணத்தில் நாம் இருக்கிறோம் அல்லது பஞ்சாங்கம் பார்க்காமல் விட்டு விட்டோம் என்றால் அந்த நேரத்தில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.*

    *இப்படி ஒவ்வொரு புண்ணிய காலத்திற்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன அது என்ன என்பதை மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*


  • #2
    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய 96 ஷண்ணவதி தர்ப்பணங்களை செய்வதற்கு தவறவிட்டு விட்டால் அதற்கான பிராயச்சித்தம் அதாவது பரிகாரம் என்ன என்பதை பார்க்க இருக்கிறோம் அதைப் பற்றிய தகவலை மேலும் தொடர்கிறார்.*

    *பொதுவாக ஒரு கர்மாவை நித்தியம் என்று சொல்லி அதை தவற விட்டு விட்டால் அதற்கு சமுத்திர ஸ்நானம் தான் பிராயச்சித்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி செய்வதினால் பிதுர் காரியங்கள் எதையெல்லாம் நாம் தவற விட்டோமோ, அதாவது சிரார்த்தங்கள் சரியான

    காலத்திலேயே நாம் செய்ய முடியவில்லை என்றால் முதலில் செய்ய வேண்டியது சமுத்திர ஸ்நானம். அதேபோல் தர்ப்பணங்களை தவற விட்டு விட்டால் முதலில் செய்யவேண்டியது சமுத்திர ஸ்நானம்.*
    *இது பொதுவான பிராயச்சித்தமாக எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தையனம் செய்தவர்களாக இருந்தால், ரிக் வேதத்தில் தனித்தனியாகவே ஒவ்வொன்றுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்மாவாசை தர்ப்பணம் விட்டு போனால் அதற்கான மந்திரங்கள் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இது ரிக் வேதிகள் மட்டும்தானா என்று கேட்கக்கூடாது.

    சாஸ்திரத்தில், ஒரு வேதத்தில் அதைப் பற்றி சொல்லவில்லை என்றால் மற்ற வேதத்தில் சொல்லி இருப்பதை எடுத்துக் கொள்ளலாம், என்பதை மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.*


    *நான்கு வேதங்களையும் அனைவரும் அத்தையனம் செய்ய வேண்டும். நான்கு வேதங்களையும் சொல்வதற்கு அனைவருக்கும் அதிகாரம் உள்ளது. தினமும் நாம் பிரம்மயஞ்யம் செய்யும்பொழுது அதனால்தான் நான்கு வேதங்களையும் நாம் சொல்கிறோம்.*


    *நான்கு வேதங்களும் அனைவருக்கும் உண்டு நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் அதிலிருந்து வருகின்றன. நான்கு வேதங்களையும் நாம் அத்தையனம் செய்வதற்கான ஆயுட்காலம் இல்லாததினால் மகரிஷிகள் குறைந்தது ஒரு வேதத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*
    *எல்லா வேதங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும் அல்லது இரண்டு வேதங்களையாவது அத்தையனம் செய்ய வேண்டும் அதுவும் இல்லை என்றால் ஒரு வேதத்தை ஆவது நாம் அத்தையனம் செய்ய வேண்டும். இதை மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது*

    *நான்கு வேதங்களுமே நமக்கு உண்டு நான்கு வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா கர்மாக்களும் நமக்கு உண்டு. எதை எதையெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்பதை வகைப்படுத்தி செய்ய வேண்டும்.*
    *ரிக் வேதத்தில் பிராயச்சித்தங்கள் ஷண்ணவதி தர்ப்பணம் விட்டுப் போனால் சொல்லப்பட்டிருக்கிறது. அம்மாவாசை தர்ப்பணத்தை நாம் விட்டு விட்டால் அதற்கு ரிக் வேதத்திலே ஒரு மந்திரம் இருக்கிறது அதை உபவாசமிருந்து 100 தடவை ஜபிக்க வேண்டும். அப்படி சொன்னால் அந்த விட்டதினால் வரக்கூடியது பாபம் இல்லாமல் போகும். அதற்கு என்ன பலன்

    என்றால் செய்ய வேண்டிய கர்மாவிற்கு அதிகாரம் வருகிறது மேலும் அந்த பரிகாரங்களை செய்வதினால் வரக்கூடிய பலன். அந்தப் பலனை எப்படி பார்க்க வேண்டும் என்றால் அடுத்த தடவை செய்ய வேண்டிய அம்மாவாசை நாம் செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது இந்த பரிகாரத்தை செய்வதினால்.*

    *இந்த பரிகாரம் செய்வதினால் விட்டுப்போன காரியத்தின் பலன் நமக்கு வந்து விடும் என்று புரிந்து கொள்ளாமல் மீண்டும் அடுத்த முறை செய்வதற்கான அதிகாரம் நமக்கு வந்து சேர்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.*

    *நம் தாயார் தகப்பனார் கள் தவறிய உடன் ஒரு வருட காலம் நாம் செய்யக்கூடிய இந்த 16-மாசிகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிலேயே பொதுவாக தர்ம சாஸ்திரத்தில் சொல்கின்ற பொழுது மாசாமாசம் செய்கின்ற மாசிகம் என்றும், இடைப்பட்ட காலத்தில் செய்வதற்கு ஊன மாசிகம் என்றும் பெயர் அதற்கு. ஊனம் என்றால் இடைப்பட்ட காலம் இது நாம் செய்யத் தவறி விட்டால் அதற்கு வேறு காலம் கிடையாது.*

    *ஊன மாசிகம் விட்டுப் போனால் விட்டுப் போனது தான் என்று நாம் புரிந்து கொள்வோம் ஆனால் அப்படி கிடையாது. ஆறாவது ஊன மாசிகம் என்று ஒன்று வரும். அது செய்வதற்கு விட்டுப் போனால் ஏழாவது மாசிகம் செய்வதற்கான அதிகாரம் நமக்கு கிடையாது. அதற்கு மாற்று காலம் இல்லையே இன்று இல்லாமல் அதற்கான பரிகாரத்தை செய்து அதை செய்தே ஆக வேண்டும். விட்டால் விட்டதுதான் என்று நாம் இருக்கக் கூடாது.*

    *அதாவது தாயார் தகப்பனார் களுக்கு இறந்தவுடன் அந்த ஒரு வருடத்தில் 16 மாசிகம் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த எண்ணிக்கை குறையக் கூடாது அதனால் தான், ஏன் அதற்காக சிலகாலம் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அவர்களுடைய கதியையும் அனுசரித்து தர்மசாஸ்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது.*

    *அந்தப் பதினாறு மாசிகங்களையும் அவர்கள் ஒவ்வொரு இடத்தில் இருக்கும்பொழுது நாம் செய்கிறோம். இந்த‌ ஊன மாசிகம் அவர்கள் இருக்கக்கூடிய காலத்தை நமக்கு காண்பிக்கிறது. அதனால் அவைகள் விட்டு போய் விட்டால் அதற்கான பரிகாரத்தை செய்து அதை நாம் முடிக்க வேண்டும்.*
    *ஆறாவது ஊன மாசிகம் செய்யாமல் நாம் ஏழாவது எட்டாவது மாசிகம் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த பரிகாரங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.*

    *அடுத்தடுத்தார் போல் செய்ய வேண்டிய கர்மாக்களை முறையாக செய்வதற்கான அதிகாரங்களை இந்த பரிகாரங்கள் நமக்கு கொடுக்கின்றன. சிராத்த தினத்தன்று, ஹௌபாசனத்தை செய்யத் தவற விட்டு விட்டேன் என்று ஒரு தாம்பாளத்தில் அட்சதையை வைத்து நாம் தானம் செய்வோம்,


    அப்பொழுது இதுநாள் வரையில் நாம் செய்யவேண்டிய ஹௌபாசனம் செய்யாமல் விட்டதற்கான பலன் நமக்கு வந்து சேருமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால் அன்றைக்கு செய்யக்கூடிய சிராத்தம் செய்வதற்கான அதிகாரம் இந்த தானம் செய்வதினால் நமக்கு வந்து சேர்கிறது.*

    *அதுதான் அந்தப் அதிகாரத்திற்கான பலன். இப்படியாக அதை நாம் பிரித்து வகுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி அம்மாவாசை நாம் செய்ய விட்டுவிட்டால் ரிக் வேதத்திலே அந்த ஒரு மந்திரம் இருக்கிறது அதை நாம் நூறு தடவை சொல்லி அந்த பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

    அதனால் யாராவது ஒரு வாத்தியாரிடம் சென்று அதை அத்தையனம் செய்துகொண்டு அதை முடிக்க வேண்டும் அப்பொழுது அடுத்த அமாவாசை செய்வதற்கு நமக்கு அதிகாரம் வந்து சேர்கிறது. இதை தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது.*
    *மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

    Comment


    • #3
      முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் என்கின்ற தலைப்பில் மேலும் தொடர்கிறார்.*

      *96 தர்ப்பணங்களை ஒரு வருடத்தில் நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நித்தியம். அதாவது அவசியம் செய்ய வேண்டும் என்று பொருள்.*

      *தர்ம சாஸ்திரத்தில் எதெல்லாம் நித்தியம் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவைகளை நாம் கட்டாயம் செய்யவேண்டும் செய்யாமல் இருத்தல் கூடாது.*

      *அப்படி நாம் செய்யாமல் இருந்துவிட்டால் அன்று போஜனம் செய்யாமல் இருக்கவேண்டும் சாப்பிடாமல். ஏனென்றால் அந்த அளவுக்கு இந்த ஷண்ணவதி தர்ப்பணம் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. சம்பிரதாயம் பழக்கத்தில் செய்வதில்லை என்று நாம்தான் சொல்லுகிறோமே ஒழிய, தர்ம சாஸ்திரத்தில் அப்படி சொல்லவில்லை நம்முடைய ரெஃபரன்ஸ் தர்மசாஸ்திரம் தான்.*

      *தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயம் நித்தியம் என்று சொல்லப்பட்டு இருந்தால் அதை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. உலகத்தில் இல்லை அல்லது வேறு காரணங்களை சொல்லி நாம் தப்பிப்பதற்கான வழியே தவிர அதில் சொல்லியுள்ளபடி நாம் அப்படியே செய்யவேண்டும்.*
      *அப்படி நாம் விட்டுவிட்டோமே ஆனால் அதற்கான பாவங்கள் நம்மை வந்து சேரும். பராசர மகரிஷி சொல்லும்பொழுது, புண்ணியம் பாவம் இவை இரண்டும் நாம் அனுபவித்தே ஆக

      வேண்டும் சுகத்தையும் துக்கத்தையும். இப்பொழுது நாம் லௌகீகமாக ஒரு கடன் வாங்கி இருக்கிறோம் அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் வேறு ஏதாவது அதற்கு மாற்று வழியில் நாம் அடைப்பதற்கு முயற்சிக்கலாம் கொடுக்கலாம்.*

      *ஆனால் இந்த புண்ணிய பாபங்கள் இருக்கிறதே கோடி ஜென்மங்கள் எடுத்தாலும், அதை அனுபவித்தே ஆக வேண்டும் அதில் இருந்து தப்ப முடியாது. வேறு எந்த வழியிலும் இந்த பாவங்களை நாம் போக்க முடியாது. இந்த பூமியின் உள்ளே என்னென்ன தானியங்கள் விதைகள்

      கிடைக்கிறது என்று நமக்குத் தெரியாது. அது எப்படி வெளியில் வரும் என்றால் மழை ஒரேயடியாக பொழிந்து அவைகள் பரிபக்குவம் ஆகி வெளியே வரும். யார் அங்கே விதைகளை போட்டார்கள் என்று நமக்குத் தெரியாது. என்றோ அங்கு விழுந்த விதைகள் காத்துக்கொண்டிருக்கும் மழை பொழிவதற்காக.*

      *அதே போல் தான் நாம் செய்யக்கூடியது தான பாபங்கள் அந்த ஆத்மாவின் மனசில் ஒட்டிக் கொண்டே வரும். நமக்கு ஒரு சிறிய சிரமம் வரும்பொழுது அத்தனை பாவங்களும் சேர்ந்து ஆரம்பித்துவிடும். ஆகைனால் ஏதோ மாற்று வழிகள் இருக்கின்றது என்று நினைத்து அதை எல்லாம் நாம் சரிசெய்ய முடியாது.*
      *தர்ம சாஸ்திரத்தில் எதையெல்லாம் கட்டாயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது அவைகளை நாம் செய்துதான் ஆகவேண்டும் பழக்கத்தில் இல்லை சம்பிரதாயத்தில் இல்லை நம் வீடுகளில் அதை இப்போது வேண்டாம் என்று சொல்கிறார்கள், அது எல்லாம் பிரமாணமாக ஆகாது. அடிப்படையாக தர்மசாஸ்திரம் தான் நமக்கு பிரமாணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*

      *மேலும் நாம் விட்டதினால் வரக்கூடிய பாபங்களை கஷ்டங்களை நாம் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர நம்மை சுற்றியுள்ளவர்களும் நமக்கு ஆலோசனை சொன்னவர்களும் அனுபவிக்க மாட்டார்கள்.*

      *அதாவது பாவம் என்றால் இங்கே செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டது ஒரு பாவமாக அனுஷ்டானங்களை விட்டது. அந்தப் பாவங்கள் எப்போது வேலை செய்யும் என்றால் யுகம் வாரியாக அது மாறுபடுகிறது.*


      *கிருதயுகத்தில் ஏ உடனேயே அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். திரேதா யுகத்திலே பத்து நாட்களில் அது வேலை செய்யும். துவாபர யுகத்திலே ஒரு மாதம் கழித்து அது நம்முடைய அனுபவத்திற்கு வரும். ஆனால் கலியிலே ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளும் ஏனென்றால்

      அதற்கான பரிகாரம் ஏதாவது அந்த வருடத்தில் செய்கிறானா என்று கலிபுருஷன் நமக்கு அவகாசம் கொடுக்கிறார். ஆகையினாலே தர்ம சாஸ்திரத்தில் இந்த பித்ரு காரியங்களை கட்டாயம் நாம் செய்ய வேண்டும் என்பதை இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களிலே காண்பித்திருக்கிறார்கள்.*

      *அமாவாஸ்யா மன்வாதி யுகாதி சங்கரமனம் வைதிருதி வ்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா என்று இவைகள் தான் 96 தர்ப்பணங்கள். இவைகளை முன்னரே நாம் பார்த்தோம் இவைகளை அவசியம் நாம் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிட காரியம்தான் நம்முடைய முன்னோர்கள் இதையெல்லாம் செய்து தான் சௌகரியமாக இருந்தார்கள். அவர்கள் எந்தப்

      பெரிய மருத்துவமனைக்கு சென்றார்கள் அல்லது எந்த சுகத்தை அனுபவிக்க எதைத் தேடி சென்றார்கள்? கிராமத்திலேயே தான் அவர்கள் வசித்தார்கள். மிகப்பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் கூட தர்ப்பணங்களை விடாமல் செய்து வந்தார்கள்.*

      *ஒரு குடும்பத்தில் நான்கு காரியங்களில் முக்கியமாக வைத்துக் கொண்
      டிருந்தார்கள். இந்த பிதுரு காரியங்களை விடக்கூடாது என்று முயற்சி செய்து செய்து கொண்டிருந்தார்கள்.*

      *சிராத்தங்களை முதல் நாளில் இருந்து ஆரம்பித்து செய்வது, தர்ப்பணங்களை விடாமல் செய்வது. மேலும் கிராமங்களை விட்டு வெளியில் போகக்கூடாது என்று முக்கியமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். வெளியூர்களில் வேறு வசதிகள் இருக்கிறது என்று போக மாட்டார்கள் இங்கு என்ன சௌரியம் இருக்கோ அதை வைத்துக்கொண்டு கிராமத்திலேயே வாழ்ந்தார்கள்.

      இயற்கையான சூழலில் கிராமத்தில் அமைத்துக் கொண்டார்கள். மேலும் கிராம காரியங்களை எதுவும் விட்டுக்கொடுக்காமல் செய்துகொண்டிருந்தார்கள். ராதா கல்யாணம் சீதா கல்யாணங்கள் கிராமங்களில் நடக்கும். திருமணங்கள் நடக்கும் போது அனைவரும் சென்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு விட்டுக்கொடுக்காமல் செய்து கொண்டிருந்தனர்.

      மேலும் குலதெய்வத்தினுடைய பிரார்த்தனைகளை விடாமல் செய்து வந்தார்கள். வருடத்திற்கு இரண்டு தடவையாவது குலதெய்வத்தை சென்று பார்ப்பது அந்த காரியங்களை விடாமல் செய்வது என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கு காரியங்களை வைத்துக்கொண்டு சௌக்கியமாக இருந்தார்கள் நம் முன்னோர்கள்.*

      *இந்த நாட்களில் இந்த நான்குமே நாம் விட்டுவிட்டோம். பித்ரு காரியங்களை நாம் குறைத்து விட்டதால் இந்த நாட்களில் இவ்வளவு சிரமங்களை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. ஆகையினாலே இவைகளை விடக்கூடாது இதற்கான பிராயச்சித்தங்கள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.*

      Comment


      • #4

        *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் நாம் ஏதாவது ஒன்றை செய்ய முடியாது போனால் அதற்கான பரிகாரமாக மந்திர ஜெபங்கள் செய்வதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*

        *அமாவாசை அன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டுப் போனால் அதற்காக ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை பார்த்தோம்.*

        *அடுத்ததாக யுகாதி புண்ணிய காலத்தை பார்ப்போம். வருடத்தில் நான்கு முறை வரக்கூடிய இந்த புண்ணிய காலத்தில் நாம் செய்யாமல் விட்டு விட்டால், ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது நயசத்தியாவா என்று, அதை நூறு தடவை நாம் ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் இந்த யுகாதி விட்டு போனதாக ஆகாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*

        *அடுத்ததாக மன்வாதி புண்ய காலம். இதை நாம் செய்யத் தவறி விட்டோமே ஆனால், தும்புவஹா என்று ஒரு மந்திரம் ரிக் வேதத்தில் இருக்கிறது. சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டு நூறு தடவை இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

        அப்படி செய்தால் அந்த மன்வாதி புண்ய காலம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. இதே மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் செய்ய வேண்டும். மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரும் சப்தமி அஷ்டமி நவமியில் செய்ய வேண்டியது.*

        *இது மிகவும் முக்கியம் திஸ்ரோஷ்டஹாவை பற்றி சொல்லும் பொழுது, தாயார் தகப்பனார்களுக்கு கர்மா செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வருடத்தில் வேறு எந்த சிராத்தமும் நாம் செய்யக்கூடாது. இந்த ஷண்ணவதியும் நாம் தர்ப்பணம் ஆகத்தான் செய்ய வேண்டும் ஷகிரன் மாஹாளயம் கூட அந்த வருடம் கிடையாது.

        ஆனால் இந்த திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் மட்டும் அவசியம் செய்ய வேண்டும் விட்டே போகாது. அவசியம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தும்புவஹா மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த ஜலத்திலே நின்றுகொண்டு 100 தடவை ஜபிக்க வேண்டும்.*

        *அதேபோல மாஹாளயம் விட்டு போய்விட்டால், ஷகிரன் மாஹாளய சிராத்தம் விட்டு போய்விட்டால் அதற்கான துரோஅஸ்வஸ்யா என்று ஒரு ரிங் மந்திரம் இருக்கிறது ரிக் வேதத்தில். அந்த மந்திரத்தை தினமும் பத்து தடவை இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து ஜெபித்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்தோமே ஆனால் அந்த வருடம் நாம் செய்ய வேண்டிய ஷகிரன் மாஹாளயம்*
        *சிராத்தம் செய்யாததினால் வரக்கூடிய பாவம் போகிறது, பித்ரு சாபம் வராமல் இருக்கும்.*
        *மஹாளய பக்ஷத்தில் இரண்டு விதமாக நாம் செய்கிறோம். ஒன்று பக்ஷ மஹாளயம் 16 நாட்களுக்கு தர்ப்பணமாக செய்வது, மற்றொன்று ஷகிரன் மஹாளயம். இந்த ஷகிரன் மஹாளயம் விட்டுப் போனால் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

        *இந்த மாதிரியான ரிங் மந்திரங்கள் ரிக் வேதத்தில் இருப்பதினால் நாம் ரிக் வேதம் தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நமக்கு செய்ய முடியவில்லை என்றால் சமுத்திர ஸ்நானம் தான் செய்ய வேண்டும். அதே புண்ணியகாலம் திரும்பவும் வருவதற்குள் நாம் மகா சங்கல்பம் என்று ஒன்று செய்து கொண்டு சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்.*

        *அப்படி நாம் இந்த மகா சங்கல்பத்தை செய்யாவிடில் அடுத்த அதே புண்ணியகாலம் செய்வதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அப்படி செய்யாவிடில் அது ஒரு குறைபாடாகவே இருக்கும். அதாவது நமக்கு ஒரு கால் இல்லை என்றால் எப்படி இருக்கும் அதே போல். அதாவது ஊனமாக இருக்கும்.*
        *அதனால் நாம் மகா சங்கல்பம் செய்து கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்து விட்டு நாம் மேற்கொண்டு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.*

        *மூன்று புண்ணிய காலங்களுக்கு இந்த ரிங் மந்திரங்கள் பரிகாரமாக சொல்லப்படவில்லை. அதாவது சங்கரமணம் (மாதப்பிறப்பு) வைதிருதி வ்தீபாதம். பராசர ஸ்மிருதி லே இதற்குப் பரிகாரமாக சஹஸ்ர காயத்ரி சொல்லப்பட்டிருக்கிறது. 1008 காயத்ரி மந்திரத்தை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும் இந்த மூன்று புண்ணிய காலங்களும் விட்டு போனால். அதனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் மிக மிக முக்கியம் கட்டாயம் செய்ய வேண்டும்.*

        *இவ்வளவு நாட்களாக செய்யவில்லையே என்றால் அதனால் தப்பில்லை, 1, 2 தர்ப்பணம் ஆக பழக்கத்திற்கு கொண்டுவந்துவிடலாம் 15 நிமிட நேரம் தான் அந்த தர்ப்பணம். இவைகளை எல்லாம் விடாமல் நாம் செய்து வந்தோமே ஆனால் பித்ரு சாபங்கள் வராது. தில ஹோமம் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் வராது. க்ஷேத்திரங்களுக்கு எல்லாம் போய் நாம் செய்யவேண்டிய கர்மாக்கள் நிர்பந்தங்கள் எல்லாம் வராது. இப்படி சுலபமாக தான் நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.*

        *மகரிஷிகளும் சுலபமாகத் தான் இந்த பரிகாரங்களை நமக்கு சொல்லி இருக்கிறார்கள். இந்த ஷண்ணவதி அனைத்தையும் சிராத்தம் ஆகத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால், எவ்வளவு சிரமம் நமக்கு. அப்படி இல்லாமல் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்று வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் மிகப் பெரிய உபகாரம்.*

        *இந்த ஷண்ணவதியை அவசியம் தர்ப்பணமாக செய்ய வேண்டும். சிராத்தமாக இருக்கின்றன பிரயோகம் தெரிந்து கொள்ள வேண்டும். அது எல்லாம் நாம் தெரிந்து கொண்டு எழுதி வைத்துக்கொண்டு குறித்துக்கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்து 1, 2, செய்துவிட்டு பிறகு விட்டுவிடுவது என்பது கூடாது.

        இப்படி மெதுவாக நாம் தர்ப்பணம் ஆக செய்ய 1, 2 ஆரம்பித்து பிறகு இந்த 96 ஆராயும் நாம் செய்வதற்கு பிதுருக்கள் நமக்கு ஆசிர்வதிப்பார்கள். மிகவும் முக்கியமானதாக மனதில் நினைத்து செய்ய வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்

        Comment


        • #5
          சமுத்திர ஸ்நானம்*
          *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய கடமைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வரக்கூடிய

          வரிசையில் ஷண்ணவதி தர்ப்பணம் செய்கின்ற முறைய விரிவாகப் பார்த்து அதில் நாம் செய்யாமல் விட்டால், மேலும் அதற்கான பிராயச்சித்தங்கள் என்ன என்பதை பார்த்துக் கொண்டு வருகிறோம்.*

          *இதற்கு நடுவில் சமுத்திர ஸ்நானம் என்பதைப் பற்றி சில தர்ப்பண தினங்களில் விசேஷமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதை பார்க்க இருக்கிறோம்.

          இதைப் பார்த்த பிறகு ஷண்ணவதி தர்ப்பணங்களை செய்ய முடியாவிடில் அதற்கான பரிகாரங்களை பார்க்கலாம்.*
          *பொதுவாக எந்த புண்ணிய நதிகளுக்கு சென்றாலும் ஸ்நானம் பானம் இவைகள் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.

          தமிழில் சொல்லும் பொழுது கங்காஸ்நானம் துங்கா பானம்.* *கங்கைக்கு போனால் ஸ்நானம் பிரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது.
          துங்கா நதிக்கு போனால் ஒரு உத்தரணி தீர்த்தமாவது குடிக்க வேண்டும் அங்கு ஸ்நானம் பிரதானம் இல்லை. இப்படி ஒவ்வொரு புண்ணிய நதிகளுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

          எந்த புண்ணிய நதிகளுக்கு நாம் சென்றாலும் அங்கே ஸ்நானம் செய்ய வேண்டும் ஒரு உத்தரணி நாம் அதை சாப்பிட வேண்டும்.*
          *இப்படி வரும் பொழுது அதிலே சமுத்திரமும் சொல்லப்பட்டுள்ளது. சமுத்திரத்திற்கு போனால் அங்கே ஸ்நானம் செய்துவிட்டு ஒரு உத்தரணி அந்த தீர்த்தத்தையும் பருகலாமா என்ற கேள்வி வருகிறது.

          தர்மசாஸ்திரம் சமுத்திர ஸ்தானத்திற்கு என்று தனியாக விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது.* *_வேதம் இதைப் பற்றி சொல்லும்போது ஒரு கதையை சொல்லி சொல்லுகிறது.
          சமுத்திரத்தின் உடைய தண்ணீரை நாம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கடல் தண்ணீர் குடிக்க கூடியது அல்ல.
          கடல் தண்ணீரை நாம் குடித்தாலோ அல்லது குடிக்கும் படி செய்து அதை நாம் உபயோகப்படுத்தினால் தண்ணீர் சம்பந்தமான நோய் மூலம் நாம் இறக்க நேரிடும்.
          கடல் அதாவது சமுத்திர தண்ணீரை நான் உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் சில காலங்களில் ஸ்நானம் என்பது விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.*

          *இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, அரசமரத்தை எங்கு பார்த்தாலும் நமஸ்காரம் செய்ய வேண்டும் குறைந்தபட்சம் கைகூப்பி நமஸ்கரிக்க வேண்டும்.

          அதேபோல சமுத்திரத்தை நாம் எங்கு பார்த்தாலும் நமஸ்காரம் செய்ய வேண்டும் சமுத்திர இராஜா. ஆபாம் பதிகி என்று பெயர் சமுத்திரத்திற்கு. சமுத்திரத்தை நாம் எங்கு பார்த்தாலும் கை கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும்.*
          *ஆனால் இந்த இரண்டையும் கையால் தொடக்கூடாது எப்பொழுதும் சில காலங்களை தவிர்த்து. அதாவது அரச மரத்தை வைத்து விடுவதோ அல்லது அதை பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்வது சில காலங்களில் தான் செய்யலாம்.

          அமாவாசையும் திங்கட்கிழமையும் வரக்கூடிய அமா சோமவாரத்திலும், சனிக் கிழமைகளிலும், இந்த இரண்டு தினங்களில் தான் அரச மரத்தை தொடுவதோ ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்வது செய்யலாம்.*

          *அதேபோல, கடலில் நாம் ஸ்நானம் அல்லது அதைத் தொடுவது பருவகாலங்களில் தான் அதை செய்யலாம். பௌர்ணமி அம்மாவாசை இவை இரண்டுக்கும் பர்வா என்று பெயர். இந்த இரண்டு தினங்களில் தான் நாம் சமுத்திரத்தை தொடலாம் ஸ்நானம் செய்யலாம். இந்த தகவலை நமக்கு சொல்வது மகாபாரதம்.*

          *ஒரு புல்லின் நுனியால் கூட அரச மரத்தையோ சமுத்திரத்தையும் நாம் தொடக்கூடாது. ஆனால் பருவ காலத்தில் ஸ்னானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.

          பௌர்ணமியில் அல்லது அமாவாசையில் சமுத்திர ஸ்நானம் செய்தால், ஒரு முறை ஸ்நானம் செய்யும்போது லட்சம் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து போகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.

          மற்ற நாட்களில் சமுத்திரத்தை தொடுவதோ அதில் ஸ்நானம் செய்வதும் கூடாது.*
          *ஆனால் சேதுவில் அதாவது ராமேஸ்வரத்தில் சமுத்திர ஸ்நானம் நித்தியமாகவே என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை ஜெமினி என்கின்ற மகரிஷி சொல்கிறார். ராமேஸ்வரத்தில் ஸ்நானம் தினமுமே செய்யலாம். விதிவிலக்காக

          சொல்லப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்தில் சமுத்திரத்திற்கு நாம் சென்றாலும் பவுர்ணமி அமாவாசை தினங்கள் தவிர நாம் அதை தொடவோ அதில் ஸ்னானம் செய்யவோ கூடாது.*

          *மேலும் சில புண்ணிய தினங்களில் சமுத்திர ஸ்நானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. பௌர்ணமி அமாவாசை கிரகண புண்ணிய தினங்கள் பவுர்ணமியும் பிரதம யும் சேர்ந்து வரக்கூடிய நாட்களில் கிரகணம் வரும் அமாவாசையும் பிரதமரையும் சேரக்கூடிய நாட்களில் தான் கிரகண புண்ணிய காலம் வரும்.

          சில நேரங்களில் முதல் நாள் கூட பௌர்ணமியும் அமாவாசையும் வரலாம் மறுநாள் கிரகணம் வரும். ஆகையினாலே கிரகண புண்ணிய காலத்தில் சமுத்திர ஸ்நானம் என்பது செய்யலாம்.
          கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை வரும் பொழுது செய்யலாம். கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி என்று இந்த மூன்றும் சேர்ந்து வருவதற்கு பெயர்.* *கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி அன்று நாம் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதால் ஆயிரம் ஜென்மங்களில் செய்த பாவங்கள் போய்விடுகிறது.

          அதேபோல் யுகாதி புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் முறையாக யுகாதி புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்தால்,

          குருக்ஷேத்திரத்தில் ஆயிரம் கோதானம் செய்தால் என்ன புண்ணியங்கள்/பலன்கள் கிடைக்குமோ, அதாவது நமக்கு மட்டுமல்ல நம்முடைய பிதுருக்கள் மற்றும் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கும் பலன்கள் கிடைக்கும் என்று சௌர புராணம் காண்பிக்கிறது.

          இப்படியாக விசேஷமாக சமுத்திர ஸ்நானம் இந்த புண்ணிய காலங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.*

          *இந்த சமுத்ர ஸ்நானம் செய்ய வேண்டிய முறையையும் தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது அதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

          21-11-2020* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய தர்மங்களின் வரிசைகளை பார்த்துக் கொண்டு வருகின்ற வகையில் சில புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் பெருமைகளையும் புண்ணியங்களையும் மேலும் தொடர்கிறார்.*

          Comment


          • #6
            அதாவது கடலுக்கு சென்று ஸ்நானம் செய்வது அதனுடைய முறையையும் தர்மசாஸ்திரம் நமக்கு காட்டுகிறது. பொதுவாகவே எந்த ஒரு நதிக்கும் நாம் சென்று ஸ்நானம் செய்யும்போது அதற்கான ஒரு

            முறை சொல்லப்பட்டிருக்கிறது. தர்ம சாஸ்திரத்தில் நமக்கு ஒரு முறை வழி சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.*

            *முதலில் தேக ஆரோக்கியம் நமக்கு கிடைக்கின்றது. அதுதான் திர்ஷ்டம் பலம். தேக ஆரோக்கியத்திற்கு, இரண்டு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கின்றன.
            ஒன்று திர்ஷ்டம் மற்றொன்று அதிர்ஷ்டம். கண்ணினால் பார்க்கக் கூடியதான பலனுக்கு திர்ஷ்டம் என்று பெயர். அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடிய பலனுக்கு அதிர்ஷ்டம் என்று பெயர்.*

            *திர்ஷ்டம் அதனுடைய பலன் என்ன என்றால், தேக ஆரோக்கியம் நமக்கு கிடைக்கிறது. இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்லும்பொழுது எங்கு நாம் ஒரு நதிக்கு ஸ்னானம் செய்ய போகிறோமோ அங்கு அது எப்படி இருக்க வேண்டும் என்று காண்பிக்கிறது.*


            *அதாவது வியாசர் இதைப் பற்றி சொல்லும் பொழுது, ஒரு நதியிலே நாம் நானும் செய்யப்போகிறோம் என்றால் அந்த நதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். ஆறுகளில் ஓடக்கூடிய தண்ணீர் எப்பொழுதும் கெட்டுப்போகாது.

            நாம் ஒரு குடத்திலோ அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நாம் பிடித்து வைத்தால் ஒரு நாள் தான் அது சுத்தமாக இருக்கும். மறுநாள் அதில் ஒரு வழவழப்புத் தன்மை வந்துவிடும். கெட்டுப் போய்விடும்.

            ஆனால் நதியில் வேகமாக ஓடிக்கொண்டு இருப்பதினால் அது சுத்தமாக இருக்கும். ஈஸ்வர ஷிஷ்டி அப்படியாக உள்ளது. ஒரு நதியில் தண்ணீர் தேங்கி இருந்தது என்றால் அங்கே ஸ்நானம் செய்யக்கூடாது.

            தடுக்கப்பட்டு இருந்தால் ஸ்நானம் செய்யக்கூடாது. போகின்ற தண்ணீர் திரும்பவும் சுற்றி வருகிறது என்றால் அங்கே ஸ்நானம் செய்யக்கூடாது. இவை எல்லாம் தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*


            *அதனால்தான் பழைய நாட்களில் நம் முன்னோர்கள் தண்ணீரை சேமிப்பதற்கு, சில வழிகளைக் கண்டுபிடித்து கையாண்டிருக்கிறார்கள்.

            எந்த நதியும் அவர்கள் தடுக்க மாட்டார்கள். நம் முன்னோர்கள் நதியை தடுத்து அணை கட்ட வேண்டும் என்று நினைத்து இருந்தால் எவ்வளவோ அணைகள் கட்டி இருக்கலாம். அதனால் நதிக்கு குறுக்கே எந்த அணையும் அவர்கள் கட்டவில்லை.*


            *பெரிய நதிகளில் இருந்து கிளை நதியாக வெட்டி அங்கங்கே குளங்கள், ஏரிகள், நீர் நிலைகளை சேமிக்கிறார்கள். ஒரு நதியில் ஓட கூடிய தண்ணீரை தடுக்கக்கூடாது. அந்த நதியின் உடைய வேகம் குறைந்து போய்விடும்.
            நம்முடைய தேசத்தில் எல்லா நதிகளும் சம தளத்தில் தான் போகிறது. மேற்கு தூக்கியும் கிழக்கே தணிந்து போகவில்லை.*

            *ஏதோ சில இடங்களில் மலைகளிலிருந்து கீழே இறங்குவதால் அல்லது மேட்டிலிருந்து பள்ளத்திற்கு இறங்குவது இருக்கலாம். தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தால்தான்

            கடைசிவரையிலும் அந்த தண்ணீர் பாயும். நம்முடைய முன்னோர்கள் அதனால்தான் எந்த நதியின் குறுக்கே அணைகளைக் கட்ட வில்லை காரணம் நபியுடைய வேகத்தை குறைக்கக் கூடாது.*


            *வேகத்தை குறைத்தால் தண்ணீர் சீராக பாயாது. ஆகையினால் நம் முன்னோர்கள் அனைத்து நதிகளின் பக்கத்திலும் குளங்கள் ஏரிகளை வெட்டினார்கள். அந்த நதியில் செல்லக்கூடிய தண்ணீரை குளங்களிலும் ஏரிகளிலும் தான் சேமித்தார்கள்.*

            *அதனால் நதிகள் கெட்டுப்போகாமல் கடைசிவரையிலும் பாய்ந்தது. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அப்பொழுது சூழல் நன்றாக இருந்தது மழை நிறைய பெய்தது அதனால் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது அளவுக்கு அதிகமாக மழை இருந்ததனால்.

            ஆனால் இப்போது மழை குறைந்து போய்விட்டது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் பெரிய அளவில் மழை ஒன்றும் குறைந்து போகவில்லை. நாம் நதியின் குறுக்கே அணைகள் கற்றுக் கொ

            ள்வோம் என்று இடைஞ்சல் செய்து ஊற்றுத் தண்ணீர் எல்லாம் குறைந்து போய்விட்டது. நதிகளிலே ஊற்றுத் தண்ணீர் என்றும் உண்டு.*


            *கோடை காலங்களில் அங்கங்கே தண்ணீர் ஊற்று மூலமாக வந்து கொண்டிருக்கும். ஜீவநதிகள் என்று பெயர். வருஷம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் அதற்கு ஜீவநதிகள் என்ற பெயர்.

            அதனால் தான் நம் முன்னோர்கள் எந்த நதிக்கு குறுக்கே ஒரு தடுப்பணையை கட்டாமல் இருந்தார்கள். மாறாக ஏரி குளங்களில் தண்ணீரை சேமித்தார்கள்.*

            *எப்பொழுது ஆற்றிலே தண்ணீர் வந்தாலும் அந்த குளங்களும் ஏரிகளும் நிரம்பும். அதிலிருந்து நாம் உபயோகப்படுத்துவது என்கின்ற வழக்கம் தான் முன்னோர்கள் இடத்தில் இருந்தது. தர்ம சாஸ்திரமும் அதைத்தான் சொல்கிறது.*

            *ஆகையினாலே நிற்கக்கூடிய தண்ணீரில் நாம் ஸ்நானம் செய்யக்கூடாது. ஏனென்றால் அங்கே நம்முடைய உயிரைப் பறிக்க கூடிய சக்திகள் நிறைய இருக்கும்.

            தண்ணீர் தேங்கி தானே இருக்கிறது என்று இறங்கினால் நம்மை உள்ளே இழுத்து விடும். ஓடக்கூடிய தான தண்ணீர் நம்மை தள்ளி விடுமே தவிர உள்ளே இழுக்காது.
            இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் தர்மசாஸ்திரம் இந்த அளவுக்கு கட்டுப்பாடுகளை சொல்கிறது.*


            *தண்ணீர் போய் திரும்ப அங்கேயே வருகிறது என்றால் இங்கேயும் நாம் குளிக்கக்கூடாது அது விஷம் கலந்த தண்ணீராக இருக்க வாய்ப்பு உள்ளது. நம்முடைய உடம்பிற்கு அது ஆரோக்கியத்தை கொடுக்காது.*


            *நதிகளுக்கு சென்று நாம் ஸ்நானம் செய்தால்,அவஹாக ஸ்நானம், அதாவது நன்றாக மூழ்கி குளிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. யார் யார் எப்படி எப்படி ஸ்னானம் செய்யவேண்டும் என்பதையும் காண்பிக்கிறது.*
            *கிரகஸ்தர்கள் கல்யாணம் செய்து கொண்டவர்கள் நதிகளுக்கு சென்றால் நன்றாக மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். மற்றவர்கள் நதியிலே உட்காரக்கூடிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியை எடுத்து விட்டுக் கொள்ள வேண்டும்.

            இப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால் கடலுக்கு சென்றால், எக்காரணத்தைக் கொண்டும், அவஹாக ஸ்நானம் யாருக்குமே கிடையாது கூடாது.

            சமுத்திரத்திற்கு சென்று ஸ்நானம் செய்யக்கூடாது. சமுத்திரத்திற்கு சென்றால் உட்காரக்கூடிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணீரை எடுத்து மேலே விட்டுக் கொண்டுதான் ஸ்நானம் செய்ய வேண்டும்.

            மேலும் யார் யாரெல்லாம் சமுத்திர ஸ்நானம் செய்யலாம் யார் செய்யக்கூடாது என்பதையும் தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது அடுத்த உபன்யாசத்தில் அதை பற்றி பார்ப்போம்.*


            *22-11-2020*
            *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சமுத்திர ஸ்நானம் பற்றி சில புண்ணிய காலங்களில் செய்வதை மேலும் தொடர்கிறார்.*
            *சமுத்திர ஸ்நானம் சில புண்ணிய காலங்களில் செய்யும் பொழுது நிறைய புண்ணியங்களையும் மனநிம்மதியும் சமுத்திரத்தை பார்த்தாலே நமக்கு கிடைக்கிறது.*

            *மனக்கலக்கம் மனசிலே குழப்பங்கள் அமைதியின்மை இருந்தால் நம் முன்னோர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசனம் செய்து விட்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்.*

            *அங்கே என்ன சமுத்திர தீர்த்தம் சுப்ரமணிய சுவாமியை பார்த்துவிட்டு அந்த சமுத்திரத்தை நாம் தரிசனம் செய்தாலே மனக் கலக்கங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.*

            *அதனால்தான் சமுத்திரம் எங்கு இருந்தாலும் அங்கு சென்று பார்த்து சற்று அமர்ந்து விட்டு வந்தாலே நமக்கு மன அமைதியை நிம்மதியை கொடுக்கும் சமுத்திர தரிசனம்.*

            *நம்முடைய தர்ம சாஸ்திரம் சமுத்திர ஸ்நானம் என்பதை சில புண்ணிய காலங்களில் வகுத்துக் கொடுத்திருக்கிறது. அந்த சமுத்திர ஸ்நானம் யார் யாரெல்லாம் செய்யக் கூடாது என்றும் சொல்கிறது.*

            *சிலபேர்கள் சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவளுடைய கணவன் செய்யக்கூடாது எந்தப் புண்ணிய காலமாக இருந்தாலும் கூட. தூர யாத்திரை (காசி யாத்திரை) அதாவது நீண்ட பயணம் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் பொழுது செய்யக்கூடாது. வபனம் செய்து கொள்ளக் கூடாது அந்த நேரங்களில்.*

            *அடுத்ததாக, சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது மேலும் இறந்தவர்களுடைய உடலை தூக்கிச் செல்லக்கூடாது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளது.*

            *பரத்வாஜ மகரிஷி சொல்லும் போது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வபனம் கூடாது. சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது செய்தால் என்ன என்றால் அவனுக்கு பிறக்கக்கூடிய குழந்தை அவனுக்காக இல்லாமல் போய்விடும்.

            ஓரளவு வளர்ந்த பிறகு அந்த குழந்தை எங்கேயாவது ஒரு தூரதேசம் சென்று நமக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடும். அல்லது அந்த குழந்தை வேறு எங்காவது போய்விடும் அடுத்த தலைமுறையே நமக்கு இல்லாமல் போய்விடும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கின்றது.*

            *மற்றவர்கள் இந்த புண்ணிய காலங்களில் கட்டாயம் சமுத்திர ஸ்நானம் செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்றால், தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது கையிலே நாம் ஜலம் எடுத்துக்கொண்டு போக வேண்டும். ஏனென்றால் ஸ்நானம் செய்வதற்கு முன்பு ஆசமனம் செய்து சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.*

            *ஆசமனம் செய்வதற்கு சமுத்திர ஜலத்தை நாம் உபயோகப்படுத்தக் கூடாது. வாசனைப் பொருட்கள் கலந்த ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது. சமுத்திரம் ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது. நிறம் மாறி இருக்கக்கூடிய தண்ணீரினால் ஆசமனம் செய்யக்கூடாது. இதை எல்லாம் தர்மசாஸ்திரம் காண்பித்துள்ளது.*

            *பொதுவாக முதலில் எந்த நதிகளுக்கு சென்றாலும் முதலில் ஒரு தடவை மூழ்கி ஸ்நானம் செய்து விடவேண்டும். பிறகு ஆசமனம் செய்து சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.*

            *சமுத்திர ஸ்நானத்திற்க்கு போகும் பொழுது முதலில் வீட்டிலேயோ அல்லது நாம் எங்கு தங்கி இருக்கிறோமோ அந்த இடத்தில் ஸ்நானம் முதலில் செய்து விட்டு பிறகு போக வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதலில் சமுத்திர ஸ்நானம் என்பது கூடாது.

            முதலில் வேறு தண்ணீரில் நாம் குளித்துவிட வேண்டும் பிறகு சமுத்திரக் கரைக்கு சென்று ஸ்நானம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்வதற்கு கையிலே தண்ணீர் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.*

            *ஆசமனம் சங்கல்பம் செய்த பிறகு தண்ணீரை இரண்டு கைகளினாலும் அள்ளி அள்ளி விட்டுக் கொள்ள வேண்டும். சமுத்திரத்தில் மூழ்கி குளிக்க கூடாது அதனால் கையில் பித்தளை சொம்பு எடுத்துக்கொண்டு போய் அதன்மூலமாக எடுத்துக்கொண்டு நாம்

            தலையில் விட்டுக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. சமுத்திரம் குளம் ஏரி இவைகளுக்கு செல்லும் பொழுது எந்த திசையில் நின்று நாம் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றால், சூரியன் எந்த திசையில் இருக்கிறாரோ அந்த திக்கை பார்த்து அமர்ந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

            கிரகண புண்ணிய காலமாக இருக்கின்ற சமயத்திலே இரவிலே சந்திரன் எந்த திசையில் இருக்கிறாரோ அந்த திசையில் பார்த்து உட்கார்ந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.*

            *அப்படி ஸ்நானம் செய்த பிறகு ஸ்நானாங்க தர்ப்பணம் உண்டு. தர்ப்பணம் செய்வதற்கு அந்த சமுத்திர தண்ணீரை உபயோகப்படுத்தலாம் ஏனென்றால் நாம் குடிக்கக்கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது தவிர, ஆனால் ஆசமனம் செய்வதற்கு நாம் தண்ணீர் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

            அதனால் சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தி ஸ்நானாங்க தர்ப்பணங்களை செய்யலாம். பிறகு வாசோதகம் சிகோதகம் என்று உண்டு. தலையில் முடியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற தண்ணீர் மூலமாக செய்வது அதை கரையிலே வந்து செய்ய வேண்டும். நாம் பிழிய கூடிய தண்ணீர் வேஷ்டியில் இருந்தோ அல்லது தலையிலிருந்தோ சமுத்திரத்தின் உள்ளே விடக்கூடாது.*

            *ஸ்னானம் செய்து விட்டு கரைக்கு வந்து விட வேண்டும். இங்கு தான் ஸ்நானாங்க தர்ப்பணம் செய்து வேஷ்டியை பிழிந்து கட்டிக்கொள்ள வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு சொல்கிறது. இந்த முறையிலேயே சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்*

            *பிறகு நாம் பித்ருக்களை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணங்கள், பிரம்மயஞ்கியம் இவைகளெல்லாம் சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தி செய்யக்கூடாது இதற்காக நாம் தனியாக எடுத்துக் கொண்டு போன ஜலத்தை வைத்து தான் உபயோகப்படுத்த வேண்டும்.
            அதனால் தீர்த்த ஸ்ராத்தம் நாம் கரையிலே செய்யும் பொழுது வேறு தண்ணீர்தான் வைத்துக்கொள்ள**வேண்டுமை தவிர சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தக் கூடாது.*
            *மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

            Comment


            • #7
              முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடியதான தர்ப்பணங்களின் வரிசையை மேலும் விளக்குகிறார்.*

              *அவைகளில் சில சமயம் ஒரே நாட்களில் இரண்டு மூன்று அல்லது நான்கு புண்ணிய காலங்கள் வரும். அப்போது எவ்வளவு தர்ப்பணங்களை செய்ய வேண்டும் எதை முதலில் செய்ய வேண்டும்.*
              *அல்லது ஒரு தர்ப்பணத்தை செய்தால் போதும் என்றால் எதை செய்ய வேண்டும் என்பதை பற்றிய விஷயங்களில் நமக்கு புரிதல் வேண்டும்.*

              *நமக்கு என்ன தோன்றும் ஒரு சொம்பு ஜலம் ஒரு 10 கிராம் எள் 10 நிமிடம் செலவு ஆகப்போகிறது தனித்தனியாகவே நாம் செய்து விடலாம் என்று தோன்றும். ஆனால் நாம் நம்முடைய தர்ம சாஸ்திரத்தை தான் அடிப்படையாக வைத்துக் கொண்டு இதையெல்லாம் பார்க்க வேண்டும்.*



              *தர்ம சாஸ்திரத்தில் அப்படி சொல்லி இருந்தால் நாம் செய்யலாம் அப்படி காண்பிக்க வில்லை என்றால் செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன ஆகும் அது செய்யாததாகதான் கருதப்படும்.*

              *எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது இந்த முறையில் தான் செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரம் நம்முடைய தர்மசாஸ்திரம் தான். ஆகையினால் தர்ம சாஸ்திரத்தில் எப்படி காண்பிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டும்.*

              *ஏன் இப்படி சேர்த்து செய்யவேண்டும் என்று சொன்னால், ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. ஒரு புண்ணிய காலம் என்று எடுத்துக்கொண்டால் அது ஆரம்பத்தில் இருந்து முடிகின்ற வரையில் தான் என்று நாம் எடுத்துக் கொள்வோம்.*

              *காலையில் எழுந்ததில் இருந்து நாம் தர்ப்பணம் செய்கின்ற வரை புண்ணியகாலம் என்கின்ற ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் அது அப்படி அல்ல. அன்றைய தினம் முழுவதும் ஆகத்தான் தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது புண்ணிய காலமாக.*

              *ஒரு அமாவாசை என்று எடுத்துக்கொண்டால் கூட முதல் நாள் இரவில் இருந்தே அந்த காலம் ஆரம்பித்து விடுகிறது. முதல் நாள் இரவில் இருந்தே நமக்கு நியமங்கள் ஆரம்பிக்கின்றன. முதல் நாள் இரவில் சாப்பிடக்கூடாது வஸ்துக்களை சாப்பிடக்கூடாது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.*

              *எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் முடியவில்லை என்றால் ஆகாரமாக தான் சாப்பிட வேண்டும். மறுநாள் காலை ஆரம்பித்து அன்று முழுவதும் இருந்து மறுநாள் காலையில்தான் அமாவாசை புண்ணிய காலம் பூர்த்தியாகிறது.*

              *அன்றைய தினம் முழுவதும் ஆகவே புண்ணிய காலமாக தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. ஆகையினாலே தர்ப்பணம் முடிந்துவிட்டது என்றால் புண்ணிய காலம் ஆகிவிட்டது என்று கணக்கில் வராது.*

              *சிராத்தமே இப்போது நாம் எடுத்துக் கொண்டால் தாயார் தகப்பனாருக்கு உத்தேசித்து செய்யக்கூடயதான சிராத்தம், முதல் நாள் இரவில் இருந்தே ஆரம்பமாகிறது. முதல் நாள் இரவில் இருந்தே நியமமாக இருந்து மறுநாள் சிராத்த தினம் அன்று கட்டுப்பாடுடன் இருந்து, அதற்கு மறுநாள் காலை சிராத்தாங்க தர்ப்பணம் செய்தால் தான், சிராத்தம் முடிகிறது.*

              *இன்றைய நாட்களில் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை அன்றே செய்து விடுகிறோம். அது எப்படி வழக்கத்தில் வந்தது என்று தெரியவில்லை. ஏனென்றால், எக்காரணத்தைக் கொண்டும் வருடாந்திர சிராத்தம் செய்தால், மறு நாள் காலையில் தான், சிராத்தாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸ்ராத்த தினத்தில் சிராத்த முடிந்தவுடன் அன்றே செய்வது என்ற எந்த பிரமாணமும் தர்ம சாஸ்திரத்தில் காண்பிக்கப்படவில்லை.*

              *இன்னும் நாம் உட்புகுந்து பார்த்தோமேயானால் ஸ்ராத்தம் ஆகிவிட்டது ஆனால் சிராத்தாங்க தர்ப்பணம் ஆகவில்லை, பரேஹனி தர்ப்பணம் என்று பெயர். மறுநாள் காலையில் செய்ய வேண்டிய தர்ப்பணம் என்று அர்த்தம்.*

              *நாம் சிராத்தம் முடிந்து சாப்பிட்ட உடன் நமக்கு ஒரு தீட்டு வந்துவிட்டது என்றால் மறுநாள் காலையில் அந்த சிராத்தாங்க தர்ப்பணம் செய்யும் சமயத்தில் நமக்கு சுத்தி உண்டு தீட்டு கிடையாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*

              *தீட்டு வந்து விட்டாலும் கூட மறுநாள் காலையில் தான் அந்த சிராத்தங்க தர்ப்பணம் செய்யவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் சிராத்த தினத்தன்று செய்யவே கூடாது. எங்கே அப்படி செய்ய வேண்டும் என்றால், சில இடங்களில் அதாவது சில ஸ்ராத்தங்களில் அப்படி

              சொல்லப்பட்டிருக்கிறது. இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, தர்ஷ ஸ்ராத்தம் அன்ன ரூபமாக செய்கின்ற பக்ஷத்தில் அதாவது அம்மாவாசையன்று சிராத்தத்துக்கு முன்னர் சிராத்தம் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும், பிறகு ஸ்ராத்தம் செய்ய வேண்டும்.*

              *தர்ஸம் மட்டுமல்ல அஷ்டகா சிராத்தம், சங்கரமன சிராத்தம் அதாவது மாதப் பிறப்பு, வய்தீபாதம் /‌ கிரகண புண்ணிய கால ஸ்ராத்தங்கள் இவைகள் எல்லாம் நாம் தில தர்ப்பணம் ஆக செய்து கொண்டு வருகிறோம்.*

              *இதை அன்ன ரூபமாக செய்யும்பொழுது, முதலில் சிராத்தாங்க தர்ப்பணம் பின்பு சிராத்தம் அப்படி செய்ய வேண்டும். பக்ஷ மஹாளயம் என்று 16 நாட்களுக்கு நாம் செய்கிறோம். இந்த 16 நாட்களும் நாம் அன்ன ரூபமாக செய்யும் பட்சத்தில் தினந்தோறும் சிராத்தம் முடிந்தவுடன் தர்ப்பணம் செய்துவிட வேண்டும்.*

              *இந்தப் 16 நாட்களும் நாம் சிராத்தத்தை அன்ன ரூபமாக செய்கின்ற பொழுது, ஸ்ராத்தம் முடிந்தவுடன் அன்றைய தினமே சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்ய வேண்டும். இதற்கான நியமம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.*

              *நாம் நம்முடைய தாயார் தகப்பனாருக்கு செய்யக்கூடிய வருடாந்திர ஸ்ராத்தம் செய்தவுடன் மறுநாள் காலையில்தான் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காட்டுகிறது.*

              *சிராத்த தினத்தன்று நாம் செய்யக் கூடாது அப்படி செய்தாலும் அது செய்ததாக ஆகாது. மறு நாள் காலையில் தான் சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்து ஸ்ராத்தம் பூர்த்திசெய்ய வேண்டும்.*

              *தீட்டு வந்தாலும் மற்றும் கர்மாவே செய்யக் கூடிய நிலைமை வந்தாலும், அந்த ஸ்ராத்தாங்க தர்ப்பணத்திற்கு காலம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது அதாவது மறுநாள் காலையில்தான் அதை நாம் செய்ய வேண்டும் அப்போது நமக்கு சுத்தி வந்துவிடும்.*

              *அதேபோல ஹிரண்ய சிராத்தம் ஆக சில ஸ்ராத்தங்களை நாம் செய்யும் போது, ஸ்ராத்தம் முடிந்தவுடனேயே சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்துவிட வேண்டும்.*
              *வருடாந்திர சிராத்தத்தை ஹிரண்ய/ ஆம ரூபமாக செய்யக்கூடாது அன்ன ரூபமாக தான் செய்ய வேண்டும் ஆனால் சிராத்தாங்க தர்ப்பணத்தை மறு நாள் காலையில் தான் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*

              *ஆனால் இன்று உலகம் பூராவும் அன்றைய தினத்தில் தான் நடக்கிறது என்றால் அதை செய்பவர்கள் இடத்தில் தான் கேட்க வேண்டும், தர்ம சாஸ்திரம் சொல்வதை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம், தர்ம சாஸ்திரத்தில் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை மறுநாள் காலையில் தான் செய்ய வேண்டும் என்பதை பார்க்க நேரிடுகிறது. இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தையும் சேர்த்துதான் சேர்த்து செய்வதைப் பற்றி தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

              Comment


              • #8
                முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான 96 தர்ப்பணங்களின் உடைய வரிசைகளை விரிவாகப் பார்த்த வகையில் ஒரே நாளில் இரண்டு மூன்று புண்ணிய காலங்கள் வந்தால் அதை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.*

                *இந்த விஷயத்தில் அடிப்படையான சில தர்மசாஸ்திர விசயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த 96 தர்ப்பணங்களையும் மூன்று விதமாக பிரித்திருக்கிறார்கள்.*

                *அதாவது முதலில் நித்தியம் நைமித்திகம் காமியம் என்ற ஒரு பிரிவு. ஒரு வர்க்கத்தை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்ப்பணம். இரண்டு வர்க்கங்களை உத்தேசித்து செய்யக்கூடியது ஆன தர்ப்பணம். மூன்று வர்க்கமாக பிரித்து செய்ய வேண்டியது தான தர்ப்பணம். நான்கு வர்க்கமாக பிரித்து செய்ய வேண்டியது தான தரப்படும் என்ற ஒரு பிரிவு இருக்கிறது.*

                *இந்தப் பிரிவுகளை அடிப்படையாக நன்றாக நாம் தெரிந்து கொண்டால் தான், இந்த புண்ணிய காலத்தில் தர்ப்பணத்தை தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து செய்யலாமா என்பதை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.*

                *ஓரளவு புரிந்து கொள்கின்ற வகையில் நாம் பார்ப்போம். இதன் உள் விஷயங்கள் நன்றாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமக்கு செய்து வைக்கக் கூடிய வாத்தியார்கள் இடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தர்ம சாஸ்திரம் படித்தவர்கள் இடம் கேட்டு நாம் தெரிந்து கொள்ளலாம்.*

                *அம்மாவாசை அடிப்படையாகக்கொண்டு புண்ணிய காலங்கள் இங்கு வந்தால் எப்படி செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக சில புண்ணிய காலங்கள் சேர்ந்தே வராது. அமாவாசையும் திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் சேர்ந்து வராது.*

                *வய்தீயபாதமும் வைதிருதியும் சேர்ந்து வராது. மஹாளயமும் திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் சேர்ந்து வராது.*

                *ஆகையினால் இந்த புண்ணிய காலங்கள் பற்றிய நம் சந்தேகம் நமக்கு வராது. வரிசையாக நாம் பார்த்தால் நம் தயார் தகப்பனாருக்கு செய்ய வேண்டியது ஸ்ராத்தமும் அமாவாசை திதியும் சேர்ந்தால், அதாவது அமாவாசை அன்று தாயார் தகப்பனார் களுக்கு சிரார்த்தம் வந்தால், எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்றால் முதலில் வருடாந்திர சிராத்தத்தை செய்து கொள்ள வேண்டும். ஸ்ராத்தம் முடிந்த பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.*

                *மறுநாள் காலை சிராத்தாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். இதுதான் வரிசை. ஏனென்றால் வருடாந்திர சிராத்தம் என்பது ஒரே ஒரு வர்க்கத்தை மட்டும் குறித்து செய்ய வேண்டிய சிராத்தம். ஆனால் அமாவாசை தர்ப்பணம் இரண்டு வர்க்கத்தை குறித்து செய்ய வேண்டியது.*

                *அமாவாசையும் மாசப் பிறப்பும் சேர்ந்து வந்தால், மாசப் பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டாம். அமாவாசையும் மஹாளயமும் சேர்ந்தால், இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.*

                *முதலில் அமாவாஸ்யா புண்ய கால தர்ப்பணம், பிறகு மஹாளய புண்ணிய கால தர்ப்பணம். அப்படி இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.*

                *அமாவாசையும் யுகாதி புண்ணிய காலமும் சேர்ந்தால், யுகாதி புண்ணிய காலம் தர்ப்பணத்தை மட்டும் செய்தால் போதும். அமாவாஸ்யா செய்ய வேண்டாம்.*
                *அமாவாசையும் மன்வாதி புண்ணிய காலம் சேர்ந்து வந்தால், மன்வாதி புண்ய காலம் மட்டும் செய்தால் போதும் அமாவாஸ்ய தனியாக செய்ய வேண்டாம்.*

                *அமாவாசையும் கிரகண புண்ணிய காலமும் ஒரே சமயத்தில் வந்தால், ஒரே சமயம் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும், அதாவது காலையில் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பித்து மதியம் 3.30 மணி வரை உள்ள நேரத்தில் சூரிய கிரகண புண்ணிய காலம் வந்தால், அன்றைக்கு கிரகண புண்ணிய கால தர்பணம் மட்டும் செய்தால் போதும், அமாவாஸ்ய தர்ப்பணம் தனியாக வேண்டாம்.*

                *அமாவாசையும் வய்தீபாத புண்ணிய காலமும் சேர்ந்து வந்தால், இங்கே இரண்டு விதமாக நம்முடைய தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது. இந்த இரண்டையும் தனித் தனியாகவும் செய்யலாம், அல்லது அமாவாசை தர்பணம் மட்டும் செய்தால் போதும் வய்தீயபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டாம்.*

                *அமாவாசையும் வைதிருதி புண்ணிய காலமும் சேர்ந்து வந்தால், இரண்டையும் தனித்தனியாக செய்யலாம் அல்லது அமாவாசை புண்ணிய காலம் மட்டும் செய்தால் போதும் வைதிருதி செய்ய வேண்டாம்.*

                *இந்த வரிசையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையாக ஓரளவு நாம் புரிந்து கொள்வதற்காக இதை பார்த்துள்ளோம். இன்னும் சில புண்ணிய காலங்கள் எல்லாம் சேர்ந்து வரும் அவ்வப்பொழுது, நமக்கு செய்து வைக்கக்கூடிய வாத்தியார்கள் இடம் கேட்டு அதை தீர்மானம் செய்ய வேண்டும்.*

                *இதிலே சில கேள்விகள் நமக்கு வரலாம். உதாரணத்திற்கு அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்தால், மாதப்பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும் என்று பார்த்தோம். நான் ஷண்ணவதி தர்ப்பணம் செய்வது இல்லை அமாவாசை தர்ப்பணம் மட்டும்தான் செய்துகொண்டு வருகிறேன், அப்படி இருக்கிற சமயங்களில் அமாவாசை மட்டும் செய்தால் போதுமா? என்ற ஒரு கேள்வி வரும்.*

                *இந்தக் கேள்விக்கு என்ன பதில் என்றால், 96 ஷண்ணவதி தர்ப்பணங்களையும் ஒவ்வொருவரும் செய்துதான் ஆகவேண்டும். அதைச் செய்கிறோம் அல்லது செய்யவில்லை என்பதை நம்முடைய சௌகரியப்படி நாம் வைத்துக் கொண்டு இருக்கின்றோமே தவிர, தர்ம சாஸ்திரப்படி இரண்டு புண்ணிய காலங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.*

                *ஆகையினால் அமாவாசை தர்ப்பணம் மட்டும்தான் நான் செய்து கொண்டு வருகிறேன் என்று சொல்கின்ற அவர்கள்கூட, அன்றைக்கு மாதப்பிறப்பு தர்ப்பணம் தான் செய்ய வேண்டும்.

                அமாவாசையை செய்யக்கூடாது. ஏனென்றால் அமாவாசையா என்பது நித்தியம் என்கின்ற ஒரு வரிசையில் வருகின்றது. மாதப் பிறப்பு என்பது நைமித்திகம் என்கின்ற வரிசையில் வருகிறது. நித்தியமும் நைமித்திகம் சேர்ந்தால் நைமித்திகம் மட்டும் செய்தால் போதும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது*

                *இவைகளுக்கெல்லாம் ஆதாரம் நமக்கு தர்மசாஸ்திரம் தான். என்ன ஒரு சொம்பு ஜலமும், எள் இவைகள் தானே என்று நாம் அலட்சியமாக நினைக்க கூடாது. எப்பொழுது தர்மசாஸ்திரம் இரண்டு புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் ஒன்று மட்டும் செய்தால் போதும் என்று காண்பிக்கின்றதோ, அந்த ரிஷியின் உடைய வாக்கியம் தான் நமக்கு ஆதாரம். இரண்டும் செய்கிறேன் என்று செய்தால் அது செய்யாததாக கணக்கில் வரும்.*

                *அதனால் இரண்டையும் தனித்தனியாக செய்தால் இரண்டுமே செய்யாததாக கணக்கில் வரும். இதை மனதில் வைத்துக்கொண்டு அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்து வந்தால், மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்தால் போதும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*

                *இதில் இன்னும் ஒரு கேள்வி நமக்கு வரலாம் அதாவது இரண்டு புண்ணிய காலங்களின் பெயரையும் சொல்லி ஒரே தர்ப்பணத்தை செய்து விட்டால் என்ன? அதற்கு ஸமான தந்திரம் என்று சாஸ்திரங்களில் பெயர். தர்ஸ ஸ்ராத்தம் சங்கர மன சிராத்தஞ்ச ஸமான தந்திரேந கரிஷ்யே என்று சொல்லி விட்டால் என்ன? இரண்டுமே செய்ததாக ஆகி விடுமே என்ற ஒரு எண்ணம் நமக்கு வரும்.

                இந்த விஷயத்தில் முக்கியமாக ஒன்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும் ஸமான தந்திரம் என்றால் என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

                Comment


                • #9

                  *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய 96 ஷண்ணவதி தர்ப்பணங்கள் சில சமயம் ஒரே நாளில் 2 அல்லது 3 புண்ணிய கால தர்ப்பணங்கள் சேர்ந்தாற்போல் வந்தால் அவைகளை தனித்தனியாக செய்வதா அல்லது சேர்த்து செய்வதா என்பதைப்பற்றிய விவரங்களை மேலும் தொடர்கிறார்.*

                  *ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று தர்ப்பணங்கள் வந்தால் அந்த தருணங்களில் மந்திரங்களை இரண்டுக்கும் சேர்த்து சொல்லி செய்யலாமா என்பதை தர்மசாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை நாம் செய்யக்கூடாது.*

                  *அப்படி செய்வதற்கு சமான தந்திரம் என்று பெயர். ஒரே நாளில் இரண்டு மூன்று தர்ப்பணங்கள் அல்லது பூஜைகள் அல்லது ஜப ஹோமங்கள் வந்தாலும் சரி அவை அனைத்திற்குமான மந்திரங்களைச் சொல்லி ஒன்றாக செய்தால் அதற்கு சாஸ்திரங்களில் சமான தந்திரம் என்று சொல்லியிருக்கிறார்கள்.*

                  *இந்த சமான தந்திரம் எங்கு சொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கு எடுத்துக் கொள்ளலாமே தவிர இந்த தர்ப்பணங்கள் அது சொல்லப்படவே இல்லை. சிராத்தங்களில் சமான தந்திரம் எங்குமே சொல்லப்படவில்லை.*

                  *இப்போது உதாரணத்திற்கு, தாயார் தகப்பனார் ஸ்ராத்தம் இரண்டும் ஒரே நாளில் வந்தால், இரண்டையும் சேர்த்து ஒரே நாளில் செய்யலாம் என்றால் கூடாது. முதலில் தகப்பனார் உடையது செய்ய வேண்டும் பிறகு தாயாருடைய ஸ்ராத்தம் செய்ய வேண்டும் தனித்தனியாக தான் செய்ய வேண்டும்.*

                  *இந்த சமான தந்திரம் என்பது ஸ்ராத்தங்களிளோ தர்ப்பணங்களிளோ அல்லது அபர காரியங்களிளோ பொருந்தாது.*

                  *ஆனால் சில இடங்களில் இந்த சமான தந்திரம் சொல்லப்பட்டுள்ளது. எங்கே என்றால், கல்யாணத்திற்கு முதல் நாள் விரதம் என்று ஒன்று நாம் செய்வோம் அதை எல்லோரும் பார்த்திருக்கலாம். அதற்கு விரத க்ஷதுஷ்டையம் என்று பெயர். நான்கு விரதங்களையும் தனித்தனியாக செய்ய வேண்டும். இதை தனித்தனியாக செய்ய முடியாவிட்டால் சேர்த்தும் செய்யலாம் என்று நம்முடைய சாஸ்திரங்களில் காண்பித்திருக்கிறார்கள்*

                  *இந்த நான்கு விரதங்களையும் சேர்த்து செய்வதற்குப் பெயர்தான் சமான தந்திரம் என்று பெயர். அங்கு சங்கல்பத்திலேயே வாத்தியார் சொல்வதை நாம் கேட்கலாம். சமான தந்திரேன சரிஷ்யே என்று சங்கல்பத்தில் வாத்தியார் சொல்வார்.*

                  *அங்கும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயம் என்னவென்றால் 4 விரதங்களையும் ஒன்றாக சேர்த்து செய்தாலும் கூட அங்கு பிரதான ஹோமங்கள்/உபஸ்தானங்கள் அவைகள் எல்லாம் தனித்தனியாக தான் செய்ய வேண்டும்.*

                  *அதற்கு அங்கமாக உள்ளது எல்லாம் சேர்த்து செய்யலாம். நாந்தி/புண்ணியாகவாசனம்/சங்கல்பம்/கிரக பிரீத்தி ஒன்று தான். இவர்களெல்லாம் ஒரு தடவை செய்தால் போதும். ஆனால் அந்த ஹோமங்களை பிரதானமாக செய்யும்போது தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும்.*
                  *அதேபோல பெண் குழந்தைகளுக்கு*

                  *ஜாதகாதி என்று கல்யாணத்திற்கு முதல் நாள் நடக்கும். அதாவது ஜாத கர்மா நாமகரணம் அன்னப்ராசனம் அனைத்தும் கல்யாணத்திற்கு முதல் நாள் இன்றைய காலங்களில் நடக்கின்றது. அந்தந்த காலங்களில் செய்யாவிடில் சேர்த்து செய்யலாம். இதற்கு தான் சமான தந்திரம் என்று பெயர்.*

                  *அங்கேயும் சங்கல்பம் கிரகப் பிரீதி நாந்தி புண்ணியாகவாசனம் இவைகள் ஒரு தடவை செய்தால் போதுமே தவிர, பிரதானங்களை தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும். ஜாதகர்மா நாமகரணம் அன்னப்ராசனம் இவைகளை தனித்தனியாக செய்ய வேண்டும்.*
                  *இந்த விஷயங்கள் அங்கெல்லாம் பொருந்துமே தவிர, தர்ப்பணங்களில் அது பொருந்தாது.

                  இப்பொழுது அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்து இருக்கிறது அந்த சமயத்தில் தர்ஸ சிராத்தம் சங்கரமன சிராத்தம் சமான தந்தரேன கரிஷ்யே என்று சொன்னால், இங்கு நாம் எப்படி செய்ய வேண்டும் என்றால் சங்கல்பம் ஒரு தடவை செய்தால் போதும், தர்பை மற்றும் கூர்ச்சம் இதில் ஆவாகனம் ஒரு தடவை செய்தால் போதும், ஆனால் பிரதானமாக, செய்யவேண்டிய தர்ப்பணத்தை இரண்டுமுறை செய்ய வேண்டிவரும். ஒரு தடவை முடித்து திரும்பவும் அதே பித்ருக்களை உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.*

                  *கடைசியிலே யதாஸ்தானம் ஒரு தடவை செய்தால் போதும் என்று பிரயோகம் வரும். ஆனால் அப்படி தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. ஆகையினால், இரண்டு தரர்ப்பணங்களையும் சொல்லி ஒரே புண்ணிய காலமாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் செய்யவில்லை என்ற வழியில் தான் வரும்.*

                  *ரிஷிகளின் உடைய வாக்கியங்கள் இல்லாமல் நாம் ஒன்று செய்தால், அதற்குத்தான் அன்னியதா கிருதம் என்று பெயர். ரிஷிகள் என்னுடைய வாக்கியங்கள் இல்லாமல் நாம் செய்கிறோம் என்று அர்த்தம்.*

                  *அப்படி செய்தால் அது செய்யாதது தான் கணக்கு வரும். அதனால் எங்கு தனித்தனியாக செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறதோ அங்கு தனித்தனியாக தான் செய்ய வேண்டும். எங்கே ஒரு தர்ப்பணம் போதும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கு ஒன்றே தான் செய்ய வேண்டும்.*

                  *இரண்டு புண்ணிய காலங்களை சொல்லிக் கொள்ளலாமே தவிர இரண்டு ஸ்ராத்தங்களை ஒன்றாக சொல்லக்கூடாது. அதாவது இன்று அம்மாவாசை மற்றும் மாதப்பிறப்பு சேர்ந்து இருக்கிறது என்றால் சங்கல்பத்தில் அமாவாசயே புண்ணிய காலே சங்கரமன புண்ணிய காலே சங்கர மன ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேன கரிஷ்யே என்று சங்கல்பத்தில் சொல்லிக்கொள்ளலாம்.*

                  *அமாவாஸ்யா புண்ணிய காலே தர்ஸ சிராத்தம் சங்கர மன புண்ணிய காலே சங்கரமன சிராத்தஞ்ச ஸமான தந்திரேந கரிஷ்யே என்று சொல்லக்கூடாது.*

                  *அப்படி சொன்னால் தர்ப்பணத்தை இரண்டு தடவை செய்ய வேண்டிவரும், அப்படி நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. புண்ணிய காலத்தை இரண்டையும் சொல்லிக்கொண்டு, சிராத்தம் என்கின்ற இடத்தில் ஒரே ஒரு சிராத்தத்தை சொல்லி, தர்ப்பணத்தை செய்யவேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம்.*

                  *இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிய வேண்டுமானால் தர்ம சாஸ்திரம் படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப விஷயங்களை இதிலே நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தால், நமக்கு ரொம்ப குழப்பங்கள் வந்து விடும்.*

                  *எதைச் சொல்வது எதை விடுவது என்று குழம்பி போய் விடுவோம். ஆகையினாலே சில விஷயங்களை அவ்வப்போது தான் தெரிந்து கொள்ள வேண்டும்.*

                  *அதனால் செய்து வைக்கக்கூடிய வாத்தியார்கள் இடத்திலோ, தர்மசாஸ்திரம் படித்தவர்கள் இடத்திலேயே புண்ணிய காலங்கள் சேரும்பொழுது, ஒரு மாதம் முன்னரே, அவர்களிடத்தில் கேட்டு நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.*

                  *ஆனால் இந்த நாட்களில் இவைகள் எல்லாம் சேர்த்து ஒரு லிஸ்ட் ஆகவே போட்டுக் கொடுக்கிறார்கள் நிறைய பேர். அதை நாம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருக்கணிதம் அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி, தனித்தனியாக பரி சிரமப்பட்டு நிறைய பேர் அதை முன்னரே நமக்கு வரிசைப்படுத்திக் கொடுக்கிறார்கள். அதை நாம் வருஷம் பிறந்த உடனேயே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.*

                  *அதில் எப்படி சொல்ல பட்டு இருக்கின்றதோ அது படி நாம் செய்ய வேண்டும். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இரண்டில் இதை மட்டும் செய்கிறோம் என்று நாம் தெரிந்து கொள்வதற்காக இந்த விஷயங்களை பார்க்கிறோமே தவிர, அவ்வப்போது தெரிந்தவர்கள் இடத்திலே கேட்டு கொள்ள வேண்டும்.*

                  *இந்த விஷயங்களில் எப்படி செய்தால் என்ன என்ற எண்ணங்கள் நமக்கு இருக்க கூடாது வரக்கூடாது. அந்த எண்ணத்தோடு செய்தால் அதற்கான பலன்கள் இல்லாமல் போய்விடும்.

                  அதனால் இந்த புண்ணிய காலங்கள் அப்போ போது எப்படி சேர்கிறது என்பதை தெரிந்தவர்களைக் கொண்டு, நாம் இதை தெரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்

                  Comment


                  • #10
                    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களில் ஒரே நாளில் 2 அல்லது 3 புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் எதை முதலில் செய்வது எப்படி செய்வது என்பதை பற்றி மேலும் தொடர்கிறார்.*

                    *அதிலே சமான தந்திரம் என்ற விஷயத்தை பார்த்தோம். அதாவது ஒரே நாளில் இரண்டு புண்ணிய காலங்கள் வந்தால் அந்த புண்ணிய காலங்களில் பெயர்களை சொல்லலாமே தவிர சிராத்தங்களை சொல்லக்கூடாது தர்ம சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை என்பதை பார்த்தோம்.*

                    *மேலும் அம்மாவாசை உடன் புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் எதை எதை செய்ய வேண்டும் என்பதையும் பார்த்தோம்.*

                    *இப்பொழுது அமாவாசை இல்லாமல் புண்ணிய காலங்களுடன் வேறு என்ன சேர்ந்து வரும் வந்தால் அது எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.*

                    *முதலில் இரண்டு புண்ணிய காலங்கள் வந்தால் ஒரு தர்ப்பணத்தை செய்தால் போதும் என்பதை பார்ப்போம். இதில் வய்தீபாத புண்ணிய காலமும் மன்வாதி புண்ணிய காலம் சேர்ந்து வரும். இப்பொழுது நாம் பார்க்கக்கூடியது எல்லாம் அனேகமாக சேர்ந்து வரக்கூடியவைகள்.*

                    *இவைகள் இல்லாமல் எப்பவாவது ஒரு முறை அதிகப்படியான புண்ணிய காலங்கள் சேர்ந்து வரும். அந்தந்த சமயங்களில் நமக்கு செய்து வைக்கக்கூடிய வாத்தியார் இடத்திலோ அல்லது தர்மசாஸ்திரம் படித்து தெரிந்தவர்கள் இடத்திலோ நாம் கேட்டு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.*
                    *வய்தீயபாதமும் மன்வாதியும் சேர்ந்து வரும். அப்பொழுது வய்தீபாத புண்ணிய காலம் செய்தால் போதும். மன்வாதி புண்ணிய காலம் தனியாக செய்ய வேண்டியதில்லை.*

                    *வய்தீயபாதமும் அஷ்டகாவும் சேர்ந்து வந்தால், திஸ்ரோஷ்டகாஹா என்று மூன்று நாட்கள் மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரக்கூடிய தான கிருஷ்ண பக்ஷ சப்தமி அஷ்டமி நவமி திதிகளில் வரும். அந்த தினங்களில் வய்தீபாத புண்ணிய காலங்கள் வரலாம்.

                    அப்படி இவை இரண்டும் சேர்ந்து வந்தால் அஷ்டகா புண்ணிய கால ஒரு தர்ப்பணம் செய்தால் போதும். வய்தீபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை ஒரு தர்ப்பணம் தான்.*

                    *வைதிருதியும் மன்வாதியும் சேர்ந்து வரும். அப்படி ஒரு இரண்டும் சேர்ந்து வரும்போது மன்வாதி புண்ய காலம் செய்தால் போதும். ஒரு தர்ப்பணம் தான்.*

                    *வைதிருதி புண்ணிய காலமும் மாச பிறப்பும் சேர்ந்து வரும். சங்கரமண புண்ணிய காலம். இவை இரண்டும் சேர்ந்து வரும்போது மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்தால் போதும். ஒரு தர்ப்பணம் தான்.*
                    *இவைகளெல்லாம் ஒரு தர்ப்பணம் செய்யக்கூடிய விஷயங்கள். அதேபோல இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டிய புண்ணிய காலங்கள் என்று வரும்.*

                    *மஹாலய பக்ஷத்தில் வய்தீபாத புண்ணிய காலம் வரும். இதை பஞ்சாங்கத்தில் காண்பித்து இருப்பார்கள் வய்தீபாத மஹாளயம் என்று. இவை இரண்டும் சேர்ந்து வந்தால், முதலில் வய்தீபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்து, பின்பு மஹாளய புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்.*
                    *சங்கரமனமும் மன்வாதியும் சேர்ந்து வரும், இவை இரண்டும் சேர்ந்து வரும் பட்சத்தில் இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும் முதலில், மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்து பின்பு மன்வாதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.*

                    *மஹாளய பக்ஷத்தில் யுகாதி புண்ணியகாலம் சேர்ந்து வரும் இது எல்லாம் அனேகமாக எப்பவாவது ஒரு முறை வரக்கூடிய புண்ணிய காலங்கள். இவை இரண்டும் சேர்ந்து வரும்போது முதலில் யுகாதி புண்ணியகாலம் செய்ய வேண்டும், பின்பு மகாலய பக்ஷ புண்ணியகால தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களெல்லாம் இரண்டு புண்ணிய காலங்கள் சேர்ந்து வரக்கூடியவைகள்.*

                    *மூன்று / நான்கு புண்ணிய காலங்கள் கூட சேர்ந்து வரும். இப்பொழுது உதாரணத்திற்கு வைதிருதி சங்கரமனம் மன்வாதி இந்த மூன்று புண்ணிய காலங்களும் சேர்ந்து வரும் ஒரே தினத்தில். இந்த நேரங்களில் இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். முதலில் சங்கரமன புண்ணிய கால தர்ப்பணம். பிறகு மன்வாதி புண்ய கால தர்ப்பணம்.*

                    *இதோடு கூட கிரகண புண்ணிய காலம் சேரும். அனேகமாக சந்திரகிரகணம் சேர்ந்து வரும். இப்பொழுது அஸ்தமனத்திற்கு பிறகு இராத்தரி சந்திர கிரகணம் வரும். அப்போது இரவு கிரகண புண்ணிய காலம் செய்ய வேண்டும்.*

                    *இப்படி வைதிருதி சங்கரமனம் மன்வாதி இந்த மூன்று புண்ணிய காலங்கள் கூட ஒரே நாளில் சேர்ந்து வரும். இவைகள் அனேகமாக இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வரலாம். அந்த சமயம் இந்த முறையில் அதை செய்ய வேண்டும்.*

                    *இவைகள் இல்லாமல் விசேஷமாக சில புண்ணிய காலங்கள் வரும். அவைகளை அவ்வப்போது நாம் கேட்டு தீர்மானித்து செய்து கொள்ள வேண்டும். பொதுவாக இது எல்லாம் லிஸ்ட் ஆகவே போட்டு நமக்கு கொடுத்து விடுவார்கள்.*

                    *அதை நாம் வாங்கி வைத்துக்கொண்டு செய்யவேண்டும் தமிழிலேயே செய்வதைத் திருந்தச் செய் என்று சொல்வது உண்டு. எந்த காரியத்தை செய்தாலும் உருப்படியான முறையில் செய்ய வேண்டும். ஏதோ செய்கிறோம் என்று செய்யக்கூடாது.

                    நன்றாக தெரிந்து கொண்டு அதை புரிந்துகொண்டு நாம் செய்தால் தான், அப்போதுதான் நமக்கு மனதிற்கும் திருப்தியாகவும் அதனுடைய பலன்கள் முழுவதும் ஆகவும் ரிஷிகளின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும்.*

                    *இப்போது இதுவரை நாம் பார்த்த புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால், இந்த முறையில் தெரிந்து வைத்துக்கொண்டு நாம் அதை செய்ய வேண்டும். ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.*
                    *ஏனென்றால் இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களில் ஏதாவது 1 அல்லது 2 விட்டுப் போகும் என்றால் அதற்கான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.*

                    *ஏனென்றால் இவர்கள் எல்லாம் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டு இருக்கின்றன. எப்படி நாம் சாப்பிடுவதும் சந்தியாவந்தனம் செய்வதும் நித்தியமோ அதேபோல்தான், தர்ப்பணங்கள் செய்வது.*
                    *பொதுவாக ஒரு நித்திய கர்மாவை விட்டுவிட்டால் பிரத்தியவாயம் வரும். அதாவது

                    விட்டதினால் வரக்கூடிய பாபங்கள். அதோடு கூட இல்லாமல் இந்த பிதுர் கர்மாக்களை நாம் விட்டுவிட்டால், பிரத்தியவாயம் வருகிறது என்பது ஒரு பக்கம், அது இல்லாமல் சாபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். அந்த சாபங்களில் இருந்து நாம் எப்படி விடுபடுவது என்றால், அதற்கான பரிகாரங்களை தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*

                    *அதாவது சில மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஒவ்வொரு புண்ணிய காலமும் விட்டு போய்விட்டால் அதற்கான மந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த பரிகார மந்திரங்களை நாம் ஜெபம் செய்வதினால், விட்டுப் போனதினால் வரக்கூடிய தோஷங்கள் போக்கும் மேலும் பிதுருக்களுடைய சாபத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம்.*

                    *அம்மாவாசை முதற்கொண்டு ஒவ்வொரு புண்ணிய காலங்களும் காரணங்கள் இல்லாமல் விட்டு போனால், அதற்கான மந்திரங்களை தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது. அவைகள் என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

                    Comment


                    • #11

                      *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணம் முறைகளை எப்படி செய்வது அதை செய்யாவிடில் என்ன விதமான பாவங்கள் நமக்கு வந்து சேரும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*

                      *இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. அதாவது அமாவாஸ்ய யுகாதி மன்வாதி சங்கராந்தி வைதிருதி வய்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா இந்த எட்டு புண்ணிய காலங்களை தான் நாம் ஷண்ணவதி என்று சொல்கிறோம். இப்படியாக தர்மசாஸ்திரம் காண்பித்த வழியிலே ஒவ்வொருவரும் இந்த 96 தர்ப்பணங்களை செய்ய வேண்டும்*

                      *காலப்போக்கில் எப்படியோ நாம் 1 or 2 புண்ணிய காலங்களில் மட்டும் செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளோம். ஆகையினால் இந்த நாட்களில் என்ன ஆகிவிட்டது என்றால் நான் ஷண்ணவதியை ஆரம்பித்து செய்துகொள்கிறேன் என்று சொல்லுவதை கேட்க முடிகிறது.*

                      *ஷண்ணவதி தர்ப்பண முறை என்று ஒன்று தனியாக இருப்பதாக நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் வருடத்திலே 96 தர்ப்பணங்கள் நாம் செய்ய வேண்டியது அதில் சில செய்கிறோம் சில. விட்டுவிடுகிறோம். விட்டுப்போன தர்ப்பணங்களுக்கு பாவங்கள்

                      மிகவும் ஜாஸ்தி. முக்கியமாக பிதுர் கர்மாக்கள் எப்பொழுதும் விட்டு போகவே கூடாது. மற்ற காரியங்களுக்கு கூட கௌன காலங்கள் உண்டு. கௌன காலங்கள் என்றால் சொல்லப்பட்ட காலத்தில் அதை செய்ய முடியவில்லை என்றால் தள்ளி செய்வதற்கான ஒரு காலம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் கௌன காலம் என்ற பெயர்.*

                      *இதை அனைத்திற்குமே சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது சந்தியாவந்தனம் மே விட்டுப் போயிருந்தால் அவ்வளவு சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும். அனைத்து சந்தியாவந்தனங் களுக்கும் சேர்த்து ஒரே சந்தியாவந்தனம் என்பது கிடையாது. ஒருவருக்கு 10 சந்தியா வந்தனங்கள் விட்டுப் போயிருந்தால் பத்து பத்து காயத்ரியாக செய்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும். பத்து நாட்கள் சந்தியாவந்தனம் விட்டு போய் இருந்தது என்றால் மாத்யானிகம் சேர்த்து 30 சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும்.*

                      *ஒரு மாதம் விட்டுப் போயிருந்தால் 90 செய்ய வேண்டும் ஒரு வருடமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் சேர்த்து சேர்த்து செய்ய வேண்டும்.*

                      *ஆனால் இந்த பித்ரு கர்மாக்களில், ஒரு புண்ணிய காலம் விட்டு போனால் அது விட்டு போனது தான். அதை பிறகு, சேர்த்து செய்ய முடியாது. அது அமாவாசை அல்லது மாதப்பிறப்பு அல்லது தாயார் தகப்பனார்களுக்காக செய்யக்கூடியதாக வருடாந்திர ஸ்ராத்தமாக இருந்தாலும் சரி, ஆகையினாலே தான் நம்முடைய தர்மசாஸ்திரம் அதை வலியுறுத்தி காண்பிக்கிறது.*

                      *அதை விட்டுவிட்டால் பிதுர் கர்மாவை விட்டு விட்ட தோஷம் 1 நித்தியமாக சொல்லப்பட்ட பிர்த்தியவாயம் என்பது 2 வேதம் நமக்கு பிறப்பித்த உத்தரவை மீறுவது என்பது 3. இந்த மூன்று விதமான பாவங்களின் மூலமாகத்தான் நாம் நிறைய வியாதிகளினால் கஷ்டபட வேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன.*

                      *நித்தியம் கட்டாயம் செய்து ஆக வேண்டும், என்று தர்ம சாஸ்திரம் எதை நமக்கு காண்பிக்கின்றதோ, அதை நாம் மீறவே கூடாது. அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*

                      *யார் அதை விட்டானோ அவன் நித்தியத்தை விட்டுவிட்டான் என்கின்ற தோஷம் 1 வேதத்தை அவமானம் செய்தான் என்கின்ற தோஷம் 2. இவைகளினால் பல்வேறு நோய்களின் மூலமாக நாம் திண்டாட வேண்டி வரும். ஆனால் சில காரணங்களினால் சில புண்ணிய காலங்களில் செய்ய முடியாமல் போனால், அப்போது என்ன செய்யலாம் என்றால், அதற்காக சில மந்திரங்களை நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*

                      *அதாவது ஒரு புண்ணிய காலம் விட்டுப் போகிறது என்பதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். ஒரு நோய் வந்துவிட்டது அதனால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம், அந்த சமயத்தில் சில புண்ணிய காலங்கள் வந்தால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது ஒன்று. பிறப்பு அல்லது இறப்பு தீட்டு காலங்களில் புண்ணிய காலங்கள் வந்தால், செய்ய முடியாது. அந்த சமயங்களில் வந்த புண்ணிய காலங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது ஒரு முறை.*

                      *செய்யமுடியும் செய்யக்கூடிய நிலைமையில் நாம் இருக்கிறோம் அப்படியும் நாம் செய்யவில்லை என்றால், மறந்து போய் விட்டது அல்லது தெரிந்தே நாம் விட்டுவிட்டோம், என்பது மூன்றாவது முறை. இப்படி மூன்று பிரிவுகள் இருக்கின்றன.*



                      *ஒரு தீட்டு வந்து அதனால் சில புண்ணிய காலங்களில் நம்மால் அனுஷ்டிக்க முடியவில்லை என்றால் அது பாவங்கள் கிடையாது, ஏனென்றால் அங்கே ஒரு சூட்சுமம் இருக்கின்றது.*

                      *ஒரு பத்து நாள் தீட்டிலே நாம் இருக்கிறோம், அப்பொழுது ஒரு அமாவாசையோ அல்லது மாதப்பிறப்பு வந்தால், அந்தப் புண்ணிய கால தர்ப்பணம் செய்யக்கூடாது. அப்பொழுது அதை விட்டு போன பாவம் வராதா என்றால் வராது.*

                      *ஏனென்றால் ஒரு ஜீவனை உத்தேசித்து நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த தீட்டு காப்பது நாளையே இந்த புண்ணியகாலம் செய்ததாக ஆகிவிடுகிறது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

                      *நமக்கு நோய்கள் வந்து நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் ஏதாவது புண்ணிய காலங்கள் வந்து அது விட்டுப் போயிருந்தால், அன்றைய தினம் மௌனமாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் கூடியவரையில் சாப்பிடாமலும் மௌனமாக இருக்க வேண்டும். மருந்துகள் சாப்பிடலாம் அதற்காக உறுதுணையாக ஏதாவது

                      ஆதாரங்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை சாப்பிடலாம். அதைவிடுத்து பழங்களோ பால் மற்றும் இதர பானங்களோ சாப்பிட கூடாது. அப்படி உபவாசம் இருப்பதினாலேயே அந்த விட்டுப்போன புண்ணிய காலத்தின் மூலமாக ஏற்படக்கூடிய பாவங்கள் போய்விடுகிறது.*

                      *தெரிந்தோ அல்லது மறந்து ஒரு புண்ணிய காலம் விட்டு போய்விட்டால் அதற்காகத்தான் நமக்கு இந்த மந்திரங்களை காண்பித்து இருக்கின்றனர். ரிக் வேதத்திலும் யஜுர் வேதத்திலும் சில மந்திரங்களை நமக்கு எடுத்து காண்பித்து இருக்கின்றன. அந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி ஜபம் செய்ய வேண்டும். அப்படிக் ஜபம் செய்வதன் மூலம் விட்டுப்போன பாவங்கள் விலகும்.*

                      *அடுத்தமுறை அந்த புண்ணிய காலம் வரும் பொழுது நாம் விழித்துக்கொண்டு அதை செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் தான் இருக்கின்றது என்று நாம் வழக்கமாக செய்யக்கூடிய அமாவாசை மட்டும் செய்துவிட்டு, மற்ற புண்ணிய காலங்கள் எல்லாம் வரும்போது அந்த

                      மந்திரத்தை நாம் ஜெபம் செய்து கொண்டே இருக்கிறோம் என்று இருக்கக்கூடாது. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை விட்டுப் போனால் மட்டுமே அந்த மந்திரங்களை சொல்லலாமே தவிர, அந்த மந்திரங்களே தர்ப்பணம் செய்ததாக ஆகாது. பரிகாரங்கள் இதெல்லாம் என்ன விதமான பலன் என்றால் அதிலே வித்தியாசங்கள் இருக்கின்றன.*

                      *ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு பரிகாரம் என்று நமக்கு காண்பித்திருக்கிறார்கள் அந்த பரிகாரம் என்ன செய்கிறது என்றால் அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்

                      Comment

                      Working...
                      X