Announcement

Collapse
No announcement yet.

vaikasi viradham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • vaikasi viradham

    20-05-2023 கர வீர விருதம்;- ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை இன்று அரளிசெடியில் பூத்திருக்கும் பூவை பூஜை செய்ய வேண்டும்.வீட்டில் பூச்செடி இருப்பவர்கள் பூச்செடிக்கு பூஜை செய்யலாம்
    பூச்செடி வீட்டில் இல்லாதவர்கள் கடையிலிருந்து அரளி பூ வாங்கி வந்து அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து அந்த தாம்பாளத்திற்கு சந்தனம், குங்கும இட்டு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.

    கரவீர- விஷாவாஸ; நமஸ்தே பானுவல்லப மெளளி மண்டன துர்காதி தேவானாம் ஸததம் ப்ரிய . இந்த பூக்களை சிவனுக்கோ அல்லது விஷ்ணுவிற்கோ அர்ச்சனை செய்யலாம். குடும்பம் தினமும் வாஸனை உடையதாக இருக்கும் இதனால் என்கிறார்கள்..



    புன்னாக கெளரீ வ்ரதம்:21-05-2023 .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை திதி புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை 16 உபசார பூஜை செய்யவும்
    .புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.


    22-05-2023 ரம்பா த்ருதியை:- ஸ்ம்ருதி கெளஸ்துபம்-118 சொல்கிறது. புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப ஶோபிதா தத்ர ஸம்பூஜயேத் தேவீம்

    சக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம் மண்டபத்தின் நடுவில் தேவி படம் அல்லது விக்கிரஹம் வைத்து அதன் நான்கு பக்கங்களும் வாழை மரம் கட்டி நிறைய வாழைபழங்களும்,
    நெய்யில் தயாரித்த பக்ஷணங்களையும் 16 உபசார பூஜை செய்து சுவாசினிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வினியோகம் செய்ய வேண்டும்.கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி வேண்டி கொள்ளவும். ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று செய்ய வேண்டும்.

    வேதேஶு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ஸ்ருதோ த்ருஷ்டஸ்ச பஹுஶோன சக்த்யா ரஹித: சிவ: த்வம் சக்திஸ், த்வம் ஸ்வதா, ஸ்வாஹா த்வம், ஸாவித்ரீ ஸரஸ்வதீ, பதீம் தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.யோஷித: புருஷோ வாபிக்யாதம் ரம்பா விருதம் புவி பார்யாம் புத்ரம் க்ருஹம், போகான் குலவ்ருத்தி மவாப்யுனு: என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.

    கணவனுடன் சேர்ந்தும் செய்யலாம், தனியாகவும் பெண்கள்/ஆண்கள் செய்யலாம். இதனால் நல்ல கணவன், நீண்ட ஆயுள்; நல்ல புத்ரன், வீடு , சுக போகங்கள், வம்ச விருத்தி கிடைக்கும். ஆண்களுக்கு நல்ல மனைவி, வீடு,குழந்தை செல்வம். சயன சுக போகம் வம்ச விருத்தி கிடைக்கும்.



    23-05-2023 உமா அவதாரம்;-ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தி அன்று இமயமலையின் மகளாக , தக்ஷனின் மகள் அவதாரம் எடுத்த நாள். கடுமையாக தவம் புரிந்து பரமேஸ்வரனை திருமணம் செய்து கொண்டாள்.

    குழந்தாய் தவம் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள். வட மொழியில் உமா என்றால் குழந்தாய் தவம் என்று அர்த்தம். அம்பாளை பூஜிப்பதால் ஸர்வ செளபாக்கியங்களும், மங்களம் களும் கிடைக்கும். உமா மஹேஸ்வரரை இன்று 16 உபசார பூஜை செய்யலாம். ஸ்தோத்ரங்கள், பாராயணங்கள் சொல்லலாம்.



    கதளீ கெளரீ வ்ரதம்:23-05-2023; ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி

    வாழை மரத்தடியில்/அல்லது வாழை இலை மீது அம்மனை வைத்து 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.

    பூஜையில் 108 வாழை பழங்கள் நிவேத்யம் செய்து அதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்கு தர வேண்டும். இதனால் ஜாதகத்தில் சுக்ர கிரஹத்தால் ஏற்பட்டுள்ள களத்ர தோஷம் நீங்கி திருமணம் , குழந்தை செல்வம் போன்ற நன்மைகள் கிட்டும்.



    பெளம சதுர்த்தி 23-05-2023. செவ்வாய் கிழமையும் சதுர்த்தி திதியும் ஒன்று சேரும் தினம்.இன்று கணபதியும், முருகனும் ஒரே படத்தில் இருக்கும் படத்தை வைத்து இருவரையும் ஒன்றாக சேர்த்து 16 உபசார பூஜை செய்து,

    கணபதிக்கு கொழுக்கட்டையும், முருகனுக்கு துவரம் பருப்பு சுண்டல் செய்து நைவேத்யம் செய்யலாம்.ஸ்தோத்ரங்கள் சொல்லுங்கள். இதனால் கடன் கொடுத்தவர் உபத்ரவமும், தீர்க்க முடியாத கடனும் தீருமே.

    23-05-2023 பெளம சதுர்த்தி.
    23-05-2023.
    பவிஷ்யோத்திர புராணம்--பெளம சதுர்த்தி. எந்த மாதத்தில் சுக்கில பட்ச சதுர்த்தி செவ்வாய் கிழமை யன்று வருகிறதோ அன்று இம்மாதிரி பூஜை செய்ய வேண்டும் எங்கிறது. 23-05-2023 இந்த விரதம் பெண்களுக்கு ஸெளபாக்கியம், உத்தமமான பேரழகு சுகம் ஆகியவைகளை கொடுக்கும். பகவான் பரமசிவன் பார்வதியுடன் இணைந்து பூமா தேவி மூலம் சிகப்பு வர்ணம் கொண்ட மங்கள சொரூபனை உற்பத்தி செய்தார்.

    அதனால் அவன் பூமி குமாரன், குஜன், ரக்தன், விரன், அங்காரகன் என்ற பெயரில் உலகில் அழைக்கப்படுகிறான் .சரீரத்தில் அங்கங்களை பாதுகாப்பதால் அங்காரகன் என்றும் மங்களங்களை தருபவன் ஆதலால் மங்களன் என்றும் அழைக்கபடுகிறான்.செவ்வாய் கிழமையுடன் கூடிய சுக்ல சதுர்த்தியில் ஆணோ அல்லது பெண்ணோ உபவாசத்துடன் கணேசரையும், அங்காரகனையும் சிவப்பு பூக்கள், சிகப்பு சந்தனம் ஆகியவைகளால் பூஜை செய்தால் சகல செளபாக்கி யங்க ளையும் பெறுவர்.

    முதலில் குளித்து சங்கல்பம் செய்து கணேசரை மனதால் நினைத்து , கையிலே சுத்தமான மண்ணை எடுத்துக்கொண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும்..இஹ த்வம் வந்திதா பூர்வம் கிருஷணோ னோத்தரதா கிலா தஸ்மான் மே தஹ பாப்மானம் யன்மயா பூர்வ சஞ்சிதம்..அதன் பின் மண்ணை சுத்தமான ஜலத்துடன் கலந்து சூரியன் முன்னால் வைத்து கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்.த்வம் ஆபோ யோனி: சர்வேஷாம் தைத்ய தாவைத் யோகஸாம்.ஸ்வேதாண்டஜோதபிதாம் சைவ ரஸானாம் பதாயே நம:இதன் பிறகு குளிக்க வேன்டும்.

    .பிறகு பவித்ரம் தரித்து வீட்டுக்குள் செல்ல வேண்டும். அதன் பின் அறுகம்புல் ,வன்னி இலை, அரசு இலை, மாவிலை போன்றவற்றை மந்திரம் உச்சரித்து சமர்பிக்க வேண்டும்.பிறகு பசுமாடு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்., கோபி சந்தனம் அணிந்துகொண்டு சமித்துகளால் கொழுந்து விட்டெறியும் அக்னியில் பால், பார்லி, எள், போன்றவைகளால் செய்த பதார்த்தங்களை போட வேண்டும்.

    அப்போதுஅடியிற் கண்ட மந்திரத்தை சொல்லவும் .ஓம். சர்வாய ஸ்வாஹா; ததா ஓம் லோஹிதாங்காய ஸ்வாஹா என்ற ப்ரத்யேக மந்திரத்தை 108 தடவை சொல்லி ஆகுதி அளிக்க வேண்டும். .பிறகு தங்கம் அல்லது வெள்ளி , சந்தனம் அல்லது தேவதாரு மரத்தினால் செவ்வாயின் மூர்த்தியை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நெய்.குங்குமம் சிகப்பு சந்தனம், சிகப்பு புஷ்பம், நைவேத்யம் என்று வரிசையாக பூஜை செய்ய வேண்டும்.

    பிறகு அக்னெள மூர்த்தெள என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு செவ்வாயின்மூர்த்தியை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் அரிசி, வெல்லம், நெய், பால், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.கருமிதனமாக இருக்க கூடாது.நான்கு முறை பூஜை செய்தபின் ஒரு தூய்மையான சத்தான பிராமணருக்கு இந்த கணபதி, செவ்வாய் மூர்த்தியை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விரதம் பூர்த்தியானதாகும்.
    அதன் பின் அந்த பக்தன் சந்திரனை விட சாந்தியாகவும், சூரியனை விட தேஜஸாகவும், வாயுவை விட பலவானாகவும் இருப்பான். கணபதி அருளால் நீண்ட ஆயுள் பெறுவான். மிகுந்த செல்வத்துடன் செல்வாக்குடன் இருப்பான்

Working...
X