Announcement

Collapse
No announcement yet.

தில ஹோமம்-சாரதா திலக விதிப்படி.

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • தில ஹோமம்-சாரதா திலக விதிப்படி.

  சாரதா திலக கல்போக்த தில ஹோமம்..
  ஸத்புத்ர பாக்கியம் வேண்டி பித்ருசாப பரிஹாரமாக செய்யும் சாரதா திலக கல்பத்தில் உள்ள திலஹோம விதி
  பலஜன்மங்களாக சேர்த்த பாபம் பித்ரு த்ரோகம் பித்ரு சாபம்ஸர்ப்ப வகைகளை வதைத்தல் குருவைத்வேஷித்தல் ப்ராணிகளின்முட்டைகளை அபகரித்தல் மிருகங்களைவதைத்தல் பாபங்களை உளமறிந்துசெய்தல் சிவ
  விஷ்ணுசொத்துகளை அபகரித்தல் இரக்கமேஇன்றி கர்பிணியின் கர்பத்தைகலைக்க செய்தல் ஆகிய தோஷங்களால்நற்குணவான்களான புத்ரர்களைபெறும் பாக்கியம் அகன்றுவிடுகிறது.
  சனிகிழமைஅல்லது பரணி நக்ஷத்ரம் சனிதசையிலோ;அஷ்டம சனி நடக்கும்போது இதை செய்யலாம்.
  குளிகன்=மாந்தி இருக்கும் ராசியில் ஹோமம்செய்வது உத்தமோத்தமம்.
  அதிகாலையில் எழுந்து கர்த்தாஸ்நானம் செய்து மடி உடுத்திஸந்தியா வந்தனம் காயத்ரிஜபம் செய்து ஒளபாஸனம் செய்துதயாராக இருக்கவும்
  வீட்டைபசுஞ்சாணியால் மெழுகி கோலம்போட்டு வாழை மர தோரணங் கட்டிமண்டபம் அலங்கரித்தல்;நெல் அரிசி உளுந்துஇவற்றால் ஸ்தண்டிலம் அமைத்தல்; ; எள்ளினால்மண்டலம் அமைத்தல் ;கும்பப்ரதிஷ்டாபனம்.
  பர்மிஷன்==அநுக்ஙை
  --------------ஏபிஹிப்ராஹ்மனை ஸஹ சாரதா திலககல்போக்த ப்ரகாரேன ப்ராச்யிஉதீச்யாங்ககோதானம்;வைஷ்ணவ சிராத்தம்;நாந்தி சிராத்தம்;தச தானம்;ப்ராஹ்மண போஜனம்ஸஹிதம் தில ஹோமாக்யம் கர்மகர்த்தும் யோக்கியதா ஸித்திம்அநுக்ரஹான..
  விக்னேஸ்வரபூஜை;புண்யாக வசனம்; கோ தானம்;மட்டை தேங்காய்;வைஷ்ணவ சிராத்தம்;நாந்தி சிராத்தம்புண்யாஹ வசனம்;ஆசார்யன் ருத்விக்வரணம்;அக்னி கார்யம்; அக்னிக்கு தென்கிழக்கே நவதான்யங்கள்.
  அவற்றின்மேல் எட்டு நீல(பட்டு)வஸ்த்ரங்கள்;அதன் மீது தேங்காய்.அதன்மீது யம தர்மராஜன் இரும்பாலான ப்ரதிமை இதற்கு கிழக்கே வாழைபழத்தின்மீது வெள்ளியிலான ஸ்த்ரீப்ரதிமை;புருஷ ப்ரதிமை;
  தெரியாதமுன்னோருக்காக ப்ரேத ப்ரதிமைவைத்து தெற்கு பக்கத்திலிருந்துஆரம்பித்து பூஜை செய்க விதிப்படிபுருஷ ப்ரதிமை தெற்கேயும்ஸ்த்ரீ ப்ரதிமை மத்தியிலும்அக்ஞாத குல பித்ரு வடக்கேயும்இருக்க வேண்டும்.
  யமதர்மராஜன்ஆவாஹணம்;ப்ராணப்ரதிஷ்டை;ப்ராசீனாவீதிப்ரேத ப்ரதிமைகளில் ஆவாஹணம்.உபசார பூஜைகள்.
  வடக்கேகும்ப ஸ்தாபனம்.லக்ஷமி நாராயணர்-ப்ரதிமைஆவாஹனம் ;ப்ராணப்ரதிஷ்டை16உபசார பூஜைகள்;கும்பத்திற்குதெற்கு பக்கத்தில் வஸ்த்ரத்தின்மேல் காம்தேனு ப்ரதிமையில்ஆவாஹனம 16உபசார பூஜைகள்;
  காமதேநுவிற்குதெற்கு பக்கத்தில் பத்ர காளிப்ரதிமையில் தேவி ஆவாஹனம்16உபசார பூஜை;இதற்கு தெற்குபக்கத்தில் சனைஸ்சரன் ஆவாஹனம் 16உபசார பூஜை;பத்ர காளிக்குகிழக்கு பக்கத்தில் நாகராஜபிரதிமையில் ஆவாஹனம்.16 உபசார பூஜை;.
  பத்ரகாளீ மூல மந்திர ஜபம்.அங்கன்யாசம்கரன்யாசத்துடன் ஓம் பக்ஷஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஸ்ட்ரேகாளராத்ரே ப்ரத்யங்கிரே ஹூம்பட்.;மாம் ரக்ஷ ரக்ஷமம சத்ரூன் பாதய பாதய துஷ்டகிரஹாம் ச ஸம்ஹர ஸம்ஹர ஹூம்பட் ஸ்வாஹா.
  இங்குசத்ரூன் என்பது உங்கள் உடலிலுள்ளகாமம் க்ரோதம் மோஹம் மதம்,மாத்சரியம்டம்பம் லோபம் முதலியவைகள்தான்..
  பிறகுஸர்ப்ப ராஜன் மூல மந்த்ர ஜபம்ந்யாஸங்களுடன்
  மூலமந்திரம்:-ஸர்ப்பராஜாய வித்மஹே ஸஹஸ்ர பணாய தீமஹி தன்னோ அநந்தஹ ப்ரசோதயாத்.ஸெள:ஸ்ரீம்க்லீம் பவ சரணம் ஸ்வாஹா.
  ஸாம்என்று தொடங்கும் ஷடங்க ந்யாசம்செய்க;நமோ அஸ்து என்றமந்திரத்தால் 16உபசார பூஜை. அடுத்து ஆச்சார்யர் ப்ரஹ்ம வரணம்தொடங்கி முகாந்தம் வரை செய்வார்.அக்நெள----இமம்யம---யமாயதர்ம ராஜாயஹோம குண்டத்தில்ஆவாஹனம் 16உ பசார பூஜை பிறகுஸமித்துஅன்னம்-ஆஜ்ய ங்களினால்ஹோமம்,; உப ஹோமம்;
  பிறகுகும்பத்தை தர்பை கட்டால்தொட்ட வண்ணம் மற்ற ருத்விக்குகளுடன்வாத்யாரும் சேர்ந்து பின்வரும் மந்திரங்களை ஜபம் செய்யவேண்டும்.
  நான்குவேத ஆரம்ப வாக்கியங்கள்;திக்பாலகர்கள்மந்திரங்கள்;ர்க்ஷோக்னமந்திரம்.யமம் யோ வித்யாத்என்று தொடங்கும் யம ஸூக்தம்;ருத்ராத்யாயாம்;சமகம்,புருஷ ஸூக்தம்விஷ்ணு சூக்தம்;ருத்ர
  ஸூக்தம்.துர்காசூக்தம்,ஸ்ரீ ஸூக்தம்பூமி நீளா ஸூக்தம் ம்ருத்யுஸூக்தம் ருசாம் ப்ராசி பஞ்சசாந்தியும் ஜபிக்க வேண்டும்.
  தனியாககருப்பு எள்ளை மட்டும் ஹோமம்செய்ய க்கூடாது.கறுப்பு எள்ளுடன்நெல் கலந்தே ஹோமம் செய்யவேண்டும்.நெய்யுடன் எள்கலந்து ஹோமம்


  செய்யலாம்.
  காயத்ரீத்ருஷ்டுப்;கீதா த்ருஷ்டுப்; அஷ்டாக்ஷரமந்திரம்;சுதர்சன மந்திரஹோமம் செய்ய வேண்டும் யமன்உப ஹோமம் செய்து ஸம்பாதம்செய்
  ஒவ்வொரு ஆஹூதிக்கும் யம தர்மராஜப்ரதிமை மீதும் மூன்று வெள்ளிப்ரதிமை மீதும் ஸம்பாத ஹோமம்செய்ய வேண்டும் ஒவ்வொரு ஆஹூதிஹோமம்


  செய்தவுடன் நெய் கரண்டியைப்ரதிமைகள் மீது வைக்க
  வேண்டும்.ஹோமம் செய்துமீந்த நெய் இந்த ப்ரதிமைகள்மீது சொட்ட வேண்டும்.இதற்கு ஸம்பாதஹோமம் என்று பெயர்.
  ஸ்விஷ்டக்ருத்ஹோமம் ப்ரஹ்மா உத்வாஸனம்;யமனுக்கும்வர்கத்வய பித்ருக்களுக்கும்உத்தராபோஜனம்.  ருசாம்ப்ராசிபஞ்ச சாந்தியும்ஜபம்;புநஹ் பூஜை கர்பூரஹாரத்தி மந்திர புஷ்பம்ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள்;பலி;பிண்ட ப்ரதானம்.குசோதகம்.அக்னிஉபஸ்தானம்;கும்பம் உத்வாஸநம்;கர்த்தாவுக்கும்பத்நிக்கும் அபிஷேகம்;
  ஸ்நானத்திற்குபிறகு கர்த்தா மடி வஸ்த்ரம்கட்டிகொண்டு வந்து ஆசாரியருக்கு வஸ்த்ர தானம்;மற்ற தானங்கள்.காமதேநு;யம தர்மராஜாப்ரதிமை ;மாவாலானகாமதேநு தானம்;எள்ளாலான காமதேநுதானம்;
  நாகப்ரதிமை தானம்;ஒவ்வொரு தானத்திற்கும்தக்ஷிணை கொடுக்க வேண்டும் லக்ஷமி நாராயண ப்ரதிமை தாநம்;; மறுபடியும் பசுதானம்;-==மட்டைதேங்காய்.;தச தானம்;வைஷ்ணவ சிராத்தம்;
  தசதானமென்பது:-==தங்கம்;வெள்ளி;பூமி;பசு;அரிசி;;எள்;வெல்லம்.நெய் உப்பு;;வஸ்த்ரம்=9+5வேஷ்டி;இவைகளை தானம்மந்திரம் சொல்லி கொடுக்கவேண்டும்.இவைகளுடன்தக்ஷிணயும் நெய் உப்பு;எள்ளு;அரிசி வெல்லம்இவைகளுக்கு வைத்துகொள்ளபாத்திரங்களும் சேர்த்துகொடுக்க வேண்டும்.
  பிறகுராமேசுவரத்திலிருந்து ஜீப்பில்தநுஷ்கோடி செல்ல வேண்டும்.18கிலோ மீட்டர்தூரம்.முதல்8கிலோ மீட்டர்தூரத்திற்கு தார் ரோடு உள்ளது.பிறகு பத்துகிலோமீட்டர் தூரம் மணலில்செல்ல வேண்டும்.
  ஆகந்தபிதரஹ;பூயாஸ்த;யேஸமாநாஹா;+கல்பதாம்;;யேஸ ஜாதாஹா+ஸதகும் ஸமாஹாப்ரேத+மதந்தி:உத்திஷ்டதபிதரஹ+தேவதாஸு;வாஜே வாஜே+யாநைஹி;ஆகிய மந்திரங்கள்ஜபம்;தெற்கு முகமாகபார்த்து
  இருந்துகொண்டு தம்பதியர் வாய்விட்டு ஓம்தத்ஸத் என்று கூறி மூன்றுவெள்ளி ப்ரதிமைகளையும்ஜலத்தில் விட்டு விட வேண்டும்ஸ்நானம் செய்ய வேண்டும்ராமேசுவரம் திரும்ப வேண்டும்
  பலதானம் ருத்விக் தக்ஷிணைஆசாரியர் தக்ஷிணை கொடுக்கவும்.ஆசாரியருக்குஇரண்டு பசு மாடுகள் வழங்கிடுக.பிறகு சாப்பிடுக


  இது தவிர மற்ற வழி முறைகளும் போதாயனோக்தம், சைவோக்தம் என்றும் உள்ளன, உப்பு தன்னி, சடை தண்ணி; சாணி தண்ணீர் உபயோகபடுத்தக்கூடாது என சிலர் இவைகளை செய்வதில்லை. உப்பு தண்ணி=ஸமுத்ர ஸ் நானம்; சடை தண்ணி= கங்கை நதி ஸ் நானம். சாணி தண்ணீர்= பஞ்ச கவ்யம். காஞ்சி மஹா பெரிவா இதற்கு பதில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாலகிராம பூஜை தினமும் செய்ய வேண்டும். இந்த அபிசேக ஜலத்தை தினமும் சாபிடவும், னைவேத்ய ப்ரசாதம் சாப்பிடவும், விஷ்னு ஸஹஸ்ர நாமம் தினமும் சொல்வதே பொதும் எங்கிறார். சிலர் சென்று ஹோமமும் செய்கின்றனர்.

 • #2
  Re: தில ஹோமம்-சாரதா திலக விதிப்படி.

  இது ராமேஸ்வரத்தில் தான் செய்ய வேண்டும். 12 பேர் தலைக்கு ஆயிரம் ஆவர்த்தி ஜபம், ஹோமம் செய்ய வேண்டும். தனி எள்ளினால் ஹோமம் செய்ய க்கூடாது என்ற விதி இருக்கிறது. ஆதலால் ஒரு பங்கு எள்ளுக்கு 4 பங்க்கு நெல் கலந்து ஹோமம் செய்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இதற்கு 25000, ரூபாய் முதல் 40000 ரூபாய் வரை வாங்குகிறார்கள். 12 பேருக்கும் சாப்பாடு உள்பட. குறைந்த பக்ஷம் 12000 ஆவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். இதை ஒரு தடவை செய்தால் மறு தடவை 30 வருடங்க்கள் கழித்து தான் செய்ய வேண்டும்.

  Comment

  Working...
  X