அபிவாதயே சொல்வது ஏன்?
நல்லவர்களை நாம் தான் தேடி போக வேண்டும், ஏன்?
பகவானுக்கு அடியாரை விட, அடியாருக்கு அடியார் மேல், அபச்சாரங்கள் செய்தாலும், அதிக ப்ரியம் உண்டு. ஏன்?


பொதுவாக பகவானிடம் பக்தனாக இருப்பவன், நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது நம் சாஸ்திரம்.
பெரியோர்களை முன் நிறுத்திதான் வணங்க வேண்டும் என்று சொல்கிறது.


இங்கு பெரியோர்கள் என்பது நம் குருவையோ, ரிஷிகளையோ குறிக்கிறது.


பொதுவாக நாம் நேரிடையாக பெரியோர்களிடம், நம்மை அறிமுக படுத்திக்கொண்டால், நம் தகுதி என்ன, என்று பார்த்து, பின் பேசலாமா என்ற நினைப்பை அவர்களுக்கு தந்து விடும்.


கெட்ட பழக்கம் உடையவர்கள், நல்லவனையும் தன் பக்கம் இழுத்து அவனுக்கும் கெட்ட பழக்கத்தை புகுத்தி விடுவர்.


ஆனால், பெரியோர்கள், ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் தான் நெருங்குவார்கள்.
இதன் காரணமாகவே, பெரியோர்களை நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது.
நம் தீய குணங்களோ எண்ணிலடங்காமல் இருக்கிறது. இதில் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டாலும், நம்மிடம் பழக அஞ்சுவர்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதால், நல்லவர்கள் பொதுவாக தானாக வந்து, கெட்ட பழக்கம் உடையவர்களிடம் பழக அஞ்சுவர்.
நல்லவர்களை நாம் தான் தேடி போக வேண்டும்.


இதற்கு ஒரே வழி, நாம் அவருக்கு அபிமானமான ஒருவரை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.


கோவிலுக்கு செல்லும் போது, பெருமாளிடம் நேரிடையாக தன்னை பற்றி சொல்லிக்கொள்ளமால், "நான் ராமானுஜ தாஸன்" என்று சொன்னால், ராமானுஜர் மீது அதீத ப்ரேமை கொண்ட பகவான், நம்மை பற்றி, நம் தரத்தை பற்றி கூட யோசிக்காமல், மோக்ஷம் என்ற கதவை திறந்து விடுகிறார்.


அதே போல, பெரியவர்களை பார்த்து, அபிவாதயே (self intro) சொல்லும் போதும், நாம் வேதம் படிக்காமலேயே "யஜுர் சாகா அத்யாயி" என்று யஜுர் வேதம் படிக்கிறேன் என்று சொன்னாலும், அதற்கு முன் நான் இந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன், இந்த கோத்திரத்தில் வந்தவன் என்று சொல்லும் போதே, உண்மையான பெரியோர்கள், அந்த ரிஷியின் வம்சமா? அந்த கோத்திரத்தை சேர்ந்தவனா என்று அவர்களின் பெருமையை தியானித்து, நம்மிடம் அந்த வம்சத்தில் வந்தவன் பேசுகிறான் என்ற நோக்கில் பார்த்து பெருமிதமாக பழகுவர்.

ரிஷிகளை கொண்டே நாம் பெரியோர்களை நாட வேண்டும்.


மகான்களை கொண்டே, நம் குருவை கொண்டே, பகவானை நாட வேண்டும்.


ராவணன் தன் தம்பியை ராமனோடு போ என்று எட்டி உதைத்து துரத்த, ஸ்ரீ ராமரை நோக்கி வந்த விபீஷணன், இதன் காரணமாகவே நேரிடையாக ஸ்ரீ ராமரிடம் சென்று விடவில்லை.விபீஷணன் ராமரின் படைகள் அனைவரையும் பார்த்து, தன்னை ஸ்ரீ ராமருக்கு அறிமுகப்படுத்தமாறு கேட்கிறார்.
இதுவே ரகசியம். ராமிரிடம் நேரிடையாக செல்ல கூடாது, அவர் அபிமானத்துக்கு பாத்திரமான


மேலும் படிக்க...
http://proudhindudharma.blogspot.in/...st_76.html?m=1