Announcement

Collapse
No announcement yet.

Goa முதல் கபாலீஸ்வரர் வரை நடந்த வரலாறு - Portuguese

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Goa முதல் கபாலீஸ்வரர் வரை நடந்த வரலாறு - Portuguese

  500 வருடங்கள் முன் நடந்த வரலாறு :

  Goa முதல் கபாலீஸ்வரர் வரை நடந்த வரலாறு:

  பொறுமையுடன் படித்தால் வரலாறு கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்.

  இந்தியாவுக்கு செல்கிறேன் என்று செவ் இந்தியர்கள் இருந்த அமெரிக்காவில் 1492ம் ஆண்டு கால் அடி எடுத்து வைத்தான் கொலம்பஸ் என்ற இத்தாலி நாட்டவன்.

  மதத்தை பரப்பும் நோக்கத்திலேயே இவர்கள் எதையும் செய்வதால், இவர்கள் அங்கு செய்தது மனித படுகொலை. அடுத்தவன் வீட்டில் சென்று கொலை செய்து, அவன் வீட்டிலேயே உட்கார்ந்து நியாயம் பேச முடியுமா? இவர்களிடம் அந்த நியாயத்தை தெரிந்து கொள்ளலாம்.

  இவர்கள் செய்த அட்டகாசத்தின் வினை, இப்போது இந்த நாடே இந்த புதிய கலாச்சாரம், புதிய மதத்தால் படர்ந்து இருக்கிறது. தன் மதமே இப்படி புகுத்தப்பட்டது தான் என்றாலும், இப்பொழுது இஸ்லாம் போன்ற பிற மதங்கள் இங்கு வேரூன்றுவது இவர்களுக்கு பொறுக்கவில்லை. என்ன அநியாயம் !!

  அடுத்தவன் நோவு தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வது இவர்களுக்கு பொருந்துகிறது. ஐரோப்பிய தேசங்கள், அமெரிக்கா போன்ற தேசங்கள் இஸ்லாம் தேசமாக ஆக போவது நிச்சயமே.

  இது ஒரு புறம் இருக்க, 8 வருடம் கழித்து, இதே ஸமயத்தில், வியாபாரம், மத மாற்றம் என்ற நோக்கில் 1498ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியாக, இந்திய பெருங்கடலை கடந்து கோழிக்கோடு (Calicut), கேரளா கடற்கரை ஓரம் படகில் வந்தான் வாஸ்கோட காமா (Vasco da gama).

  கடல் ஓர மீனவர்கள், நாகரீகம் கொண்டு விரட்டி அடிக்காமல், இவர்களை உள்ளே வர அனுமதித்தனர். மிலேச்ச தேசத்தவன் உள்ளே நுழைந்தால் என்னென்ன கலாச்சார சீரழி செய்வான் என்பதை இந்த வாஸ்கோட காமா கதை சொல்லிவிடும்.

  தன் மதத்தை பரப்ப, நம் கலாச்சாரத்தை கெடுக்க இவர்களுக்கு நாம் கொடுத்த காலம் 1498ல் முதல் 1961 வரை (சுமார் 463 வருடங்கள்).

  இன்று, இவர்கள் நாட்டை விட்டு போனாலும், இவர்களால் தன் மதத்தை, கலாச்சாரத்தை விட்டு வாழும் ஹிந்துக்கள் (convert) இன்று நாட்டை சீரழிக்கும் காட்சி நடக்கிறது.

  வரலாற்றை படிப்பதால், குறைந்த பட்சம், இந்த போர்ச்சுகல் நாட்டினர் என்ன செய்தனர், நாம் இழந்தது என்ன, நம் வீட்டில் இருந்து கொண்டு நமக்கு என்ன செய்தனர் என்பது விளங்கும்.

  இந்த கோழிக்கோடு என்ற கேரளா நாட்டை ஆண்டு வந்தான் ஒரு ஹிந்து அரசன். சமுத்திர கரை ஓரத்தில் இருந்தவர்கள் பொதுவாக இந்த அரசனை "சமுத்திரி" என்று அழைத்து இருக்கின்றனர். இவர் ஒரு நாயர் குல அரசர்.

  தமிழோ, சமஸ்க்ரிதமோ, மலையாளமோ எதுவும் வாயில் நுழையாத போர்ச்சுகல் வியாபாரிகள் "சமுத்திரி" என்று உச்சரிக்க தெரியாமல் "Zamorin" என்று அழைத்தனர்.

  திருச்சிரார்பள்ளியை trichy என்றனர்.

  தமிழில் பேச முயற்சி செய்த இவர்களால், தமிழும் இவர்களால் கெட்டது.

  பலமானவர்கள் என்று சொல்ல தெரியாமல் "பெலமானவர்கள்" என்றனர். தமிழ் மொழிக்கு வந்த கேடு.

  இந்த உண்மை ஒரு புறம் இருக்க, வணிகம் செய்ய கோழிக்கோடு நாட்டில் போர்ச்சுகல் நாட்டினர் நுழைந்து உள்ளனர் என்று கேள்விப்பட்டு, சமுத்திரி அரசன் இவர்களை பார்க்க வந்தார்.

  வந்தாரை வாழ வைக்கும் புத்தி இந்தியர்களுக்கே உள்ள குணம். இதுவே பல நேரம் நமக்கு இன்னல் தந்துள்ளது. அரசருக்கு, இவர்கள் வருகை தவறாக தெரியவில்லை. வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார் அரசன். ஏலக்காய், மிளகு, இன்னும் பல இந்திய உணவு தானியங்கள் ஐரோப்பிய தேசம் பார்த்திராத உணவு பொருட்கள்.

  இதை போன்ற விலை மதிப்புள்ள, மருத்துவ குணம் உள்ள பொருட்களை இந்தியர்களிடம் வாங்கிக் கொண்டு, துணி, தொப்பி, சக்கரை போன்ற பொருட்களை பண்டை மாற்று முறைப்படி தந்தான் வாஸ்கோட காமா. மதிப்பில்லாத இந்த பொருட்களை ஏற்று கொள்ள மறுத்தார் அரசர்.

  அனைத்து வாணிகமும் தங்கம், வெள்ளியிலேயே பொருட்களுக்கு மாற்றும் வழக்கம் இருந்தது.

  சமுத்திரி அரசன், போர்ச்சுகல் நாட்டினர் தங்கள் நாட்டு உணவு பொருட்களை எடுத்து கொண்டு தொப்பி, துணி போன்றவை மாற்றப்படுவதை மறுத்தார்.

  தங்கம், வெள்ளியாக கொடுத்தால், வாணிகம் தொடரலாம் என்று உத்தரவு இட்டார்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிழைப்புக்கு வந்த நாட்டில், வாஸ்கோட காமா கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டான். இவன் செய்த செயல் இவன் எப்பேற்பட்டவன் என்று காட்டுகிறது.

  வாஸ்கோட காமா கப்பலில் ஏற்றப்பட்ட தானிய மூட்டைகளுடன், அங்கிருந்த சில நாயர்களையும், 16 மீனவர்களையும் வலுக்கட்டாயமாக சிறைபிடித்து, பொருட்களுடன் திருடி கொண்டு தப்பித்து விட்டான்.

  இவன் அள்ளிக்கொண்டு போன பொருட்கள் பெரும் லாபத்தை அந்த ஊரின் போர்ச்சுகல் அரசனுக்கு ஈட்டு தந்தது.

  மீண்டும் இந்த தானியங்கள் இந்தியாவிலிருந்து கிடைக்க எப்படியாவது ஒரு உடன்படிக்கை ஏற்பட்டாக வேண்டும் என்று போர்ச்சுகல் அரசன் முடிவு செய்தான்.

  மீண்டும் வாஸ்கோடகாமாவை அனுப்பினால், இவன் செய்த செயலுக்கு வாணிகமும் தடைபடும், உயிரும் போகும் என்பதால், போர்ச்சுகல் அரசன் "பெட்ரோ காப்ரல்" என்ற ஒருவன் தலைமையில் எப்படியாவது கோழிக்கோடு சென்று சமுத்திரி அரசனை சமாதானம் செய்து, தொடர்ந்து வாணிகம் செய்ய அனுமதிக்க வைக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தான்.

  ஆச்சர்யம், ஹிந்து அரசன் நடந்ததை மறந்து, தொடர்ந்து வாணிகம் செய்து கொள்ள அனுமதித்தான்.

  அதர்மம் செய்தவனை இந்த ஹிந்து அரசன் மன்னித்ததன் படு பயங்கர விளைவை அடுத்த 500 வருடங்களுக்கு ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கு தந்தது. இதுவே நமக்கு பாடம்.

  மீண்டும் வாணிகம் செய்து கொண்டிருந்த இவர்கள், கோழிக்கோடு மட்டுமில்லாது, கொச்சின், கண்ணனூர் போன்ற ஊர்களிலும் வாணிகம் செய்வதை விரிவு படுத்தினர்.

  இந்த நிலையில், கோழிகோட்டில் வாழ்ந்த அரேபிய இஸ்லாம் வணிகர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

  ஹிந்துக்களை போல அடித்தாலும், திருடினாலும் அமைதியாக போகக் கூடியவர்கள் அல்ல அரேபிய இஸ்லாம் வணிகர்கள்.

  இஸ்லாம் வணிகர்கள் நடந்த கலவரத்தில் 60 போர்ச்சுகல் வணிகர்களை கொலை செய்தனர்.

  இந்த சம்பவத்தினால், "பெட்ரோ காப்ரல்", சமுத்திரி அரசன் தங்களை இந்த இஸ்லாமிய கூட்டத்திலிருந்து காப்பாற்றி இருக்க வேண்டும் என்று கூறி, ஆத்திரம் அடைந்து, நாட்டில் பல இடங்களில் குண்டு வைத்தான்.

  இப்படி அட்டகாசம் செய்த இந்த போர்ச்சுகல் வணிகன் "பெட்ரோ காப்ரல்" 1501ம் ஆண்டு தன் நாட்டுக்கு திரும்பினான்.

  இந்த நிகழ்விலிருந்து கடைசி வரை, போர்ச்சுகல் வணிகர்களுக்கு இதனால் தீராத கோபம் இஸ்லாமியர்கள் மீது கடைசி வரை இருந்தது.

  போர்ச்சுகல் நாட்டினர் வாணிகம் தொடர்ந்து கொண்டிருந்த இந்த காலத்தில், விஜயநகர ஹிந்து பேரரசர் "கிருஷ்ணதேவ ராயர்" ஹிந்து தேசங்களான கர்நாடகம், ஆந்திர, தமிழகம் அனைத்தையும் ஒருவனாக இரவு பகலாக காத்துக் கொண்டிருந்தார். இவர் சபையில் விகடகவியாக இருந்தவரே "தெனாலி ராமன்".

  கிருஷ்ணதேவ ராயரை ஒழிக்க 6 சுல்தான்கள் கடும் முயற்சி செய்து கொண்டிருந்த சவாலான காலம் இது.

  * டெல்லியை கைப்பற்றி இருந்த லோதி சுல்தான் "சி்கந்தர் லோதி",

  * கர்நாடக நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த பீஜாப்பூர் சுல்தான், பிடார் சுல்தான்,

  * ஆந்திர நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த கோல்கொண்டா சுல்தான், பிரார் சுல்தான்,

  * மஹாராஷ்டிரா நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த அஹமத்நகர் சுல்தான்.

  இந்த சவாலான இஸ்லாமிய எதிர்ப்பை சந்திக்கும் காலத்தில், 1502ம் ஆண்டு, போர்ச்சுகல் வணிகர்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கிறார்கள் என்பதால், இவர்கள் பழுவேற்க்காடு (pulicat) என்ற தமிழ்நாட்டில் உள்ள ஊரில் வர்த்தக புறக்காவல் நிலையம் (trading outpost) அமைக்க முயற்சித்தபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது விஜயநகர சாம்ராஜ்யம்.

  இதுவும் ஒரு விஷ பாம்பை கொல்ல, இன்னொரு தேளை வளர்த்தது போல தான் ஆனது. இதுவும் நாம் வரலாறை படிக்கும் போது கற்க வேண்டிய பாடம்.

  விஜயநகர அரசின் பாதுகாப்பினால், போர்ச்சுகல்காரர்கள் 1502ல் இருந்து 1560ம் ஆண்டு வரை, சுமார் 58 வருடங்கள் தமிழ்நாட்டில் தன்னை வ்யாபித்துக் கொண்டனர்.

  இருந்தாலும், கேரளாவில் உள்ள கோழிக்கோடு மட்டும் போர்ச்சுகல்காரர்களுக்கு காலடி வைக்க முடியாததாகவே இருந்தது.

  இதே வருடம், 1502ம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டிலிருந்து மீண்டும் வாஸ்கோட காமா 15 கப்பலகள் மற்றும் 800 படை வீரர்களுடன் கோழிக்கோடு ஹிந்து அரசனை தாக்குவதற்கு அனுப்பப் பட்டான்.

  big post. Further read my blog
  http://proudhindudharma.blogspot.in/...guese.html?m=1
  Last edited by premkumar; 26-12-17, 21:11.
Working...
X