பாரத நாடு - பெயர் காரணம்.


Blog: http://proudhindudharma.blogspot.in/...-post.html?m=1


பாரத வர்ஷத்தில் பரத கண்டத்தில் இந்தியர்களாகிய நாம் வாழ்கிறோம்.


பாரத வர்ஷம் எது?
இன்றைய இந்தியா, பிரிந்து போன பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், திபெத், நேபால், ஸ்ரீலங்கா.
இவை எல்லாம் "பாரத வர்ஷம்" என்று அழைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் நகரை உருவாக்கியவர் ஸ்ரீ ராமரின் தம்பி பரதன். "காந்தகார்" என்ற தேசத்தை உருவாக்கினார்.


பாகிஸ்தானில் உள்ள தக்ஷஷீலா என்ற தக்ஸிலா (Taxila) என்ற தக்ஷஷீலா என்ற நகரும், "புருஷபுரா" என்ற பெஷாவர் (Peshawar) என்ற நகரமும் இவரால் உருவானது.
கைகேயி பிறந்த ஊரான கேகேய தேசம் இன்றைய பாகிஸ்தான்.


மேலும், "லவபுறம்" என்ற லாகூர் (lahore) என்று நகரம் ஸ்ரீ ராமரின் மகன் லவனால் உருவானது.


"பாரத" என்ற சொல், இங்கு இருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை குறிப்பதாக இருக்கிறது.


சமஸ்க்ருதத்தில், பாரத என்ற சொல்லுக்கு "பா ரூபே ப்ரஹ்மணி ரதா இதி பாரத:" என்று பொருள் சொல்லப்படுகிறது.


அதாவது, "பாரத" என்றால், "தனது ஆத்ம ஸ்வரூபத்திலேயே திளைக்கக்கூடிய ஞானிகள்" என்று பொருள்.


இந்த பாரதத்தில் மட்டுமே ஞானிகள் சர்வ சாதாரணமாக பிறக்கின்றனர்.


பிற்காலத்தில், கிரேக்க அரசன் அலெக்சாண்டர் முதலில் பாரத தேசத்திற்கு படையெடுத்த போது, சிந்து நதி பக்கம் வந்து, பாரத மக்களை பார்த்து, "இந்து" என்று தவறாக உச்சரித்தான்.


இவனுக்கு பின்னர் வந்த இஸ்லாமியர்கள், "சிந்து" நதி பக்கம் வந்து, "ஹிந்து" என்று தவறாக உச்சரித்தான்.


பின்னர் வந்த கிறிஸ்தவன், இந்து என்ற சொல்லை நம் தேசத்தின் பெயர் ஆக்கி "இந்தியா" என்று பெயர் கொடுத்து, இதில் பிரித்து கொடுத்த பாகி நிலத்தை "பாகிஸ்தான்" என்று பெயர் வைத்து மாற்றிவிட்டான்.


தன் கிறிஸ்தவ மதத்தாலும், ஏற்கனவே புகுந்து இருந்த இஸ்லாமிய மதத்தாலும், பல பாரத மக்கள் விடுதலை சமயத்தில், இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டு இருந்தனர்.


இவர்களை அடையாள படுத்த, 1200 வருட வேற்று மத ஆக்கிரமிப்பு ஏற்பட்ட போதிலும், கோடிக்கணக்கான பாரத மக்கள், பணத்திற்காகவோ, பயத்தாலோ மாறாமல் இருந்தனர்.


இவர்களை அடையாளம் காண, இஸ்லாமிய ஆட்சியில், பாரத மக்களை "ஹிந்து" என்று அழைத்ததையே மதமாக்கினர்.


தங்கள் மதத்திற்கு பெயர் இருப்பது போல, பாரத மக்களுக்கும் "ஹிந்து" என்ற மதத்தை சேர்ந்தவர்கள் என்று உருவாக்கினர்.


சுதந்திரம் அடைந்த பின், கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாமியத்துக்கும் மாற்றப்பட்டு இருந்த சில லட்சம் பாரத மக்கள், அரசாங்கம் சம்பந்தமான பத்திரம் போன்றவற்றில் தாங்கள் இந்த மதம் என்று போட்டுக்கொண்டனர்.


பணத்திற்காகவோ, பயத்தாலோ மாறாமல் இருந்த வீர பாரத மக்கள், தங்களை "ஹிந்து" என்ற மதம் என்று போட்டுக்கொண்டனர்.


மதம் மாறிப்போன பாரத மக்களும் நம் மக்களே.


இருந்தாலும், பிற மதத்தை தழுவிய காரணத்தால், இவர்களுக்கு பிற மத வெறுப்பு அதிகமாக போதிக்கப்படுகிறது. விளைவு,
இன்று வரை தன் குடும்பத்தை எவனோ ஒருவன் பணத்தாலோ, பயமுறுத்தியோ மாற்றி இருக்கிறான் என்று அறிவு இல்லாமல், இன்று வரை பாரத மக்களாகவே வாழும் ஹிந்துக்களை கண்டால் வெறுப்பு அடைகிறான்.


தான் மீண்டும் ஹிந்துவாக ஆவோம் என்று நியாயமான சிந்தனை இல்லாமல், எப்படி நாம், இன்றும் ஹிந்துவாக இருக்கும் பாரத மக்களை பணத்தை காட்டியோ, பலத்தாலோ மாற்றலாம்? என்று பார்க்கின்றனர்.


இந்த கீழ் புத்திக்கு காரணம், இவர்கள் இல்லை. இவர்களும் பாரதமக்களே. இவர்கள் மதம் சொல்லி தரும் கொள்கை இது.


ஞானிகள் நிறைந்த தேசம் இது என்பதால், இதற்கு பாரதம் என்று பெயர்.


ஜடபரதர் என்ற ஞானி முற்பிறவியில், மானாக பிறந்தார். அதற்கும் முற் பிறவியில், பரத மகாராஜனாக இருந்தார். மகாராஜனாக இருந்தும் ஞானியாக இருந்தார்.


பரதன் என்ற பெயர் படைத்த
அரசன், மகான் ரிஷபரின் மகன்.
பரத கண்டம் என்னும் இன்றைய இந்தியா இவராலேயே அழைக்கப்பட்டது.


சில மண்ணில், நெல் நன்றாக விளையும்,
சில மண்ணில், கோதுமை நன்றாக விளையும்.
அது போல, இந்த பாரத தேசத்தில் மட்டும் ஞானிகள் பிறந்து கொண்டே இருப்பார்கள்.


இந்த பாரத நாட்டில் ஓடும் நதிகள், இந்த பாரத மக்கள் கட்டிய கோவில்கள், கட்டிடங்கள், வேதம், இதிகாசம், புராணம், கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், தாய் மொழி சமஸ்க்ரிதத்தை கொண்டு உருவான 100 மேற்பட்ட தேச மொழிகள், பலவித கலாச்சாரங்கள், பலவித தத்துவங்கள், பலவித வழிபாட்டு முறைகள், பலவித உணவுகள், பலவித உடைகள், பலவித சிற்பங்கள், வானியல் சாஸ்திரம், ஓவியம், சங்கீதம், நாட்டியம், வாத்திய கலைகள் இவை எல்லாம் சேர்ந்து, மிகுந்த செல்வமும், வீரமும், அதே சமயம் பண்பும், இரக்கமும், மோக்ஷத்தை விரும்பும் நோக்கமும் உடையவர்களாக பாரத மக்கள் இருந்தனர்.


1200 வருடங்கள் பிறமத வெறியர்கள் பாரசீக, ஆப்கான், dutch, portuguese, பிரெஞ்ச், பிரிட்டிஷ் போன்ற நாட்டில் இருந்து வந்து அராஜகம் செய்து அழித்த கோவில்கள், சிற்பங்கள், செல்வங்கள், எண்ணிலடங்கா.
1200 வருடத்திற்கு பிறகும், நமக்கு மிஞ்சிய உள்ள, சில கோவில்களையும், சிற்பங்களையும், ஹிந்துக்களையும் பார்க்கிறோம் என்றால், 1200 வருடம் முன் சென்று பார்த்தால், நாம் எத்தனை பெருமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று புரியும். எத்தனை இழந்து இருப்போம் என்று புரியும்.


பாரத நாட்டில் மட்டுமே ஆன்மாவை பற்றிய சிந்தனை உடைய ஞானிகள் பிறக்கின்றனர். நான் யார் என்று உயிரை பற்றிய அறிவு கொண்டிருப்பவர்களே பாரத மக்கள்.


மற்ற தேசங்களில் அதிக பட்சம் தத்துவ ஞானிகள் மட்டுமே பிறக்கின்றனர். வெளி விஷயத்தை பற்றிய அறிவுடன் இருப்பதே இவர்களுக்கு நோக்கம்.


இதனால் தான், விவேகானந்தர் பேசும் போது "உலகத்திற்கு பாரத தேசத்தின் பங்களிப்பே, பல மகான்களை பெற்று கொடுத்தது தான்" என்றார்.


வாழ்க பாரத நாடு. வாழ்க பாரத மக்கள்.