Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஸ்ரீமத்பாகவதம்

  Srimad Bhagavatam skanda 4 adhyaya 13 to 16 in tamil
  Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
  ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4-அத்தியாயம் 13,14


  அத்தியாயம் 13.


  துருவன் வைகுண்டம் சென்றது பற்றியும் அவன் மகிமையை நாரதர் ப்ரசேதஸ்சின் சத்ரயாகத்தில் உரைத்தது பற்றியும் கேட்ட விதுரர் மைத்ரேயரிடம் ப்ரசேதஸ் குறித்து வினவ அவர் சொல்ல ஆரம்பித்தார்.


  துருவனின் ஏழாவது தலைமுறையில் வந்தவன் வேனன் என்பான். அவன் அங்கனுடைய மனைவியான ஸுநீதாவிடம் பிறந்தவன். அவன் தன் அன்னையின் தந்தையான ம்ருத்யுவின் குணநலன்ங்களைக்கொண்டிருந்தான்.


  பிறவியிலேயே குரூரமான அவன் காரணம் இன்றி பிற உயிர்களை வதைப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்தான். மகனின் நடத்தையைக் கண்டு வருத்தமுற்று அங்கன் அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறினான்.


  அரசனைக் காணாமல் மந்திரிப்ரதானிகள் அவனைத்தேடி அலைந்தார்கள். எங்கும் அவனை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி நகருக்கு வந்தபோது வேறு வழியின்றி ரிஷிகள் வேனனை அரசனாக்கினர்.


  அத்தியாயம் 14.
  அரசனானதும் அவன் தற்பெருமை கொண்டு மகான்களை அவமதிக்கத்தொடங்கினான் . யாரும் யாகம் செய்யக்கூடாது என்று எல்லா தரும காரியங்களையும் தடுத்தான். அரசனாகிய தன்னையே பூஜிக்கும்படிக் கூறினான்.


  அவனால் அவமதிக்கப்பட்ட ரிஷிகள் யக்ஞ புருஷனான் விஷ்ணுவை நிந்திப்பவனும் கெட்ட நடத்தையில் உள்ளவனுமான அவனை நல்லவனாக்க முயன்றும் அவன் மனம் மாறாததால் அரசபதவிக்கு லாயக்கில்லை என்று கருதினர். அவர்களுடைய சாபத்தால் அவன் உயிரிழந்தான். அவர்கள் சென்றபின் ஸுநீதா மந்திரசக்தியால் அவன் உடலைக் காப்பாற்றி வந்தாள்.


  அவன் இருக்கும்போது தங்களை விடக் கொடியவனான அவனைக் கண்டு பயந்து ஓடிய கள்ளர்கள் அவன் இறந்ததும் ராஜ்ஜியத்தில் நுழைந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். அதைக்கண்டு அராஜகம் நிலவக்கூடாதென்றும் சிறந்த அரசனான அங்கனுடையதும் விஷ்ணுபக்தர்களைக் கொண்ட தும் ஆன வம்சம் அழியக்கூடாதென்றும் தீர்மானித்து ரிஷிகள் வேனனுடைய துடையைக் கடைந்தனர்.


  அதிலிருந்து குட்டையான ஒரு மனிதன் தோன்றினான். காக்கைபோல் கறுத்தும், குறுகிய அவயங்களுடனும் சப்பை மூக்கு, சிவந்த கண்கள் செம்பட்டை மயிர் இவைகளுடன் தோன்றிய அவன் ரிஷிகளை வணங்கி தான் செய்ய வேண்டியதென்ன என்று வினவினான்.


  அவனை அவர்கள் நிஷீத , (உட்கார்) என்று சொன்னதால் அவன் நிஷாதன் என்று பெயர்பெற்று நிஷாதர் தலைவன் ஆனான். அவன் வேனனின் கொடிய பாவத்தைக் கவர்ந்துகொண்டு பிறந்ததால் அவன் வம்சத்தவர்கள் காடுகளிலும் மலைகளிலும் சஞ்சரிக்கும் கொடிய தொழிலுடைய நிஷாதர் ஆனார்கள்.


  அடுத்து ப்ருது சரித்திரம் வர்ணிக்கப்படுகிறது.


  ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் -4 அத்தியாயம் 15, 16


  அத்தியாயம் 15


  வேனனின் கைகளை ரிஷிகள் கடைய அப்போது ஆணும் பெண்ணுமாக இருவர் தோன்றினர். ரிஷிகள் இப்புருஷன் மகாவிஷ்ணுவின் உலக சம்ரக்ஷணத்தின் யின் அம்சம். இந்த ஸ்திரீ பகவானை விட்டகலாத மஹாலக்ஷ்மியின் அம்சம்.


  இந்தப்புருஷன் அரசர்களின் புகழைப் பரப்புவதில் முதன்மையானவன் ஆகவும் , மிகுந்த கீர்த்திவாய்ந்தவனாகவும் ப்ருது என்ற பெயரில் விளங்கப் போகிறான், என்று கூறினர்.


  அப்போது வானில் இருந்து மலர் மாரி பொழிந்தது கந்தர்வர்கள் கானம் பாட அப்சரஸ்கள் நாட்டியம் ஆடினர். பிரம்ம தேவர் அங்கு வந்து ப்ருதுவின் வலது கரத்தில் சங்குசக்ர ரேகை முதலியவைகளைக் கண்டு அவர் மஹாவிஷ்ணுவே என்று உரைத்தார்


  பிறகு முறைப்படி ப்ருது அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டு மகாலக்ஷ்மியின் அம்சமான தன் மனைவி அர்ச்சியுடன் பதவி ஏற்றார். பிரம்மா முதலிய தேவர்கள் அவருக்கு வெகுமதிகள் அளித்தனர். .


  அங்கு வந்த துதிப்பாடகர்களிடம் ப்ருது அடக்கத்துடன் தான் தன் தகுதியை நிரூபித்தவுடன் தன்னைப் புகழலாம் என்று கூறினார். ஆனால் ரிஷிகளால் அனுமதிக்கப்பட்டு அவர்கள் அவனைப் புகழ்ந்தார்கள்.


  அத்தியாயம் 16


  அவர்கள் கூறியது.
  "இவர் விரோதியின் புத்திரன் ஆனாலும் தண்டிக்கத்தகாதவனை தண்டிக்க மாட்டார். அதேபோல் தன் புத்திரனாயினும் தவறுசெய்தால் தண்டிப்பார்.


  இவர் திடமான விரதம் உடையவர் . சத்திய சந்தர். அந்தணர்களிடம் பிரியம் உள்ளவர். எல்லாபிராணிகளுக்கும் நம்மை செய்பவர். கருணையே உருவானவர். கெட்டவர்களுக்கு யமன் போன்றவர்.


  இவர் திசைகளை ஜெயித்து தடையற்ற ஆக்ஞையை உடையவராகவும் ,தன் பராக்ரமத்தால் மக்களின் துன்பத்தைத் துடைப்பவர் ஆகவும், தேவர்களால் கொண்டாடப்படும் மகிமை உடையவராகவும் பூமியை ஆளப்போகிறார்.


  இவர் சனத்குமாரர் வருகையால் ஞானம் பெறப்போகிறார்., "


  அடுத்து ப்ருது பசு உருவம் கொண்டு ஓடிய பூமியை ஜெயித்து ஸகல ஜீவராசிகளுக்கும் தேவையானவைகளை அதனிடம் இருந்த பாலாகக் கறந்த சம்பவம் கூறப் படுகிறது.
Working...
X