Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஸ்ரீமத்பாகவதம்

  Srimad Bhagavatam skanda 6 adhyaya 1 in tamil
  Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
  ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் - அத்தியாயம் 1- அஜாமிளோபாக்யானம்


  புராணம் என்பதற்கு பத்து லக்ஷணங்கள். முதல் மூன்று , அதாவது ஸர்கம் விஸர்க்கம் , ஸ்தானம் என்பவை இதுவரை கூறப்பட்டுள்ளன. ஸர்கம் என்பது பிரகிருதி ,அதன் மாற்றங்கள் இவைகளைப் பற்றியது. விஸர்க்கம் என்பது ஸ்தூலப்ரபஞ்சத்தின் சிருஷ்டி. ஸ்தானம் என்பது இவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் நாம ரூபங்கள் . இந்த ஸ்கந்தத்தில் நான்காவது லக்ஷணமான போஷகம் விவரிக்கப்படுகிறது. போஷகம் என்பது பகவானின் அனுக்ரஹம்.


  நரகங்களையும் அதில் கொண்டு சேர்க்கும் பாபங்களையும் விவரித்த சுகர் செய்த பாவங்களுக்கு இந்தப் பிறவியிலேயே பிராயச்சித்தம் செய்வதால் நரகவாசத்தைத் தவிர்க்கலாம் என்று சொன்னதைக் கேட்ட பரீக்ஷித் ஒரு மனிதன் பிராயச்சித்தம் செய்தபிறகும் பாவம் செய்வானானால் பிராயச்சித்தம் என்பது கஜஸ்னாத்திற்கு ஒப்பாகும் அல்லவா என்று கேட்டார். அதாவது யானை நதியில் குளித்த பிறகு யானை தன் தலையில் மண்ணை வாரி இறைத்துக் கொள்வதுபோல.


  சுகர் இவ்வாறு பதிலுரைத்தார்.
  பிராயச்சித்தம் என்பது மனத்தளவில் இருக்கவேண்டுமே தவிர உடலளவில் அல்ல. பிராயச்சித்தம் என்பது அந்ததந்த பாவத்திற்கு செய்யப்படுவதே தவிர பாபம் செய்யும் எண்ணம் இருக்குமேயானால் மறுபடி பாபம் செய்யத்தூண்டும். மேலும் பிராயச்சித்தம் என்பது வெறும் செயலாக இருந்தால் அது பயனில்லை. ஏனென்றால் ஒரு செயலால் இன்னொரு செயலின் விளைவை அழிக்க முடியாது.


  ( ஒரு கொலை செய்தால் அதற்கு ப்ராயச்சித்தம் செய்வதனால் இறந்தவரை உயிர்ப்பிக்க முடியுமா? அதுபோல. )


  உண்மையான ப்ராயச்சித்தம் என்பது மனதைத் தூய்மை படுத்துவதன் மூலம் மறுபடி ஒரு பாபம் செய்யும் எண்ணம் எழாமல் இருப்பதே.
  தவத்தினாலும், புலனடக்கத்தினாலும், யமம் , நியமம்,ஜபம், த்யாகம் சத்தியம் முதலியவைகளாலும் மூங்கிற்புதரை நெருப்பு எரிப்பதைப்போல் உடலாலும், உள்ளத்தாலும், வாக்கினாலும் ஏற்படும் பாவங்களை தருமம் அறிந்த தீரர்கள் போக்கிவிடுகின்றனர்.


  ஆனாலும் பகவத் சேவை பாகவத சேவை இவற்றால் பகவானிடம் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தால் எங்ஙனம் பாவியான ஒருவன் பரிசுத்தம் ஆவானோ அதுபோல தவம் முதலியவற்றால் ஆக மாட்டான்.
  கிருஷ்ணனுடைய குணங்களால் கவரப்பட்டு எவருடைய மனம் கிருஷ்ணனுடைய பாதக்கமலங்களில் வைக்கப்பட்டதோ அவரே பிராயச்சித்தம் அனுஷ்டித்தவராகி யமனையும் யமபடர்களையும் கனவிலும் காண்பதில்லை.


  இதற்கு உதாரணமாக பின்வரும் பழைய சரித்திரம் கூறப்படுகிறது.


  இவ்விதம் கூறி சுகர் அஜாமிளன் சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.
  இதைப் படிக்குமுன் முக்கியமான விஷயம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


  கடைசி காலத்தில் அஜாமிளன் செய்தது போல நாராயண நாமத்தைக் கூறினாலே போதுமானது என்பது நாம மகிமையைக் காட்டுவதற்காக சொல்லப்பட்டதே அன்று அது உண்மை அல்ல.


  ஒழுக்கமுள்ள ப்ராமணனாக இருந்தவன் அஜாமிளன். நடுவில் கெட்டலைந்ததனால் ஒழுக்கம் குலைந்தாலும் செய்த புண்ணியத்தின் பயனாக கடைசியில் நல்ல புத்தியைப் பெற்றான். அவன் கண்டது கனவு போல அவன் கண்ணிலிருந்து மறைந்தவுடன், தன் பாப நடத்தைக்காக பச்ச்சாதாபம் கொண்டு பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு நற்கதி அடைந்தான்.


  அவனுக்கு ஏற்பட்ட அனுபவமான விஷ்ணு-யம தூதர்களின் சம்வாதம் அவனுக்கு நற்புத்தி வருவதற்காக நடந்த மாயத் தோற்றம். அதனால் நாராயண நாமம் என்பது அவன் அந்திம காலத்தில் கூறப்பட்டது அன்று.


  பகவான் கீதையில் 'அபி சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அனன்ய பாக் , ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ,' "ஒருவன் எவ்வளவு பாபியானாலும் என்னை முழு மனதுடன் பூஜித்தானேயாகில் அவன் சாதுக்களுள் ஒருவனாக எண்ணப்படுவான்," என்று கூறியுள்ளபடி, அஜாமிளன் பாவியானாலும் பூர்வஜன்ம புண்ய வசத்தால் கடைசியில் நற்புத்தியை அடைந்தான். இது எல்லோராலும் அடையக்கூடியதன்று.


  பரதர் துறவறம் ஏற்று ஆஸ்ரமத்தில் பகவானைஆராதித்து வந்த போதும் ஒரு மான் குட்டியிடம் கொண்ட பற்றுதலால் மரணத்தருவாயில் அதைப் பற்றிய கவலையிலேயே உயிர்துறந்ததால் மான் ஜனமம் எடுக்க வேண்டியதாயிற்று.


  ஆயினும் அவர் முன் பிறவியில் செய்த தவத்தின் காரணமாக ஜடபரதர் என்னும் ப்ரம்மஞானியாகப் பிறந்தார். ஜடபரதர் பிறவிக்கும் பரதரின் முன் பிறவிக்கும் இடையில் சில காலம் மானாக இருந்து அந்த பற்றை விடவேண்டியதாயிற்று.


  அஜாமிளன் கன்யாகுப்ஜம் என்ற ஊரில் இருந்த ஒரு பிராம்மணன் ஒரு தாசிக்குப் புருஷனாகி அதுவரை காத்துவந்த நல்லொழுக்கத்தைத் துறந்து கெட்டுப் போனான். வெறுக்கத்தக்க பல பாவங்களைச் செய்த அவனுக்கு பத்து புத்திரர்கள் இருந்தனர். அவர்களுள் கடைசிப் பிள்ளையான நாராயணன் என்றவனிடத்தில் அவனுக்கு அதிகமான பிரியம் இருந்தது.


  அவன் ஒருசமயம் மரணம் வருவது போல உணர்ந்த போது கையில் பாசக்கயிறுடன் யம தூதர்கள் நெருங்கக்கண்டான். அப்போது பயந்து அவன் தன் மகனான் நாராயணனை அழைத்தான் . நாராயண நாமம் அவன் நாவிலிருந்து வந்தவுடன் விஷ்ணுதூதர்கள் வந்து யமதூதர்களைத் தடுக்கக்கண்டான்.


  அப்போது யமதூதர்கள் அஜாமிளனுடைய வாழ்க்கையைப்பற்றிக் கூறினர்.
  அஜாமிளன் முதலில் ஒழுக்கமுள்ள பிராம்மணனாக இருந்தான். தர்மம் சத்தியம் தயை இவைகளோடு வேதமும் கற்றறிந்தவனாக குருபக்தி, அக்னிஹோத்திரம், அதிதி ஸத்காரம் முதலியவைகளை செய்து கொண்டு நல்லகுணத்துடன் விளங்கியவன்


  ஒரு சமயம் தன் பிதாவின் ஆக்ஞைப்படி புஷ்பம் பழம் முதலிய பூஜைப் பொருள்களை சேகரிக்க காட்டுக்கு சென்ற போது அங்கு இழிகுலப் பெண்ணுடன் ஒருவன் கூடி ரமித்திருக்கக் கண்டான். அப்போது அவன் பிராரப்த கர்மத்தின் காரணமாக மனதை அடக்க முயன்றும் தோல்வியுற்று அவளிடம் இச்சை கொண்டான். தன் இளம் மனைவியை மறந்தான். பொருளையும் இழந்தான். அந்தப் பெண்ணுடன் கூடி வாழ்ந்து பல பாபங்களை செய்து குடும்பத்தைப் போஷித்தான்.


  அப்படிப்பட்ட இவனை யமலோகத்துக்கு அழித்துசெல்கிறோம் அங்கு இவன் தக்க தண்டனை அடைந்து தன் பாபத்தில் இருந்து விடுபடுவான் என்றார்கள். அதற்கு விஷ்ணுதூத்ர்கள் அளித்த பதில் அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.
Working...
X