ஆரோக்கியத்தை உண்டாக்கும் தன்வந்திரி ஸ்லோகம்
இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த வகையான நோய்களாலும் பாதிக்கப்படாமல் இருந்தாலே அது ஊரு சாதனையாக இருக்கிறது. ஏற்கனவே ஏதேனும் நோய் பாதிப்புகள் கொண்டவர்களும், புதிதாக நோய்கள் உண்டாகாமல் இருக்க கூற வேண்டிய தன்வந்திரி பகவான் ஸ்லோகம் இது.

ஸ்ரீ தன்வந்திரிபகவான் ஸ்லோகம்.
=====
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸூராஸூர நமஸ்க்ருதம்.


நோய்கள் விலக, நோயற்ற வாழ்வு
கிடைக்க மேலேஉள்ள மந்திரத்தை
முழுமனதுடன் கூறி வழிபட்டு
தன்வந்திரியை சரண் அடையவும்


ஸ்ரீ தன்வந்த்ரி பகவானுக்குரிய இம்மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை மற்றும் இரவு வேளைகளில் 27 முறை கூறி தன்வந்திரி பகவானை வணங்க வேண்டும். மேலும் காலை சூரிய உதயத்தின் போது தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி இம்மந்திரத்தை கூறி வழிபட்டு வருவதால் நீங்கள் எத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் கடுமை தன்மை குறையும். ஒரு சிலருக்கு அந்த நோய் முற்றிலும் நீங்க கூடிய நிலையையும் ஏற்படுத்துவார் ஸ்ரீ தன்வந்த்ரி பகவான்.

புராணங்களின் படி இறவா தன்மையை கொடுக்கும் தேவாமிர்தத்தை பெற தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது அக்கடலிலிருந்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை அளிக்கும் பல விடயங்கள் வெளிவந்தன. அந்த வகையில் மகாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ தன்வந்திரி பகவான் மனித குலத்தின் பல நோய்களை போக்கும் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். மேலும் நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் மருத்துவத்தை மனிதர்களுக்கு அளித்தவராகவும் கருத படுகிறார் தன்வந்த்ரி பகவான்.


webdunia.


This post is for sharing knowledge only,no intention to violate any copy rights