பொன் இயல் கிண்கிணி கட்டி புறங்கட்டி
தன் இயல் ஓசை சலன் சலன் என்றிட
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல்
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ
எம் பெருமான் வாராய் அச்சோ அச்சோ.
பொருள்:பொன்னால் செய்த சலங்கையும், நெற்றிச்சுட்டியும் அணிந்து நிற்கிறான் எங்கள் கண்ணன். அந்த சலங்கையில் இருந்து "சலங் சலங்' என்று ஒலி எழுகிறது. இக்காட்சி மின்னலோடு கூடிய மேகம் எதிர் வந்தது போல இருக்கிறது. கண்ணா! என் இடுப்பில் வந்து ஒட்டிக் கொள்ள மாட்டாயா! எங்களின் தலைவனே! என்னைத் தேடி வரமாட்டாயா!!