நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சு அணி மாடப் புதுவை கோன் பட்டன்சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே.
பொருள்:தன்னை விரும்புபவர் முன்னே வந்து அருள்புரிபவன் நாராயணன். ஆயர்குலத்தில் உதித்த யசோதை, அப்பெருமானிடம் பல வேண்டுதல்களை வைத்தாள். அவற்றையெல்லாம், மாளிகைகள் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வாழ்ந்த பெரியாழ்வார் பாடல்களாக வடித்தார். இவற்றைப் பாடுவோர் வைகுண்ட பதவி பெற்று மகிழ்வர்.