பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
ஆழியான் என்னைப் புறம் புல்குவான்.
பொருள்: கண்ணன், உரலின் குழிப்பக்கத்தைக் கீழே கவிழ்த்து போட்டு, அவ்வுரலின் மேல் ஏறுவான். பானைகளில் உள்ள சுவையான பாலைக் குடிப்பான். வெண்ணெயை வயிறு நிரம்ப உண்ணுவான். என் அப்பனாகிய அவன், எனக்குப் பின்புறமாக வந்து என்னைக் கட்டிக் கொள்ளட்டும். சக்கரத்தைக் கையில் தாங்கிய அவன் என்னை அணைத்துக் கொள்ளட்டும்.