மூத்து அவை காண முதுமணல் குன்று ஏறி
கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்
பொருள்: ஆயர்பாடியில் மூத்தவர்களான கோபர்களும், கோபியரும் கூடி நின்று காணும்படியாக, உயர்ந்த மணல் குன்றில் ஏறி நின்ற கண்ணன், புல்லாங்குழல் இசைத்தபடியே நடனமாடினான். அக்காட்சியைக் கண்டு வேதியர்களும், தேவர்களும் அவனை வணங்கினர். அத்தகைய கண்ணபிரான் என் பின்னே வந்து முதுகைச் சேர்த்து கட்டிக் கொள்வானாக. என் தலைவன் என்னை அணைத்துக் கொள்வானாக.