பதகம் முதலை வாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி, "என் கண்ணா! கண்ணா!' என்ன
உதவப் புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
பொருள்: கொடுமை மிக்க முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திரன் என்னும் யானை தன் துதிக்கையைத் தூக்கி "ஆதிமூலமாகிய என்னுடைய கண்ணா! அருள்புரிய வருவாய்' என்று கதறி அழைத்தபோது கருடனின் மீதேறி ஓடோடி வந்தான். அப்படிப்பட்ட கருணை மிக்க கண்ணன் பூச்சி காட்டுகின்றான். ஐயோ! பூச்சி காட்டி பயமுறுத்துகின்றான்.
குறிப்பு: சிறுகுழந்தைகள் தாடி,மீசை வைத்துக் கொண்டு பெரியவர்களை பயமுறுத்தி விளையாடுவதே பூச்சி காட்டுவதாகும்.