பின்னை மணாளனைப் பேரிற் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுது ஆட்கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய்! அக்காக்காய்!
மாதவன் தன் குழல் வாராய்! அக்காக்காய்!
பொருள்: ஏ! காக்கையே! கண்ணன் நப்பின்னையின் கணவன். திருப்பேர் என்னும் திவ்யதேசத்தில் பள்ளி கொண்டிருப்பவன். தேவர்களின் தலைவன். ஒப்புமை இல்லாத சிறப்புமிக்கவன். என்னையும், எங்கள் ஆயர்குலத்தையும் ஆட்கொண்டு அருள்புரிந்த
மன்னன். அந்த மாதவனுக்கு தலைவாரி முடியப் போகிறேன். அதைக் காண நீ வருவாயாக.