Announcement

Collapse
No announcement yet.

மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி &#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • gowriputran
    replied
    Re: மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவ&#3007

    Dear Sir,

    Thanks for sharing this with us.

    With Best Regards

    S. Sankara Narayanan

    Leave a comment:


  • மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி &#

    மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி சொன்ன ரகசியம் :

    ஒருமுறை, மகாபலி சக்கரவர்த்தி ஸ்ரீமகாலஷ்மியிடம், “தாயே, உன் பக்தர்களின் இல்லத்தில் நீ நிரந்தரமாக இருக்க என்ன செய்ய வேண்டும். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார். அதற்கு ஸ்ரீலஷ்மி தேவி, மகாபலி சக்கரவர்த்திக்கு ரகசியமாக சில பூஜை முறைகளை பற்றிச் சொன்னார். ஐப்பசி மாதம் - கிருஷ்ணபட்சத்தில், திரயோதசி முதல் அமாவாசைவரை, தீபம் ஏற்றி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஆண்டு முழுவதும் இருப்பேன்.” என்றார் ஸ்ரீமகாலஷ்மி.

    மகாபலி சக்கரவர்த்தியின் தயவில் நாம் இந்த ரகசியத்தை தெரிந்துக் கொண்டாம். இதனை நம்பிக்கையுடன் கடைபிடித்து ஸ்ரீலஷ்மிதேவியின் அருளை பெறுவோம்.

    தீபாவளி திருநாள் அன்று, மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி, மல்லிப்பூ வைத்து, ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை பூ, மல்லிகைப் பூ வைத்து, அத்துடன் நெல்லிக்கனியையும் வைத்து வணங்குவது மிக சிறப்பு. நெல்லிக்கனி, ஸ்ரீமகாலஷ்மியின் அம்சம் என்கிறது விருக்ஷ் சாஸ்திரம். மாலையில் தீபம் ஏற்றிய பிறகு, ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம்.

    வடக்கு வாசம் – குபேர வாசம் என்பார்கள். அதனால் வடக்கை நோக்கி குபேர பகவானை வணங்குங்கள். தீபாவளி திருநாள் அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தன் பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தன் சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.

    தீபதிருநாள் அன்று கேதார கௌரி விரதத்தை கடைபிடிப்பார்கள். கேதாரேஸ்வரரை வேண்டி கௌரிதேவி நோம்பிருந்து, ஈசனின் இடப்பாகத்தை பெற்றார் என்கிறது புராணம். இதனால் கேதார கௌரி நோம்பை கடைபிடித்தால், கணவருடன் ஒற்றுமையான வாழ்க்கை அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலஷ்திதேவியின் ஆசியும், இன்னும் பல தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை வாய்ந்த அற்புத திருநாள்தான் தீபாவளி திருநாள்.

    தீப திருநாளாம் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்





    Source: Nagarathar
Working...
X