Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ க்ருஷ்ணஜெயந்தி

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஸ்ரீ க்ருஷ்ணஜெயந்தி

  ஸ்ரீ க்ருஷ்ணஜெயந்தி
  வசுதேவர் - தேவகி தம்பதியரின் எட்டாவது மகன், தன்னுடைய தாய்மாமன் கம்சனை வீழ்த்தியவர், துவாரகையின் அரசர், மகாபாரத கதையின் சூத்திரதாரி, எல்லாவற்றிற்கும் மேலாக காக்கும் கடவுளான மஹா விஷ்ணுவின் அவதாரம் என பலவாகிலும் கொண்டாடப் படும் பகவான் கிருஷ்ணருடைய பிறந்த தினம் இன்று. தமிழகத்தை விடவும் வட இந்தியாவில் கிருஷ்ணரின் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
  பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூட கிருஷ்ணரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைக்கிறது. இவரை "துவரை கோமான்" என்றும், கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் தமிழ் சங்கத்தில் கலந்து கொண்டவரென்றும் அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. இத்தனை சிறப்பு வாய்ந்தவரைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் ஏதேனும் கூறியிருக்கின்றார்களா என தேடிய போது கிடைத்த இரண்டு தகவல்களை இன்றைய தினத்தில் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.
  பகவான் கிருஷ்ணரின் ஆசிரமம் ஒன்று இருந்ததாகவும், தான் அதனை தரிசித்ததாகவும் போகர் தனது "போகர் 7000" என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பாடல்கள் பின்வருமாறு...
  பழுதுபடாத் திருமேனிக் காவலாரே
  பாருலகில் பள்ளி கொண்ட நாயனாரை,
  முழுதுமே ஆழியது கோட்டை சுத்தி
  மோனமுடன் குளிகை கொண்டு நிற்கும்போது
  எழிலான ஆசிரமம் அங்கே கண்டேன்
  வண்மையுள்ள கிருஷ்ணன் ஆசீர்மம்தானே.
  தானான துவாரகையாம் அப்பா
  தாக்கான கிருஷ்ணரவர் ஆசிரமம்தான்,
  தேனான திருசங்கு கோட்டைக்குள்ளே
  தெரிசித்தேன் முத்தின ஆசிரமம் பின்னால்
  வானான பிரிங்கி ரிஷியார் பக்கம்
  வகுப்பான ஆணிமுத்துக் கோட்டை ஓரம்
  மானான மகதேவன் ஆசிரமம்தான்
  வையகத்தில் பார்த்தவர்கள் இல்லைதானே.
  குளிகையின் உதவியுடன் தான் பல இடங்களுக்குச் சென்றதாகவும், அப்படிச் செல்லும் வழியில் ஆழிக் கோட்டை ஒன்றைக் கண்டதாகவும், அதனைக் கண்டு அங்கே நின்ற போது மிக அழகான ஆசிரமம் ஒன்றைப் பார்த்ததாக குறிப்பிடுகிறார். அந்த ஆசிரமம் மகாதேவனாகிய கிருஷ்ணரின் ஆசிரமம் என்கிறார். துவாரகை என்னும் இடத்திலுள்ள திரிசங்கு கோட்டையில் அந்த ஆசிரமம் இருந்ததாய் குறிப்பிடுகிறார்.
  அகத்தியர் அருளிய "அகத்தியர்12000" என்னும் நூலில் மஹா விஷ்ணுவை தரிசிக்கவும், மஹாலட்சுமி கடாட்சம் கிட்டிடவும் ஒரு வழிமுறையினை அகத்தியர் அருளியிருக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு.....
  பதிவான மாலுடைய தியானங்கேளு
  பண்பாக இடதுகையில் விபூதிவைத்து
  நேரடா வளர்பிறைபோல் வகுத்துமைந்தா
  நிசமான அதின்நடுவே ஸ்ரீம்போட்டு
  காரடா ஓங்காரக் கவசஞ்சாத்தி
  கருணைபெற மங்மங்சிறிங் சிம்மென்றேதான்
  மாரடா நடுவெழுத்தைப் பிடித்துக்கொண்டு
  மனதாக நூற்றெட்டு உருவேசெய்யே.
  உருவேற்றி நீரணிந்து கொண்டாயானால்
  உத்தமனே மாயவனார் உருவேதோணும்
  திருப்பூத்த லட்சுமியும் வாசமாவாள்
  செகமெல்லாமுனது பதம்பணி யுமைந்தா
  இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு, அதில் வளர்பிறைபோல் வரைந்து அதன் நடுவில் " ஸ்ரீம்" என்று எழுதி அதனைச் சுற்றி ஓங்காரம் இட்டுபின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து "மங் மங் சிறிங் சிம்" என்று நூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் மாயவனாம் திருமாலின் தரிசனம் கிடைக்குமாம் அத்துடன் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

Working...
X