Announcement

Collapse
No announcement yet.

வேதமும் தமிழ்நாடும் – பாகம் 3

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • வேதமும் தமிழ்நாடும் – பாகம் 3

  வேதம் -வேதமும் தமிழ்நாடும் – பாகம் 3

  இன்னொரு விதத்திலும் 'மறை' என்று பெயர் பொருத்தமாயிருக்கிறது. வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது. ஆத்யாத்மிகமாக அதனால் அடையப்படும் பிரயோஜனங்கள் இப்போது மறைந்திருந்து பிற்பாடுதான் வெளிப்படும். இதனால் வேதமானது 'அதிருஷ்ட பலனை'ச்சொல்வது என்பார்கள். திருஷ்டியில் தெரியாதது தான் அதிருஷ்டம். தெரியாதது என்றால் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?எதன் பலன் இப்படி மறைந்திருக்கிறதோ அதை "மறை" என்றே சொல்லி விட்டார்கள்.

  நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஒடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.

  'ஒத்து'என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஒதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் "ஒத்து". திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஒத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது.

  வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு 'வேதபுரி' என்று பெயர் இருக்கிறது.

  மறை, ஒத்து, என்பது போல் "ஆரணம்" என்ற பெயரும் வேதத்துக்கு தமிழ் பாஷையில் இருக்கிறது. "ஆரணன்காண்"என்று அடிக்கடி திருமுறைகளில் வரும். 'வேத வாக்கோ!' என்று கேட்பது, தர்மசாலையை 'சத்திரம்' என்பது, முதலாளியை 'யஜமான்'என்பது, 'ஸாங்கோபாங்கம்'என்பது - இப்படி நடுவே நடுவே நான் சொன்ன ’நேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன.

  எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு 'ச்ருதி'என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ 'எழுதாக் கிளவி' என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. 'ச்ருதி என்றால் 'கேட்கப்படுவுது'. இப்படி சொல்வதாலேயே 'எழுதப்படக்கூடாதது'என்று ஊகித்துக் கொள்ளும்படியாக விட்டு விட்டார்கள்.

  ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக 'எழுதாக் கிளவி' என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப் படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!

  இப்போது எந்த மதக் காரியமானாலும் 'சடங்கு' என்றுதானே தமிழில் சொல்கிறோம்?இது நான் இனி மேலே சொல்லப் போகும் "ஷடகங்கள்" என்கிற வேதத்தின் ஆறு அங்கங்களை வைத்தே ஏற்பட்ட பேர்தான்.

  வேதங்களுக்குப் பிராணன் மந்திரங்கள் என்றால், அந்த மந்திரங்களுக்குப் பிராணன் அக்ஷர சுத்தம். அதாவது, சரியான உச்சரிப்புத்தானே?இது மாறினால் வெளி ஆகாசத்து சலனம் (vibration) , உள்ளே நாடி சலனம் இரண்டும் மாறிப் பலனே மாறிவிடும் என்று சொன்னேனல்லவா?எந்தெந்த அக்ஷரம் சரீரத்தில் எங்கே யெங்கே பிறந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் ரொம்பவும் scientific- ஆக விஞ்ஞான ரீதியில்) சிக்ஷ£ சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.

  வெளியிலே மநுஷ்யர் காதுபடக் கேட்கிற 'வைகிரி' என்ற சப்தத்துக்கு ஆதாரமாக உள்ளே 'பரா' என்ற சப்தம் இருக்கிறது. 'வைகிரி' வாயில், உதட்டில் வருவது. 'பரா' என்ற மூல ரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிற சப்தம். அது வைகரியாக வாய் வழியே வருவதற்கு முன் பச்யந்தி, மத்யமா என்ற இரண்டு நிலைகள் இருக்கின்றன. யோக சித்தியில் மேலே போகப் போகத்தான் படிப்படியாக பச்யந்தி, மத்யமா, பரா முதலிய சப்தங்களை கேட்க முடியும். யோகேச்வரர்களான ரிஷிகள் பரா வாக்கையே கேட்கக் கூடியவர்கள்.

  மூலாதாரத்தில் பரா வாக்காக எந்தெந்த சப்தங்கள் இருந்தால், அவை வைகரியாக எல்லா மநுஷ்யர்களும் வெளிப்படக் கேட்கக் கூடியபடி வரும்போது, அவற்றால் தேவதாப் பிரீதியும், லோகக்ஷேமமும், ஆத்மாபிவிருத்தியும் உண்டாகுமோ, அப்படிப்பட்ட பரா வாக்குகளையே ரிஷிகள் அகண்ட ஆகாசத்திலிருந்து கிரஹித்து வேத மந்திரங்களாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விவரங்களைத் தொல்காப்பியத்தில் ரொம்பவும் நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிற விஷயம் ஸமீபத்தில் தெரிய வந்தது.

  பரா, பச்யந்தி என்பவற்றைப் பரை, பைசந்தி என்று என்று பழைய தமிழ் நூல்களிலேயே சொல்லியிருப்பது முன்னமே தெரிந்தது. ஆனாலும் பஞ்சப் பிராணங்களில் உதானன் என்ற மேல்நோக்கிப் போகிற காற்றினால்தான் மூலாதாரத்தில் சப்தங்கள் உண்டாகின்றன என்பது உள்பட, மந்திரயோகம்.

  இத்தனை நுணுக்கமாகத் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறதென்று இப்போது தான் தெரிந்தது. வேத ஸ்வரங்களைத் தூக்கியும், தாழ்த்தியும், ஸமனாகவும், ஸ்வரபேதமில்லாமலும் சொல்வதை உதாத்ம், அநுதாத்தம், ஸ்வரிதம், பிரசயம் என்று சொல்கிறார்கள். அந்த சூட்சுமங்களை எல்லாம்கூடத் தெரிந்து கொண்டு தொல்காப்பியத்தில் சொல்லியிருக்கிறது.

  Contd…4…Source:subadra
Working...
X