Announcement

Collapse
No announcement yet.

ஆண்டாள் பாவாடையுடன் ஸேவை சாதிப்பதில்லை

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஆண்டாள் பாவாடையுடன் ஸேவை சாதிப்பதில்லை

  ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:  அர்ச்சாவதாரத்தில் எம்பெருமானும் பிராட்டியும் அர்ச்சக பராதீனர் என்பது ப்ரசித்தம். அடியேன் சிலகாலம் முன்பு ஒரு நற்காரியத்தை உத்தேசித்து திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதி சன்னதியில் உள்ள ஆண்டாளுக்கு புடவை சார்த்துவதாய் ப்ரார்த்தித்துக்கொண்டேன். அதற்கு இன்றைய தினம்தான் வாய்த்தது. பார்த்தசாரதி கோயிலில் உள்ள நடைமுறைகள் அடியேனுக்கு அவ்வளவாய் பரிச்சயமில்லை. இங்கு பெரிய முறை என்றும் சின்ன முறை என்றும் பிரிக்கப்பட்டு கோயில் க்ரமங்கள் நடப்பது வழக்கமாக உள்ளது. எனவே முறை மாறும்போது சில க்ரமங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆகவே காலையில் புடவையை சாத்தச் சொல்லலாம் என கோயில் அலுவலர் சொன்னார். அதன் படி இன்று காலை(14/03/12) கோயில் அலுவலகத்தில் புடவைக்கான ரசீதைத் தந்தனர். பின்னர் ஆண்டாள் சன்னிதியில் உள்ள பட்டரிடம் கொடுத்து சாத்தச்சொல்லிவிடுமாறு அலுவலர் கேட்டுக்கொண்டார், அதன்படி பட்டரிடம் கொடுக்கப்பட்டது. காலை ஆராதனம் ஆனவுடன் முன்னர் சாத்தியிருக்கும் புடவையைக் களைந்து பட்டர் அடியேன் சமர்ப்பித்த புடவையைச் சாத்தியிருப்பார் என்று நினைந்து காலை 9மணிக்காய் சன்னிதிக்குச் சென்றால் புதிய புடவை சாத்தப்படாமல் இருந்தது. பட்டர் அடியோங்கள் சரியானபடி அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூறினார். கோயில் வழக்கப்படி காலையில் முதலில் சமர்ப்பிக்கப்படும் புடவை சார்த்தப்படும். ஆனால் பட்டரோ சாத்தாமல் வைத்திருந்து பட்டுப்புடவையாய் இருந்தால் தான் முழுமையாக சார்த்துவேன்என்று சொல்லி ஆண்டாளின் திருவரையில் பாவடை போல் சார்த்தி விட்டு ஸங்க்ரகமாக ஒரு அர்ச்சனையை செய்தார். ஆண்டாள் அடியேன் சமர்ப்பித்ததை முழுவதுமாக உகக்கவில்லை என்று சற்றே கலக்கத்துடன் ஆண்டாளைச் சேவித்து வந்தேன். ஆயினும் மனம் சமாதானமடையாமல் உரிய அலுவலரைச் சந்தித்து பட்டுப் புடவைதான் முழுவதுமாகச் சார்த்தப்படுமா அப்படி ஏதாவது நடைமுறை இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ அப்படி ஒன்றும் நடைமுறையில்லை எனவும் பட்டரிடம் சொல்லி சாத்தச் செய்கிறேன் என்றும் சொல்லி அதன்படியே சாத்தியிருந்தது. காலையில் பட்டரின் மனோபாவம் கசப்பை ஒருபுறம் அளித்தாலும் அரையில் அரக்கு வண்ணப் புடவையும் மேலே வாடாமல்லி வர்ணத்தில் ஒரு புடவையுமாய் காட்சி அளித்தது ஸ்ரீமத் நம்மாண்டவனின் ஸ்ரீவில்லிபுத்தூர் அனுபவத்தை நினைவூட்டியது.

  அந்த நிகழ்ச்சி வருமாறு:  ஒரு சமயம் ஆச்ரமத்தில் திருமஞ்சன சமயத்திற்கு உதவுமாறு, ஒரு பெரிய பாவாடையும் மேலாக்கு வஸ்திரமும் வாங்கி அர்ச்சகர்களிடம் கொடுக்க, அர்ச்சகர் ஆண்டாள் எந்த சமயத்திலும் பாவாடையுடன் ஸேவை சாதிப்பதில்லை. 16,18 முழம் புடவைகளில்தான் அவரைக் காணலாம் என்றார். ஸ்ரீமதாண்டவன் முகத்தில் ஏற்பட்ட கலக்கத்தை மாத்திரம் அர்ச்சகர் கண்டு கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு மாதம் ஆயிற்று. அர்ச்சகர் ஒரு நாள் பன்னிரண்டு மணிக்கு ஸ்ரீமதாண்டவனை ஒருவர் இருவருடன் கோயிலுக்குவரச்செய்திவிடுத்தார். தாயைநினைந்தகன்றையொக்கஆண்டவன்எழுந்தருளினார்.உள்ளேதிரையிடப்பெற்றிருந்தது.

  வெள்ளிக் குத்துவிளக்கின் ஜ்வாலையும் ஸ்ரீஆண்டாளின் திவ்ய சேவையில் ஈடுபட்டதுபோல் ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது. இனிய ஜாதி மலர்களின் வாஸனை, தூக்கி முடிந்த கொண்டை, விசாலமாய், திருமண்காப்பு ஜ்வலிக்கும் நெற்றி, அகன்ற அருள்மயமான திருக்கண்கள், எடுத்த அத்புதமான நாஸிகை, அழகிய வைர ஓலைகள் மாட்டல்கள் அணியப்பெற்ற காதுகள், விளக்கின் ஜ்வாலையில் வானவில்லின் வர்ணங்களைக் கக்கும் வைர அட்டிகை, ஆபரணங்கள்! பொன்வர்ண மேலாக்கு, அரையில் நீண்ட ரோஜா வண்ணப் பச்சைக்கரைப் பாவாடை, திருவடியில் ரத்ந நூபுரங்கள், திவ்ய ஹஸ்தத்தில் வஜ்ரவளையங்கள், இடுப்பில் அழகிய மேகலை. முகத்தில் நிகரில்லா புன்னகை-சிரிப்பு என்ற இரு நிலைக்கும் மத்யமான ஹாஸம், ஆண்டாளைக் கண்டு ஆனந்தம் அடையாதவர் இல்லை.

  ஆண்டவன்(மிருதுவான குரலில்)உயர்ந்த வஸ்து இப்படித் தாழ்ந்து கிருபை செய்வதுதான் மனோஹரமாயிருக்கின்றது(என்று ஆரம்பிக்குமுன் ஒரு அர்ச்சகர் பின்னிருந்துஇந்த ஸேவை பெரியாழ்வருக்குத்தான் லபித்திருக்கும், இன்று ஸ்வாமிக்குக் கிடைத்தது என்றார்) (தழதழத்த குரலில்) தந்யோஸ்மி, தந்யோஸ்மி என்று சொல்லி மேலும்) பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப்பவனமான் ஸ்வரூபம் இப்படிப்பட்ட வேஷத்துடன் பெரியாழ்வாரின் க்ருஹாங்கணங்களில் தென்பட்டது. உலகத்தின் க்ஷேமத்திற்காக அவதரித்த இந்த உத்தமி தன் க்ரந்தங்களாகிற திவய மூலிகைகளால் ஸம்ஸார விஷத்தினால் மூர்ச்சையான மக்களைக் கருணையுடன் உயிர்ப்பித்தார். இவரது தோற்றத்தில் பாவநத்வம், பக்தி, தயை, ஜயம் இவ்வளவும் ஸ்புரிக்கின்றனவே, ஸ்ரீவிஷ்ணுசித்தகுல நந்தன கல்பவல்லி! கல்பவல்லி!! கல்பவல்லி!!! ஸ்வாமி தேசிகன் உமக்கு அளித்த அத்புதமான பெயர், அம்மா! இது மிகவும் க்ருபை! மஹா பாபியிடம் காட்டும் மஹத்தான க்ருபை!(என்று கண்ணீர் பெருகச் சொல்லி வெளியே வந்தார்)பட்டரின் மனோபாவத்தினால் கலக்கம் ஏற்பட்டாலும் ஸ்ரீமத் நம்மாண்டவனின் அனுபவம் ஞாபகத்தில் வந்து உகப்பை அளித்தது என்றால் அது அடியேனுக்கு இடைவிடாமல் கிட்டும் அஸ்மதாச்சார்யன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் பரமானுக்ரஹமே என்பதில் தட்டில்லை.

  தாஸன் சித்ரகூடம் ரங்கநாதன்.


  --
  Chitrakootam Ranganathan
  Tiruvallikkeni,
  Chennai-600 005


  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
  Encourage your friends to become member of this forum.
  Best Wishes and Best Regards,
  Dr.NVS
Working...
X