Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 45/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 45/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

    5. திருவரங்கத்து மாலை - 45/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 5/8

    இராவணன் ஏங்க , அரங்கர் பொங்கும் சரம் செய்த மாயம் என்னோ ?

    கொங்கு உண்டு வண்டு அமர் தண் தார் அரங்கர் வெங்கோபமுடன்
    பொங்கும் சரம் செய்த மாயம் என்னோ - தன் புகழ் அடைய
    மங்கும் படிக்கு மறம் செய்யும் இராவணன் வாகினி கண்டு
    "எங்கும் குரங்கு ! எங்கும் ராமன் ! " என்று ஏங்கி இரிந்திடவே

    பதவுரை :

    தன் புகழ் அடைய மங்கும் படிக்கு தனது புகழ் முழுவதும் அழியும்படியாக
    மறம் செய்யும் இராவணன் கொடுமை செய்த ராவணன்
    வாகினி கண்டு மூலபலம் எனும்
    தனது சேனையைப் பார்த்து
    "எங்கும் குரங்கு ! எங்கும் ராமன் ! " என்று "எங்கும் குரங்கு ! எங்கும் ராமன் ! " என்று
    ஏங்கி இரிந்திடவே ஏக்கம் அடைந்து அழியும்படி,
    கொங்கு உண்டு தேனைக் குடித்துக் கொண்டு
    வண்டு அமர் வண்டுகள் மொய்த்திருக்கும்
    தண் தார் குளிர்ச்சியான மாலை அணிந்த
    அரங்கர் வெங்கோபமுடன் அரங்கன் ஆகிய ராமனுடைய கடும் கோபத்துடன்
    பொங்கும் சரம் கொதித்து வந்த அம்பு
    செய்த மாயம் என்னோ செய்த மாயை யாதோ ?

    அடுத்து வருவது :ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 6/8



    V.Sridhar

    Last edited by sridharv1946; 04-12-13, 20:45.
Working...
X