Announcement

Collapse
No announcement yet.

ஸ்வாமி என்றால் என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்வாமி என்றால் என்ன?

    ஸ்வாமி என்றால் என்ன?

    ஸ்வம் என்கிற வார்த்தைக்கு உடைமை சொத்து என்று அர்த்தம். ஸ்வம் என்பதே தெலுங்கில் ஸொம்மு என்றாகியிருக்கிறது. ஸொம்மு என்றால் சொத்து. ஸ்வந்தம் – நமக்குச் சொந்தமானது – அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் தேவஸ்வம் என்கிறார்கள் அல்லவா? உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் ஸ்வாமி. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை உடையார் என்பது.

    முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் திருச்சிற்றம்பலமுடையார், திருவேங்கடமுடையார், திருநாகேஷ்வரமுடையார், கபாலீஷ்வரமுடையார் என்பது போலவே உடையார் என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


    குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை உடையவர் என்றே சொல்கிறார்கள்.


    ஸ்வாமி என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து. சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே சொந்தமாகும். எல்லாம் என் உடமையே என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்கும் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே – அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.

    நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப் பொருட்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவரது சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. மூலப் பொருட்களை (element) செய். அணுவை (atom) உண்டாக்கு என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ் சிறிய இலையைச் செய்ய முடியுமா?


    எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர். என்று ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தப்படும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒர் ஆனந்தம்தான்.



    இப்போது, நான் நான் என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமையில்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான்.

    ஸ்வாமி என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடம் எந்த சொந்தமும் இல்லை. நாமம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்த்துவது பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.


    Source: தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
    harikrishnamurthy

  • #2
    Re: ஸ்வாமி என்றால் என்ன?

    Thanks for sharing
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: ஸ்வாமி என்றால் என்ன?

      Thanks Krishnnamma ji

      Comment

      Working...
      X