Announcement

Collapse
No announcement yet.

பழமோ தன் சுவை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பழமோ தன் சுவை!

    பழமோ தன் சுவை!
    Thanks to Smt Saraswathi mami for the article…
    அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார்
    மரத்திற்கும் அஃதே துணை
    என்ற புதிய குறள்.
    கோபாலபுரத்தில் எங்கள் வீட்டுக் காம்பௌண்ட்க்குள் ஒரு பெரிய மாமரம் இருந்தது. உருவத்தில்தான் மா (பெரிய) மரமே தவிர, ஒரு பூ, காய் எதுவும் அதிலிருந்து நாங்கள் கண்டதில்லை.
    வெட்டிவிடலாம் என நினைத்தபோது, பல வருடங்களாக இருக்கும், நிழல் அளித்துக்கொண்டிருக்கும் மரத்தை வெட்ட மனம் வரவில்லை. பலனே தராத மரத்தை வைத்துக் கொண்டிருப்பதை விட வேறொரு கன்று வாங்கி நடலாம் என எண்ணம் , சின்ன போராட்டம்.
    அப்போது 1964 ஆம் வருடம் பெரியவா சென்னைக்கு விஜயம் செய்தார்கள்.
    எங்கள் ஏரியாவான கோபலபுரத்துக்கும் விஜயம் தந்தார்கள். எங்கள் பூர்வ புண்ய பலனால் எங்கள் வீட்டில் நாங்கு நாட்கள் தங்கியதுமல்லாமல், அந்த மாமரத்தடியில் தான் வாசம்.
    பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய சௌகர்யமாக இருந்தது அந்த மர நிழல்! இயற்கையான சூழல்! பந்தல் போட்டிருந்தால் கூட இவ்வளவு சௌகர்யம் இருந்திருக்காது.
    முகாம் முடிந்து , பெரியவா வேறு பகுதிக்கு சென்று
    விட்டார்கள். அவரது திருவடிச் சுவடு அம்மரத்தின் கீழிருந்து
    மறையவில்லை.
    என்ன ஆச்சரியம்! அந்த வருஷம் மரத்தில் மாம்பழக் காலத்தில்
    அந்த மாமரத்தில் மரம் நிறைய பூ, வடு, காய், பழம் என
    குலுங்கியது மரம் கொள்ளாத அளவுக்கு!
    பழமோ தன் சுவை!
    எங்கள் தெருவில் அந்தப் பழத்தைச் சுவைக்காதவர்கள் இல்லை.
    மாங்காஈ பழுத்ததும் மஹாபெரியவாளுக்கு ஒரு கூடை அர்ப்பணித்து விட்டுத்தான் வினியோகம் செய்யும் பழக்கம் வைத்திருந்தோம்.
    எங்கள் தகப்பனார் செல்லமாகப் போற்றிய அந்த மரம் நாற்பது வருடம் கனி ஈன்றது. என் தகப்பனார் மறைவுக்குப் பின் அந்த மரமும் மறைந்து விட்டது.
    பெரியவாளின் பாதங்கள் திருப்பாதங்கள் என அறிவோம், ஆனால் உரம் செறிந்த பாதங்கள் என நாங்கள் கண்களால் கண்டவர்கள்.
    மேலே சொன்ன குறள் இதற்காகவே இயற்றப்பட்டது!
    ஜய ஜய சங்கரா…
    தகவல்…என்.சுப்ரமணியம் , பொறியாளர்,சென்னை
    கோதண்டராம சர்மாவின் தரிசன அனுபவங்கள்
Working...
X