Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    270. பகருமுத்தமிழ்


    270திருவிடைக்கழி
    (திருக்கடவூருக்கு அருகில் உள்ளது)
    முருகன் கால் பதித்து நடந்த இடங்களில் இது ஒன்று திருகுரா மரத்தடியில்குமார சிவமாக அருள்பொழியும் ஸ்தலம் இஙகுள்ள கோயிலில் எல்லா மூர்ததங்களுமே சுப்பிரமணிய சொரூபமாக விளங்குகிறார்கள்
    அற்புதப் பெருவாழ்வை வேண்டுகிறவர், தவப் பயனைத் தா என்று கேட்கிறவர் முத்தமிழின் பொருளும் வரமருளக் கேட்கிறார் இப்பாடலில்.
    தனன தத்தனத் தனன தத்தனத்
    தனன தத்தனத் தனதான


    பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
    பயனு மெப்படிப் பலவாழ்வும்
    பழைய முத்தியிற் பதமு நட்புறப்
    பரவு கற்பகத் தருவாழ்வும்
    புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
    பொலியும் அற்புதப் பெருவாழ்வும்
    புலன கற்றிடப் பலவி தத்தினைப்
    புகழ்ப லத்தினைத் தரவேணும்
    தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
    சரவ ணத்தினிற் பயில்வோனே
    தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
    தழுவு பொற்புயத் திருமார்பா
    சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
    திறல யிற்சுடர்க் குமரேசா
    செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
    றிருவி டைக்கழிப் பெருமாளே



    பதம் பிரித்து உரை

    பகரு(ம்) முத்தமிழ் பொருளு(ம்) மெய் தவ
    பயனும் எப்படி பல வாழ்வும்
    பகரும் = சொல்லப்படுகின்ற முத்தமிழ் பொருளும் = முத்தமிழ் நூல்களின் பொருளையும் மெய்த்தவப்பயனும் = உண்மைத் தவத்தால் பெறப்படும் பயனையும் எப்படிப் = எத்தன்மையான பல வாழ்வும் = பல வகையான வாழ்வையும்


    பழைய முத்தியில் பதமு(ம்) நட்பு உற
    பரவு(ம்) கற்பக தரு வாழ்வும்


    பழைய முத்தியில் பதமும் = பழைமையாய் வரும் முத்திச் செல்வ நிலையையும் நட்பு உற = யாவரும் நண்பு வைத்து பரவும் = போற்றும் கற்பகத் தரு வாழ்வும் = கற்பக மர தேவலோக வாழ்வையும்


    புகரில் புத்தி உற்று அரசு பெற்று உற
    பொலியும் அற்புத பெரு வாழ்வும்


    புகர் இல் = குற்றம் இல்லாத புத்தியுற்ற = புத்தியுடன் அரசு பெற்று உற = அரச வாழ்வைப் பெற்று பொலியும் = விளங்கும் அற்புதப் பெரு வாழ்வும் = அற்புதமான சிறந்த வாழ்வையும்


    புலன் அகற்றிட பல விதத்தினை
    புகழ் பலத்தினை தர வேணும்


    புலன் அகற்றிட = ஐம்புலன்களின் சேட்டைகள் நீங்கப் பெற பல விதத்தினை = பல வகையாலும் புகழ் = புகழும் பலத்தினை = திடத்தினை தர வேணும் = தந்து அருள வேண்டும்


    தகரில் அற்ற கைத்தலம் விட பிணை
    சரவணத்தினில் பயில்வோனே


    தகரில் = (தக்க யாகத்தில் நடந்த பூசலில்) தாக்கப்பட்டு அற்ற கைத்தலம் = அறுந்துப் போய்( மீண்டும் வளர்ந்த) கைகள் விட = (பொறிகளின் சூடு தாங்காது (கங்கையில்) விட்டுவிட பிணை = சேர்ந்த சரவணத்தினில் = சரவண மடுவில் பயில்வோனே = பொருந்தி இருந்தவனே


    {தக்க்ஷ யாகத்தில் வீரபத்திரரால் அக்கினி பகவான் கைகளை இழந்தார். இழந்தக் கைளை மீண்டும் பெற்றார். அந்தக் கைகளினால் சிவனின் நெற்றிக்கண்களிளிருந்து வெளிவந்தத் தீப்பொறிகளை சரணவ பொய்கையில் இட்டார்}


    தனி வனத்தினில் புன மறத்தியை
    தழுவு பொன் புய திரு மார்பா


    தனி வனத்தினில் = தனியாக வள்ளி மலைக் காட்டில் புனமறத்தியை = தினைப் புனம் காத்திருந்த வேடப் பெண்ணை தழுவு = அணைகின்ற பொன் = அழகிய புயத் திருமார்பா = தோள்களையும், மார்பையும் உடையவனே


    சிகர வெற்பினை பகிரும் வித்தக
    திறல் அயில் சுடர் கதிர் குமரேசா


    சிகர வெற்பினை = சிகரங்களைக் கொண்ட கிரௌஞ்ச மலையை பகிரும் = பிளந்த வித்தகத் திறல் = ஞானத்தையும் வெற்றியையும் கொண்ட அயில் சுடர்க் குமரேசா = ஒளி வீசும் வேலாயுதத்தை உடைய குமரேசா


    செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன்
    திருவிடைக்கழி பெருமாளே


    செழு மலர்ப் பொழில் = செழுவிய பூஞ்சோலையில் குரவம் உற்ற = குரா மரங்கள் உள்ள பொன் = அழகிய திருவிடைக்கழிப் பெருமாளே = திருவிடைக் கழி என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்



    1 தகரில் அற்ற கைத்தலம்
    சிவபிரானுக்கு உகந்த மரியதை தராததினால் தக்க்ஷன் யாகம் தடைப் பெற்றது. அதில் கலந்து கொண்ட பல தேவர்கள் தண்டிக்கப்பெற்றனர் வீரபத்திரரால். அதில் கைகளை இழந்தான் அக்கினி பகவான். சிவனின் அருளால் கைகளை மீண்டும் பெற்றான். “அற்ற கைதலம்” என்பது அறுபட்டு மூண்டும் கரம் பெற்ற அக்கினி பகவானை குறிக்கும்.


    ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை
    வீழ நன் பாரதியு மூக்கு நழவிடவந்த மாயன்
    திருப்புகழ், மாகசஞ்சார


    2 குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி
    திருக்குரா நிழற் கீழ் முருகன் என்பது திருவிடைக்கழி முருகனையே குறிக்கும்


    கொந்துவார் குர வடியினும் அடியவர்
    திருப்புகழ், கொந்துவார்
    சிவபெருமானே முருகனைக் குறித்து பார்வதியிடம் சிலாகிப்பதாகச் சொல்கிறது கந்தபுராணம்:
    ‘‘நமது சக்தி ஆறுமுகன்’’ என்று எடுத்துச் சொல்லி, ‘‘ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும் போதமும் அழிவில் வீடும், போற்றினர்க் கருளவல்லான்’’ என்று உறுதியளிக்கிறார்.
    முருகப் பெருமான் இவ்வாறு சிவனால் அருளப்பெற்றவன் என்பதையும் சிவ ஸ்வரூபமே அவன் என்பதையும் உணர்த்துகிற திருத்தலம் திருவிடைக்கழி.
    சூரபத்மனின் மகனான இரண்யாசுரனை திருவிடைக்கழியில்தான் சம்ஹாரம் செய்தான் முருகன். அந்த சம்ஹார தோஷம் நீங்குவதற்காக, இத்தலத்திலுள்ள குராமரத்தின் நிழலில் சிவபெருமானுக்கு ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். சிவபெருமானும் அவனுடைய தோஷத்தை நீக்கி ஆட்கொண்டதோடு, அவ்விடத்தில் முருகன் தன்னுடைய ஸ்வரூபத்தையே பெற்று விளங்கும்படிச் செய்தாராம்! சிவஸ்வரூபமாக முருகனே இருக்கையில் தமக்கு அங்கு வேலை இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம்!


    அதனால்தான் இந்த ஊரின் முருகன் கோயில் சிவாலய அமைப்பிலேயே இருக்கிறது. பிராகார அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தால் சோமாஸ்கந்தமூர்த்தி இருக்க வேண்டிய இடத்தில் வள்ளி-தேவசேனா சமேதராக முருகனே இருக்கிறார்! நடராஜர் சன்னிதி இருக்க வேண்டிய இடத்தில் _ சபா மண்டபத்தில் _ குமரப் பெருமான் இடது கையில் வில்லும் வலக் கரத்தில் வேலும் ஏந்தி நிற்கிறான்!


    இத்தலத்தில் திருக்குராவடி நிழலில் சிவலிங்கத்தை பூஜித்தபடி காணக்கிடைக்கிறான் முருகன். சம்ஹாரமூர்த்தியாயிருந்தபோது அணிந்த கடப்ப மாலையைக் களைந்து, குரா மலர்களாலான மாலையை முருகன் அணிந்த தலம் இது (கடப்ப மாலையை இனி விட வரவேணும்)


    பிரதான மூர்த்தியாக கருவறையில் குமார சிவமாக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான் பாலசுப்ரமணியன். அவனுக்கு முன்னே ஸ்படிக லிங்க வடிவிலும் பின் புறத்தில் லிங்க உருவமாகவும் பாபநாசப் பெருமான் என்ற பெயருடன் சிவபெருமான் கோலோச்சுகிறார்!


    மகிழாரண்யம், மகிழ்வளங்குடி என்ற மங்களமான பெயர்களும் திருவிடைக்கழிக்கு உண்டு. நாகதலம் என்பது மற்றும் ஒரு பெயர்! சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற குராப்பள்ளி என்ற ஊர் இவ்வூர்தான். – தலம் தோறும் தமிழ்க் கடவுள், குருஜி ராகவன்
Working...
X