Announcement

Collapse
No announcement yet.

**வாழ்க்கைக்கு வேண்டிய சில குறிப்புகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • **வாழ்க்கைக்கு வேண்டிய சில குறிப்புகள்

    வாழ்க்கைக்கு வேண்டிய சில குறிப்புகள்
    1.
    அபிராம பட்டர் அபிராமியம்மைப்பதிகத்தில் குறிப்பிட்ட பதினாறு பேறுகள் போல் காளமேகப் புலவரும் கூறியுள்ளார்.
    துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
    மது தானியம் சவுபாக்கியம் போக மறிவழகு
    புதிதாம் பெருமை யறங்குல நோயகல் பூண்வயது
    பதினாறு பேரும் தருவாய் மதுரைப் பராபரனே ---
    2.
    மூன்று முழமும் ஒரு சுற்று , முப்பது முழமும் ஒருசுற்று-- பழமொழி.
    திருப்புனவாயில் என்ற தலத்தில் நந்தியும் , மூல லிங்கமும் ,ஆவுடையாரும் மிகப் பெரியன. சுவாமிக்கு மூன்று முழ உடை வேண்டும். ஆவுடையாருக்கு முப்பது முழம் வேண்டும். மேற்கண்ட பழமொழி இத்தலத்து இறைவனைப் பற்றித்தான். சம்பந்தர்,சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோர் போற்றிய பதி இது , ஆவுடையார் கோயிலுக்கு அருகில் உள்ளது.


    3 சொல்வதனால் குறைந்து போகும் பொருட்கள் இரண்டு. அவையாவன --- புண்ணியமும், பாவமும்ஆகும் , நாம் செய்த புண்ணியங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறைந்துபோகும் .அதே போன்று நாம் செய்த பாவங்களை பிறரிடம் கூறுவதால் பாவம் குறைந்து போகும் . குறைய வேண்டியது பாவம் , நிறைய வேண்டியது புண்ணியம்

    4. சிவபூஜை செய்து பேறு பெற்றோர்கள்




    திருமயிலை ----- கற்பகாம்பிகை
    காஞ்சிபுரம் ---- காமாட்சியம்மை
    திருவானைக்காவல் ------- அகிலாண்டேசுவரி
    அவிநாசி --------- கருணாம்பிகை
    திருச்செந்தூர் ------------ சுப்ரமண்யர்
    திருவிடைக்கழி ---------- சுப்ரமண்யர்
    செங்காட்டங்குடி ------- விநாயகர்
    இராமேசுவரம் -------- இராமர்
    இமயமலை --------- அருச்சுனன்
    திருக்கடவூர் ------------------- மார்க்கண்டேயர்
    சீர்காழி ---------------------- பிரமன்



    5. சிலகோயிலில் சில பிரசாதங்கள்;


    பழனி தண்டாயுதபாணி பஞ்சாமிர்தம்
    சிதம்பரம் நடராஜர் கற்கண்டு பொங்கல்
    பிள்ளையார்பட்டி வினாயகர் மோதகம்
    திருச்செந்தூர் சுப்ரமண்யர் அரிசிபுட்டு
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கண்ணமுது
    ஆழ்வார்திருநகரி பெருமாள் வங்காரத்தோசை
    திருப்பதி வெங்கடாசலபதி லட்டு
    சோற்றானிக்கரை பகவதி பால் பாயசம்
    காஞ்சீபுரம் வரதராஜப் இட்லி
    பெருமாள்
    திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் திருப்பாவாடை
    சுசீந்திரம் ஸ்ரீ ஹனுமான் வடை மாலை
    குருவாயூர் ஸ்ரீ குருவாயூரப்பன் திருமதுரம்

    6 .இதனால் இவர் கெட்டனர்

    வணக்கமில்லாததால்கெட்டவர் : நகுஷன் , சுதாசன், நிமி
    சூதால் கெட்டவர் : நளன் , தருமன் , உருக்குமி
    பிறர் மனை நயத்தால் கெட்டவர் : இராவணன் , வாலி , இந்திரன் , கீசகன்
    காமத்தால் கெட்டவர் : சும்ப, நிசும்பர் , இராவணன் , அந்தகாசுரன்
    சகோதரனை இழந்ததால் கெட்டவர் : இராவணன் , வாலி
    கெட்ட வார்த்தையால் கெட்டவன் : சிசுபாலன்
    சொல்லிச் செய்யாது கெட்டவன் : உத்தரன்
    வஞ்சனையால் கெட்டவன் : மாரீசன் , வில்வலன்
    அகங்காரத்தால் கெட்டவன் : துரியோதனன் , இரணியாக்ஷன்
    கோபத்தால் கெட்டவன் : தக்ஷன்
    கொடுங்கோலால் கெட்டவன் : கம்சன்
    புல்லறிவால் கெட்டவர் : மதுகைடபன் , சலந்தரன்
    உட்பகையால் கெட்டவன் : சம்பரன்
    பெரியோரை மதியாமையால் கெட்டவன்: இந்திரன்
Working...
X