Announcement

Collapse
No announcement yet.

60ம் கல்யாணம் அவசியமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 60ம் கல்யாணம் அவசியமா?

    sashtiapthapoorthi

    வுனகமகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
    ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 தொடங்கும் நாளில், காலயவனன், ஸுதூம்ரன் என்னும் துஷ்ட தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலுவிழக்கச் செய்கின்றனர். இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும். ஆயுளை அதிகரிப்பவர்கள் மிருத்யுஞ்ஜயன், மார்க்கண்டேயர் போன்ற மனித தெய்வங்கள் ஆவர். இவர்களுக்கு பூஜை செய்து சாந்தி பரிகாரம் செய்வதே சஷ்டியப்த பூர்த்தியாகும். இவர்களின் அனுக்கிரகத்தால் ஆயுள் அதிகரிக்கும். ஒருவர் பிறக்கும்போது, வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61வயது தொடங்கும் நாளில் மட்டும் தான். அதனால், இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.









Working...
X