Announcement

Collapse
No announcement yet.

பலன்தரும் பரிகாரத் தலம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பலன்தரும் பரிகாரத் தலம்

    உறையூர் ஸ்ரீகமலவல் நாச்சியார் திருக்கோயில்


    Click image for larger version

Name:	Urayur.jpg
Views:	1
Size:	50.9 KB
ID:	35295


    கன்னிப் பெண்கள் கண்நிறைந்த கணவனை அடையவும், கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும் இங்கே வேண்டிக் கொள்கிறார்கள்.

    சிறப்பு: இந்தத் தலம் தாயார் பிறந்த தலம். தாயாருக்கான சிறப்புத் தலம். தாயாரின் பெயரில் உறையூர் நாச்சியார்கோவில் என்றே வழங்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்ஸவ மூர்த்தியாகவும் உள்ளார். காரணம் இங்கே உற்ஸவங்கள் எல்லாம் தாயாருக்கே. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலை பெருமாள் கடப்பது போன்று, இங்கே தாயார் மட்டும் சொர்க்கவாசல் கடக்கும் வைபவம் மாசி தேய்பிறை ஏகாதசியில் நடைபெறுகிறது. இங்கே பெருமானுக்குரிய எல்லா வழிபாடுகளும் கமலவல்லித் தாயாருக்கே நடக்கிறது.

    பெருமாள் அழகிய மணவாளனாக, வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். தாயார், கமலவல்லி நாச்சியார். உறையூர்வல்லி வடக்கு நோக்கி திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி என தல தீர்த்தம். விமானமும் கல்யாண விமானம்.

    திருப்பாணாழ்வார் அவதரித்த தலம் என்பதால், இந்தக் கோயிலில் ஆழ்வாருக்கு தனிச் சந்நிதி உள்ளது. "கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றம்' என்ற பெரிய திருமொழி பாசுரத்தில் நாகப்பட்டினம் சுந்தர்ராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார், அப்பெருமானின் பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானது என்கிறார்.

    இந்தத் தலத்துக்கு கோழியூர் என்று பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யம்தான். சிபி சக்கரவர்த்தி இந்த உறையூரில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்துவந்தார். சோழர்களின் முதல் தலைநகராகவும் உறையூரே திகழ்ந்தது. காவிரிப் பூம்பட்டினம் இரண்டாவது கடற்கரைத் தலைநகரமாக விளங்கியதாம். உறையூரை ஆண்ட ஆதித்த சோழன் தன் பட்டத்து யானையின் மீது ஒருமுறை இங்கே வந்தபோது, வில்வ மரத்தின் நிழலில் மறைந்து இருந்த சிவபெருமான்

    இவ்வூரின் பெருமையை அரசனுக்கு உணர்த்த எண்ணினார். அந்த மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை பெருமான் நோக்க, அது யானையுடன் உக்கிரப் போர் புரிந்தது. தனது கால் நகங்களினாலும், அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி யானையைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ததாம். இவ்வாறு ஒரு கோழி யானையைத் துரத்தியடித்ததால் இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயர் உண்டானதாம். இது பின்னாளில் திருக்கோழி ஆனது என்பர். இவ்வூருக்கு, குக்கிடபுரி, வாரணபுரி, கோழியூர், திருமுக்கீசுரம் என்ற பெயர்களும் உண்டு.

    சந்நிதி திறக்கும் நேரம்: காலை 6-12 வரை, மாலை 5-8 வரை.
    இருப்பிடம்: திருச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது உறையூர்.
    தகவலுக்கு: 0431-2762446



    http://dinamani.com/weekly_supplements/vellimani/article1501047.ece?service=print

    picture Source : FB
Working...
X