Announcement

Collapse
No announcement yet.

Kudaravalli

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kudaravalli

    Dear Mama

    Adyen dasan. I have a doubt about Kudaravalli. The markazhi masaprirapu was 16-12-2011. I am reciting the pasuram from that day. Based on that the Kodaravalli pasuram was wednesday. But as per the panchangam Kodaravalli is thuraday. Which one correct. What is the criteria for the kudaravalli. As per my knowledge it is 27 day of markazhi masam.


    Could you plz clarify this.


    Thanks for time and advice.


    Indalur-Ranga

  • #2
    Re: Kudaravalli

    அன்புள்ள ரங்கநாதனுக்கு,
    அடியேனுடைய கோரிக்கையை ஏற்று தங்கள் கேள்வியை இங்கே வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
    ஊடகங்கள் அதிகமானதால் கருத்துக்கள் அதிகமாகி வருகின்றன.
    பெரும்பாலான கருத்துக்கள் ஆதாரமின்றி, அநுமானத்தைக்கொண்டு தெரிவிக்கப்படுகின்றன.
    நிற்க.
    பொதுவாக காலம் காலமாக இருந்து வரும் பழக்கம் என்னவென்றால்...
    அதாவது எந்த விஷயத்தை என்று கொண்டாடுவது என்ற சந்தேஹம் வரும்போது அந்த விஷயத்தை
    இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.
    1. நாழிகை, விநாடி என்ற கணக்கில் பார்த்து முதல்நாள் கொண்டாடுவதா, அடுத்தநாள் அநுஷ்டிப்பதா என்று பார்க்கவேண்டியவை.
    2. நாளை அடிப்படையாகக் கொண்டு அநுஷ்டிப்பவை.
    உதாரணமாக - நாம் பொதுவாக பிறந்தநாள் கொண்டாடும்போது இரண்டுவிதமாகக் கொண்டாடுகிறோம்.
    ஆங்கில தேதிப்படிக் கொண்டாடும் பிறந்தநாள் - தேதி என்றோ அன்றே கொண்டாடவேண்டும்.
    நக்ஷத்திரப்படி கொண்டாடும் பிறந்தநாள் - நக்ஷத்திரம் என்று வருகிறது என்பது மட்டுமல்ல அதிலும்
    காலை வேளையில் 12 நாழிகை வரை இருக்கவேண்டும், அதுவும் ஒரே மாதத்தில் இரண்டு முறை வந்தால்
    இரண்டாவதில் கொண்டாடவேண்டும் என்றும் நிபந்தனை உள்ளது.

    அதுபோல் அமாவாசை, மாத சங்க்ரமணம் போன்ற புண்யகாலங்களை அநுஷ்டிக்கவேண்டி வரும்போது
    துல்லியமாக விநாடிக் கணக்கை அநுசரித்து என்று தர்பணம் செய்யவேண்டும் என்று பார்க்கவேண்டும்.

    வருடப்பிறப்பு பண்டிகை (தர்பண புண்யகாலம் அல்ல), ஆடிப்பண்டிகை, 18ம் பெருக்கு, வாஸ்து, கூடாரவல்லி
    போன்றவை தேதி அடிப்படையில் பண்ணப்படுபவை, அவற்றுக்கு நாள், நக்ஷத்திரம், திதி, கிழமை
    போன்றவை பார்க்கத்தேவையில்லை.
    ஆடிப்பண்டிகை என்றும் ஆடி 1ம் தேதிதான் கொண்டாடவேண்டும்.
    தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை சித்திரை 1ம் தேதிதான் கொண்டாடவேண்டும்.
    18ம் பெருக்கு ஆடி 18ம் தேதிதான் கொண்டாடவேண்டும்.

    மார்கழி (தனுர்) ஆராதனம் என்று 1ம் நாள் ஆரம்பித்தார்களோ அதற்கு 27ம் நாள் அன்றுதான் கூடாரவல்லி.
    தாஸன்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X