Announcement

Collapse
No announcement yet.

திதிகளில் பூஜைகள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திதிகளில் பூஜைகள்.

    பஞ்சமி திதியில் ஒரு வேளை ஆகாரம் சாப்பீட்டு சஷ்டியன்று உபவாசமிருந்து சப்தமியன்று முதலில் உபவாசமிருந்து அதன் பின் காய்கறிகள், பஞ்ச பட்ச பரமான்னங்களை சூரியனுக்கு நிவேத்யம் செய்து ,ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போட்டு இரவில் மெளன விரதத்துடன்

    சூர்யனுக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுகிறானோ அவன் எல்லாவற்றிலும் வெற்றி அடைகிறான். சூர்ய லோகத்தில் பல மன்வந்த்ரம் வாழ்வான். பிறகு பூமியில் சக்கிரவர்த்தியாக வாழ்வான்.

    மனதில் நினைத்ததை எல்லாம் கொடுக்க கூடிய திதிகள்:- த்ருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, நவமி… மாசி ஸப்தமி, ஐப்பசி நவமி, புரட்டாசி சஷ்டி, மாத பஞ்சமி இவைகள் விசேஷ பலன் தருபவை.
    28-11-2014.

    கார்திகை சுக்ல பக்ஷ ஸப்தமியில் ஸப்தமி வ்ருதம் இருப்பதை துவக்கலாம். உத்தமமான பிராமணருக்கு நல்ல கனிகளை தானமாக கொடுக்க வேண்டும்.

    .ராத்திரியில் தவமிருப்பவர் காய் கறிகளையே சாப்பிடவேண்டும்.இந்த வ்ருதத்தை நான்கு மாதங்கள் அனுசரிக்க வேண்டும். பாரணை இருக்க வேண்டும். பஞ்ச கவ்யத்தால் சூரிய பகவானை ஸ்நானம் செய்விக்க வேண்டும். அ.தன் பின் தானும் சாப்பிட வேண்டும்.


    முதல் மாதம் குங்குமப்பூ , சந்தனம், , புஷ்பம், பழம், பாயசம், தூப தீப நைவேத்யங்கள். ஆகியவைகளுடன் பூஜை செய்ய வேண்டும் .ப்ராமணருக்கு அதே மாதிரி சாப்பாடு போடவேண்டும்.

    இரண்டாம் மாதம் ஜலத்தில் தர்பையை போட்டு அதை சூரிய பகவானுக்கு உணவாக கொடுக்க வேண்டும். பல புஷ்பங்கள், காய் கறிகள், வெல்ல அப்பம் நைவேத்தியம். காய்ச்சிய பால், அரளி பூ,

    குங்குலிய தூபம், தயிர் சாதம் போன்றவைகளால் சூரியனை பூஜை செய்ய வேண்டும் .புராணிகருக்கு வஸ்த்ரம், அலங்கார பொருள் கொடுத்து புராணங்கள் சொல்ல செய்ய வேண்டும் .சிகப்பு சந்தனம், அரளிப்பூ, குங்குலிய தீபம், கொழுக்கட்டை, பாயசம் நைவேத்யம்.

    பால், தாமிர பாத்ரம், புராண கிரந்தங்கள், பெளராணிகர் ஆகியவை சூரியனுக்கு ப்ரீதியானவை. சாக ஸப்தமி வ்ருதம் சூர்ய பகவானுக்கு மிகவும் இஷ்டம். .

    சூரிய நாராயணனுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை:----காலையில் சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட வேண்டும்.

    சுத்தமான வஸ்த்ரம் தரித்து ஆசமனம் செய்து விட்டு “”ஓம் ககோல்காய ஸ்வாஹா”” என்று அர்க்கியம் விட வேண்டும்..இது தான் ஸப்தாக்ஷர மந்திரம்.. இந்த மந்திரத்தை முடிந்த அளவு சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

    அதன் பின் ஹ்ருதய பூர்வமாக சூரியனை உத்தேசித்து பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ராணாயாமம் செய்து , வாயவி, ஆக்னேயி, மாகேந்த்ரி, வாருணி ஆகியோரை த்ருப்திபடுத்தி அந்த ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அங்கன்யாஸம்.

    ஓம் க: ஸ்வாஹா ஹ்ருதயாய நம: ஓம் கம் ஸ்வாஹா சிரஸே ஸ்வாஹா; ஓம் உல்காய ஸ்வாஹா சிகாயை வஷட்; ஓம் யாயா ஸ்வாஹா கவசாய ஹூம்; ஓம் ஸ்வாமி ஸ்வாஹா நேத்ர த்ரயாய வஷட், ஓம் ஹாம் ஸ்வாஹா அஸ்த்ராய பட் என்று செய்ய வேண்டும்.

    இவ்வாறு மந்திர ஜலத்தினால் தன்னையும் ப்ரோக்ஷித்துகொண்டு பூஜைக்குறிய திரவ்யங்கள் , பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும் ஆறு தள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து ஒருமுக சிந்தனயுடன் தியானிக்கவும். ஹோமத்துடன் காலையிலும், மாலையிலும் பூஜை செய்வது நல்லது.

    பிறகு சிகப்பு சந்தனம், சிகப்பு பூக்கள், தூபம், தீபம், நைவேத்யம் காட்ட வேண்டும் .பிறகு சந்திரன் முதலிய நவகிரஹங்கள், இந்திரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள் , அவர்களின் ஆயுதங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

    அதற்கு பின் வ்யோம வோனம், தண்ணீர் முத்திரை, ரவி முத்திரை, பத்ம முத்திரை, மஹேஸ்வரா முத்திரை என்ற ஐந்து வகை முத்திரைகளையும் காட்டி பூஜை, ஜபம், த்யானம் அர்க்கியம் ஆகியவைகளை எட்டு திக்கு பாலகர்களுக்கும் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடம் பக்தி சிரத்தையுடன் செய்தால் இவ்வுலகில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மோக்ஷமும் கிட்டும்.

    சூரிய பூஜை செய்யும் போது சூரியனின் பெயர்கள் சித்திரை மாதம்:---விசாகன்; வைகாசி_:- தாதா; ஆனியில் இந்திரன், ஆடியில் ரவி; ஆவணியில் நபு;

    புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் பர்ஜன்யன்; கார்த்திகையில் த்வஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதம் விஷ்ணு; மாசியில் வருணன்; பங்குனியில் சூரியன்.

    12 மாதங்களில் 12 ஆதித்யர்களை பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் ஹவிஸ் அன்னம் மட்டும் உட்கொள்ள வேண்டும். மாலையில் ஆசமனம் செய்து சூரிய பகவானின் சாரதி, அருணனை வணங்க வேண்டும்.

    அதன் பின் சூரிய பகவானை வணங்கி த்யானம் செய்ய வேண்டும். மறு நாள் விடியற் காலையில் எழுந்து விதிப்படி சூரிய பகவானை பூஜை செய்து அவரது ஸப்தாக்ஷர மூல மந்திரத்தை “ஓம் ககோல்காய ஸ்வாஹா”

    என்பதை ஜபிக்க வேண்டும். அக்னியை சூரிய ஜ்யோதியாக பாவித்து ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகு தர்பணமும் செய்ய வேண்டும் .தர்பண புல்லில் நெய்யை நனைத்து ஹோம தீயில் மூல

    மந்திரத்தை சொல்லி விட்டு கொண்டிருக்க வேண்டும். பூரணாஹூதியை விரிவாக செய்யவும்..பூர்ணாஹுதி முடிந்த பிறகு தர்பணம் செய்ய வேண்டும் .பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு தக்ஷிணை கொடுக்கவும்..

    12 மாதம் இவ்வாறு செய்து 12 ப்ராஹ்மணர்களைஆதித்யர்களாகவும் 13 ம் மாதம் ப்ரதானஆசாரியரை சூரிய பகவானாகவே பாவித்து சூரிய ரதத்தை தானம் செய்ய வேண்டும். அந்த ரதத்தில்
    தங்கத்திலான சூரியனை நடுவில் வைத்து முன்னால் சாரதியாக அருணனையும் வைத்து குதிரையின்

    ப்ரதிமையும் அமைக்க வேண்டும் .ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு தானமும் செய்ய வேன்டும்..
    மாசி மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி அன்று ஒரு வேளை சாப்பிடுவது, மறு நாள் சஷ்டி அன்று இரவில் மட்டும் சாப்பாடு. மறு நாள் சப்தமி அன்று பாரணை செய்ய வேண்டும்.

    சப்தமி அன்று சூரியனை பூஜை செய்ய வேன்டும். சிவப்பு சந்தனம், அரளி பூக்கள். குங்குலிய தீபம், பாயசம் ஆகியவைகள் நைவேத்யம். ஆத்ம சுத்திக்காக கோமயம் கலந்த ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    உண்ணும் உணவிலும் கொஞ்சம் கோமயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணருக்கு போஜனம் செய்ய வேண்டும்….

    ஆனி மாதம் முதல் நான்கு மாதங்கள் சப்தமியன்று வெள்ளை சந்தனம், வெள்ளை பூக்கள், கருப்பு சுகந்த மணமுள்ள அகர் மர தூபம், உத்தமமான நைவேத்யங்கள் படைக்க வேண்டும்..

    ஐப்பசி முதல் நான்கு மாதங்கள் அகஸ்த்திய புஷ்பம், சுபராஜித தூபம், வெல்ல அப்பம் ஆகியவைகள் தேவை .ப்ராஹ்மண போஜனம். ஆத்ம சுத்திக்காக ஜலத்தில் தர்பையை நனைத்து குளிக்க வேண்டும் ..உணவிலும் தர்ப்பை ஊறிய ஜலத்தை சேர்த்து கொள்ளலாம்.

    இவ்வாறு சப்தமி வ்ரதங்களின் முடிவில் மாசி மாதம் சப்தமியன்று ரதத்தை யாத்திரை உற்சவம் கொண்டாடி ரதத்தை தானம் செய்ய வேண்டும்.

    ரத சப்தமியை உபவாசமிருந்து கொண்டாடுபவர்கள் கீர்த்தி தனம், படிப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைகளை அடைவர். ரத சப்தமி குறித்து விரத ரத்னாகர், விரத கல்பத்ரும, வ்ருதராஜன், பத்ம புராணம், வாயு புராணம் ஆகியவற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளன.

    மார்கழி மாதம் சுக்ல சப்தமியன்று சூரியனுக்கு சிரத்தை பூர்வமாக அபிஷேகம் செய்ய வேண்டும்.சக்கரை பொங்கல், சித்ரான்னம் நைவேத்யம் நெய்யுடன் சேர்த்து செய்ய வேண்டும்.

    தை மாதம் சுக்ல சப்தமி அன்று சுத்த பவித்ர ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அதன் பின் பக்தி பூர்வமாக பூஜை செய்ய வேணும்
Working...
X