Announcement

Collapse
No announcement yet.

பசுபதி கோபாலன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பசுபதி கோபாலன்

    பசுக்கள் தண்ணீர் பருகுவதை அன்பு நயனங்களால் பருகிகொண்டிருந்த பெரியவாளிடம், ஒரு கன்று துள்ளி ஓடிச்சென்றது. புனித திருவுருவின் மீதே அது உராய்ந்து நிற்க, பாரிஷதர்கள் அதை பிடித்து கட்ட விரைந்தனர்.


    பெரியவா “வேண்டாம்” என்று சைகை செய்தார். யாருமே தீண்டாத தெய்வ திருமேனியை உராய்ந்து, பேறு பெற்றுக்கொண்டிருந்தது அந்த கன்று சற்று ஸ்வாதீனம் பெற்று, பெரியவாளின் உள்ளங்காலை மோந்து, நக்கவும் தொடங்க, உள்ளம் நிறைந்த அவரும் அதை முதுகை கோதி கொடுத்தார்.

    சரியாக அந்த சமயம். வடமதுரையிலிருந்து வந்த ஒரு சாது, பெரியவாளின் திருக்கோலத்தை கண்டதும் ஆனந்த பாஷ்பம் அடைந்தார்.

    “பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமே கண்டேனே!” என்று நா தழுவி தழுக்க கூறினார்.

    விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை சாதுவிற்கு அருளினார்

    source: mahesh
Working...
X