Announcement

Collapse
No announcement yet.

Karkodakan -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Karkodakan -Periyavaa

    Karkodakan -Periyavaa
    "கார்க்கோடகஸ்ய கீர்த்தனம் கலிநாசனம்"
    என்பது பெரியோர் வாக்கு. ஆமாம், பெரிய(வா) வாக்கு!"


    சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு


    தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.


    தட்டச்சு;வரகூரான் நாராயணன்


    ஸ்ரீ மடத்துடன் நெடு நாட்களாகத் தொடர்புடைய


    பக்தர், பெரியவாளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது


    இன்னொருவரைப் பற்றி தூஷணையாகப் பேச


    வேண்டிய நிலை வந்தது.


    "அவன் சுத்த கார்க்கோடகனாச்சே!"


    என்று சொல்லி விட்டார்.


    பெரியவா, ஒரு நிமிஷம் கழித்து,


    "அவன் நல்லவன் என்கிறாயா?" என்றார்கள்.


    பக்தருக்கு விளங்கவில்லை.


    "கடுமையான விஷமுள்ள கார்க்கோடகன்னு


    சொன்னேன்"


    பெரியவர் கேட்டார்கள்.


    "உனக்கு ப்ராதஸ்மரண ஸ்லோகம் தெரியுமோ?


    "கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச


    .ரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம் "


    "கார்க்கோடகன்,தமயந்தி,நளன்,ரிதுபர்ணன்


    இவாளை நினைச்சாலே பாவம் போயிடுமாம்.அவா


    அவ்வளவு புண்ணியவான்களா இருக்கப்பட்டவா."


    தூஷணை சொன்ன பக்தருக்கு சங்கடமாகப்


    போய்விட்டது. அப்படியானால் அவர்


    இன்னொருவரைப் பற்றி சொன்னது,வசை-திட்டு


    இல்லையா?.


    "அவன் ரொம்ப நல்லவன்-னு நீயே சொல்லிட்டே!


    அப்படித்தானே?"


    பெரியவா பார்வையில் எல்லோருமே நல்லவர்கள்தான்


    "கார்க்கோடகஸ்ய கீர்த்தனம் கலிநாசனம்"


    என்பது பெரியோர் வாக்கு.


    ஆமாம், பெரிய(வா) வாக்கு!
Working...
X