Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 40 இரங்காய் அரங்கா ! அட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 40 இரங்காய் அரங்கா ! அட

    திருவரங்கத்தந்தாதி 40 இரங்காய் அரங்கா ! அடியேன் உன் அடைக்கலம் !


    அத்திரங்காயமெனவுணரேனெனதாசையுன்கை
    அத்திரங்காயத்தியிற்பெரிதானரையாகிப்பல்வீழ்-
    அத்திரங்காயந்திரம்போற்பொறியைந்தழியுமக்கால்-
    அத்திரங்காயரங்காவடியேனுன்னடைக்கலமே

    பதவுரை :
    ( அத்திரம் - நிலையற்றது / ஆயுதம் ) !


    அரங்கா ரங்கநாதா !
    காயம் அத்திரம் உடம்பு நிலையற்றது
    என உணரேன் என்று அறிய வில்லை ;
    எனது ஆசை என்னுடைய விருப்பம்
    உன் கை அத்திரம் நீ விட்ட ஆக்னேயாஸ்திரத்தினால்
    காய் அத்தியின் பெரிது தவித்த கடலைவிட பெரியது ;
    நரை ஆகி கிழத்தனம் வந்து
    பல் வீழ பற்கள் விழுந்து
    திரங்கா தோல் சுருங்கி
    யந்திரம் போல் யந்திரம் போல் இடை விடாமல் வேலை செய்யும்
    பொறி ஐந்தும் அழியும்பஞ்ச இந்திரியங்களும் அழிந்து போகும்
    அக்காலத்து அந்த மரணகாலத்தில்
    இரங்காய் கருணையுடன் அருள் செய்வாய்
    அடியேன் உன் அடைக்கலம் நான் உனது தாஸன்

    Last edited by sridharv1946; 27-06-13, 20:51.
Working...
X