Announcement

Collapse
No announcement yet.

1st death Anniversary procedure required

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 1st death Anniversary procedure required

    Dear Sri.Gopalan Sir,
    Kindly Answer this question got through email!
    NVS
    Namaskaram,

    I am in US on short visit. The 1st death Anniversary of close relative is to be performed. I recollect it will be for FOUR days, the last being Subhaseekaram (sp?). Can you pl tell me the names by which the other three days are called by Tamil Brahmins-smarthas?

    Regards,

    Subramanian.V


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: 1st death Anniversary procedure required

    oona masikam, sodakumbam and varushaaptheekam and subham.

    Comment


    • #3
      Re: 1st death Anniversary procedure required

      Originally posted by kgopalan37 View Post
      oona masikam, sodakumbam and varushaaptheekam and subham.
      Please post little more details about what are all to be done on these days.
      1. Oona Apthikam
      2. Sodakumbam
      3. Apthikam
      4. Subham
      regards,
      nvs


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: 1st death Anniversary procedure required

        வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை.

        யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும்.

        ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும்.

        பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது .

        த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால்,

        த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது.

        சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் .
        ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்

        செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று அவசியம் தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும்..

        இறந்த தமிழ் மாதம், பக்ஷம், திதிக்கு முதல் நாள் சோதகும்பம் செய்ய வேண்டும். ஒரு வாத்யாருக்கு சாப்பாடு. சமாராதனை சமையல்.
        சோத கும்பமும் பிதா முதலிய மூவரை க்குறித்து செய்யப்படும் ச்ராத்தமே.

        ஆனால் கர்தாவிற்கும் போக்தாவிற்கும் பார்வண ச்ராத்ததிற்கான உள்ள நியமங்கள் இல்லை. பிரும்ம யஜ்ஞம் , தேவ பூஜை செய்த பிறகும் இதை செய்யலாம். பன்னிரண்டாம் நாள் முதல் 364 ம் நாள் வரை தினமும் செய்ய வேண்டும் என அக்காலத்தில் எழுதி இருக்கிறார்கள்.

        நியமம் அதிகம் இல்லாததால் இதற்கு சாஸ்திரிகள் வரணத்திற்கு ஒப்பு கொள்வார்கள். ஆனால் மாசிகத்திற்கு நியமம் அதிகம் உள்ளதால் சாஸ்திரிகள் மற்றவர்களை அனுப்புவார்கள்.

        இன்று ஸோத கும்பம் சாப்பிட்ட வாத்யாருக்கு ஒரு பவுன் தங்கத்தில் ஒரு மோதிரம், , வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, வெள்ளி பவித்ரம் ஒன்று, 9x5 வேஷ்டி ,டவல்,

        குடை, செருப்பு, விசிறி, ((பசு தானம், பூமி தானம்,)), மட்டை தேங்காயும் சந்தன கட்டையும், பித்ளை சொம்பு (ஒரு லிட்டர் கொள்ளலவு)
        வெள்ளி கிண்ணத்தில் தேன் தானம் தர வேண்டும்.

        .

        பஞ்ச தானம்: பித்தளை சொம்பு ஜலத்துடன், மணி, வேத புத்தகம். ஒன்பதுx, 5 வேஷ்டி, தீபம், தீபத்தில் நெய் ஊற்றி, திரி போட்டு, எரிய விட்டு தீப ஜ்யோதி கர்த்தாவை பார்த்து இருக்குமாறு வைத்துக்கொண்டு தானம் செய்ய வேண்டும். இவைகளையும் தானம் செய்ய வேண்டும்.

        வர்ஷாப்தீகம்:

        சிராத்த சமையல். விஸ்வேதேவர், பித்ரு இருவர் சாப்பாடு. இவர்கள் இருவருக்கும் தங்க மோதிரம், வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, , வெள்ளி பவித்ரம் ஒன்று, வெள்ளி கிண்ணத்தில் தேன் ,

        குடை, பாத ரக்ஷை, விசிறி, பித்தளை சொம்பு, டவல், 9x5 வேஷ்டி, பஞ்ச தானம் மட்டை தேங்காய், சந்தன கட்டை, இவைகளை இன்று மறுபடியும் தானம் செய்ய வேண்டும்.

        சுபம்: இன்று நவகிரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், செய்கின்றோம். நவகிரக சமித்து, நவகிரக தான்யங்கள், நவகிரக வஸ்த்ரங்கள் , சமித்து, ஹவிஸ், நெய் ஹோமம்..

        வீட்டிலுள்ள நபர்களின் பெயர், நக்ஷத்திரம், ராசி பேப்பரில் எழுதி சாஸ்த்ரிகளிடம் கொடுத்து விடவும். அதை பார்த்து அவர் ஆயுஷ்ய ஹோமம் செய்து விடுவார்..

        நான்கு அல்லது ஐந்து சாஸ்த்ரிகள் வந்து இதை செய்து கொடுப்பார்கள் அவர்களுக்கு சாப்பாடு போடவும். தக்ஷிணை கொடுக்கவும்.

        சாஸ்திரிகள் கர்த்தாவின் financial status க்கு தகுந்தாற்போல் தானப் பொருட்கள் , தக்ஷிணை பெற்றுக்கொள்வதால் நான் இங்கு எழுதுவது அதிக பக்ஷமாகவே இருக்கும்..

        உதாரணம்: நவகிரக தான்யங்கள் ஒவ்வொன்றும் 50 கிராமும் வைத்து செய்யலாம். 500 க்ராம் ஒவ்வொன்றும் வைத்தும் செய்யலாம். மிக பெரிய பணக்காரர்கள் 50 க்ராம் தான்யம் வைப்பார்கள்.

        வைதீகர்களுக்கு, ஏழை ப்ராமணர்களுக்கும் கர்மா செய்து வைக்க வேண்டி இருப்பதால் அவர்களிடம் குறைவாகவும் மிக ப்பெரிய பணக்காரர்களிடம் அதிக மாகவும் வாங்கி சரி செய்து கொள்வார்கள்.

        தானம் செய்யும் பொருட்களில் வேறு பாடுகள் இருக்கும். வைதீகர்கள் இதை நிரந்தரமாக ஓர் அளவு சொல்வதில்லை.

        Comment


        • #5
          Re: 1st death Anniversary procedure required

          USA ல் இருக்கும் ஒருவர் தனது தகப்பனாரின் வருஷாப்தீகத்தை விடுமுறை கிடைக்காததால் சென்னை வந்து செய்யமுடியாமல்போனால் அவரின் சித்தப்பா அந்த வருஷாப்தீகத்தையும் அதை சார்ந்த மற்ற கர்மாக்களையும் செய்யலாமா? அந்த மகனின் ப்ரச்சினைக்கு தீர்வாக தங்களுடைய,அறிவுத்தலையும்,ஆலோசனையையும் (SUGGESTION) தயவு செய்து சிரமம் பார்க்காமல் தெரிவிக்கவும். பரமபதித்துவிட்டவர் அடியேனுடைய சம்மந்தி ஆவார். அடியேனுக்கு இந்த சாஸ்திரம்,சம்ப்ரதாயம் ,வைதீகம் என்பது எல்லாம் எதுவும் தெரியாது. உதவிடவேண்டுமாய் ப்ராத்திக்கின்றேன்.

          Comment


          • #6
            Re: 1st death Anniversary procedure required

            ஶ்ரீ:
            ஒரு கர்த்தா தன் பெற்றோருக்குச் செய்யவேண்டிய ச்ராத்தாதி கர்மாக்களை
            தானே செய்யவேண்டும் என்பது சாஸ்த்ரம்.

            1. தீட்டினால் நின்றுபோதல்
            2. தற்செயலாக மறந்துபோதல்
            3. உடல்நிலை சரியில்லாது போதல்
            4. பொருளாதார வசதியின்மை
            ஆகிய காரணங்களுக்கு தகுந்த மாற்று வழிகளைப் பகர்ந்துள்ள சாஸ்த்ரம்
            பணம் சம்பாதிப்பதற்கோ, மற்ற எதற்காகவோ நல்ல உடல்நிலையில், பொருளாதார வசதியுடன்,
            தீட்டு போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையில், அடுத்தவரைக் கொண்டு செய்யப்படும் ச்ராத்தம்
            பொருள் விரையம், நேர விரையம் தவிர வேறு எந்தப் பலனையும் தராது.

            அதைவிட,
            கர்த்தா ஒருவர் மட்டுமே இருந்தாலும்,
            தான் இருக்கும் இடத்திலேயே முடிந்த அளவிற்கு ச்ராத்தத்தைச் செய்வது அதமத்தில் உத்தமமாகும்.

            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: 1st death Anniversary procedure required

              ஸ்ரீ NVS ஸ்வாமின்,

              நீர் அடியேனுக்கு பெரிய உதவியை செய்திறுக்கிறீர்கள். இந்த பெரிய உதவிக்கு நான் எம்மாதிரி கைம்மாறு செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை. அடியேனுடைய விஷேஷ ஆசீர்வாதமாக தேவரீர் பல்லாண்டு திடகார்துடன் நீண்ட ஆயுசுடன் நமது பிராமண சமூகத்திற்க்கும் அடியேனைபோன்ற ஞானசூனியங்களுக்கும் வழி காட்டியும்,அறிவுத்தலையும்,ஆலோசனையையும் வழங்கிட அடியோங்களுடைய குல தெய்வங்களான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரையும்,ஸ்ரீ வேங்கடாசலபதியையும் வேண்டி ப்ராத்திக்கின்றேன்.. மேலும் அடியேன் ஏதாவது தவறு செய்திருந்தாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாமள் அவ்வப்போது க்ஷமித்துவிடவும். "சிறியோர் செய்த சிறு பிழைஎல்லாம் பெரியோராயின் பொருப்பது கடனே"..PSN

              Comment

              Working...
              X