Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 01 / 29 அபீதி ஸ்தவம் அரங்க நாயகிய&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 01 / 29 அபீதி ஸ்தவம் அரங்க நாயகிய&#

    अभीति स्तवम् 01 / 29
    ��

    அபீதி ஸ்தவம்

    ��

    அரங்க நாயகியுடன் கூடிய , அரங்க நாயகனை , ஆராதிப்போம் !


    ��

    श्रीमते निगमान्त महा देशिकाय नम:

    ��

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    ஸ்ரீ வ.ந.ஸ்ராமதேசிகாச்சார்யாரின் முன்னுரை :

    ��

    * இது , 29 ச்லோகங்கள் கொண்டது. அச்சம் நீங்குமாறு , திருவரங்கனைப் பிரார்த்தித்த , ஸ்தோத்ரம் ஆதலின் , இப்பெயர் பெற்றது.

    * ஸ்ரீ தேசிகன் , திருவரங்கத்தில் ,நெடுங்காலம் , எழுந்தருளியிருந்து , திருவரங்கனை , நன்கு அனுபவித்து , கிரந்தங்களைப் , பிரவசனம் செய்து வந்தார்.

    * அப்பொழுது , அங்கு , முகம்மதியர் படையெடுப்பால் , பெருந்துன்பம் விளைந்தது. அங்கிருந்த , புத்திமான்களான பக்தர்கள் , மூல ஸ்தானத்தைக் , கற்சுவர் அமைத்து , மறைத்து , உத்ஸவ மூர்த்திகளைத் , தந்திரமாக , வெளியே , எழுந்தருளப் பண்ணிக் கொண்டு , வடநாடு சென்று காத்தார்கள் . ஸ்ரீ தேசிகன் , திருவரங்கனைப் பிரிந்து , அங்கே இருக்க விரும்பாது , அவ்வூரை விட்டு வெளியே , எழுந்தருளிவிட்டார்.

    * பின்பு , ஸ்வாமி , திருநாராயணபுரத்தில் , இருந்த போது , திருவுள்ளம் மிகப் புண்பட்டு , அவர் , அபீதி ஸ்தவம் எனும் இந்த உயர்ந்த ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தார்.

    * பெரிய பெருமாளுக்குத் , திருவாராதனம் முதலியவை , நின்றுவிட்டதையும் , உத்ஸவ மூர்த்திகள் , வெளி நாட்டுக்கு , எழுந்தருள நேரிட்டதையும் , நினைக்கும்போது , ஸ்வாமிக்கு உண்டான , மன நோவு , கூறத் தரமன்று.

    * இப்படித் , திருவரங்கத்தில் , ஏற்பட்ட ஆபத்தை நீக்கி , அபயம் அளிக்குமாறும் , உத்ஸவ மூர்த்திகள் , மறுபடி , பெரிய பெருமாளுடன் சேர்ந்து , திருவாராதனாதிகள் கண்டு அருளும்படியும் , இந்த ஸ்தோத்ரத்தால் பிரார்த்திக்கிறார் .

    * பிறகு , எதிரிகள் அழிந்துவிட , கொப்பணார்யன் என்ற பாகவதோத்தமரால் , உத்ஸவ மூர்த்திகள் , ஸ்ரீரங்கம் எழுந்தருளிக் , கைங்கர்யங்கள் முன்போல் முறைப்படி நடந்தன. ஸ்ரீ தேசிகனும் மனம் மகிழ்ந்து , திருவரங்கத்துக்கு எழுந்தருளிப் , பெரிய பெருமாளை நன்கு அனுபவித்து , வந்தார்.

    * இந்த ஸ்தோத்ரத்தை , நம்பிக்கையுடனும் , பக்தியுடனும் , பாராயணம் செய்ப்பவர்களுக்கு , எத்தகைய அச்சமும் , நிச்சயமாய் , நீங்கும் . அவர்களின் இஷ்டத்தைத் , திருவரங்கன் , தலைக்கட்டி , வைப்பது உறுதி .

    ��

    अभीति: इह , यत् , जुषाम् ; यत् , अवधीरितानाम् , भयम् ;

    भय -अभय , विधायिन: ; जगति , यत् - निदेशे , स्थिता: ; |

    तत् , एतत् , अति लङ्घित ; द्रुहिण , शम्भु , शक्र - आदिकम् ;

    रमा - सखम् ; अधीमहे ! किमपि , रङ्ग धुर्यम् ; मह: ||

    ��

    அபீதி: இஹ , யத் ஜூஷாம் ; யத் - அவதீரிதானாம் , பயம் ;

    பய - அபய , விதாயின: , ஜகதி , யத் - நிதேசே , ஸ்திதா: ; |

    தத் , ஏதத் , அதிலங்கித ; த்ருஹிண , சம்பு , சக்ர - ஆதிகம் ;

    ரமா - ஸகம் ; அதீமஹே ! கிமபி , ரங்க , துர்யம் ; மஹ: ||

    ��

    इह ............... இவ்வுலகில் ;

    यत् ................ எதை ,

    जुषाम् ............ அண்டியவர்களுக்கு ,

    अभीति: ........... பயம் இல்லாமையும் ;

    यत् ................ எதனால் ,

    अवधीरितानाम् ... புறக்கணிக்கப் பட்டவர்களுக்கு ,

    भयम् .............. அச்சமும் (உண்டாகுமோ) ;

    जगति ............. உலகில் ,

    भय - अभय ....... பயத்தையும் , அபயத்தையும் ,

    विधायिन: ......... உண்டாக்குபவர்கள் ,

    यत् ................. எதனுடைய ,

    निदेशे .............. கட்டளையில் (அடங்கி)

    स्थिता: ............ இருக்கின்றனரோ ;

    तत् ................. அத்தனை பெருமை உடையவரும் ;

    द्रुहिण .............. பிரமன் ,


    शम्भु ............... சிவன் ,

    शक्र ............... இந்திரன் ,

    आदिकम् .......... முதலியவர்களை விட

    अति लङ्घित...... உயந்தவரும் ;

    रमा - सखम् .......பெரிய பிராட்டியுடன் கூடியவரும் ;

    रङ्ग धुर्यम् ......... திருவரங்கத்தின் தலைவரும் ;

    एतत् ................ இங்கே தெரிகின்ற ,

    किमपि ............. அற்புதமான

    मह: ................. ஒரு ஜோதியை

    अधीमहे ! ........... வணங்குகிறோம் !

    ��
    ஸ்ரீ வ.ந.ஸ்ரீ ராம தேசிகாச்சார்யரின் விளக்கவுரை:

    ��
    * திருவரங்கம் எனும் திவ்யத் தலத்தில் , திரு அரங்கன் எனும் , ஓர் அற்புதமான , மஹா தேஜஸ் , பெரிய பிராட்டியுடன் , வந்து , அமர்ந்து , காட்சி தருகிறது. இது , இங்கு தன் ஸங்கல்பத்தால் , எல்லாச் செயல்களையும் நடத்தி வருகிறது .

    * இப்படி சோதி வடிவம் கொண்டு , நிற்கும் , திருவரங்கனைப் பக்தியுடன் வந்து , அடைந்தால் , ஸம்ஸார பந்தத்தால் ,வந்த அச்சம் கூட நீங்கி விடும் . இவனை அணுகாது நிற்பவர்களை , இவன் புறக்கணித்து விடுவான். அவர்களுக்கு ஸம்ஸார பயம் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் .

    * உலகில் மக்களுக்கு , அச்சத்தைத் தருபவர்களாகவும் , அச்சத்தை , ஒழிப்பவர்களாயும் , நாம் கருதும் , மற்றவர்கள் எல்லாம் , திருவரங்கன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து , நின்று , ஏவல் புரிபவர்களே ஆவர்.

    * இவ்வெம்பெருமான் , பிரமன் , சிவன் , இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களையும் விட , எல்லா வகையிலும் , உயர்ந்த , பரதத்துவம் ஆவான்.

    * இத்துணைப் பெருமை பெற்ற திரு அரங்கனைப் , பெரிய பிராட்டியோடு , எப்போதும் வணங்குகிறோம் !

    ��




























































































































































































































































































































    Last edited by sridharv1946; 15-04-18, 10:32.
Working...
X