Announcement

Collapse
No announcement yet.

பொறுமை வேண்டும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொறுமை வேண்டும்

    ஒரு முறை உன்னதமான குஜராத்திக்காரர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தார். அவருக்கு அருகில் பயணம் செய்த இன்னொரு மனிதர் அந்த ரயில் பெட்டிக்குள் துப்பிக்கொண்டே இருந்திருக்கிறார். அப்போது அந்த உன்னத மனிதர், இவர் துப்பிய இடத்தைத் தாள்கொண்டு சுத்தம் செய்திருக்கிறார். அந்த மனிதரோ மீண்டும் மீண்டும் துப்பிக்கொண்டே இருந்துள்ளார். அந்த உன்னத மனிதரும் சுத்தம் செய்துகொண்டே இருந்திருக்கிறார். ஒரு ரயில் நிலையத்தில் இருவரும் இறங்கியபோது, வெளியே நின்ற ஒரு பெருங்கூட்டம், அந்த உன்னத மனிதருக்கு மாலை மரியாதைகள் செய்து, "மகாத்மா காந்திக்கு ஜே" என்று கோஷம் போட்டது. ரயிலில் துப்பிக்கொண்டே வந்த அந்த மனிதருக்கு, ரயிலில் சுத்தம் செய்தவர் மகாத்மா காந்தி என்று தெரிய வந்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது மகாத்மா காந்தி அந்த மனிதரைப் பார்த்து, "உங்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்" என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த மனிதர், "என்னிடமிருந்து நீங்கள் என்ன பாடம் படிக்க முடியும்?" என்று கேட்டதற்கு, காந்திஜி, "ஒருவர் எவ்வளவு கெடுதல் செய்தாலும் ஒருபோதும் பொறுமையை மட்டும் இழக்கக் கூடாது என்பதே அந்தப் பாடம்" என்று சொன்னார் காந்திஜி.
    -- இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம். ( கருத்துப் பேழை ).
    -- "தி இந்து' நாளிதழ். சென்னை . புதன், ஜூன் 11, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X